|
சொல்லும்
பொருளும்
|
|
ஆரூரில் சுந்தரர் பரவை நாச்சியாரைக்
காண்பதும், கண்டு காதல்
கொள்வதும் அகப்பொருள் சுவைபடச்
சேக்கிழாரால்
புனையப்பட்டுள்ளன. பரவையாரைக் கண்டது முதல் சுந்தரர் காதல்
மயக்கம் ஏறிப் பித்தராய்ப் புலம்பத் தொடங்குகிறார். பரவை, பரவை
என்று அவள் பெயரையே திரும்பத் திரும்பக் கூறுகிறார். இந்தப்
பரவை என்ற சொல்லை வைத்தே சேக்கிழார் சொல் விளையாட்டுச்
செய்கிறார்.
பாடல் இதோ:
|
|
பேர்பரவை பெண்மையினில்
பெரும்பரவை விரும்புஅல்குல்
ஆர்பரவை அணி்திகழும்
மணிமுறுவல் அரும்பரவை
சீர்பரவை ஆயினாள்
திருஉருவின் மென்சாயல்
ஏர்பரவை இடைப்பட்ட
என்ஆசை எழுபரவை .
(பெரிய.
தடுத்தாட் கொண்ட புராணம். 148)
|
|
(பேர்பரவை = இவள் பெயர்பரவை;பெரும்
பரவை = பெரு+ உம்பர்
+ அவை - பெரிய தேவர் அவை (தேவர் கூட்டம்); ஆர் பரவை =
பரவு + ஐ - வாழ்த்தும் தெய்வம்; அரும்பரவை = அரும்பர் +அவை;
முல்லை அரும்புகள் போன்ற பற்களை உடையவள்; சீர்பரவை =
சிறந்த பரவை எனும் கூந்தலை உடைய இலக்குமி; ஏர் பரவை =
அழகிய பரப்பு; எழு பரவை = ஏழு கடல்கள்)
இப்பாடலின் பொருள் வருமாறு
|
|
ஒரு
சொல் பல பொருள்
|
|
அவள் பெயரோ பரவை; தேவர் கூட்டம் விரும்பும்
திலோத்தமை
முதலிய அழகிகளும் வாழ்த்தும் தெய்வம் போன்றவள்; அழகிய,
வரிசையான முல்லை அரும்புகளை ஒத்த பற்களை உடையவள்; சிறந்த
பரவை என்னும் கூந்தலை உடைய இலக்குமியைப் போன்றவள்;
மென்மையான இவளது உருவத்தின் சாயலாகிய அழகிய பரப்பில் அகப்பட்ட என் ஆசை ஏழு கடல்கள்
அளவுக்குப் பெரியது.
|
|
இவ்வாறு பரவையை வருணிக்கும் சேக்கிழார்
பரவை என்ற சொல்லை வைத்துக் கவிநயம் தோன்றப் பாடலைப் புனைந்துள்ளார்.
|
|
பரவை
என்னும் சொல்
|
|
ஏழு கடல்கள் அளவுக்கு எழுந்த காதல்
தாகத்தைக் கூறும் இப்பாடலில் பரவை என்ற சொல் பின்வரும் ஏழு பொருள்களில்
பயின்று வரக் காணலாம்.
|
|
1)
|
ஒரு
பெயர்
|
|
2)
|
தேவர் அவை
|
|
3)
|
வாழ்த்தும்
தெய்வம்
|
|
4)
|
முல்லை அரும்பு
|
|
5)
|
கூந்தல்
|
|
6)
|
பரப்பளவு
|
|
7)
|
கடல்
|
|