ஓரெழுத்து ஒரு மொழி - உரியப் பொருளைக் கண்டறிதல்.

43,809 views
Skip to first unread message

இரவா

unread,
Dec 15, 2008, 1:06:30 AM12/15/08
to தமிழாயம்

 
ஓரெழுத்து ஒரு மொழி - உரியப் பொருளைக் கண்டறிதல்

தமிழில் மொத்தம் 246 எழுத்துகளில் 42 எழுத்துகளுக்கு தனியே பொருள் உண்டு. 42 எழுத்துகள் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

42 எழுத்துகளின் விவரமும் அதன் அகராதி பொருட்களும் பின்வருமாறு:

1. உயிர் இனம் 6

ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ

ஆ -பசு, எருது, ஆச்சா மரம்

ஈ -பறக்கும் பூச்சி, வண்டு, அழிவு, தேனீ, அம்பு, அரைநாள், பாம்பு, கொடு

ஊ -இறைச்சி, உணவு, விகுதி

ஏ -அம்பு, எய்யும் தொழில், இறுமாப்பு, அடுக்கு

ஐ -அழகு, ஐந்து, ஐயம், அசை, தலைவன், அரசன்

ஓ -சென்று தாக்குதல், மதகு நீர், ஒழிவு, தங்கும் பலகை

2. ம இனம் 6

மா, மீ, மூ, மே, மை, மோ

மா -பெரிய, நிலம், விலங்கு, மாமரம்

மீ -மேலே, ஆகாயம், மேன்மை, உயர்வு

மூ -மூப்பு (முதுமை), மூன்று

மே -மேல், மேன்மை

மை -கண் மை (கருமை), இருள், செம்மறி ஆடு, அஞ்சனம்

மோ -முகர்தல்

3. த இனம் 5

தா, தீ, தூ, தே, தை

தா -கொடு, குறை, கேடு, குற்றம், பகை

தீ -நெருப்பு, இனிமை, அறிவு, இடம்

தூ -வெண்மை, இறைச்சி, பறவை இறகு

தே -கடவுள்

தை -தமிழ் மாதம், தையல், திங்கள்

4. ப. இனம் 5

பா, பூ, பே, பை, போ

பா -அழகு, பாட்டு, நிழல்

பூ -மலர், சூதகம்

பே -அச்சம், நுரை, வேகம்

பை -கைப்பை, பாம்பு படம், கொள்கலம், பசுமை

போ -செல்

5. ந இனம் 5

நா, நீ, நே, நை, நோ

நா -நாக்கு, தீயின் சுவாலை

நீ -நீ

நை -வருந்து, இகழ்ச்சி

நோ -நோவு, துன்பம், வலி

6. க இனம் 4

கா, கூ, கை, கோ

கா -சோலை, காப்பாற்று, பாதுகாப்பு, சரஸ்வதி, தோட்டம்

கூ -பூமி, ஏவல், கூழ், கூவு

கை -உறுப்பு, ஒப்பனை, செயல், துதிக்கை, படை, கைப்பொருள், கைமரம்

கோ -வேந்தன், தலைவன், இறைவன், அரசன்

7. வ இனம் 4

வா, வீ, வை, வெü

வா- வருகை

வீ -மலர், பூ, மகரந்தம், அழிவு, சாவு

வை -வைக்கவும், வைக்கோல், கூர்மை, வையம்

வெü -வவ்வுதல் (அ) கெüவுதல் (ஒலிக்குறிப்பு)

8. ச இனம் 4

சா, சீ, சே, சோ

சா -சாதல், சோர்தல், பேய், மரணம்

சீ -வெறுப்புச் சொல் (அ) சீத்தல், சீழ், சளி, இலக்குமி, அடக்கம், நித்திரை

சே -சிவப்பு, எருது, அழிஞ்சல் மரம்

சோ -மதில், அரண்

9. யா -1

யா -ஒருவகை மரம், யாவை, அசைச் சொல்

10. நொ -1

நொ -வருந்து, நோய், மென்மை, துன்பம், நொய்வு

11. து -1

து -உண், விகுதி, நடத்தல், உணவு, வகுத்தல்

ஆக ஓரெழுத்து ஒரு மொழி மொத்தம் 42 ஆகும், இதை நன்குப் படித்து பின்வரும் அசல் வினாக்களுக்கு விடையளிக்கவும்.

6+6+5+5+5+4+4+4+1+1+1 = 42



--
  இருக்கும் வரை தமிழ் அணையில்
                 அன்புடன்                                          
                     இரவா

வலைப்பூ:http://thamizmandram.blogspot.com/
இணையம்:  www.thamizhkkuil.net
ஆயம்: thami...@googlegroups.com

NATARAJAN SRINIVASAN

unread,
Dec 16, 2008, 1:38:10 PM12/16/08
to thami...@googlegroups.com
ஓர் ஐயம்.
 
பீ = மலம். இது தமிழ்ச் சொல் இல்லையா? பேச்சுத் தமிழில் புழங்கும் இந்த சொல் இலக்கியங்களில் வந்திருக்கிறதா?
 
நடராஜன்.

2008/12/15 இரவா <vasude...@gmail.com>

இரவா

unread,
Dec 16, 2008, 7:57:03 PM12/16/08
to thami...@googlegroups.com

ஓர் ஐயம்.
 
பீ = மலம். இது தமிழ்ச் சொல் இல்லையா? பேச்சுத் தமிழில் புழங்கும் இந்த சொல் இலக்கியங்களில் வந்திருக்கிறதா?
 
நடராஜன்.

 
ஆம்! அது தமிழ்ச் சொல் தான்! அது இலக்கண உரையாசிரியர்கள் காட்டும் மேற்கோள்களில் மட்டுமே இருக்கும்.

காரணம், நல்லோர் முன்னிலையில்  சில சொற்களைச் சொல்லாமல் அதற்கு மாற்றாக வேறு ஒரு சொல்லைச் சொல்லி புரியவைப்பது தமிழ் மரபு.

இதனை இலக்கணம் நூலார் "இடக்கரடங்கள்" என்பர்

வேந்தன் அரசு

unread,
Dec 17, 2008, 5:42:17 PM12/17/08
to thami...@googlegroups.com


2008/12/16 NATARAJAN SRINIVASAN <enge...@gmail.com>

ஓர் ஐயம்.
 
பீ = மலம். இது தமிழ்ச் சொல் இல்லையா? பேச்சுத் தமிழில் புழங்கும் இந்த சொல் இலக்கியங்களில் வந்திருக்கிறதா?
 
 
பின் பக்கம் வருவதால் பீ
மாட்டு சாணியை ஆப்பி எனும் சங்கத்தமிழ்
--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
I have enough love for you to forgive your follies.
Reply all
Reply to author
Forward
0 new messages