Re: [வல்லமை] வல்லமையில் இன்று - ஆத்திசூடி யார்? – ஓர் சுவையான கருத்தாடல்

101 views
Skip to first unread message

N. Ganesan

unread,
May 12, 2014, 11:38:42 AM5/12/14
to vall...@googlegroups.com, mintamil, thami...@googlegroups.com
On Monday, May 12, 2014 4:23:02 AM UTC-7, வேந்தன் அரசு wrote:
தீர்ப்பை மதிக்கிறோம்

பாரதிதான் குழப்பிட்டார்.


தேசியகவி பாரதியார் பரமானந்தமான கவிஞர். உதாரணமாக, இல்லாத அகத்தியர் தந்தது தமிழ் என்று அழகான தமிழ்த்தாய் வாழ்த்தில் பாடினார். கவித்துவமானது என்றாலும் ஆராய்ச்சிகளால் அகத்தியர் என்பவரே தமிழுக்கு முதல் இலக்கணம் செய்யவில்லை என்று தமிழறிஞர்கள் காட்டிவிட்டனர். முதலில் செய்தவர் சென்னைப் பேரா. கா. நமச்சிவாயர் என்பதாக ஞாபகம். பாரதியின் ப்ரதம சிஷ்யர் பாரதிதாசன் அகத்தியர் பற்றி ஆராய்ந்து அகவல் பாடியுள்ளார். மேகலா அவர்களுக்கும், தேமொழி அவர்களுக்கும் தெரியும். எல்லோரும் படித்துச் சிந்திக்கவேண்டிய பாடல்களில் ஒன்று. இன்றைய அரசியல் தலைவர்களின் தாரகமந்திரம்: “எம்மதமும் சம்மதம்”. உலகோடு வணிகமும், கல்வியும், நுட்பமும் ஊடாடும் பாரதமாதாவின் மக்களுக்கு இது சிறந்த மகாவாக்கியம். இந்தியாவில் எழுத்து, கலைகள், கல்வி தோற்றுவித்த 2 சமண சமயங்களுக்கும் பொதுவாக பாரதியார் பாடினார் எனலாம். அவ்வாறு பாரதி பாடப் பாட்டை போட்டுக் கொடுத்தவர் ஔவை என்னும் சமணக் குரத்தியார் காரணம்.

ஆத்திமரத்தடியில் இருப்பது தீர்த்தங்கரர். கல்லால மரத்தடியில் இருப்பது சிவன். ஆயிரக்கணக்கான
பாடல்களில், சிற்பங்களில் இது பொது. ஒரு இடத்தில் மாறுவதால் ஆத்திசூடி என்றால் சிவன் எனல்
பொருந்தாது. அந்தத் தேவாரப் பாடல் இலிங்க வழிபாட்டை அறிமுகம் செய்யும் பாட்டில், சண்டியின்
ஹேகியோக்ராஃபி-க்காக சமண சமயத்தின் அப்ராப்ரியேஷன். இதனை விரிவாக்கி வளர்த்தவர் ஒட்டக்கூத்தர்
(12-ஆம் நூற்றாண்டு) அவர் வழியிலே பலர் செல்லத் தொடங்கினர்: உ-ம்: அருணகிரிநாதர். பாரதியின் பரம்பொருள் 
வாழ்த்தில் தமிழ்வளர்த்த தீர்த்தங்கரரை ஆத்திசூடி என்று வாழ்த்திப்
பிற கடவுளரை - அல்லா, ஏசுவின் தந்தை, பெருமாள், சிவபிரான் - வணங்குகிறார் என உரைக்கலாம்.
எம்மதமும் சம்மதம் என்னும் தத்துவத்தை பாரதமாதா மக்களாக தமிழர் மாறுகிற கால கட்டத்தில் 
உரைக்கும் பாடலாக பாரதியார் பாடிய வழிநூலில் தானாக 2 சமணசமயங்களுக்கும் குறியீடாக
ஆத்திசூடி பாகல்வண்ணர் இருத்தல் சிறப்பு. 

(1) ஆத்திசூடி, - (2) இளம்பிறை அணிந்து

மோனத் திருக்கும் முழுவெண் மேனியான், -

(3) கருநிறங் கொண்டுபொற் கடல்மிசைக் கிடப்போன், -

(4) மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன், -

(5) ஏசுவின் தந்தை  - எனப்பல மதத்தினர்

உருவகத் தாலே உணர்ந்துணராது

பலவகை யாகப் பரவிடும் பரம்பொருள்

ஒன்றே அதனியல் ஒளியுறும் அறிவாம்;

அதனிலை கண்டார் அல்லலை அகற்றினார்;

அதனருள் வாழ்த்தி அமரவாழ்வு எய்துவோம்.


இந்தியாவில் உள்ள 5 பெருஞ்சமயங்களுக்கும் வாழ்த்தைச் சொல்கிறார் பாரதியார்.

முதற்சமயமாக சமண சமயங்களைச் சொல்லவைத்த பெருமை ஔவைக் குரத்திக்குத்தான்.


ஆத்திசூடி தீர்த்தங்கரஸ்வாமி:

http://www.maotorino.it/opera.php?id=78

https://www.flickr.com/photos/magika2000/5066880525/in/photostream/


இலண்டன் விக்டோரியா & ஆல்பர்ப் ம்யூஸியத்தில்

ஆத்திசூடி தீர்த்தங்கரர்: 7-ஆம் நூற்றாண்டினது.

மிகப் பழைய சிற்பங்களில் ஆத்திசூடி காட்டப்படுவது வழக்கம்.

ஆத்தி/தாதகி மரம் பார்க்கவும் - 7-ஆம் நூற்றாண்டு:

http://www.vam.ac.uk/content/articles/j/jainism_illuminated_manuscripts-and-jain-paintings/



போதிசூடி புத்தர், ஆத்திசூடி தீர்த்தங்கரர் - இவற்றைப்

பல நூற்றாண்டுகளாய்ப் பார்த்து ஆல்சூடியாய் பொதிகைத் தெக்கிணாமூர்த்தி

தோற்றம் அடைகிறார் (7-ஆம் நூற்றாண்டு). இது மகரவிடங்கரின்

வடவ்ருக்‌ஷம் சிவனுக்காகும் நிலை. சிவனுக்கு ஆவதன் முன்னம் இதனைப்

பரிபாடல் பாடுகிறது. அந்த சங்ககால சமய நிலையை 9-ஆம் நூற்றாண்டில்

நம்மாழ்வார் அழகாக சங்கத்தாருக்கு எழுதிய அகவலில் உரைக்கிறார்.

உரைகண்டு தெளிய எழுதலாம்.


நா. கணேசன்



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

வேந்தன் அரசு

unread,
May 13, 2014, 7:34:28 AM5/13/14
to vallamai, mintamil, தமிழாயம்



12 மே, 2014 11:38 முற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:
கணேசர்

உங்க வாதம் எல்லாம் தவிடுபொடி ஆகியது
இரண்டு முதல் ஐந்துவரை மதத்தலைவர்களை ஒற்றை சொல்லாலே சொல்லவில்லை. ஒன்றாம் மதம் மட்டும் ஏன் ஆத்திசூடி எனும் ஒற்றைச்சொல். 
2, 3 ம் தெய்வங்களாகவே காட்டப்பட்டு, 3, 4  மனிதர்களாக காட்டியுள்ளார். ஒன்று??? வேறு பாடல்களில் உள்ளதுபோல் ”ஆத்திசூடி அமர்ந்த தேவனுக்”கு அருள் புரிந்தோன் என பாடி இருக்காலம்

புத்த மதம் ஏன் சொல்லப்படவில்லை? புத்தனுக்கு ஞானஒளி கொடுத்தோன் என பாடி இருக்கலாம்.

ஒன்றே தெய்வம் எனும் கோட்பாட்டில், வெண்மேனியனான சிவனே, கடல்மிசை கிடந்து, நபிக்கு அருள் புரிந்து ஏசுவுக்கு தந்தையானான் என்று  பாடுக்றார். எல்லா மத தெய்வங்களையும் அல்ல. 

இந்த வாதம் நீங்க ஏற்கமாட்டீங்க.  இருதரப்பிலும் ஈடுபடாதவங்களுக்காக சொல்லுகிறேன் 

N. Ganesan

unread,
May 13, 2014, 7:41:32 AM5/13/14
to mint...@googlegroups.com, vallamai, தமிழாயம்
ஆத்தி சூடி இரண்டு சொற்கள்.
 
2, 3 ம் தெய்வங்களாகவே காட்டப்பட்டு, 3, 4  மனிதர்களாக காட்டியுள்ளார். ஒன்று??? வேறு பாடல்களில் உள்ளதுபோல் ”ஆத்திசூடி அமர்ந்த தேவனுக்”கு அருள் புரிந்தோன் என பாடி இருக்காலம்


பாரதி முதல் நூலுக்கு மதிப்பளித்து ஆத்தி சூடி என்று தொடங்குகிறார். எல்லோருக்கும் தெரிந்த ஆத்திச் சூடி அமர்ந்த தேவன் என்பதன்
குறுக்கம். 

N. Ganesan

unread,
May 13, 2014, 8:06:33 AM5/13/14
to mint...@googlegroups.com, vallamai, தமிழாயம்


On Tuesday, May 13, 2014 4:34:28 AM UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:


புத்த மதம் ஏன் சொல்லப்படவில்லை? புத்தனுக்கு ஞானஒளி கொடுத்தோன் என பாடி இருக்கலாம்.


போதிசூடி புத்தருக்கு முன்னாடி வாழ்ந்தவர் ஆத்திசூடி. சமணசமயங்களுக்கு பொதுவாக ஆத்திசூடியைச் சொல்லிவிட்டார்
- ஔவைக் குரத்தி அருள்வாக்கால். மேலும், மைனாரிட்டி ரிலிஜன் புத்தம் அழிந்துவிட்டது இந்தியாவில். அப்பத்தான்
அதன் ஹிஸ்டரி தெரியவந்துகொண்டிருந்தது.
 
ஒன்றே தெய்வம் எனும் கோட்பாட்டில், வெண்மேனியனான சிவனே, கடல்மிசை கிடந்து, நபிக்கு அருள் புரிந்து ஏசுவுக்கு தந்தையானான் என்று  பாடுக்றார். எல்லா மத தெய்வங்களையும் அல்ல. 

ஏன்? நபியே சிவனாகவும், ஏசு தந்தையாயும், பள்ளிகொண்டானாகவும் இருந்தான் என்று பாடுகிறார் என்றும் சொல்லலாமே.
பாரதி “பல மதத்தினர்” என்கிறார். அவர் வங்கத்தில் உருவான நியோ-வேதாந்தவழிச் சென்றவர். எனவே எல்லோர் கடவுள்களைச் சொல்கிறார்.
சிறப்பாக, சிவனே எல்லாக் கடவுள் ஆனார்-னு பாடற மாதிரி தெரியலை.

வேந்தன் அரசு

unread,
May 13, 2014, 8:57:28 AM5/13/14
to vallamai, mintamil, தமிழாயம்



13 மே, 2014 7:34 முற்பகல் அன்று, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> எழுதியது:
”ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்” என பாரதியே பாடியதால், ஈசனையே பிற மத கடவுளராகவும் அவர் மதிக்கிறார்.

பாரதி 20 நூற்றாண்டு கவிஞன். அதானால் அவன் பாட்டில்  வலிய திணிக்கவேண்டிய தேவை இல்லாத எளிமை இருக்கு. (வள்ளுவனும் அப்படித்தான். ஆனால் 20 நூற்றாண்டுகள் ஓடிய பெற்றியால் நமக்குதான் குழப்பம்). நான் நேரடி பொருளையே ஏற்பேன்.



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

N. Ganesan

unread,
May 13, 2014, 9:00:27 AM5/13/14
to vall...@googlegroups.com, mintamil, தமிழாயம்
ஈஸ்வரன்/ஈசன் என்று பெருமாளுக்கும் பெயர். நீங்க சிவன் = ஈசன் என்று எடுக்கிறீர்கள்.
ஒரு வரி ஆராய்ச்சிக்கு போதும். ஆனால், ஈசன் என்றால் என்ன பொருள் என்பது முழுமைக்கும் பொருந்துமா?

வேந்தன் அரசு

unread,
May 13, 2014, 7:45:13 PM5/13/14
to vallamai, mintamil, தமிழாயம்



13 மே, 2014 8:57 முற்பகல் அன்று, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> எழுதியது:
ஈசன் சிவனா மாலா என்பது இங்கு தேவையற்ற ஆய்வு. அவரே ஏசுவாகவும் அவர் மதிக்கிறார்.

ஆத்தி சூடி என்பது இரண்டு சொற்களானால் இங்கு சூடி என்பது பெயர்சொல் அல்ல.

ஆத்தி சூடி என்பது அருகனை குறிக்கும் பெயர் என்றால் ஆத்திச்சூடி  அல்லது ஆத்தி சூடியான் என வரும். இலக்கணம் அறிந்தவர் விளக்குங்கள்.
அதனால் ”ஆத்தி சூடி இளம்பிறை அணிந்து மோனத்து இருக்கும் திருவெண் மேனியான் “ ஒரே கடவுளையே குறிக்கும். 

N. Ganesan

unread,
May 13, 2014, 10:57:46 PM5/13/14
to vall...@googlegroups.com, mintamil, தமிழாயம்


On Tuesday, May 13, 2014 4:45:13 PM UTC-7, வேந்தன் அரசு wrote:

கணேசர்

உங்க வாதம் எல்லாம் தவிடுபொடி ஆகியது
இரண்டு முதல் ஐந்துவரை மதத்தலைவர்களை ஒற்றை சொல்லாலே சொல்லவில்லை. ஒன்றாம் மதம் மட்டும் ஏன் ஆத்திசூடி எனும் ஒற்றைச்சொல். 
2, 3 ம் தெய்வங்களாகவே காட்டப்பட்டு, 3, 4  மனிதர்களாக காட்டியுள்ளார். ஒன்று??? வேறு பாடல்களில் உள்ளதுபோல் ”ஆத்திசூடி அமர்ந்த தேவனுக்”கு அருள் புரிந்தோன் என பாடி இருக்காலம்

புத்த மதம் ஏன் சொல்லப்படவில்லை? புத்தனுக்கு ஞானஒளி கொடுத்தோன் என பாடி இருக்கலாம்.

ஒன்றே தெய்வம் எனும் கோட்பாட்டில், வெண்மேனியனான சிவனே, கடல்மிசை கிடந்து, நபிக்கு அருள் புரிந்து ஏசுவுக்கு தந்தையானான் என்று  பாடுக்றார். எல்லா மத தெய்வங்களையும் அல்ல. 

சிவனே நபி, ஏசு என்று பாரதி பாடவில்லை. ”பலமதத்தினர் பலவகை ஆகப் பரவிடும் பரம்பொருள்” என்கிறார். 
 4 மதம் என்பதை ஔவை பாட்டின் பொருளால் 5 மதம் என்றேன். ஆத்திசூடி அருகன் என்றால்
சமண (=சிரமண) சமயங்கள் இரண்டும் அடங்கும் (புத்தனுக்கு ஔகன் (அர்ஹத்) என்பதும் ஒரு பெயர்தான்.
ஔவை பாட்டின் உண்மைப் பொருளை உணர்வோ பாரதியின் பல மதத்தினர் என்பது 4 மதம் என்னாமல் 5 மதம்
எனும் சொல்லலாம் தானே.

> ஆத்தி சூடி என்பது அருகனை குறிக்கும் பெயர் என்றால் ஆத்திச்சூடி  அல்லது ஆத்தி சூடியான் 

தேவையில்லை. பித்தா! பிறைசூடி! - நோக்குக.

-------------

சூழ்தல் - சூடுதல் இரண்டுக்குமான தொடர்பை வள்ளுவர் விளக்குகிறார்.
ஒரு குறளில் கூட சூழ்- என்னும் வினை (அ) பெயர்ச்சொல் சுற்றியிருத்தல் 
என்ற பொருளில் காணோம். தெலுங்கில் சூடு- “நினை, ஆராய்ச்சி செய்தல்” என்ற
பொருளிலேதான் எல்லாக் குறளிலும் சூழ்- என்ற தாதுவேர் வருகிறது. சூழ்ச்சி அதற்கான பெயர்ச்சொல்.
இப்போது சொல்லும் பொருளிலே சூழ்தல், சூழ்ச்சி குறளிலே காணோம். பெரி. சந்திரா
இதுபற்றி முன்பு எழுதினார். அப்ஸ்றேக்ட் ஆக எண்ணமெல்லாம் ஒன்றில்
கவிந்திருந்தால்/சூடியிருந்தால் சூழ்தல், சூழ்ச்சி என்ற சொற்கள் உள்ள இடங்களின்
பொருளைப் புரிந்துகொள்ளவியல்கிறது. அதேபோல், பருப்பொருள் உதாரணங்களாகப்
பார்த்தால், இருள் சூடிய நேரம் (=இருள் சூழ்ந்த நேரம்), மேகம் சூடிய மலை = மேகம் சூழ் மலை
(ஐங்குறுநூறு), வானம் சூடிய உலகு = வானம் சூழந்த உலகு (புறநானூறு), ....
இவற்றைப் பார்க்கிறபோது சுடு/சூடு ‘வெம்மை’ சுள்ளி/சூளை என்னும் ள் எழுத்துடனும்,
சூடு ‘நினைத்தல்’ - சூழ் என்னும் வினையின் ழ் எழுத்துடனும் தொடர்புபடுத்த முடியும்.
 சூழ்- > சூடு/சூட்டு ‘சூழ்தல், கவிதல்’, சுள்-/சூள்- சூடு ‘வெப்பு’ இரண்டும்
பொருள் அறவே மாற்படுகின்றன. சூழுதல்/சூடுதல் - முழுதுமாகக் குடைபோலக் கவிதல்
என்னும் சங்க காலப் பொருளிலே ஔவைக் குரத்தியார் அருகனைப் பாடினார். 
இப்படிப் பார்த்தால், சூளாமணி என்று கன்னடம் வழியாக தமிழுக்கு வந்த சொல்
சூழாமணி என்பது மூலத்ராவிடச் சொல் சூழாமணி/சூடாமணி எனலாம்.
சூளிகை என்றால் மென்மாடம், இதுவும் சூழிகை/சூடிகை என்பதன் கன்னட (> தமிழ்)
வார்த்தையாகலாம்.

நா. கணேசன்
 

இந்த வாதம் நீங்க ஏற்கமாட்டீங்க.  இருதரப்பிலும் ஈடுபடாதவங்களுக்காக சொல்லுகிறேன் 
”ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்” என பாரதியே பாடியதால், ஈசனையே பிற மத கடவுளராகவும் அவர் மதிக்கிறார்.

பாரதி 20 நூற்றாண்டு கவிஞன். அதானால் அவன் பாட்டில்  வலிய திணிக்கவேண்டிய தேவை இல்லாத எளிமை இருக்கு. (வள்ளுவனும் அப்படித்தான். ஆனால் 20 நூற்றாண்டுகள் ஓடிய பெற்றியால் நமக்குதான் குழப்பம்). நான் நேரடி பொருளையே ஏற்பேன்.




ஈசன் சிவனா மாலா என்பது இங்கு தேவையற்ற ஆய்வு. அவரே ஏசுவாகவும் அவர் மதிக்கிறார்.

ஆத்தி சூடி என்பது இரண்டு சொற்களானால் இங்கு சூடி என்பது பெயர்சொல் அல்ல.

ஆத்தி சூடி என்பது அருகனை குறிக்கும் பெயர் என்றால் ஆத்திச்சூடி  அல்லது ஆத்தி சூடியான் என வரும். இலக்கணம் அறிந்தவர் விளக்குங்கள்.
அதனால் ”ஆத்தி சூடி இளம்பிறை அணிந்து மோனத்து இருக்கும் திருவெண் மேனியான் “ ஒரே கடவுளையே குறிக்கும். 

N. Ganesan

unread,
May 14, 2014, 10:21:21 AM5/14/14
to vall...@googlegroups.com, vall...@googlegroups.com, thami...@googlegroups.com, tiruva...@googlegroups.com, housto...@googlegroups.com, மின்தமிழ், Banukumar Rajendran, banukumar rajendran
On Wednesday, May 14, 2014 1:36:11 AM UTC-7, R Banukumar wrote:

2014-05-12 22:14 GMT+05:30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
ஆலமரத்தடி என்பது சிவனுக்கும் தக்ஷினாமூர்த்திக்கும் புத்தருக்கும் என்று ஒரு ஆய்வாளர் தெரிவிப்பது கீழே

The tree symbolizes the Trimurti – Vishnu is believed to be the bark, Brahma, the roots and Shiva, the branches. Banyan also symbolises life and fertility in many Indian cultures. For this reason, banyan tree is worshipped by those who are childless and also, it is never cut.

Lord Dakshinamurthy, who is revered as the ‘ultimate guru’, is usually depicted beneath a banyan tree. He represents Lord Shiva and is seen as the embodiment of knowledge and the destroyer of ignorance.

The tree is also sacred to the Buddhists. After attaining enlightenment, Buddha is believed to have sat under a banyan tree for seven days.


அரச மரத்தின்கீழ்  புத்தர் ஞானம் பெற்றார் என்ற செய்தி கீழே

http://ecoheritage.cpreec.org/Viewcontall.php?$mFJyBfK$MA5hj$m1Rt&7c

Religious association

The peepal tree, with its heart-shaped leaves, is one of the most revered trees in India. The tree is considered as an incarnation of Lord Vishnu. The tree also symbolises the continuity of life because the tree itself lives and grows for hundreds of years. Childless couples worship the tree, tying threads of white, red and yellow silk around it to pray for progeny and rewarding parenthood.

The peepal tree is also sacred to the Buddhists, because Lord Buddha is believed to have attained enlightenment under this tree. Due to this, the peepal tree is often referred to as the Bodhi tree or the ‘tree of enlightenment’.

தீர்த்தங்கரருக்கு என்று எதுவும் இங்கே குறிப்பிடப்படவில்லை


:-)

‘‘ஆலநெடு நிழலமர்ந்தனை
காலம் மூன்றும் கடந்தனை
தாழ்சடை முடிச் சென்னிக்
காசறு பொன்னெயிற் கடவுளை’’

இரா.பா,
சென்னை

ஆதிபகவன் (குறள் எண்: 1) திருவருளைப் போற்றும் திருக்கலம்பகப் பாடல்.

“ஆலமர் செல்வன்” என்று பொதிகைமலையில் சிறுபாணாற்றுப்படை பாடுவதும்
அவன் யார்? என்பதும் பல மதத்தினரும் தங்கள் கடவுள் என்று போற்றியிருப்பதும்
பண்டை இலக்கியங்களால் அறிகிறோம். பெருங்கதையில் பார்த்தால் பொதியில்
கடவுள் தாங்கள் கொண்டாடியவர் என்கின்றார் கொங்குவேள். சிலப்பதிகார உரையில்
கடவுள் என்று இந்த முனிவரைச் சொன்னார்கள். தென்னன் என்னும் மதுரைக்
காஞ்சி அடிகள் பின்னர் விரிந்து தெக்கிணண் என்று சிலம்பில் ஆகி, பல்லவர்
காலத்தில் தெக்கிணாமூர்த்தி என சிவனுக்கு ஆகிறது. ஆனால், அவர் வடிவத்தில்
இன்றும் கையில் பத்மபாணியாக இருக்கிறார் (உ-ம்: திருவூறல் என்னும் தக்கோலம்,
மயிலாடுதுறை. மற்ற சில காட்டுகளை பத்மபாணி அவலோகிதன் - தட்சிணாமூர்த்தி
வழிபாட்டுக் கட்டுரையில் பார்க்கலாம். அரிமாநோக்கு (J. of the Central Inst. of Classical
Tamil, Chennai ஆய்வேடு, also, in Poetry in Stone's Vijay's website) பத்மபாணி அவலோகிதனை 
வீரசோழியம் பாட (அதில் ஆத்திசூடி அருகரைப் போற்றும் பக்திப் பாடலும், ஆத்தி சூடும் சோழனைப் 
புகழும் அகப்பாடலும் மேற்கோள் பாடல்களாக உள்ளன. இவை மிகப்பழைய பாடல்கள் என்று கொண்டால்,
ஆத்திசூடி தீர்த்தங்கரரைப் போற்றிய ஒரு போதனர் தேர்ந்தெடுத்து ஆத்தியைச்
சோழகுலத்தவர் மரமாக கொடுத்தார் என எண்ணலாம். இது சங்க கால தொடக்கத்தில்
(கி.மு. 4ஆம் நூற்றாண்டு) நிகழ்ந்திருக்க வேண்டும். அப்போதுதான் சமண சமயங்கள்
உருவாகி வணிக வளர்ச்சியினால் தெற்கு நோக்கி வருகின்றன (Lanka, Tamizakam). வீரசோழியத்தில்
ஆத்திசூடி அருகபத்தரான போதநர் மீதான பழைய மேற்கோள் பாடல் வடமொழியில்
ஒரு விருத்த யாப்புக்கு இலக்கணமாக இருப்பதை முனைவர் க. கணேசலிங்கனாருக்கு
எழுதிய மடலில் கொடுத்துள்ளேன். காண்க. 

ஆதிபகவன் ஆலமர்செல்வன் ரிஷபநாதரின் சைவ-சமண சமய ஊடாடல்:
மயிலை சீனி. வேங்கடசாமி, சமணமும் தமிழும்
கி.மு. நூற்றாண்டுகளில் விடங்கர்(வருணன்)-கொற்றி என சிந்துவெளியின்
சமயமாக இருந்த தமிழர் சமயம் தமிழ் மூவேந்தரால் கொண்டாடப்பட்டுள்ளதை
அவர்கள் வெளியிட்ட காசுகளும் (அசுவமேத யாகம் நடத்தியபின்னர் 
commemorative issue coinage), திருப்பரங்குன்றம் தமிழ்ப்ராமி கல்வெட்டும் 
நிரூபிக்கின்றன. விடங்கனின் ஆலமரம் (வடவ்ருக்‌ஷம் என்பதில் உள்ள
வடம் என்னும் தமிழ்ச்சொல் ரிக்வேதத்தில் வருணனுக்கே உரிமையுடையது)

நூதலோசு அவர்கள் மோனத்தில் அமரும் சிவன் சைவசித்தாந்ததிற்கு எவ்வாறு
எதிராக உள்ளது என்று விளக்கினார். ஆல்சூடியாய் சிவன் அமர, ஆதிபகவனை
சமணர்கள் அவ்வாறு வழிபட்டதே காரணம் எனலாம். போதிசூடி புத்தரும்,
ஆத்திசூடி பாகல்வண்ணரும், ஆல்சூடி ஆதிபகவரும் சமண சமயங்களின்
பத்தர்குழாங்கள் வடிவமைக்க, சைவம் பல்லவர் காலத்தில் தென்னன்/தெக்கிணனை
வடிவமைக்கிறது. அவரது தோற்றத்தை காட்டும் ஆதி சான்றுகளாக
சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, சிலம்பு போன்றவற்றை ஆதாரங்கொள்ளலாம்.

இன்னொன்று: ஆய் போற்றும் ஆலமர்செல்வன் பற்றிய சிறுபாணாற்றுப்படை
வரிக்கு திரு. நூதலோசு ’நீல நாகம் நல்கிய கலிங்கம்’ - கரிய யானைகள் கொண்டுவந்த
ஆடை என்றார். இவ்வுரையை விடப் பொருத்தமான உரை இருக்கிறது.

"நீல நாகம் நல்கிய கலிங்கம்
ஆலமர் செல்வர்க் கமர்ந்தனன் கொடுத்த
சாவந் தாங்கிய சாந்துபுலர் திணிதோள்
ஆர்வ நன்மொழி ஆய்" (96 - 99)

”நாகங்களின் புணர்ச்சிக்காலத்து, அவற்றின் மேல் போர்க்கப்பட்ட ஆடை மிகவும் பவித்திரமானதென்றும், அது தேவதைகளுக்கு மிகவும் உகப்புடை தென்றும் வழக்குண்டு.” (வேளிர் வரலாறு, மு. ராகவையங்கார்).

சாவம் - வில். சாய்தல் - வளைதல் இந்த வினைச்சொல் தரும் சாவம்,
‘shaapa'  என்று வடமொழியில் வழங்குகிறது. இது த்ராவிடச்சொல் எனக்
காட்டியவர் அறிஞர் பர்ரோ அவர்கள். ‘sayana 'bed', saayaNa 'name of first commentator on Rgveda',
shava 'corpse' - எல்லாம் சாய்- என்னும் தமிழ் வினைச்சொல் தரும் வடமொழிச்
சொற்கள் தாம், வடக்கே தொல்தமிழ் ஆரியர் வருகையால் திரிந்து ஹிந்தி,
குஜராத்தி என ஆனபோது மாறியவை, அமெரிக்கா கண்டத்தில் செவ்விந்திய மொழிகள்
போய் இன்று ஸ்பானிஷ், ஆங்கிலம் ஆனாற்போல, இந்தியா வரலாற்றில் அதற்குமுன்
நிகழ்ந்த நிகழ்ச்சி இது.

நா. கணேசன்

வேளிர் வரலாறு, மு. இராகவையங்கார்

”வேள்-ஆய்

இவன் கடைச்சங்கநாளில் விளங்கிய கடையேழுவள்ளல்களில் ஒருவன் என்பது-158-ம் புறப்பாட்டாலும், சிறுபாணாற்றுப் படையாலும் நன்கு விளங்குகின்றது. இவ்வேளைப்பற்றிய சரித்திர முழுதும் தெரியவிடமில்லையேனும், இவன் விஷயமாகப் பழைய நல்லிசைப்புலவர் பாடிய செய்யுள்கள் இவ்வள்ளலது வரலாறுகள் சிலவற்றை அறிதற்கு உதவியாயிருத்தலோடு, இவனது அரிய குண விசேடங்களையும் பெரிய கொடைச்சிறப்பையும் இக்காலத்தார்க்குப் புலப்படுத்துகின்றன. இவ்வள்ளல் வேளிர் குலத்தைச் சேர்ந்தவனென்பது, 'மாவேள் ஆய்', 'தேர்வேள் ஆய்' எனப் புறநானூற்றில் வருதலாற்றெரியலாம். அந்நூலில் "கழறொடி ஆஅய்மழைதவழ் பொதியில்" எனவும், "தென்றிசையாய்குடி" எனவும் கூறப்படுதலின், ஆய்நாடு பொதிய மலைப்பக்கத்து உள்ளதென்பதும், அவன் தலைநகர் 'ஆய்குடி' எனப் பெயர்பெற்ற தென்பதும் விளங்கும். இவன் மலை வேற்றரசரால் தாக்கமுடியாத அரண்வலியுடைய தென்பர்; "கழறொடி யாஅய் மழைதவழ் பொதியில் - ஆடுமகள் குறுகினல்லது - பீடுகெழு மன்னர் குறுகலோ அரிதே" எனக் காண்க. இவனாட்டில் கவிரம் என்னும் மலைப்பகுதியில் இனிய பல சுனைகளுண்டென்றும், சூரரமகளிர்பலர் அதில் வாழ்வதாக ஐதிகமிருந்த தென்றும் தெரியவருகிறது. இதனை--

"தெனாஅது, ஆஅய் நன்னாட் டணங்குடைச் சிலம்பிற்
கவிரம் பெயரிய உருகெழு கவாஅன்
ஏர்மலர் நிறைசுனை யுறையும்
சூர்மகள் மாதோ என்னுமென் னெஞ்சே." (அகம்-198)

என்னும் அடிகளிற் காண்க. ஆய்நாட்டில் யானைகள் மிகுந்த காடுகள் உண்டென்றும், பரிசிலர்க்கு யானைக்கொடை மிகுதியாக அளித்து வந்தவன் இவ்வள்ளலென்றும் தெரிகின்றன. இங்ஙனம், இவனது யானைக் கொடையின் மிகுதியை நோக்கி, ஒருபுலவர், "விளங்கு மணிக் கொடும்பூண் ஆஅய்நின் னாட்டு-இளம்பிடி ஒருசூல் பத்தீனும் மோ" என்று நயப்பக் கூறுதலுங் காண்க. இவ்வள்ளலுக்கு 
----------
page 29 

"அண்டிரன்" என்னும் மற்றொரு பெயரும் உண்டென்பது, இவனைப் பற்றிய பாடல்கள் பலவற்றிற் காணலாம். புறநானூற்று - உரைகாரரும், 'அண்டிரன் - ஆய்க்கு ஒரு பெயர்' என்பர். இவ்வண்டிரன் என்ற பெயர்வழக்கின் காரணம் முன் வேளிர் வரலாற்றினுள் விளக்கப்பட்டது.* புறப்பாட்டில், "ஈகையரிய இழையணிமகளிர்" "கோடேந் தல்குற் குறுந்தொடி மகளிரொடு" என வருதலால், ஆய் மகளிர்பலரை மணம்புரிந்தவனென்பது அறியப்படும். இவனுக்குரிய மாலை சுரபுன்னை ஆகும். இவ்வள்ளல், தன் பெருங்கொடைக்கேற்ப, இன்சொல்லே தன்சொல்லாகப் படைத்தவனென்பர். இவ்வேளிர் தலைவன், கொங்கு நாட்டாரோடு போர்புரிந்து, அவரை மேல்கடற் பக்கத்தே ஓட்டினவனென்று, 130-ம் புறப்பாடல் அறிவிக்கின்றது. இவன், ஒருகால், நீலநாக மொன்றால் அளிக்கப்பெற்ற அருமை பெருமை வாய்ந்ததோர் ஆடையைச் சிவ
பிரானே அணியத்தக்கதென்று கருதி, அப்பிரானுக்கு உவந்து சாத்தினன் என்று சிறுபாணாற்றுப் படையில் வியக்கப்படுகின்றான். இதனை,

"நீல நாகம் நல்கிய கலிங்கம்+
ஆலமர் செல்வர்க் கமர்ந்தனன் கொடுத்த
சாவந் தாங்கிய சாந்துபுலர் திணிதோள்
ஆர்வ நன்மொழி ஆய்" (96 - 99)

என்பதனால் அறிக. இவ்வரலாறு, ஆய், சிவபக்தி மிக்கவன் என்பதை நன்கு விளக்குவது. இவ் வள்ளலின் நாளோலக்கம் மிகச் சிறந்து விளங்கும் என்பர். (நற்.-30) இப்பெருந்தகையைப் பாடிய புலவர்பெருமக்கள் உறையூர் ஏணிச்சேரி-முடமோசியார், துறையூர் - ஓடைகிழார், குட்டுவன் - கீரனார் என்போர். இவருள் முடமோசியார் அந்தணரென்பது தொல்காப்பிய மரபியலுரையால் (சூத் 74) அறிந்தது. இம்மோசியாரே, வேள்-ஆயின் அருமை பெருமைகளை அதிகமாக வெளியிட்டவர். வேள்-பாரிக்குக் கபிலர் போலவும், 
-
* வேளிர் வரலாறு, 16-ம் பக்கம் பார்க்க.
+ நாகங்களின் புணர்ச்சிக்காலத்து, அவற்றின் மேல் போர்க்கப்பட்ட ஆடை மிகவும் பவித்திரமானதென்றும், அது தேவதைகளுக்கு மிகவும் உகப்புடை தென்றும் வழக்குண்டு.

----------
page 30 

அதிகமானுக்கு ஔவைபோலவும், ஆய்க்கு மோசியாரே பெரிது முரிமை பூண்டவரென்பது " திருந்துமொழி மோசி பாடிய ஆயும்" எனப் பெருஞ்சித்திரனார் என்ற புலவர் கூறுதலால் (புறம்-158) தெரியலாம்.

வேள் - ஆயின் வள்ளன்மையையும் அருங்குணங்களையும் புறநானூற்றில் வரும் பாடல்கள் மிகவும் அழகுபடக் கூறுகின்றன. மோசியார் தன் மனைவியரது மாங்கல்ய சூத்திரம் ஒழிய மற்றவையனைத்தையும் பரிசிலர்க்கு வழங்கி விட்டனனாயினும், கொடுக்கும் இன்பத்தை அனுபவித்தறியாது தம்வயிறருத்திக் கழியும் மற்றப் பெருஞ் செல்வர்கள் மனைபோலப் பொலிவிழக்காது ஆயின் அரண் மனை அழகுமிகுந்து விளங்கும்" என்கிறார். இப்புலவர், ஆயைக் காணாதமுன்பு, பிறர் சிறிய இசையைக் கேட்டும் நினைந்தும் பாடியும் போந்த தமக்கு, அவனைக் கண்டதும் அவனது அறுங்குணங்களும் பெருங்கொடைத்திறமும் அளவிறந்த அதிசயம் விளைத்தமையால், "முன்னுள்ளு வோனைப் பி்ன்னுள்ளினேனே - ஆழ்கென் னுள்ளம் போழ்கென் னாவே - பாழூர்க் கிணற்றிற் றூர்கவென் செவியே" எனத் தம் அறியாமையை இழிப்பதன்மூலம் ஆயின் உத்தம குணங்களை வியந்தனர். இவ்வள்ளலின் அருமை பெருமைகள் தம் போன்ற பெரும்புலவர்களைப் பணித்துவிட்டமைபற்றி " புலவர்கள் நீயில்லாத உலகத்தில் இனி வாழாதிருக்கக் கடவர்" என்றும், " பெரிதாக ஏத்தினாலும் சிறிதும் உணரமாட்டாத, பெருமையில்லாதுபெருகிய செல்வத்தையுடைய அரசரை எம்மவர் பாடார்" என்றும் புகழுவர். (புறம்-373) இங்ஙனம், வேள் ஆயின் பேரபிமானத்துக்கு உரிமை பூண்டு விளங்கிய இப்புலவர், மலைக்காட்டுவழியே ஒருகாற் செல்லும்
போது, ஆண்டுக் களித்து வாழும் யானைக் கூட்டங்கள் தம் கண்ணுக்குப் புலப்பட, அப்போது--

" மழைக்கணஞ் சேக்கு மாமலைக் கிழவன்
வழைப்பூங் கண்ணி வாய்வா ளண்டிரன்
குன்றம் பாடின கொல்லோ
களிறுமிக வுடைய இக்கவின்பெறு காடே"

---------
page 31 

என்னும் இனிய பாடலைக் கூறினார். " யானைகளை மிகுதியாகவுடைய இவ்வழகிய காடு, அண்டிரனுடைய (ஆய்) மலையைப் பாடிப் பரிசில் பெற்றதுகொல் என்பது இகன் கருத்து. ஆயின் யானைக்கொடை, காட்டியானைகளைக் கண்டதும் தம் மனதில் தோன்ற, அப்போது தானே சுரந்தெழுந்த பாடல் இஃதென்பது அறியலாம். இன்னும்,
மோசியார் ஆயின் ஒப்புயர்வற்ற கொடைத்தூய்மையை--

" இம்மைச் செய்தது மறுமைக் காமெனும்
அறவிலை வாணிகன் ஆஅய் அல்லன்
பிறரும் சான்றோர் சென்ற நெறியென
ஆங்குப் பட்டன் றவன்கை வண்மையே"

என்ற பாட்டாற் குறித்தனர். இவ்வுலகில் அறங்கள் செய்யின் அவை மறுமைக்குதவு-மென்று மறுபயன் பெறும் எண்ணத்தடன் தருமவியாபாரம் செய்யும் வாணிகலன்னன் ஆய்; அவனது கொடை, பெரியோர்கள் சென்ற வழியென்று உலகோர் கருதும்படி அமைந்தது" என்பது இப்பாட்டின் போந்த பொருள். இனி, அம்மோசியார் மற்றோரிடத்தில்,

வடதிசை யதுவே வான்றோ யிமயம்
தென்றிசை ஆஅய் குடியின் றாயிற்
பிறழ்வது மன்னோவிம் மலர்தலை யுலகே"

என இவ்வள்ளல் உலகிற்குபகாரப்படும் சிறப்பைப் புகழ்வர். இவ்வடிகளில் அமைக்கப்பட்ட கருத்து, பொதியில் மலைக்குரிய அகத்தியர்க்கு வழங்கும் புராணகதையடியாக உண்டாகியிருத்தல் வேண்டும்.

இவ்வாறு, " ஆடுநடைப் புரவுியுங் களிறுந் தேரும் - வாடாயாணர் நாடு மூரும் - பாடுநர்க் கருகா ஆஅய் அண்டிரன்" பெருவள்ளலாய் உலகோர் தன்னை என்றும் நினைக்கும்படி விளங்கி, பின் ' காலனென்னுங் கண்ணிலி யுய்ப்ப—மேலோருலக மெய்தினன்'. இவ்வள்ளல் பிரிவிற்காற்றாது, இவனதுரிமை மனைவியர் தீப்பாய்ந்து உயிர்விட்டொழிந்தனர். ஆய் இறந்தபோது அவனது பிரிவுக்குப் பெரிதும் இரங்கிப் பாடிய புலவர்கள், உறையூர் ஏணிச்சேரி 
------------ 
page 32 

முடமோசியார், குட்டிவன் கீரனார் என்போர். இவருள், மோசியார், ஆயண்டிரன் விண்ணிலகு சென்றதற்கிரங்கி அடியில்வரும் உருக்கமான பாடலைக் கூறினர்:

"திண்டேர் இரவலர்க் கீத்த தண்டார்
அண்டிரன் வரூஉ மென்ன வொண்டொடி
வச்சிரத் தடக்கை நெடியோன் கோயிலுட்
போர்ப்புறு முரசங் கறங்க
ஆர்ப்பெழுந் தன்றால் விசும்பி னானே"*

பெரும்புகழினனாகிய அண்டிரனை விண்ணுலகத்தில் இந்திரன் வாத்திய கோஷங்களுடன் வரவேற்று எதிர்கொண்டான் என்பது இதன் கருத்து; 
என்றது ஆய் சுவர்கஞ்சென்றான் என்பதாம்.”






 

எனவே ஆத்திசூடி மர்ந்த தேவன் சிவனா அல்லது புத்தரா என்று மட்டுமே  முடிவெடுக்கவேண்டியது ஆய்வுகாட்டும் முடிவு

சவடால்



--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N D Logasundaram

unread,
May 16, 2014, 7:50:28 AM5/16/14
to mintamil, வல்லமை, தமிழ் மன்றம், thamizayam, Sivakumar M A, podhuvan sengai, Maravanpulavu K. Sachithananthan, Raji M, adi...@shaivam.org
பானுகுமார் அவர்களுக்கு,

முன்பு ஒருமுறை முக்குடை சமணருக்கு மட்டுமல்ல அய்யா 
 
பௌத்தத்திலும் உண்டு என சாஞ்சி ஸ் தூபி மேல் உள்ளதைக் காட்டி இருந்தேனே நினைவு உள்ள தா ??

மறந்திருந்தால் இப்போது பாருங்கள் இங்கே 


அதுவுமல்லாமல் 

பார்சுவனதருக்கு முக்குடை  கிடையாது என்பதும் பரந்த அறிவிலிருந்து 
வைக்கப்பட்டிருந்த கருத்து என முடியாது எனக் காண்க இணைப்பு படங்கள் 

 எனவே மரபு என்பதெல்லாம் (யதார்த்தமாகச் சொன்னால் சுத்த  xxxxxxxxxxx ) 
எங்கும் எதிலும் மாறுதல்கள் உண்டு எனவே இதை வைத்து இது என ஆகாது 

பானு குமார் தவறாகக் கொள்ள வேண்டாம் 

சமணத்தில் மட்டுமல்ல சைவம் வைணவம் இவற்றிலும் பல்வகை யாக மரபுகள் என்றாலும்
பெரும்பாலும் மீறப்பட்டே உள்ளதை கண்டிருக்கின்றேன் 

எனவே மரபு என்பது ஓரளவிற்கு கடைபிடிக்கவெண்டியது அவ்வளவே 

மொழியிலும்  ஒரு சொல்லை ஒரு பொ ருளுக்குதான் என பயன் கொளவதில்லையே அதுபோல் 

இலக்கியம்  கண்ட பின்தான் இலக்கணம்  >>>>>> தாங்கள் நன்றாக அறிவீர்கள்  

தேவார பாடல் பெற்றத் தலங்கள் 276 ல் இந்தியாவில் இல்லாத கயிலாயம் ஈழத்து கேதீ ச்சரம் , திரி கோண மலை தவிர
273 தலங்கள்   

அதான்று 

வைணவ திவ்ய தேசங்கள் 106 ல் (மனித உடலோடு பார்க்கக் கூடியது  திருப்பாற்கடல் வைகுந்தம் நீங்கலாக) 
102 தல ங்ககளும்

 இவை அல்லது 100 க்கும் மேல்   இந்தியா முழுதுமான கே இந்துக்கோயில்களில் வழிபடு செய்துள்ளேன் 

பிறகு கிடைத்த அறிவிலிருந்து தான் பேசுகிறேன் 

சிவன் கோயில் கோபுரம் 7 நிலை என்றால் மேலே உள்ள கலசங்கள் 7 என வேண்டும் என்பார்கள் வாய்ச்சொல்லில்
 ஆனால்  75 %  கோயில்களில் மீற ப்பற்றிருக்கும் கோ புரங்கள் ஒற்றைப்படை எண்ணி ல் நிலைகள் கூடாது என்றால்
இங்கு இப்படி உள்ளதே என்றால் முழிப்பார்கள்) 

கொ டி மரம் பலிபீடத்திற்கு முன்பா பின்பா  என உறுதியாக சொல்ல முடியாது 

இப்படி உள்ளதுதான் மரபென்பார்கள் ஆனால் அங்கு அப்படி உள்ளது என் எனக் கேட்டல் வேறு எதாவது
கதைகட்டி விடுவார்கள்  (நம் நா,,,  க  ர் அய்யா வைக்கும் குழப்பங்கள் போல )

சுவாமியின் அம்மையின் பெயரை மனம் வந்தவாறு அ ந்குள்ள அர்ச்சகர்கள் மாற்றி அல்லது திரித்து விடுவார்கள் 
எனையா  என்றால் இப்படி புத்தி குறைந்த நிலை என்றால் ஆணவ த்தினால்  கோபம் தான் வரும்

நான் உங்களுக்கு எழுதிய தாதகி என்பது ஓர் தேவ தாரு என்பதில் இவ்வகை குழப்ப நிலைதான் 
அவரவர்கள் தங்கள் மனதிற்கு வந்த பொரு ளை அதுதான் சரி என்று நினைத்துக்கொள் வது 75 %   

மற்றோர் எடுத்துக்காட்டு 
சென்னையில் அமைந்த கரை என்று ஓர் இடப்பெயர் அறிவீர்கள் அது அம்ஜி கரை  என்பதை  திருத்த நினைத்து 
மாற்றியும் விட்டார்கள்  ஆனால் கி வ ஜ எனும் ஓர் தமிழ் கற்றவர் கல்வெட்டுகளில் அம்சி கரை என்பதுதான் சரியான சொல் 
அம்ஜிக்கு வேலை செய்தான் என்றால் கூலியை  பணமாகக் கொடுக்காமல் உணவாகவோ அல்லது வேறு பொருள் வழியில்
பெற்றான் எனபது  என விளக்கினார் ( kind instead of cash )

 இதுபோல்தான் இந்த ஆத்திசூடி 

திருக்குறள் கடவுள் வாழ்த் தில் குறிக்கும் கடவுள்  யார் என விவாதிப்பது போல் சென்று கொண்டிருக்கின்றது என இப்போது உணர்கிறேன் 

வள்ளுவரும் என் இப்படி பல பொருள் கொள்ள எழுதினர் என்பதை அவர்தான் அறிவா ர் 

இந்த ஆத்திசூடியப்படிய அவ்வை யார் எந்தக்கலத்க்து ஔவை என்பதும் விவாதத்தில் நுழை யா லாம்  

ஆக அறிவென்பது மாறுதலுக்கு உடையது 

மெய்ஞான த்தில் மட்டுமல்ல விஞ்ஞானத்திலும் இதுவேதான் நிலை அய்யா?  

பௌதிகம் நான் 8 ம் வகுப்பு படித்த காலத்தில் (1953) என் ஆசியர் ஒளி  நேர்ககோ ட் டில் தான் செல்லும் எனும் என கோடுகள் போட்டு விளக்குவர் 
(corpuscular theory ) பிறகு நேர்கோடு மட்டுமல்ல அலைகளாகும் என (WAVE THEORY ) ஒன்று வந்தது அதன் பிறகு மற்றொன்று துகள் நிலை என்றும்  
( quantum theaory)  முளைத்தது அதன் பிறகும் ஒன்று some times wave some times quantum என 

எனவே அறிவு என்பது முடிவில்லாதது
 மேலும் ஒன்று 

அங்காங்கே அவரவர்கள் நின்ற நி லை எல்லாமே சரி என்று அவர்களுக்கு நன்றே உள்ள  அறிவினால் த்தான் முடிவு செய்துள்ளனர்
அவர்கள் கொண்டதிலும் தவறேதும் இல்லை சூழ்நிலை மாறும் பொது மாறிவிடுகின்றது 

தண்ணீரின் கொதிநிலை 100 டிகிரி C மிகவும் சரியா அறிவுதான் 
ஆனால் இது காற்றின் அழுத்தம் அறை   நிலையில் உள்ளது என்பது சொல்லாமல் கொல்லப்பட்ட நிலை 
அதுவே presure cooker உள்  அதைவிட அதிகமாகும் 115 டிகிரி வரை 
மேலும் ஒன்று இது சுத்தமான உப்பில்லாத நீருக்குத்தான் 
பல்வேறு உப்புகள் கரை ந்திருந்தால் வேறு ஆகுஇம் என்பைதை உணரவேண்டும் 

நிற்க 
அளவையில் (logic) இரு கருத்துக்கள் (சான்று களுடன்) இருக்கும் நிலையில்  
மற்றதை மறுக்க வேடுமானால் மறு ப்பதற் குத்தான் சான்று காட்ட வேண்டும் 
அல்லது சான்று தவறு  எனக்காட்ட வேண்டும் 
வழக்காடுபவதல் மறு ப்பவன் தான் மறு ப்பதற் கான சான்று அது அப்படி அல்ல எனக் அதற்கான சான்றுகளுடன்  காட்டவேண்டும் 

மேலும் பேசுவோம் 
அன்புடன் 
நூ த லோ  சு 
மயிலை 





2014-05-16 13:57 GMT+05:30 Banukumar Rajendran <banuk...@gmail.com>:



2014-05-16 3:03 GMT+05:30 Dev Raj <rde...@gmail.com>:

On Thursday, 15 May 2014 02:53:17 UTC-7, இரா.பா wrote:
கணேசர் ஐயா, தனி மடலில் குறித்திருந்த மற்ற தரவுகள்.

1. http://books.google.co.in/books?id=dSq2AAAAIAAJ&redir_esc=y

அந்நூலிலிருந்து..



முக்குடை [trilinear umbrella] பார்சுவநாதருக்குரியதா ?
யாரைப் பற்றிய விவாதம் இப்போது ?

பார்ஸ்வநாதருக்கு முக்குடை கிடையாதா ஐயா. இதுவரை யான் அவருக்கு முக்குடை உண்டு என்று
நினைத்திருந்தேன்?

:-)

இரா.பானுகுமார்,
சென்னை





 
வழக்கம்போல் ஆராய்ச்சி ஐயாவின் சான்றுகள் மேலும் குழப்புகின்றன.
தாதகி / ஆத்தி என்று சொல்லிக்கொண்டிருந்தவர் தேவதாருவுக்குத்
தாவி விட்டார். அம்மரம் நெட்டுக்க வளர்ந்திருக்கும். குடைபோல்
கவியாது -

கூகுள் தேடல் கைகொடுக்கவில்லை போலும்


தேவ்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
sanch2.jpg
sanchi1.jpg

N D Logasundaram

unread,
May 16, 2014, 7:55:40 AM5/16/14
to mintamil, வல்லமை, தமிழ் மன்றம், thamizayam, Sivakumar M A, Raji M, podhuvan sengai, Maravanpulavu K. Sachithananthan, adi...@shaivam.org
முக்குடை உடைய பார்சுவநாதர் ப டங்களை  இணக்க மறந்தேன் இங்கு காண்க 

நான் கண்டதை வைத்துள்ளேன் அவர்கள் வைத்ததில் ல் தவறிருந்தால் மன்னிக்க 

நூ  த லோ சு 
மயிலை

Parshvanath at kunigal.JPG
Shri Kalikund Parshvanath Teerth.jpg
Sri_Manmohan_Parsvanath,_Santhu.JPG

N D Logasundaram

unread,
May 16, 2014, 8:11:04 AM5/16/14
to mintamil, வல்லமை, தமிழ் மன்றம், thamizayam, Sivakumar M A, Raji M, podhuvan sengai, Maravanpulavu K. Sachithananthan, adi...@shaivam.org
இந்த செய்தி செல்லும் இழை தொடர்புடையது ஆகா து எனினும் 
வியப்பு நிலையில் ஒன்றை காட்டநினை க்கின்றேன் 

குனிகல்   பார் சுவ நாதர் என 2 வதாக உள்ள படத்தில் நாதனார் அமர்ந்த பீடத்தின் அடியில் 2 யானைகள் முயன்று
இரு கோப்பைகளை இழுத்து செல்ல நினைப்பதைக் காண்க 

இதே படத்தை தான் ஆர்கிமிடிஸ் எனும் கிரேக்க அறிஞர் காற்றின் அழுத்த ஆற்றலை நிறுவ பெரிய இரு கோப்பைகளை 
இணைத்து உள்ளே இருக்கும் காற்றினைக் நீக்கி அதன் ஆற்றலை இரு யானைகளின் ஆற்றலை விட மிக்கது எனக்கட்டினார் 
ஏன மேற்கத்திய கட்டுரைகள் காட்டுவதை ப்[ பலர் பார்த்திருப்பெர்கள் என நினைக்கின்றேன் 

மேலும் இது பற்றி ஏதாவது சொல்ல நினைத்தால் வேறு இழையாகத் தொடரலாம் இங்கேயே விவாதிக்க வேண்டாம் 

நூ த லோ சு 
மயிலை 

வேந்தன் அரசு

unread,
May 17, 2014, 9:05:53 AM5/17/14
to vallamai, mintamil, தமிழ் மன்றம், thamizayam, Sivakumar M A, podhuvan sengai, Maravanpulavu K. Sachithananthan, Raji M, adi...@shaivam.org
””நிலவரை சூட்டிய நீள்நெடுந் தானைப்”

”நீர்அக இருக்கை ஆழி சூட்டிய”

”தொழுநீ ரிணையடிக் கே,அன்பு சூட்டிய சூழ்குழற்கே”



சூழ்ந்த, சூடிய இரண்டுக்கும் ஒரு வேறுபாடு இருக்கு.
முற்றிலும் என்றால் சூழ், பகுதி என்றால் சூடிய, சூட்டிய.

பாணன்  தலையில் தாமரை சூட்டிலாம், சூழ முடியுமா? மாலை சூடலாம். மாலை சூழலாமா?

ஆழி உலகை (முற்றிலும்) சூழலாம்,  உலகு ஆழியை ( பகுதியாக) சூட்டலாம். அதனால் இரண்டுமே சரி.

இளமுலை தொய்யில் சூழலாம். (பெரும்பன்மையில், பொறித்தல், எழுதுதல் என்பவைதான்  பயிலும்)

மலர்களை சூடலாம்,கண்ணி சூட்டலாம், கார்குழல் சூட்டலாம். இவை சூழ்வது இல்லை.

””நிலவரை சூட்டிய நீள்நெடுந் தானைப்” , இங்கு சூழ்ந்த என்பது பொருந்தாது.

சூழ் என்பது செய்வினையாகவும் சூட்டிய என்பது செயப்பாட்டு வினையாக வருவதால் இரண்டையும் இடமாறிக்கொள்ள இயலாது.

N. Ganesan

unread,
May 17, 2014, 9:42:02 AM5/17/14
to thami...@googlegroups.com, vallamai, mintamil, தமிழ் மன்றம், Sivakumar M A, podhuvan sengai, Maravanpulavu K. Sachithananthan, Raji M, adi...@shaivam.org
2014-05-17 6:05 GMT-07:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
>
> ””நிலவரை சூட்டிய நீள்நெடுந் தானைப்”
>
> ”நீர்அக இருக்கை ஆழி சூட்டிய”
>
> ”தொழுநீ ரிணையடிக் கே,அன்பு சூட்டிய சூழ்குழற்கே”
>
> சூழ்ந்த, சூடிய இரண்டுக்கும் ஒரு வேறுபாடு இருக்கு.
> முற்றிலும் என்றால் சூழ், பகுதி என்றால் சூடிய, சூட்டிய.
>
> பாணன் தலையில் தாமரை சூட்டிலாம், சூழ முடியுமா? மாலை சூடலாம். மாலை சூழலாமா?
>

அடிப்படையான தொடர்பு சூழுதல்:சூடுதல் இரண்டுக்கும் உள்ளதைக் காட்டினேன்.
சூடிய என்றால் முற்றிலும் சூழுதல் என்ற பொருளைச் சங்க இலக்கியம் கொடுக்கிற
இடங்கள் பல: வானம் சூடிய உலகம், மேகம் சூடிய மலை, அன்பு சூட்டிய
திருவடிகள் (ஆழ்வார்).

இந்த ச்னக்கப் பொருளில் ஆத்திசூடி ஆத்திசூழ்ந்த தீர்த்தங்கரர் என்கிறார்
ஔவைக் குரத்தி.
கலைச் சித்திரம், சிற்பங்கள் போன்றவற்றில் தீர்த்தங்கரர் அருகே ஆத்தி
மரங்கள் நிற்கும்.
அது ஆத்தி சூழ்ந்த நிலை. சூடுதல் (=சூழுதல்) தலையிலே தான் என்றில்லை.
சூடகம் என்றால் கையையும் சூழலாம். (1) பாடகத் தரவமுஞ் சூடகத்
தோசையும்(பெருங். வத்தவ. 12, 210).
(2) சூடக முன்கையில் வால்வளை கண்டிரு தோள்வளை நின்றாட (குற்றாலக் குறவஞ்சி).

சூடல்:சூழல் இரண்டுக்குமுள்ள அடிப்படைத் தொடர்பை “ஆத்திசூடி” என்னும்
பெயரால் அழகாகக் கொடுத்துள்ளார் ஔவைக் குரத்தியார். ஆத்தி/தாதகி உடலைச் சூழ்ந்துள்ள
பாகல்வண்ணர் பார்சுவரின் சிற்ப, சித்திரங்கள் பல.

நா. கணேசன்


> ஆழி உலகை (முற்றிலும்) சூழலாம், உலகு ஆழியை ( பகுதியாக) சூட்டலாம். அதனால் இரண்டுமே சரி.
>
> இளமுலை தொய்யில் சூழலாம். (பெரும்பன்மையில், பொறித்தல், எழுதுதல் என்பவைதான் பயிலும்)
>
> மலர்களை சூடலாம்,கண்ணி சூட்டலாம், கார்குழல் சூட்டலாம். இவை சூழ்வது இல்லை.
>
> ””நிலவரை சூட்டிய நீள்நெடுந் தானைப்” , இங்கு சூழ்ந்த என்பது பொருந்தாது.
>
> சூழ் என்பது செய்வினையாகவும் சூட்டிய என்பது செயப்பாட்டு வினையாக வருவதால் இரண்டையும் இடமாறிக்கொள்ள இயலாது.
>
>
>
> வேந்தன் அரசு
> வள்ளுவம் என் சமயம்
>
> --
> --
> இருந்தமிழே உன்னால் இருந்தோம்! இமையோர்,
> விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டோம்!
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "தமிழாயம்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizayam+...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages