அறுதொழில் அந்தணர்

270 views
Skip to first unread message

இரவா

unread,
Aug 5, 2012, 8:37:54 AM8/5/12
to தமிழாயம்
அறுதொழில் அந்தணர் என்றால்  ஓதல் முதலான ஆறு தொழில்களைச் செய்வோர் என்று கூறிவந்துள்ளனர். ஆனால்,
ஔவை துரைசாமிப் பிள்ளை அவர்கள், அறுதொழில் என்றால், தொழில் அற்றவர்கள் (வெட்டியாட்கள்) என்றே பொருள் என்கிறார். அறுபொருள் என்றால் பொருளற்றது என்பதைப் போல, அறுதொழில் என்றால், தொழிலற்றவர்கள்! என்கிறார்.

அப்படியானால், ’அறுதொழில் அந்தணர்கள்’ அடுத்தவனின் உழைப்பை உறுஞ்சித் தின்னும் உண்ணிகள் எனலாம்


 இருக்கும் வரை தமிழ் அணையில்
                  அன்புடன்                               
                      இரவா

வலைப்பூ:http://thamizmandram.blogspot.com/
இணையம்:  www.thamizhkkuil.net
ஆயம்: thami...@googlegroups.com

N D Logasundaram

unread,
Aug 6, 2012, 3:07:09 PM8/6/12
to thami...@googlegroups.com
திருவாளர்  இரவா அவர்களுக்கு
 
பிள்ளை அவர்களின் கருத்து சரியானதே
 
வளமுடையோரைச்  எப்போதும் சார்ந்து வாழும் குடி
இடம் பெயர்ந்து வந்து தன் தாய்நாட்டில் வாழாதவர்கள்
 
அலைந்து திரிதலையே  தொழிலாக வைத்துக்கொண்டவர்கள்
"பார்பன மகனே பார்ப்பன" மகனே என தூதிற்கு ஊர் நாடோடி போல்
செல்பவனை விளித்து தானே  ஓர் சங்கப் பாடல் உள்ளது
 
பிற்காலத்தில் தெலுங்கு தேசத்தின் வழியாக வந்த ஒருசாரார் கலைப்பணி
என நாம் கூறும் இசை நாடகம் என பொழுது போக்கு நெறிகளில் பிழைப்பவர்கள் ஆவார்கள்
ஒருகாலத்தில் ஏறக்குறைய இராஜராஜன் காலத்தலிருந்து
கோயில் தேவதாசி சட்டம் வரும் வரை மக்களை   மகிழ்விக்க மட்டும்
தோன்றிய / உள்ள இசை கற்றவர்கள்  பாடுபவர்கள்  நாட்டியம் ஆடுபவர்கள்
போதுமகளிரகவே  இருந்தனர் (ms சுப்புலட்சுமி தயார் வீணை   தனம்மாள் வரை) 
இன்று கூட தங்கள் பிள்ளைகளுக்கு நாட்டியம் பயில்விப்பவர்கள் பிராம்மணர்கள்
எனத் தங்களை சொல்லிக் கொள்பவர்களாகவே இருக்கின்றனர்
தமிழ் நாட்டு தமிழ் குடும்பப் பெண்கள்   தங்கள் பெண்களை நாட்டியம் கற்க ஒருபோதும்
அனுப்பமாட்டார்கள் ஒருவேளை அனுப்பினால் அவர்கள் குடும்பத்தில் முன்பு யாரோ
கலந்திருக்கக் கூடும் ரத்த சம்பந்தத்தினால் சாம்பல் நிற கண்கள் உள்ளவர்கள் போல்
 
நா ட்டியப் பெண்கள் வாழும் பகுதிக்கு வடநாட்டில் கோட்டா  என்பார்கள்
ஏன் தமிழ் நாட்டிலும் கோட்டை என பெயர் இறுதி வரும் ஊர்கள் பல அவ்வித மகளிர்
பெருதும் வாழ்ந்த பகுதிகளே (கந்தர்வக் கோட்டை போல்வன) ஏழாம் நூற்றாண்டு
திருஞானசம்பந்தர் பாடல்களிலேயே காணலாம் பிராம்மணர்கள் வாழ்ந்த தாக குறித்த
 ஊர்களில் நாட்டிய மகளிரும் இருப்பதை குறித்துள்ளார் இன்றும் கர்நாடக இசை நாட்டியம்
எனும் கலைகளை பயில்பவர்கள் பெரும்பாலும் பிரமணர்களாக இருப்பதைக் காணலாம்
 
ப ல ஆண்டகளுக்கு முன் சத்திய நாராயணா என்னும் பெயருடையவர் (நடிகர் ரஜனி காந்த்
அவர்களின் அண்ணன்)  பத்திரிகையாளர்கள் பெரு நடிகர் எந்த தொடர்பினால் தமிழ் நாட்டிற்கு
வந்து வாழ நேர்ந்தது எனக் கேட்ட கேள்விக்கு பதிலளிக் கையில் எங்கள் தாயார் பிறந்த ஊர்
'காமன் தொட்டி' ( ஓசூருக்கு வட கிழக்கே சூலகிரிக்கு அருகில் உள்ளது ) அவன் பிறக்கும் பொது
தன் தாயார் (பாட்டி) வீட்டில் பிறந்தான் அதனால் தான் இருக்கும் என்றார் . காமன் தொட்டி எனும்
சொல்லே மேலே   சொன்ன கோட்டா விற்கு   நிகரானது

அன்புடன்
நூ த லோ சு
மயிலை
2012/8/5 இரவா <vasude...@gmail.com>

--
இருந்தமிழே உன்னால் இருந்தோம்! இமையோர்,
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டோம்!

இரவா

unread,
Aug 6, 2012, 10:12:45 PM8/6/12
to thami...@googlegroups.com

அன்புடன் நு.த.லோ.சு அவர்களுக்கு


ஆரியர்களைக் கூத்தாடிகள் என்றும் மிலேசர்கள் என்றும் சங்க நூல்கள் கூறுகின்றன.

 

குறுந்தொகை:


 ஆரியர் கயிறாடு பறையிற் கால்பொரக்

கலங்கி வாகைவெண் நெற்றொலிக்கும்” (7:3:5)

 

மூங்கிலின் மேல் கட்டிய கயிற்றின் மேல் ஏறிநின்று ஆடும்போது கொட்டப்படுகின்ற பறை ஒலிக்கு ஏற்றார்போல ஆடுகின்றவர்கள், ஆரியர்கள்! என்கிறது.


மேலும், “ஆரியர்”,  பறை-மேளத்தின் ஓசைக்கேற்றவாறு,  ஒரு கயிற்றில் கழைக் கூத்து ஆடுவார்கள் எனக்குறிப்பிடுகிறது.


……………………..…………………..ஆரியர்

கயிறாடு பறையிற் கால்பொரக் கலங்கி

வாகைவெண்நெற் றொலிக்கும். (குறுந்தொகை.7:3-5)


காடு முழுவதும் மூங்கில் மரங்கள் நிறைந்துள்ளன. அவை வாகை மரத்தின் (Sirisa tree) முற்றிய விதைகள், அம்மரம் சிலிர்த்து உதிரும்போது காற்றினால் எடுத்துச் செல்லப்பட்டு, அம்மூங்லில்களின் மேற்பட்டு, பறைகளை அடித்து உருவாகும் ஓசைபோல, அரியர் கொட்டும் பறையோசை இருக்கிறது.  “ஆரியர்” என்பவர் கயிறு மேல் ஆடுபவர் என்று தெரிகிறது.


இத்தகைய கூத்துகளைத் தான் ஆரியக்கூத்து என்று கூறினார்கள், போலும்.


அகநானூறு (நெடுந்தொகை):


“ஆரியர்” பெண் யானைகளைப் பிடிப்பவர்கள் எனக் கூறுகிறது.  

”………………………………….ஆரியர்

பிடிபயின்று தரூஉம் பெருங்களளிறு போல”  (அகம்.276:9-10).


ஆரியர் பெண் யானையைக் கொண்டு – அதாவது, பழக்கி, ஆண்யானையை எளிதாகப் பிடிப்பர் எனத் தெரிகிறது. முல்லைப்பாட்டு, தமிழக அரசர்கள், இத்தகையவரை யானைகள் பழக்க பணிக்கு அமர்த்துகிறார்கள் எனக் கூறுகிறது.


(பெண் யானையைக் கொண்டு ஆண் யானையைப் பிடிப்பவர் என்பதன் உட்பொருளை நோக்க வேண்டும்)


”தேம் படு கவுள சிறு கண் யானை……..

ஓங்கு நிலைக் கரும்பொடு, கதிர் மிடைந்து யாத்த,

வயல் விளை, இன் குளகு உண்ணாது, நுதல் துடைத்து,

அயில் நுனை மருப்பின் தம் கையிடைக் கொண்டென,

கவை முட் கருவியின், வடமொழி பயிற்றி, ……………

கல்லா இளைஞர், கவளம் கைப்ப……………”    (முல்லைப்பாட்டு.31-36)


யானைப்பாகர் யானைப் பேச்சாகிய வடமொழியைச் சொல்லிப் பரிக்கோலால் கவளத்தை உண்ணும்படி குத்தினார்கள்.

ஆரிய மொழியாகிய வடமொழி, யானையைப் பிடிக்கும் பாகர்கள் கூறும் மொழியாகும் என்பது விளங்கும்.


இவர்களை, “மிலேச்ச ராரியர்” என்று பிங்கலந்தை (ரு. ஆடவர் வகை) என்ற பிங்கல நிகண்டு பிற்காலத்தில் கூறுகிறது



 இருக்கும் வரை தமிழ் அணையில்
                  அன்புடன்                               
                      இரவா

வலைப்பூ:http://thamizmandram.blogspot.com/
இணையம்:  www.thamizhkkuil.net
ஆயம்: thami...@googlegroups.com


7 ஆகஸ்ட், 2012 12:37 am அன்று, N D Logasundaram <selvi...@gmail.com> எழுதியது:

R.C. Palaniappan

unread,
Aug 6, 2012, 9:58:06 PM8/6/12
to thami...@googlegroups.com
மிக நன்று விளக்கம் !

On 8/7/12, N D Logasundaram <selvi...@gmail.com> wrote:
> திருவாளர் இரவா அவர்களுக்கு
>
> பிள்ளை அவர்களின் கருத்து சரியானதே
>
> வளமுடையோரைச் எப்போதும் சார்ந்து வாழும் குடி
> இடம் பெயர்ந்து வந்து தன் தாய்நாட்டில் வாழாதவர்கள்
>
> அலைந்து திரிதலையே தொழிலாக வைத்துக்கொண்டவர்கள்
> "பார்பன மகனே பார்ப்பன" மகனே என தூதிற்கு ஊர் நாடோடி போல்
> செல்பவனை விளித்து தானே ஓர் சங்கப் பாடல் உள்ளது
>
> பிற்காலத்தில் தெலுங்கு தேசத்தின் வழியாக வந்த ஒருசாரார் கலைப்பணி
> என நாம் கூறும் இசை நாடகம் என பொழுது போக்கு நெறிகளில் பிழைப்பவர்கள் ஆவார்கள்
> ஒருகாலத்தில் ஏறக்குறைய இராஜராஜன் காலத்தலிருந்து

> கோயில் தேவதாசி சட்டம் வரும் வரை மக்களை *மகிழ்விக்க மட்டும்*

Reply all
Reply to author
Forward
0 new messages