'ஞ' பழக்கத்திலாக்குவோம்:-
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
௧} ஞஞ்ஞை - போதை; மயக்கம்; மையல்; உளத்தடுமாற்றம் - "நங்கையைக்கண்டதும் ஞஞ்ஞையடைந்தேன்"
௨} ஞமலி; ஞாளி; ஞெள்ளை - நாய்
௩} ஞரல்[வு] - முழக்கம்; சங்கொலி
௪} ஞ[ல]வல் - மின்மினிப்பூச்சி
௫} ஞறா - மயிலின் அகவல் ஒலி
௬} ஞாட்பு - போர்; வலிமை; கூட்டம்; படை
௭} ஞாத்தல் - பொருத்துதல்; கட்டுதல்
௮} ஞாதி - பங்காளி; சுற்றம்
௯} ஞாய் - தாய்
௧०} ஞாயில் - கோட்டைச்சுவர் மீது இருக்கும் வீரர்கள் மறைந்திருந்து அம்புகளை/குண்டுகளை ஏவும் ஏவறை.
௧௧} ஞாயிறு - கதிரவன் - சூரியன் எனக்கூறுவதற்குப் பதிலாக ஞாயிறு எனக் கூறிப்பழகலாம்.
௧௨} ஞாலம் - பார்; புவி; உலகம்
௧௩} ஞாற்சி, ஞாற்று - தொங்கல்; தொங்குகை; தொங்கியநிலை - "என் மடிக்கணினி தீடீரென்று ஞாற்சிவிட்டது" - ஞால்: தொங்கு
௧௪} ஞான்று - பொழுது; நாள்.
௧௫} ஞான்றை - காலம்
௧௬} ஞிமிர் - (வண்டு எழுப்பும்) ஒலி
௧௭} ஞிமிறு - வண்டினம்; தேனி
௧௮} ஞெகிழ்தல் - கழல்தல்; தளர்தல்;
௧௯} ஞெகிழம் - சிலம்பு
௨०} ஞெகிழி - பிலாசுடிக்; சிலம்பொலி; தீப்பந்தம்
௨௧} ஞெண்டுகம் - [பெரு]வாகை மரம்
௨௨} ஞெமலி - ஞாயிறிலிருந்து 79 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள இலியோ விண்மீன் குழாமுள் பளிச்சென ஒளிரும் மகம்/இரெகுலுசு விண்மீன்.
௨௩} ஞெமல் - சருகு
௨௪} ஞெமல்தல் - அலைந்து திரிதல்
௨௫} ஞெமிடுதல் - கசக்குதல்
௨௬} ஞெமி[ர்[த்]]தல்; ஞெமு(க்|ங்)குதல் - நெரித்தல்; நெருக்குதல்; ஒடித்தல்; அழுத்தல்; அமிழ்த்துதல்; அழுந்துதல்; அமுக்குதல்; வருத்துதல்
௨௭} ஞெரல் - விரைவு
௨௮} ஞெலி - (மத்து போன்றவற்றால்) கடை; (மூங்கிலால் செய்யப்பட்ட) தீக்கடைக்கோல்
௨௯} ஞெலுவர் - நண்பர்
௩०} ஞெள்(ள|[கு|ளு]த)ல் - உடன்படுதல்
௩௧} ஞெளிர் - (வயிறு போன்ற உடலின் உள்ளுப்புகளாலோ, கம்பி இசைக்கருவிகளிலோ எழும்) உள்ளொலி
௩௨} ஞெளிர்தல்; ஞெறித்தல் - குரலை உயர்த்தி பேசுதல்
௩௩} ஞொள்குதல் - தளர்தல்; மெலித்தல்; (வலு) குறைத்தல்; இளைத்தல்; சோம்புதல்; குலைதல்; அஞ்சுதல்;
.
மொழிமுதலாக 'ஞ' வரிசை எழுத்துகள் கொண்ட சொற்களை நாம் அன்றாடம் பயன்படுத்துவதே இல்லை எனலாம். மேலே பட்டியலிலுள்ள முப்பத்துமூன்று சொற்களில் உங்கள் உள்ளத்தை கவர்ந்தவைகளை குறித்துவைத்துக்கொண்டு ஞெலுவர்களிடமும் ஞாதிகளிடமும் ஞான்றுதோறும் தக்க தருணம் நோக்கி விளையாட்டாகவும் களிப்பாகவும் பயன்படுத்தி அறிமுகப்படுத்துங்கள். ஏதோ, நம்மால் முடிந்தது!!!
.
இத்தொகுப்பை எனது ஒரு ஞெலுவர் வட்டாரத்தில் பகிர்ந்தபிறகு அவர்களுக்கு 'ஞெலுவர்' என்ற சொல் பிடித்துப்போக "ஞெலுவன்டா" என்றெல்லாம் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர்..
.