Re: [வல்லமை] Re: [தமிழ் மன்றம்] Re: மறதி - பொச்சாவாமை என்ற கருவி.

585 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Mar 16, 2014, 11:31:55 AM3/16/14
to mint...@googlegroups.com, vallamai, karuannam annam, thami...@googlegroups.com, Banukumar Rajendran
On Thursday, March 13, 2014 8:34:22 AM UTC-7, சொ.வினைதீர்த்தான் wrote:

2014-03-13 17:57 GMT+05:30 iraamaki <iraa...@bsnl.in>:
மறவு (அல்லது மறப்பு) என்பதன் எதிர்ச்சொல் மறவாமை.  இதுபோலத் திறவு (அல்லது திறப்பு) x திறவாமை.
 
அப்படித்தான் பொச்சாவு (அல்லது பொச்சாப்பு) என்பதன் எதிர்ச்சொல்லாக பொச்சாவாமை இருக்கமுடியும்.
 
பொச்சாப்பு என்ற சொல்லிற்கு என்ன பொருள்? 
 
 அந்தச் சொல்லின் சொற்பிறப்பு என்ன?
 
இதைத் தெளியவைத்தால் நன்றியுடையனாய் இருப்பேன்.
 
அன்புடன்,
இராம.கி.
 
தங்களிடமிருந்தும் நண்பர்களிடமிருந்தும் பொச்சாப்பு சொல்லின் சொற்பிறப்பு. பொருள் அறிய ஆவல்.
இலக்கியங்களில் பொச்சாப்பு, பொச்சாவாமை பயன்பாடு அறியவும் விருப்பம்.
நன்றியுடன்
சொ.வினைதீர்த்தான். 


வினைதீர்த்தான் ஐயா,

பொச்சாப்பு என்றால் மறதி என்ற பொருள் முதன்மையில்லை.

இகழ்ச்சி, உள்ளீடற்ற இகழ்ச்சி என்ற பொருளைப் பொச்சாப்பு என்ற சொல்லின் வேரியல் காட்டுகிறது.
பொக்கு/பொச்சு என்றால் ஓட்டை, உள்ளீடு. பொக்கணம் - பை, சாமியார், சிவன் திருநீற்றுப்பை (தேவாரம்).
இதனைப் பிராகிருதமொழியில் புக்கா என்பர். புச்சா என்றால் வடமொழியில் வால் ‘tail'. திராவிடமொழி
வடமொழிகளுக்குத் தந்த சொல் புச்சை (=வால்) (pucchaa, near pokku/poccu). பொக்கு/பொச்சு - ககரம் சக்ரமாக
மெலிதல் த்ராவிடமொழிகளில் காணலாம்: உ-ம்: மூக்கு/மூச்சு, etc. etc., பொக்கு/பொச்சு என்றால் ஓட்டை, உள்ளீடு
பொக்கு/பொச்சு + ஆப்பு = பொச்சாப்பு. மயிலாப்பூரின் பழைய பெயர் மயிலாப்பு (தேவாரம் காண்க).
மயிலாப்பு = மயில் ஆர்ந்த இடம். அதுபோல், பொச்சாப்பு = இகழ்ச்சி.

கொங்குவேளிர் தன் பெருங்கதையில் குறிப்பிட்டதை சுப்பு தந்தார்:

பட்டாங் குணர்ந்து முட்டாங் கியற்றி
          உணரா தான்போல் ஒருமீக் கொற்றவன்
          புணரா தார்முற் பொச்சாப் பஞ்சி
          வணங்குகொடி மருங்குல் வாசவ தத்தையைப்
          பயந்தினி தெடுத்த பத்தினித் தெருட்டி    இலாவாண காண்டம்

இங்கேம் பொச்சாப்பு = இகழ்ச்சி. வாசவதத்தை என்னும்
தன் பத்தினியுடன் மன்னன் தோல்விக்கப்புறம்
பகைவரின் இகழ்ச்சிக்கு அஞ்சி அரண்மனையுள் ஒடுங்கினான்
என்று பாடுகிறார் கொங்குவேள்.

திருக்குறள், கொங்குவேள் மாக்கதை, வச்சணந்திமாலை, நன்னூல்,
தொல்காப்பியத்து முதல் உரைகாரர் இளம்பூரணர் போன்ற தமிழ்ச்
சமண இலக்கியங்களில் பொச்சாப்பு, பொச்சாவாமை பயில்தலைப்
பாருங்கள்.

வச்சணந்தி மாலையிலும், இளம்பூரணர் உரையிலும் 
பெரிய நூல் கற்கத் தகுதியில்லா எண்மரைக் குறிப்பிடும்
விருத்தம் உள்ளது:

மடிமானி பொச்சாப்பன் காமுகன் கள்வன்
அடுநோய்ப் பிணியாளன் ஆறாச் சினத்தன்
தடுமாறு நெஞ்சத் தவனுள்ளிட் டோரெண்மர்
நெடுநூலைக் கற்க லாகா தாரே

இதில் பொச்சாப்பன் என்றால் பிறரை இகழ்பவன் என்று பொருள்.
அதுவும் பொக்கணமான இகழ்ச்சி.  மானி என்ற சொல்லின்
பின்னர் பொச்சாப்பன் என்று சமணமுனிகள் சொல்வதன் காரணமும்
நோக்குக.

பொச்சாவாமை - உள்ளீடற்ற இகழ்ச்சி செய்யாதிருத்தல்.

பொச்சாவாமை - இகழாமை என்ற பொருளுடன் படித்தால்
திருக்குறள் பொச்சாவாமை விளங்கும்

பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை
நிச்ச நிரப்புக் கொன் றாங்கு.


பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுஉலகத்து
எப்பால்நூ லோர்க்கும் துணிவு.

இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை
வாயின் அதுவொப்பது இல்.

புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்.


இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.


உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்
உள்ளியது உள்ளப் பெறின்



திராவிட வேர்ச்சொல் அகராதியுடனும், பொச்சாப்பு பயில்கிற செய்யுள்களையும் நோக்கலாம்.

நா. கணேசன்

வேந்தன் அரசு

unread,
Mar 16, 2014, 7:13:09 PM3/16/14
to தமிழாயம், மின்தமிழ், vallamai, karuannam annam, Banukumar Rajendran
இறந்த வெகுளியின் தீதே சிறந்த 
உவகை மகிழ்ச்சியிற் சோர்வு.


இதுக்கு எப்படி விளக்கம் சொல்லுவீங்க?


16 மார்ச், 2014 11:31 முற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

--
--
இருந்தமிழே உன்னால் இருந்தோம்! இமையோர்,
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டோம்!
---
You received this message because you are subscribed to the Google Groups "தமிழாயம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizayam+...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

N. Ganesan

unread,
Mar 17, 2014, 8:20:09 AM3/17/14
to mint...@googlegroups.com, தமிழாயம், vallamai, karuannam annam, Banukumar Rajendran
On Sunday, March 16, 2014 4:13:09 PM UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:
இறந்த வெகுளியின் தீதே சிறந்த 
உவகை மகிழ்ச்சியிற் சோர்வு.


இதுக்கு எப்படி விளக்கம் சொல்லுவீங்க?



பொச்சாப்பு என்ற வார்த்தையே இதனில்  இல்லையே.

சோர்வு - negligent, being careless, to disregard, weary, tired, dull.

பெரிய சினம் தீயது. அதை விடத் தீது
மகிழ்ச்சியாய் இருக்கையில் முக்கியமானதைக்
கவனிக்காமல் (disregard) பராமுகமாய் (neglect) இருத்தல்.
இச் சோர்வு - மறதியால் மாத்திரம் நிகழ்தல் அன்று.

சோர்வு - to disregard, to neglect என்ற பொருளில்:
ஏழைசொல் அம்பலம் ஏறாது:

நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினு நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வு படும்

--------------

பொச்சாப்பு என்ற வார்த்தை வரும் இடங்களைப் பார்த்தால்
இது மேலும் விளங்கும்:

சிலப்பதிகாரம்:
வறுமொழி யாளரொடு வம்பப் பரத்தரொடு
குறுமொழிக் கோட்டி நெடுநகை புக்குப
பொச்சாப் புண்டு பொருளுரை யாளர
நச்சுக்கொன் றேற்கும் நன்னெறி யுண்டோ


கோவலன் தன்னையே இரங்கும் கூற்று இது.

ஆழ்ந்த பொருளை உடைய அறிவுரைகளை
இகழ்ந்தேன் என்கிறான் கோவலன்.

பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர்


இக் குறளில் பொக்கு/பொச்சு = ஓட்டை/புரை/உள்ளீடு அற்ற நிலை
பேசப்படுகிறது. பாண்மை பேசி, பாணே பேசி - என்றெல்லாம்
பண்டை இலக்கியங்களில் வருகிறதே. அதனைச் செய்யார் 
என்னும் குறள்.

மருட்சி நீங்கிய அறிவின் தரிசனங்கண்ட பெரியோர்கள்
உள்ளீடற்ற இகழ்ச்சியான சொற்களை ஒருக்காலும் சொல்லமாட்டார்கள்.

N. Ganesan

unread,
Mar 17, 2014, 9:50:07 PM3/17/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, thami...@googlegroups.com

அறம்:அறவி & மறம்:மறவி

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் 
கெடுநீரார் காமக் கலன் - குறள்

Long delay, Negligence, Laziness, Sleep 
- these four are Pleasure Boats of Loss

"பொச்சாப்பு எனினும் மறவி எனினும் இகழ்ச்சி எனினும் ஒக்கும்." - மணக்குடவர்.

“பொச்சாப்பாவது : காதற்காமச் சிறப்பிற்குரிய, சொற்செயல்களின்பால்
கடைப்பிடியின்றி   நெகிழ்ந்து  விடுதல். இது  நிறுத்த  காமவாயிற்கு ஊறு
செய்வதாகலின்   விலக்கப்பட்டது.  பொச்சாப்பு  எனினும் மறவி எனினும்
ஒக்கும்.” - ஆராய்ச்சிக் காண்டிகையுரை.

அச்ச முடையார்க் கரண்இல்லை ஆங்கில்லை
பொச்சாப் புடையார்க்கு நன்கு.

"அரண் அச்சம் உடையார்க்கு இல்லை - காடு மலை முதலிய அரண்களுள்ளே 

நிற்பினும், மனத்தின்கண் அச்சமுடையார்க்கு அவற்றால் பயன் இல்லை, ஆங்கு 

நன்கு பொச்சாப்பு உடையார்க்கு இல்லை - அதுபோலச் செல்வமெல்லாம் 

உடையராயினும், மனத்தின்கண் மறவியை உடையார்க்கு அவற்றால் பயன் 

இல்லை. (நன்மைக்கு ஏதுவாகலின் 'நன்கு' என்றார். அச்சமுடையார் நின்ற அரண் 

அழியுமாறு போல, மறவி உடையாருடைய செல்வங்களும் அழியும் 

என்பதாயிற்று.)"
               - பரிமேலழகர்

நற்றிணை 70, வெள்ளி வீதியார்,  
மருதம் திணை – தலைவி சொன்னது
"எம் ஊர் வந்து எம் உண்துறைத் துழைஇ
சினைக் கெளிற்று ஆர்கையை அவர் ஊர்ப் பெயர்தி
அனைய அன்பினையோ பெரு மறவியையோ"
அன்பினை - அன்பினை உடையாயோ! (with love for me)
மறவியை - மறவி உடையாயோ (neglecting my suffering).

பொச்சாப்பு, இகழ்ச்சி, சோர்வு, மறப்பு/மறதி - போன்றவற்றின் முதற்பொருள்கள்
வேறு. ஆனால், அவற்றுடன்  disregard, neglect, slight, disdain
போன்ற இரண்டாம்நிலைப் பொருள்களும் வரும். அப் பொருள் ஏற்கும்போது
மறவி என்னும் தமிழ்ச் சொல்லின் அர்த்தம் ஏற்பன அவை. கலத்தல்/கலப்பு என்பதற்கும், கலவி என்பதற்கும் வேறுபாடு உண்டு. அதேபால், உழத்தல் வேறு; உழவு (< உழு-)வேறு அல்லவா?  மறவி என்பதும், மறப்பு (மறதி) என்பதும்
வெவ்வேறான தாதுவேர்கள் கொண்டவை. எனவே, மறவி என்று தமிழ் இலக்கியத்தில் வரும் இடத்தில் எல்லாம் மறதி என்று போட்டால், 
தமிழ்ப் பாட்டின் சுவை அழியும்.

அறம் என்ற பெயர்ச்சொல் அறு- என்ற வினையில் பிறக்கும். 
அறத்திலிருந்து தோன்றுவது அறவி ‘dharmic' (அறஆழி - அருகனின் தர்மசக்கரம்)
அறவியங்கிழவோன் aṟavi-y-aṅ-kiḻa- vōṉ, n. 
< அறவி +. Buddha, as  wedded to virtue; புத்தன்

அறவிய மனத்தர் அன்றி (சூளா. தூது. 91).

அதேபோல், மறம் (< மறு-) என்ற சொல்லில் பிறப்பது மறவி (= disregard,
neglect, to show disdain, to be thoughtless, ...)
மறவிய மனிதன் = negligent person.

மறத்தல் (cf. மறை-) மறப்பு/மறதி என்றாகிறது.
மறவுதல் (cf. மறம் < மறு-) மறவி என்ற சொல்லைத் தருகிறது.
எனவே, மறவியும் (neglect, disregard. disdain, to be oblivous,
to be thoughtless), மறதியும் ஒன்றல்ல.

நா. கணேசன்

வேந்தன் அரசு

unread,
Mar 18, 2014, 8:29:40 AM3/18/14
to தமிழாயம், மின்தமிழ், vallamai
negligence = பொச்சாப்பு சாலப்பொருந்தும்


17 மார்ச், 2014 9:50 பிற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

--
--
இருந்தமிழே உன்னால் இருந்தோம்! இமையோர்,
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டோம்!
---
You received this message because you are subscribed to the Google Groups "தமிழாயம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizayam+...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
Reply all
Reply to author
Forward
0 new messages