கவைத்தலை = கவித்தலம் / இன்றைய காவிரியின் அகலமும் பண்டைக் காவிரியின் அகலமும்

47 views
Skip to first unread message

N D Logasundaram

unread,
Jul 19, 2018, 2:15:20 AM7/19/18
to mintamil, vallamai, தமிழ் மன்றம், thamizayam, SivaKumar, ara...@gmail.com, Maravanpulavu K. Sachithananthan, podhuvan sengai, Vasudevan Letchumanan, muthum...@gmail.com, Raji M, thirumurai
ஏனோ நான் மடல் எழுதிக்கொண்டிருக்கும் போதே முடிக்கும் முன் பறந்து விட்டது
எனவே தொடர்கின்றது 

காவிரி கொள்ளிடம் என்னும் பிரியும் நிலை வெகு காலத்திற்கு முன்பே நடந்திருக்கவேண்டும் 

(1)
மாணிக்கவாசகர் காலத்தில் அவர் தன் போற்றித் திருவகல்- திருவாசகத்தில்

 "கவைத்தலை மேவிய கண்ணேபோற்றி" என குறித்துள்ளது இப்போது

கவைத்தலை =   கவித்தலம்  என்னும் இடமாகும்  
கவையாக அதாவது கவண் (FORKING)    போல்   பிரியும் நிலை 
இங்குதான் காவேரி  வடக்கு நோக்கியும் நேராக கிழக்கும் புகாராக (புகர்= delta F ORMATION  )
அமையும் நிலை உருவாகின்றது 
அதனைத்தான் (கவைத்)  "தலை" என்றார் மணிவாசகர் 
 
(2)
சிலப்பதிகாரக் காலத்தில்  பூம்புகார் காவிரி ஆறுகடலில் கலந்த இடம் என 
அறியப்படுகின்ரது அறிவோம்  
(3)
பின் இப்பொது திருஞசம்பந்தர் முக்திபெற்ற இடமாம் ஆச்ச்சாள்புரம்   ( மற்றும் மகேந்திரபள்ளி) அருககு கடலில் சங்கமம் ஆகின்றது 

(****)
பூகோளவிதிப்படை சொல்லவேண்டுமென்றால் நம் தமிழ் நாடு பூநடுவண்  கோட்டிற்கு வடக்காக உள்ளது 
பூமியின் சுழற்சி வேகத்தில் (மண்ணிலே சமமாக) இருந்தால் வடக்கு நோக்கி புவிஈர்ப்பு விசை தள்ளும் என்பதன் விதிப்படி வடக்கு நோக்கி பாயாத தொடங்கியுள்ளது எனால் வேண்டும் 

வெள்ள காலத்தில் ஆற்று  நீரின் கொள்ளளவு மிக மிக்குள்ள நேரத்தில் மண் அரிப்பு வடக்காக அதிகமாகும் என்பது செய்தியாகும் 



2018-07-19 11:06 GMT+05:30 N D Logasundaram <selvi...@gmail.com>:
காவிரி கொள்ளிடம் என்னும் பிரியும் நிலை வெகு காலத்திற்கு முன்பே நடந்திருக்கவேண்டும் 

மாணிக்கவாசகர் காலத்தில் அவர் தன் போற்றித் திருவகல்- திருவாசகத்தில்

 "கவைத்தலை மேவிய கண்ணேபோற்றி" என குறித்துள்ளது இப்போது

கவைத்தலை =   கவித்தலம்  என்னும் இடமாகும் 
இடமாகும் 
கவையாக அதாவது கவண் (FORKING)    போல்   

நூ த லோ சு
மயிலை
 data mining aggregation 
வடநாட்டுக்கோயில் திருட்டுக்கள் 

2018-07-19 10:47 GMT+05:30 Singanenjam Sambandam <singa...@gmail.com>:

  • வணக்கங்க கண்மணி.
  • வரலாற்றிற்கு முற்பட்ட காலத்திலும் சரி, வரலாற்றிற்குட்பட்ட காலத்திலும் சரி , ஆறுகள் தங்கள் போக்கை மாற்றிக் கொண்டே உள்ளன. பின் சொன்ன காலத்தில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு இலக்கியத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சான்றுகள் கிடைக்கின்றன. திருமுறைகளில் உள்ள குறிப்புகளின் துணை கொண்டு, இன்றைக்கு செங்கல்பட்டிற்கு தெற்கே கடலில் கலக்கும் பாலாறு ஒருகாலத்தில் சென்னைக்கு வடக்கே கடலில் கலந்த நிகழ்வையும், திருத்துறையூருக்கு தெற்கே ஓடிய தென்பெண்ணை இன்று அங்கிருந்து ஐந்தாறு கி.மீ. வடக்கே ஓடுவதையும், கடலூருக்கேத் தெற்கே பாய்ந்த கெடிலம் ஆறு இன்று அந்த ஊருக்கு வடக்கே பாய்வதையும்  என் முந்தைய கட்டுரைகளில் தெளிவாக எழுதியுள்ளேன். காவிரியும் இதற்க்கு விதிவிலக்கல்ல. உண்மையில் கொள்ளிடம்தான் இன்றைய காவிரி.
  • கொள்ளிடம் என்றதும் நீங்கள் கொள்ளிடம் பற்றி எழுதியுள்ளது நினைவில் வருகிறது.
  • திருஞான சம்பந்தர் தேவரத்தில் எங்கே கொள்ளிடம் வருகிறது? நான் தேடியதில் எனக்குக் கிட்டவில்லை.
  • கொள்ளிடம் பற்றி நீண்ட கட்டுரை ஒன்றை அண்மையில் மின்தமிழில் பதிவு செய்தேன். பாருங்கள். அதன் சுருக்கம்:
  • திருவரங்கம் அமைந்துள்ள துருத்தி நிலப்பரப்பு சிலப்பதிகாரம்  காலத்திற்கு முன்பிருந்தே இருக்கிறது. 
  • சிலப்பதிகார காலத்திலும், பின்வந்த பக்தி இலக்கிய காலத்திலும் திருவரங்கத்தின் வடக்கேயுள்ள ஆறும், தெற்கேயுள்ள ஆறும் காவிரி ஆறு  / பொன்னி ஆறு  என்றே அழைக்கப்பட்டன. தற்போது வடக்கேயுள்ள ஆறு கொள்ளிடம் என்று அழைக்கப்படுகிறது.
  • பன்னிரெண்டாம் நூற்றாண்டில் சேக்கிழார் காலத்தில் திருமழபாடிக்கும்  திருவாலம்பொழிலுக்கும் இடையே காவிரி பாய்ந்திருக்கிறது; கொள்ளிடம்  இல்லை: அல்லது   கொள்ளிடமும் காவிரி என்றே அறியப்பட்டுள்ளது.
  • திருநாவுக்கரசர் காலத்தில் திருவிசயமங்கையின் மருங்கே கொள்ளிடம் ஆறு இருந்திருக்கிறது. இது பழைய கொள்ளிடம் அப்போது  ஒரு சிற்றாறா கவோ அல்லது காவிரியின் கிளை ஆறாகவோ இருந்திருக்க வேண்டும். திருச்சியிலிருந்து கிழக்கு - கிழக்கு வடகிழக்காக பாயும் காவிரி, இந்தப்பகுதியிதான் கிளைக்கத் துவங்குகிறது; ஆதலின் கொள்ளிடம் இங்கேக் கிளைத்த கிளை ஆறாக  இருக்கலாம்.
  • இன்று கழிமுகப்பகுதியில் கொள்ளிடத்தின் மிக அருகே உள்ள திருப்பாலைக்கழியிலும், திருமயேந்தரப்பள்ளியிலும் பாடப்பட்ட தேவாரப் பதிகங்களில் இந்த பேராறு பற்றிய குறிப்பு ஏதும் இல்லை. ஆதலின்  அப்போது பழைய கொள்ளிடம்தான் இருந்தது; அது வடக்கே பறங்கிப்பேட்டை அருகே கடலில் கலந்தது எனக் கொள்ளலாம்.  
  • பழைய கொள்ளிடம் சேக்கிழார் காலத்தில் ஆதனூரை அடுத்தும், சிதம்பரத்திற்குத் தெற்கேயும் ஓடியிருக்கிறது.
  • பதின்மூன்றாம் நூற்றாண்டில் மூன்றாம் இராஜராஜன் – கோப்பெருஞ்சிங்கன் காலத்தில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் காவிரி பாதை மாறி தற்போதுள்ள கொள்ளிடப்பாதையில் புகுந்தது.
  • திருச்சி மாவட்ட கெஜட்டில் (1902) , மெக்கேன்ஸ் எனும் ஆங்கிலேயர், கொள்ளிடம்  1500 ஆண்டுகளுக்கு முன் காவிரியிலிருந்து பிரிந்திருக்கும் என கருத்து தெரிவிக்கிறார்.
  • பேராசிரியர் சோம. இராமசாமி தனது நூலில்,  கொள்ளிடம் 700 ஆண்டுகளுக்கு முன் உருவாகியது; கொள்ளிடம்தான் இன்றைய காவிரி என்று   எழுதுகிறார்.
  • நம்முடைய ஆய்வு, புதுக் கொள்ளிடம் பன்னிரெண்டாம் நூற்றாண்டிற்கும், பதின்மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதிக்கும்  இடைப்பட்ட காலத்தில் உருவாகியிருக்கும் எனப்  புலப்படுத்துகின்றன.     
  •  
  •  
  •   
  • :


  • 2018-07-18 23:05 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:
  • (முந்தைய மடலின் தொடர்ச்சி ) 
  •                     திருவிளா நகரின் அருகில் ஓடி இன்றும் மாயவரத்தருகில் ஓடும் பழங்காவிரியே சிவபுரம், திருநாகேஸ்வரம், திருவிடைமருதூர், கும்பகோணம் ஆகிய ஊர்களின் அருகிலும் ஓடியிருக்க வேண்டும் .T.G.ஆராவமுதன் மேற்கூறிய இலக்கியச் சான்றுகளும், கல்வெட்டுச் சான்றுகளும் குறிக்கும் பழங்காவிரி ஒரே ஆற்றைக் குறிக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ளத் தயங்குகிறார்.(மு.நூ.-ப.-74 ). இத்தயக்கம் தேவையற்றது .ஏனெனில் இவ்வூர்கள்  அனைத்தும் அடுத்தடுத்து காவிரி ஆற்றிலிருந்து தெற்கே இரண்டு மைல் தூரத்திற்குள் உள்ளன.  
  •                      மாயவரத்தில் ஓடும் காவிரிக்கும், பழங்காவிரிக்கும் இடையில் உள்ள தூரத்தை நோக்கும் போது பண்டு பெருங்கப்பல்கள் உட்புகுந்து  துறைமுகத்தை அடையுமளவு ஆழமாகவும், அகலமாகவும் இருந்த காவிரியாறு இன்றைய காவிரிமுதல் பழங்காவிரி என்று சொல்லப்படும் நீர்ஓடுகால் வரை அகன்றிருந்தது என்று எண்ண இடம் உள்ளது. ஏனெனில் பண்டைய இலக்கியங்களில் காவிரியிலிருந்து அரிசிலாறு என்ற ஒரு கிளைநதி மட்டுமே பிரிந்து சென்றமை புலனாகிறது." வம்பணி உயர்கொடி அம்பர் சூழ்ந்த 
  •                                                                 அரிசில் ..................................................."---நற்றிணை -141
  •                      ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஞானசம்பந்தர்  கொள்ளிடம் பற்றிப் பேசுகிறார். ஒரு பெரும் பிரவாகத்தால் கொள்ளிடம் உருவாக்கப்பட்டதென்று டாக்டர் மக்ளீன் என்பவர் கூறுவதை சிட்டி ,தி.ஜானகிராமன் முதலியோர் கூறுகின்றனர்.(நடந்தாய் ;வாழி காவேரி -ப.272) எனவே கொள்ளிடம் ஏழாம்
  •  நூற்றாண்டுக்கு  முன்னர் தோன்றிவிட்டது  என்பது வெளிப்படை. இது சிலப்பதிகாரத்த்தின் காலத்தையும் கண்ணகி முதலிய மூவர் சென்றதாகக்  கூறப்படும் பாதையையும் உறுதிப்படுத்த ஏற்ற சான்றாதாரம் ஆகும்.
  •                      காவிரி ஆற்றின் அகலம் சுருங்கிய பின்னர் பழைய தென்கரையில் பண்டைத் பேரகலத்தின் எச்சமாக ஒரு சிறு ஆற்றுக்கால் ஓடிப் ; பழைய காவிரியின் தென்னெல்லை என்பது குறிப்பாகப் புலப்பட பழங்காவிரி என்று பெயர் கொண்டு ; காலப்போக்கில் மேலும் மேலும் கிளையாறுகள் புதிது புதிதாக வெட்டப்பட ; அந்த ஆற்றுக்கால் சுருங்கி மறைந்தது. தற்போது மாயவரத்தில் மட்டும் அதன் எஞ்சிய பகுதியைக் காண முடிகிறது.
  •                      கி.பி.ஏழாம் நூற்றாண்டிலிருந்து ஒன்பதாம் நூற்றாண்டுவரை  காவிரியாறு திருவையாற்றிலிருந்து கண்டியூர்வரை பரவியதாக இருந்ததென்றும்; கண்டியூர், திருச்சோற்றுத்துறை ஆகிய திருப்பதிகளைத் தேவாரம் காவிரிக்கரைத் திருப்பதிகளாகவே பாடியுள்ளன என்றும் எஸ்.சிங்காரவேலன் எடுத்துக் காட்டுகிறார்.(காவிரி வளம் -ப.29)  திருவையாற்றிற்கும் கண்டியூர்க்கும் இடையே உள்ள குடமுருட்டி ஆறு அன்று இல்லை என்றும்; அது கடிவாய் என்ற பெயரில் கும்பகோணத்தின் அருகிலேயே தோற்றம் கொண்டதென்றும்; மக்களிடம் வழங்கும் கருத்துக்களைத் தொகுத்துத் தருகிறார்.
  •                                                                              "...........................................................................................காவிரி 
  •                                                                               அறையும்  திருச்சோற்றுத்துறை சென்றடைவோமே "---1ம் திருமுறை -பதிகம்-28-பா.5
  •                                                                              "காவிரியின் கரைக்கண்டி ............................."---6ம் திருமுறை -பதிகம் -285-பா.2 என்ற மேற்கோள்கள் நோக்கற்குரியன.
  •                      திருஞானசம்பந்தர் கூறும் பழங்காவிரி என்பதே பண்டு காவிரியின் போக்காக இருந்ததென்றும்; அவரது காலத்திற்கு முன் காவிரி தன்  போக்கைத் திருவலஞ்சுழி என்ற இடத்திற்குச் சற்று கிழக்கிலிருந்து மாற்றிக் கொண்டதென்றும்; திருவலஞ்சுழிக்குத் தெற்கில் ஓடிய காவிரி அவ்விடத்தை வலங்கொண்டு வடக்கில் ஓடியதாலேயே அப்பெயர் வழக்கும் உண்டானது என்றும் ஆய்வாளர் கூறுகின்றனர்.(டி .ஜி.ஆராவமுதன் --மு.நூ.-ப.121) இப்பெயரைத் தவிர இம்மாற்றத்திற்குச் சான்று ஏதுமில்லை.
  •                      காவிரியின் போக்கில் பிற இடங்களில் மாற்றங்கள்  ஏற்பட்டமைக்குக் கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன. இன்று காவிரியின் தென்கரையில் உள்ள பாம்பூர் நாடு என்னும் பகுதி கி.பி.990க்கு முற்பட்ட கல்வெட்டுகளில் எல்லாம் வடகரைப் பாம்பூர் நாடு என்றே குறிப்பிடப்படுகின்றது. கி.பி.1014ல் இருந்து  பின்னர் தோன்றிய கல்வெட்டுக்கள் பாம்பூர் நாட்டிற்கு 'வடகரை' என்னும் அடைமொழியைக் கொடுக்கவில்லை ; ஆதலின் ஆறு இவ்விடத்தில் போக்கு மாறியுள்ளது என்கிறார் Y.சுப்பராயலு(Political Geography Of The Chola Country-p.-15-17) 
  •                      இன்று காவிரியின் தெற்கே குறுகிய நிலப்பரப்புக்குள் பல்வேறு கிளைகள் ஓடுவதால் அப்பகுதியில் காவிரியாறு  பலமுறை தன்  போக்கு மாறியிருக்க வேண்டும் என்றும் ; இதனால் ஆற்றுப் போக்குகளின் எண்ணிக்கை மிகுந்தன என்றும் ; கிளைகளின் போக்குகள் மாறிய போது  அவற்றின் பெயரும் மாற்றம் பெற்றன என்றும் டி.ஜி.ஆராவமுதன் கூறுகிறார்.(மு.நூ.-ப.121)  காவிரியின் கிளையாறுகள் பலவும் சோழ மன்னர்களால் வெட்டப்பட்டன என்பது கல்வெட்டுக்களால் தெளிவாகிறது.
  • 1) தஞ்சையின் வடபகுதியில் ஓடும் வடவாறு முதலாம் பராந்தகன் காலத்தில் வெட்டப்பட்டது.(எஸ்.சிங்கார வேலன் -மு.நூ.-ப.-36)
  • 2)பழையாறையின்  தெற்கெல்லையில் ஓடும் முடிகொண்ட சோழப்  பேராறு முதலாம் இராசேந்திரன் வெட்டியதாகும்.(மேற்.-ப.-44)
  • 3)ஆடுதுறை அருகில் ஓடும் காவிரியாற்றிற்குத் தெற்கில் ஓடும் வீர சோழ ஆறு காவிரியை விட மிகவும் அகலமாக உள்ளது.
  • இவ்வாறு கிளையாறுகள் ஒன்றன்பின் ஒன்றாக  உருவாக ; காவிரி மேலும் மேலும்  தன்  அகலத்தில் சுருங்கியது .
  • கண்மணி      .       
  •                 . 














  • On 18 July 2018 at 18:21, தேமொழி <jsthe...@gmail.com> wrote:
  • வரைபடம்: https://goo.gl/maps/NoPyUz4viU92


  • --
  • "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
  • To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
  • For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
  • ---
  • You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
  • To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
  • For more options, visit https://groups.google.com/d/optout.

  • --
  • "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
  • To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
  • For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
  • ---
  • You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
  • To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
  • For more options, visit https://groups.google.com/d/optout.


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.


முத்தமிழ்

unread,
Aug 26, 2021, 9:55:34 PM8/26/21
to தமிழாயம்

பாதைகள் மாறிய காவிரியும்: பழந்தமிழர் நாகரிக வளர்ச்சியும்!


Radiocarbon dating of some palaeochannels in Tamil Nadu and their significance - SM. Ramasamy, J. Saravanavel, M. G. Yadava, Rengaswamy Ramesh


“செயற்கைக்கோள்களின் பார்வையில் தமிழக நதிகளியல்” - திண்டுக்கல் காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முனைவர் சோம.இராமசாமி, பாவை பதிப்பகம்


...





--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages