தமிழர் பண்பாடு

152 views
Skip to first unread message

சீதாலட்சுமி

unread,
Oct 23, 2009, 12:40:35 AM10/23/09
to தமிழாயம்
தமிழர் பண்பாடுகள்

ஒரு வேண்டுகோள். பண்பாடு , கலாச்சரங்கள் என்று நிறைய பேசுகின்றோம்.
நமக்கு எந்த அளவு தெரிந்திருக்கின்றது என்று பார்க்கலாமே. எனவே எல்லோரும்
தங்களுக்குத் தெரிந்தவைகளை எழுதுங்கள். ஏற்கனவே சொன்னதைத் திரும்ப
சொல்லக் கூடாது.
சரியா தவறா என்ற கருத்தாடலும் வேண்டாம். பின் திசை மாறிப் போவோம். ஆனால்
அந்தப் பண்பாடு கலாச்சாரம் எந்த அளவு நடை முறையில் இருக்கின்றது சொல்ல
வேண்டும்

மேடைகளில் நிறைய முழங்குகின்றோம். தமிழர் பண்பாடு போல் உலகில் இல்லை
என்று பெருமைப் பட்டுக் கொள்கின்றோம். எழுத்தில் மட்டும் இருப்பவை, நடை
முறையில் இருப்பவை இவைகளை மனம் திறந்து பேசலாம். இது ஒரு சுய பரிசோதனை
சீதாம்மா

விஜி

unread,
Oct 23, 2009, 9:18:03 PM10/23/09
to mutht...@googlegroups.com, தமிழாயம், tamil...@googlegroups.com
இது பண்பாடா இல்லை எமக்கான பயன்பாடா என்று தெரியவில்லை அம்மா.
 
‘பெரியவர்களைக் கனம் பண்ணனும்”
 
- ஒரு கையால் நீட்டிப்பொருட்கள் கொடுக்க கூடாது. ஒருகையை மறுகையால் பிடித்துக்கொண்டே கொடுக்க வேண்டும்.
 
பெரியவர்கள் முன்னால் காலுக்குமேல் கால்போட்டபடியோ, கால் ஆட்டியபடியோ உட்காரக்கூடாது.
 
- தலைமயிர் பின்னிக் கட்டவேண்டும். விரித்துவிட்டு சமைப்பதோ, சாமிகும்பிடவோ கூடாது.
 
-நல்லநாள் பெருநாட்களில் ‘அடுப்பு பற்ற வைத்து சமைக்க வேண்டும். ‘சாப்பாடு பரிமாறும்போது அகப்பை/கரண்டி அந்தப்பாத்திரத்தில் பட்டுச்சத்தம் கேட்க கூடாது(இதில் எங்கப்பா ரொம்ப கண்டிப்பானவர்)
 
- பி.நாள், பண்டிகைக் காலங்களில் பெற்றோர் காலில் விழுந்து ஆசி வாங்கவேண்டும்.
 
-கோயிலுக்குப்போகும் போது பெரியவங்களைப்பார்கப் போகும் போது வெறுங்கையுடன் போகக் கூடாது.
 
-வீதிவழியே சாப்பிட்டு சாப்பிட்டு போகக் கூடாது(எச்சில் பேய் பிடிக்கும்னு சின்னனில சொல்லிப் பயம் காட்டுவாங்க:)
 
-சாப்பிடும்போது பக்கத்தில் யாரும் இருந்தால் பகிர்ந்து உண்ணவேண்டும்.
 
-படுக்கப்போகும் முன், கை, கால் கழுவி சாமி கும்பிட்டுவிட்டுத்தான் படுக்கப்போகணும்.
 
இதெல்லாம் எங்க வீட்டில் நடைமுறையில் உள்ள விடயங்கள். நினைவு வரும் போது எழுதுகின்றேன் அம்மா.
 
 

C.R. Selvakumar

unread,
Oct 24, 2009, 9:00:13 AM10/24/09
to அன்புடன், thami...@googlegroups.com, tamil...@googlegroups.com
மயூரநாதனின் மிக அருமையான பகிர்வு.
 
அன்புடன்
செல்வா

---------- Forwarded message ----------
From: Mayooranathan Ratnavelupillai <rmayoor...@gmail.com>
Date: 2009/10/24
Subject: [தமிழ் மன்றம்] Re: Fwd: தமிழர் பண்பாடு
To: tamil...@googlegroups.com


பண்பாடு என்பது, ஒன்றுடன் ஒன்று ஒருங்கிணைவாக அமைந்துள்ள அறிவுத்திரள், நம்பிக்கைகள் போன்றவற்றின் ஒரு தொகுப்பு என்றும், இதன் உள்ளடக்கம் தனி மனிதன் அல்லது ஒரு குழு உலகத்தை எவ்வாறு புரிந்துகொள்கிறது என்பதில் தங்கியுள்ளது என்றும், அது நோக்கம் விழுமியங்கள், செயற்பாடுகள், கலை வடிவங்கள், மொழி போன்றவற்றினூடாக வெளிப்படுகின்றன என்றும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. மனிதர்கள் குழுவாக இயங்கும்போது அக்குழுவின் உறுப்பினர்களாக இருப்பவர்கள் ஒரே விதமான பண்பாட்டுக் கூறுகளை ஏற்றுக்கொண்டு செயற்படுகின்றனர். எனவே தமிழர் பண்பாடு என்று கூறும்போது அது தங்களுக்குள் பொதுவாக ஏற்றுக்கொள்ளுகின்ற பண்பாட்டுக் கூறுகளையும் அவற்றை அடிப்படையாகக் கொண்டு வெளிப்படும் முன் சொன்ன பல்வேறு அம்சங்களையும் குறிக்கின்றது எனலாம்.
 
பண்பாடு மனிதர்களினால் கற்றுக்கொள்ளப்படும் ஒன்றாக இருப்பதனால் சூழ்நிலைகளைப் பொறுத்து இது மாற்றம் அடையக்கூடியது. இதனால் ஒரு குழுவினரின் பண்பாடு என்பது என்றைக்குமே மாற்றம் அடையாமல் இருப்பதில்லை. ஆனால் மாற்றங்கள் எந்த அளவுக்கு அக்குழுவினரின் முன்னைய பண்பாட்டுக் கூறுகளோடு இசைவாக அமைகின்றன என்பது தமது சொந்தப் பண்பாடு பற்றி அவர்கள் கொண்டுள்ள மதிப்பீட்டின் அடிப்படையிலேயே அமைகின்றன எனலாம். ஒவ்வொரு தனி மனிதனுக்கும் வேறுவேறான மதிப்பீடுகள் இருப்பதன் காரணமாகப் பண்பாட்டு மாற்றம் தொடர்பில் ஒரு குழுவுக்குள் எப்போதுமே போராட்டங்கள் நிகழ்ந்த வண்ணமே இருக்கும். இப்போராட்டங்களின் போக்கே மாற்றங்களின் திசையைத் தீர்மானிக்கின்றன. மாற்றங்களில் எது சரி, எது பிழை அல்லது எது நல்லது எது கெட்டது என்பதைத் தீர்மானிப்பதற்கு எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய அடிப்படைகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஒரு குழுவினர் ஒரு குறித்த சூழலில், குறுகிய காலத்துக்கு சில அடிப்படைகளை வரையறுத்து வைத்துக்கொள்கிறார்கள் என்று சொல்லலாம். அவற்றையும் சிலர் ஆதரித்துக்கொண்டும், சிலர் எதிர்த்துக்கொண்டும் இருப்பார்கள் இந்தப் போராட்டமே மாற்றங்களுக்கான அடிப்படை.
 
ஆண்கள் குடுமி வைத்துக்கொள்வது உயர் தகுதிக்கான அடையாளம் என்ற கருத்து ஒருகாலத்தில் தமிழர்களிடையே நிலவியது. இலங்கையில், ஐரோப்பியர் ஆட்சிக்காலங்களில் வரி செலுத்திக் குடுமி வைத்துக்கொண்டார்கள். இன்று ஆண்கள் குடுமி வைத்துக்கொள்வது இகழ்ச்சிக்கு உரியதாக மாறிவிட்டது. ஒருகாலத்தில் குடுமியை வெட்டிவிடுவது சமூகக் குற்றம். இதுபோலவே வேட்டியும் படிப்படியாகப் போய்க்கொண்டு இருக்கிறது. வேட்டியை விடுத்து காற்சட்டை போட்டுக்கொள்வதைப் பண்பாட்டுச் சீரழிவாக இன்று எவரும் பார்ப்பது கிடையாது. சேலை ஓரளவுக்குத் தனது மதிப்பை இன்றும் தக்கவைத்துக்கொண்டுள்ளது என்றாலும், சுடிதார் முதலியனவும், மேல்நாட்டுப் பாணி உடைகளும் சேலையை அன்றாடப் பயன்பாட்டிலிருந்து விலக்கி வருகின்றன.
 
இதுபோலவே இன்று தமிழ் சமூகத்தைப் பொதுவாக எடுத்துக்கொண்டால் அவர்களது இசை, நடனம், கட்டிடக்கலை பிற கலைகள் என்பவற்றில் நமது மரபுவழிக் கூறுகள் அன்றாடத் தேவைகளுக்கான  அடிப்படைகளாக அமைவதில்லை. தொட்டுக்கொள்வதற்கான ஊறுகாய் போலத்தான் பயன்படுத்தப்படுகின்றன.
 
மொழியும் ஏறத்தாழ இதே திசையில் சென்று கொண்டிருப்பதாகத்தான் தெரிகிறது. மின்னஞ்சல் வருவதற்குப் பல ஆண்டுகள் முன்பிருந்தே தமிழ்ப் பிள்ளைகள் பலர் தமது பெற்றோருக்குக்கூட ஆங்கிலத்திலேயே கடிதம் எழுதுவதைப் பார்த்திருக்கிறேன். பெற்றோர்களும் அதனை ஊக்குவித்ததுடன் அதை மதிப்புக்குரியதாகவும் கருதினர். மின்னஞ்சல் உலகில் கேட்கவே வேண்டியதில்லை. ஊடகங்களில், குறிப்பாக வானொலி, தொலைக்காட்சி போன்றவற்றில் தமிழ்ச் சேவைகளிலேயே 50% அளவுக்குத் தமிழைக் கேட்பது அல்லது காண்பதே அரிது. உப்பு, மிளகாய், அரிசி போன்ற அடிப்படைச் சொற்கள் கூட "சால்ட்",  "சில்லி", "ரைஸ்" போன்றவற்றுக்கு இடம் கொடுத்து விலகிக் கொண்டிருக்கின்றன. இல்லாத சொற்களுக்குப் பிற மொழிகளிலிருந்து இறக்குமதி செய்த காலம் மாறி இருக்கும் சொற்களே நாகரிகத்துக்கு ஒவ்வாது எனக்கருதி வெளியேற்றும் ஒரு காலகட்டத்தில் நாம் இருக்கிறோம்.
 
ஒரு காலத்தில் தமிழ் மக்கள் மத்தியில் பரம்பரை பரம்பரையாகப் பயிலப்ப்பட்டு வந்த மக்கள் கலை "கோலம்". இன்றும் ஓரளவுக்கு இதை நடைமுறையில் வைத்திருக்கும் முயற்சிகள் இருந்தாலும், இதற்குப் பழைய உயிர்ப்புத்தன்மை கிடையாது. விரைவில் மறைந்துவிடக்கூடிய பண்பாட்டு வெளிப்பாடுகளுள் இதையும் சேர்த்துக்கொள்ளலாம். 
 
குடும்பத்தை சமுதாயத்தின் அடிப்படை அலகாகக் கொள்வது கீழைத்தேய மரபு. தமிழர்களும் இதனைத் தமக்கே உரிய முறையில் போற்றிக் காத்து வந்தனர். இன்று இதிலும் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. 
 
இதனால், நாம் நிகழும் மாற்றங்களைப் பார்த்துக்கொண்டு இருந்துவிட வேண்டும் என்று நான் கூற வருவதாகப் பொருள் கொள்ளக்கூடாது.  மாற்றங்களின் பொறிமுறைகளைப் புரிந்து கொண்டு சமுதாயத்தின் நலன்களுக்கு உகந்த வகையில் நிகழும் மாற்றங்கள் பற்றிய கருத்தை உருவாக்கிக் கொள்ளவேண்டியதும், அதன் அடிப்படையில் நமக்குச் சரி எனப்பட்ட வழியில் மாற்றங்களைச் செலுத்த உழைக்க வேண்டியதும் ஒவ்வொருவரதும் கடமை ஆகும். மாற்றங்கள் ஒரு சமுதாயத்தை மேல்நிலைக்கு உயர்த்தவும், கீழ்நிலைக்குத் தள்ளிவிடவும் கூடியது என்பதைக் கருத்தில் கொண்டு மாற்றங்களை அவற்றின் போக்கில் விட்டுவிடாமல் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவேண்டியது அவசியம்.
 


 
On 10/24/09, செல்வா <c.r.sel...@gmail.com> wrote:

இரவா

unread,
Oct 24, 2009, 9:23:19 AM10/24/09
to thami...@googlegroups.com
தமிழர்கள் தொன்றுதொட்டு பின்பற்றி வருவதை மரபு என்பர். அதாவது பழக்க வழக்கங்கள். விஜி கூறிய செய்திகள் இதைச் சாரும்.

தமிழர்தம் புறச்செயல்களை நாகரிகம் என்பர். மயூரநாதன் கூறியவை நாகரிகம் ஆகும்.

பண்பாடு என்பது அகத்தின் நிகழ்வுகள். அது மனத்தளவில் நிகழ்கின்றவை.

தமிழ் இலக்கியத்தில் அகப்பாடல்கள் எல்லாம் பண்பாட்டைச் சார்ந்தது. புறப்பாடல்கள் நாகரிகத்தைச் சார்ந்தது.

இப்பொழுது பண்பாட்டின் கூறுகளைக் கண்டறிந்து எழுதுங்கள்.


24 அக்டோபர், 2009 6:30 pm அன்று, C.R. Selvakumar <c.r.sel...@gmail.com> எழுதியது:



--
இருக்கும் வரை தமிழ் அணையில்
                 அன்புடன்                                
                     இரவா

வலைப்பூ:http://thamizmandram.blogspot.com/
இணையம்:  www.thamizhkkuil.net
ஆயம்: thami...@googlegroups.com

seethaalakshmi subramanian

unread,
Oct 24, 2009, 9:39:48 AM10/24/09
to thami...@googlegroups.com
மரபு மாறாதா
அதற்குக் காலவரையரை என்ன

2009/10/24 இரவா <vasude...@gmail.com>

இரவா

unread,
Oct 24, 2009, 10:02:42 AM10/24/09
to thami...@googlegroups.com
மரபு மாற்றமடையாதது. அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, தங்கை என்பன போன்ற உறவுமுறைகளும், ஆட்ட்டின் குட்டி ஆட்டுக் குட்டி. மாட்டின் குட்டி கன்று, தென்னஞ்செடி தென்னங்கன்று, அணில் குட்டி அணிற்பிள்ளை என்று பிற இனங்களைக் குறித்துரைக்கும் சொற்கள் மரபு வழி சார்ந்தவை.

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனும் வேண்டற்பாற் றன்று.

என்பது, மரபு. ஆனால், விருந்தினர் வருகின்றார்கள் என்பதை அறிந்து வீட்டைப் பூட்டிக் கொண்டு போவது, மரபின் வழுவும் நடக்கின்றன.

திருமணம் ஆகாத பெண்கள் தனக்குத் தானே பூச்சூடுதல் மரபில்லை. ஆனால், பெண்கள் சூடினார்கள். சூடிக் கொடுத்த சுடர்க்கொடி மீறினாள். இப்போது பெண்களுக்குக் கூந்தல் காற்றில் மிதக்கின்றன்.

ஒரு பெண்ணின் கூந்தலை வேறு ஒரு ஆடவன் பற்றிவிட்டான் என்றால் அவள் உயிர் வாழாள். கூந்தலுக்கும்  பண்பாடு இருந்தது.












ந்தல்

24 அக்டோபர், 2009 7:09 pm அன்று, seethaalakshmi subramanian <seethaa...@gmail.com> எழுதியது:

seethaalakshmi subramanian

unread,
Oct 24, 2009, 10:06:22 AM10/24/09
to thami...@googlegroups.com
கற்பு மரபு வழிதானே
கற்புக்கு விளக்கம் த்ரவும்

2009/10/24 இரவா <vasude...@gmail.com>

இரவா

unread,
Oct 24, 2009, 10:23:53 AM10/24/09
to thami...@googlegroups.com
ஒரு பெண்ணுக்கும் ஒரு ஆணுக்கும் மனத்தினால் ஏற்படுகின்ற நட்பு காதலாகி இருவரும் மறைவாகக் கலந்திருப்பது களவு. அவர்கள் இருவரும் ஊரார் அறிய மணம் புரிந்து வாழும் வாழ்வு கற்பு.

கற்பு என்பது மனத்தினால் ஏற்பட்ட உறவு ஒழுக்கம் மாறாதிருப்பது.

இப்போது கற்பென்பது உடல் பற்றியது எனக் கூறுகின்றனர். கற்பு வழி ஒழுகும் பெண்ணை உயர்ஞான சித்தி பெற்ற சித்தர்களோடு ஒப்பிடலாம்.

சித்தர்கள் சொல்லுக்கு உரிய வன்மை, கற்புடைய பெண்ணின் சொல்லும் உண்டு. அதனால்தான் வள்ளுவன், பெய்யெனப் பெய்யும் மழை என்றான்.

கொக்கென்று நினைத்தாயா கொங்கணவா! என்ற வழக்கும் அப்படித்தான்.

கற்பு என்பது இல்லற யோகத்தைச் சார்ந்தது.

இப்போது உடலால் கெடாமல் மனதால் கெட்டவர்களும்,  "இரண்டும் கெட்டான்"களும் அதிகம்.

கண்ணதாசன் கூறுவார், உடலாலும் மனதாலும் உன்னை என் உயிராகச் சேர்த்து நான் வாழ்கிறேன் கண்ணே! என்று.

seethaalakshmi subramanian

unread,
Oct 24, 2009, 10:30:14 AM10/24/09
to thami...@googlegroups.com
சங்கத் தமிழில் எங்காவது ஆண்களுக்குக் கற்பு கூறப்பட்டுள்ளதா

2009/10/24 இரவா <vasude...@gmail.com>

இரவா

unread,
Oct 24, 2009, 10:40:03 AM10/24/09
to thami...@googlegroups.com
ஔவையார் என்ன சொல்லியிருக்காங்கத் தெரியுமா..? கற்பெனப்படுவது சொற்திறம்பாமை... ஒருவரிடத்தில் ஒருவர் கொண்ட அன்பை / உறவை / காதலை / மீறாமல் இருப்பதுதான் கற்புதான்..

அவ்வாறு மீறியவர்களும் மீறாதவர்களும் இருந்திருக்கிறார்கள்.

திருமணம் என்னும் முறை ஏற்பட்டதற்குக் காரணமே கற்பழிவினால் தான்.

"பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கறணம் என்ப"

என்கிறது, தொல்காப்பியம்.

seethaalakshmi subramanian

unread,
Oct 24, 2009, 10:47:39 AM10/24/09
to thami...@googlegroups.com
உடன்போக்குபற்றி பல பாடல்கள் இருக்கின்றன.
திருமணத்திற்கு முன் ஓடிப்போகின்றவர்களை பிற்கால சமுதாயம் மதித்ததிலை. ஆனால் சங்கத் தமிழில் அவர்கலைத் தேடி செவிலி சென்றதான பாட்ல் இருக்கின்றது. அக்காலத்தில் சமுதாயம் எவ்வாறு இவர்களை நோக்கியது? அப்படிப் போனவர்கள் செம்மையான வாழ்க்கையை அமைத்துக் கொண்டதற்குப் பாடல்கள் இருக்கின்றனவா

2009/10/24 இரவா <vasude...@gmail.com>

இரவா

unread,
Oct 24, 2009, 10:57:07 AM10/24/09
to thami...@googlegroups.com
உடன் போக்கைக் குற்றம் என்று சொன்னதில்லை. பெற்றோர்கள் செவிலியை விட்டுத் தெடுவார்கள்.
தேடிச் செல்லுவழியில் தென்படுகின்ற அந்தணர்களை (சித்தர்கள்) கேட்பார்கள். அவர்கள் இருவரைப் பார்த்ததில்லை. ஒருவரைக் கண்டதாகச் சொல்வார்கள். அதாவது இருவரும் ஒருவராகிச் சென்றார்கள் என்பர். ஒரு சிலர் முருகனும் வள்ளியைப் போலும் என்பார்கள்.

ஒரு சிலர் அவர்களுக்கு அடைக்கலம் தந்து பெற்றோர்களைத் தேட வேண்டாம் என்பார்கள்.
பெற்றோர்கள் தேடிச் செல்வது, காப்பணி விழா என ஒன்றை நடத்தி அவர்களை ஒன்று சேர்ப்பதற்கேயாகும்.

அவ்வாறு கண்டு பிடித்தாலும் அவர்களை யாரும் பிரிப்பதில்லை.

"கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே
புணர்ந்துடன் போகிய காலையான"

என்கிறது தொல்காப்பியம்.

seethaalakshmi subramanian

unread,
Oct 24, 2009, 11:42:17 AM10/24/09
to thami...@googlegroups.com
கற்பு என்பது உயர்குலத்தோருக்கு மட்டும் என்று நம்பி அகப்பொருளிலும் இராமாயணத்திலும் சொல்லப் படுகின்றதே! இவர்கள் குறிப்பிடும் அந்த உயர்குலத்தோர்
யார்? அக்கினி ப்ரெவேசத்தில் இராமன் சீதையை சொல்லம்புகளால் தாக்கும் பொழுது
அவள் உயர் குடியில் பிறக்காததையும் மண்ணிலே உதித்தவள் என்பதையும் குறித்துப்
பேசுவது சரியா?
2009/10/24 இரவா <vasude...@gmail.com>

இரவா

unread,
Oct 24, 2009, 1:15:49 PM10/24/09
to thami...@googlegroups.com
கற்பு என்றும் பண்பாடு என்றும் தமிழர்க்கு உரியதைப் பற்றிப் பேசுகிறோம்.

இராம சீத்தா தமிழர் அல்ல! ஆனால், தமிழ்ப் பண்பாட்டின் கூறுகள் இராமாயனத்தில் ஆங்காங்கே இருக்கக் காணலாம். அதற்குக் காரணம் எழுதியவன் கம்பன்.

seethaalakshmi subramanian

unread,
Oct 24, 2009, 1:19:17 PM10/24/09
to thami...@googlegroups.com
நான் கேட்ட்து உயர்குலத்தோர் என்ரு காட்டுவது யாரை. கம்பன் மட்டுமல்ல, நம்பியகப்பொருளிலும் வருகின்றது

2009/10/24 இரவா <vasude...@gmail.com>

இரவா

unread,
Oct 24, 2009, 1:34:15 PM10/24/09
to thami...@googlegroups.com
உயர்குலம் என்றால் தலையில் பிறந்தவர்கள் என்றா நினைத்தீர்கள்?

உலகெனப்படுவது உயர்ந்தோர் மாட்டே! என்கிறது தொல்காப்பியம். உயர்ந்தோர் என்பவர்கள், ஊழி பெயரினும் தாம் பெயரார் என்னும் சான்றோர்களாவர்.

இழுக்கல் இடையூழி ஊற்றுக் கோலற்றே
ஒழுக்கமுடையார் வாய்ச்சொல் - என்று கூறக்கூடிய வாய்மையாளர்கள்

விஜி

unread,
Oct 26, 2009, 11:32:31 AM10/26/09
to thami...@googlegroups.com
இரவா ஐயா,
கற்பு இப்போது உடல் சம்பந்தப்பட்டது என்ற கூறக்காரணம்.
 
விரும்பாமலேயே நடக்கும் சில நிகழ்வுகள். (வன்புணர்ச்சி).
 
 
 
'பெண் நிலம் பார்த்து நடக்க வேண்டும் என்பது பண்பா/மரபா?
 
'பாரதி,
நிமிர்ந்த நடையும் நேர் கொண்ட பார்வையும் என்றானே?
 
 
காலத்திற்கேற்ப சில கோலங்கள் மாறித்தானே ஆகணும்?
 
 

இரவா

unread,
Oct 26, 2009, 12:36:52 PM10/26/09
to thami...@googlegroups.com
விஜி

வன்புணர்ச்சியினால் கற்பு அழிவதில்லை. ஒருவர் கற்பை பிறர் ஒருவரால் அழிக்க முடியாது. அவரவர் கற்பை அவரவராலேயே அழிக்க முடியும்.

இப்பொழுது புரியும் என்று நினைக்கிறேன். கற்பு என்றால் என்ன்வென்று.

பாரதியின் பாடல் வேறு ஒரு காரணத்திற்காகப் பாடப்பட்டது.

பெண் நிலத்தைப் பார்த்து நடக்க வேண்டும் என்று சொல்வதெல்லாம் எனக்கு உடன்பாடில்லாதவை.

பெண் எப்படி நடக்க வேண்டும் என்பதை அவரவரே முடிவு செய்து கொள்ள வேண்டும்.

விஜி

unread,
Oct 26, 2009, 12:51:25 PM10/26/09
to thami...@googlegroups.com


2009/10/26 இரவா <vasude...@gmail.com>

விஜி

வன்புணர்ச்சியினால் கற்பு அழிவதில்லை. ஒருவர் கற்பை பிறர் ஒருவரால் அழிக்க முடியாது. அவரவர் கற்பை அவரவராலேயே அழிக்க முடியும்.
<<<<
 
மிகச்சரியான பதில் ஐயா.
இப்பொழுது புரியும் என்று நினைக்கிறேன். கற்பு என்றால் என்ன்வென்று.

பாரதியின் பாடல் வேறு ஒரு காரணத்திற்காகப் பாடப்பட்டது.

பெண் நிலத்தைப் பார்த்து நடக்க வேண்டும் என்று சொல்வதெல்லாம் எனக்கு உடன்பாடில்லாதவை.

பெண் எப்படி நடக்க வேண்டும் என்பதை அவரவரே முடிவு செய்து கொள்ள வேண்டும். <<<<<<<<<<<<<<<
 
"பெண்" பெண்ணுக்குரிய இலக்கணங்களோடு இருத்தலே நல்லது.
 
ஆனால் பேதைப்பெண்ணாக அல்ல:)

இரவா

unread,
Oct 26, 2009, 1:00:59 PM10/26/09
to thami...@googlegroups.com
விஜி

பேதை என்பது 5 முதல்7 வயது வரையுள்ள பெண்ணைக் குறிக்கும். அந்த வயதில் உள்ள அறிவைப் போல அறியாதவர்களாக இருப்பவர்களையே பேதை என்று கூறுவார்கள்.

மடம் என ஒரு பண்பு பெண்ணுக்கு இயல்பாகவே இருக்கும். இருக்க வேண்டும். அதாவது, அக்கம் பக்கத்தில் எதையும் அறிந்துகொள்ள முற்பாடாமல் இருப்பது. இரண்டாவது அறிந்தவற்றையும் அறியாதவர்கள் போலிருப்பது. இதுவே பெண்ணுக்கு பிறப்பிலிருந்து கிடைக்கும் பண்புகளில் ஒன்று என்பர்.

பெண்ணின் இயற்கைக் குணம் கெடும் போது இந்த பண்புகள் இருக்காது. அவ்வாறனவர்களை குணக்கேடர்கள் என்பர். இது ஆண்களுக்கும் பொருந்தும்.

விஜி

unread,
Oct 26, 2009, 1:03:27 PM10/26/09
to thami...@googlegroups.com


2009/10/26 இரவா <vasude...@gmail.com>

விஜி

பேதை என்பது 5 முதல்7 வயது வரையுள்ள பெண்ணைக் குறிக்கும். அந்த வயதில் உள்ள அறிவைப் போல அறியாதவர்களாக இருப்பவர்களையே பேதை என்று கூறுவார்கள்.<<<<<
 
 
ம்ம் இதை அறிவேன் ஐயா. வயதுக்கு வந்தும் பலர் இப்படி இருப்பதால் தான் அறியாமல் பல தவறுகள் செய்து விடுகின்றார்கள்.

<<<<மடம் என ஒரு பண்பு பெண்ணுக்கு இயல்பாகவே இருக்கும். இருக்க வேண்டும். அதாவது, அக்கம் பக்கத்தில் எதையும் அறிந்துகொள்ள முற்பாடாமல் இருப்பது. இரண்டாவது அறிந்தவற்றையும் அறியாதவர்கள் போலிருப்பது. இதுவே பெண்ணுக்கு பிறப்பிலிருந்து கிடைக்கும் பண்புகளில் ஒன்று என்பர்.
<<<
 
 
ஓ!!..பயிர்ப்புக்கும் மடத்துக்கும் என்ன வேறுபாடு ஐயா?
 
 
<<<பெண்ணின் இயற்கைக் குணம் கெடும் போது இந்த பண்புகள் இருக்காது. அவ்வாறனவர்களை குணக்கேடர்கள் என்பர். இது ஆண்களுக்கும் பொருந்தும். <<<
 
நிஜமே...




--

இரவா

unread,
Oct 26, 2009, 1:11:15 PM10/26/09
to thami...@googlegroups.com
விஜி


பயிர்ப்பு என்பது ஒரு பெண்ணை ஒருவன் காதலித்தான்.மணமும் புரிந்து கொண்டான். ஒரு நாள் இரவில் ஒரு ஆணின் கை அப்பெண்ணின் மீது படுகிறது. அப்போது அது அவள் கொழுநன் கை இல்லை என்பதை மனத்தினால் உணர்ந்து அருவருப்பு கொள்ளுதல் பயிர்ப்பு.

வெற்று மனிதரைக்  கண்டால்  அருவருப்படைதல் பயிர்ப்பு.

வேந்தன் அரசு

unread,
Oct 26, 2009, 8:53:12 PM10/26/09
to thami...@googlegroups.com


26 அக்டோபர், 2009 1:11 pm அன்று, இரவா <vasude...@gmail.com> எழுதியது:




வெற்று மனிதரைக்  கண்டால்  அருவருப்படைதல் பயிர்ப்பு.


அதாவது வங்கியில் நிலுவை இல்லாதவர்கள்


--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
”உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே.”

இரவா

unread,
Oct 27, 2009, 12:47:41 AM10/27/09
to thami...@googlegroups.com
தீங்கினர் தம் கண்ணில் படாத விடத்து நீங்குவது நல்ல நெறி!

27 அக்டோபர், 2009 6:23 am அன்று, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> எழுதியது:
Reply all
Reply to author
Forward
0 new messages