--
இருந்தமிழே உன்னால் இருந்தோம்! இமையோர்,
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டோம்!
On Jun 13, 6:54 am, இரவா <vasudevan...@gmail.com> wrote:
> பயனுள்ள பதிவு. தொடருங்கள், நா.க
>
நிறையத் தமிழ் இலக்கியச் செய்திகள் கொடுத்து,
பண்டை இந்திய நாகரீகத்தின் சில கூறுகளுக்கு
அதனால் வரும் வெளிச்சம் பற்றிக் குறிப்பிடுள்ளேன்:
http://nganesan.blogspot.com/2011/06/pennai-female-palmyrah-tree.html
அன்புடன்,
நா. கணேசன்


பசுக்களில் ஆண்பாற் பெயர்கள்: காளை, சே, விடை, ஏறு, எருது முதலியன. ‘பூணாச் சேவும்,
ஈனாக் கிடாரியும்’ கொங்குநாட்டில் வெள்ளாளர் மணப்பெண்ணுடன் அனுப்பும்
சீதனவரிசை. பசுக்களில் பெண்பாற் பெயர்கள்: ஆ (Cf. ஆயி, தாய்த் தெய்வம்),
பெற்றம் (< பெறு- ), சுரப்பி (< சுர-), கறவை (< கற-) மாடு (Cf.
மடி), ... ஆண் பசுக்களின் பயனை விடப் பால் தரும் பெண் பசுக்களின் பயன்
மிகுதி. இதனால், ஆண் கன்றுகளைப் பாணர் முதலிய குடிகளுக்குத் தானம்
கொடுத்துவிடுவது விவசாயிகளின் வழக்கம் (culling of excessive male calves)
என்று சங்க இலக்கியம் காட்டுகிறது (நற்றிணை 310). பெண் பசுக்களின் பயனால்
பொதுவாகவே மாடுகள் என்றும், ஆக்கள் என்றும் கால்நடைகளை அழைப்பதும் உண்டு.
அதுபோலவே, பெண்பனைகளில் நுங்கு, பனாட்டு செய்யப் பனம்பழம், ஒடியல் செய்யக்
கூம்பு என்ற பயன்கள் இருப்பதால் பெண்ணை என்றே பனையைக் குறிப்பதும் உண்டு.
பெண்ணை ஆண்பனையை விட 50% கள் அதிகம் தருகிறது. புறக்காழ் பெண்ணையின் வலிமை
அதிகம் - எனவே ஆணை விடப் பெண்ணை மரமே கட்டிடங்களுக்குப் பயன்படும்.
பெண்ணை (பெண்பனை) மரத்தில் தூக்கணாங் குருவிகள் கூடு கட்டும்: எத்தனையோ ஓலைகள் இருந்தும் பனை ஓலையில்தான் எழுதுறாங்க அதுஏன்?
--
நம்முடைய வழக்கங்கள் என்பது, நாம் தொன்றுதொட்டு பழக்கத்தில் வைத்திருக்கும் பொருள்களைச் சார்ந்தே அமையும். பனையின் விளைச்சலும் பயனும் நமக்குத் துணையாக அமைந்ததால், எழுதத்தொடங்கிய நாளில் பனை ஓலையிலேயே எழுதத் தொடங்கி, அதன் உறுதித்தன்மையைக் கருத்திற்கொண்டு தொடர்ந்திருக்கலாம்.
மேலும் பனை ஓலையையைப் போல வேறு ஓலைகள் ஏடுகள் போல இருக்கக் காணோம்.
On Jun 21, 6:51 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> 20 ஜூன், 2011 10:51 pm அன்று, இரவா <vasudevan...@gmail.com> எழுதியது:
>
> > நம்முடைய வழக்கங்கள் என்பது, நாம் தொன்றுதொட்டு பழக்கத்தில் வைத்திருக்கும்
> > பொருள்களைச் சார்ந்தே அமையும். பனையின் விளைச்சலும் பயனும் நமக்குத் துணையாக
> > அமைந்ததால், எழுதத்தொடங்கிய நாளில் பனை ஓலையிலேயே எழுதத் தொடங்கி, அதன்
> > உறுதித்தன்மையைக் கருத்திற்கொண்டு தொடர்ந்திருக்கலாம்.
>
> > மேலும் பனை ஓலையையைப் போல வேறு ஓலைகள் ஏடுகள் போல இருக்கக் காணோம்.
>
> கணேசர் ஐயா
>
> ஏன் பனைஓலையை மட்டும் தாலியாக்குகிறார்கள் என வினவுகிறார்
>
> எனக்கு இன்னும் பெண்ணை என்பது பெண்பால் என்ற நம்பிக்கையை அவர் கட்டுரை
> ஏற்படுத்தவில்லை
>
> அவர் வழியில் நின்று இனி சிந்திக்கணும்
>
> பனைவெல்லம் என்பதை பெண்ணை வெல்லம் என ஏன் விளிப்பது இல்லை?
>
பெண்ணை மாத்திரம் வெல்லம் தருவதில்லை.
ஆண்பனையில் இருந்தும் வெல்லம் வருகிறது.
கட்டுரையில் சொல்லவில்லையா?
நா. கணேசன்
வேந்தனின் ஜூன் 3-ஆந்தேதி மடல்:
> On Jun 3, 7:13 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> > விலங்குகளில் ஆணுக்கு பெண்ணுக்கு என
> > தனிப்பெயர்கள் உள
> > பயிர்களில் உளதாக அறியேன்.
> > நாம் வேணுமுனா தென்னை எனில் ஆண்,
> > தெங்கு எனில் பெண் என இனிமேல் வச்சுக்கலாம்
தென்னையில் ஆண், பெண் பாற்பகுப்பு இல்.
பனையிலே பெண்ணை, ஏற்றை உள.
இரண்டிலிருந்து வரும் சாற்றில் வெல்லம் செய்வதுண்டு.
ஆண், பெண் பூங்கள்ளை வெல்லம் செய்யும்போது
பகுப்பதில்லை.
நா. கணேசன்
> > வள்ளுவம் என் சமயம்- Hide quoted text -
>
> - Show quoted text -- Hide quoted text -
>
> - Show quoted text -
On Jun 22, 9:18 am, இரவா <vasudevan...@gmail.com> wrote:
> அன்பு நா.க.
>
> தென்னையில், ஆண் பெண் போல இரண்டு பகுப்புகள் இருப்பதாகத் தென்னை ஆய்வாளர்கள்
> கூறியுள்ளனர்.
> அது தென்னை மட்டையில் ஓலை அமைந்திருக்கும் அமைப்பைக் கொண்டு அறியப்படுகிறதாம்.
> இரண்டு வகைத் தென்னையில் ஒரு வகை அதிக விளைச்சலைத் தருவதாகவும் மற்றொருவகை
> அவ்வளவாக விளைச்சலைத் தராததாகவும் இருக்கும் என்கின்றனர்.
>
http://answers.yahoo.com/question/index?qid=20070912151019AAyh44a
> நான் அறிந்தவரையில், அனைத்துவகைத் தாவரங்களிலும் ஆண் பெண் பாற்பகுப்பு
> இருக்கின்றன என்பதேயாகும்.
>
> மூலிகைத் தாவரங்களை ஆராயும் போது, ஒரு வகைத் தாவரம் ஒரு நோய்க்கு மருந்தாக
> அமைந்தாலும், ஆணுக்கு வந்த நோய்க்கு ஆண் மூலிகைத் தாவரத்திலிருந்தும்
> பெண்ணுக்கு வந்த நோய்க்குப் பெண் தாவரத்திலிருந்தும் மருந்துகள் தயாரிக்க
> வேண்டும் என்று முன்னோடி மருத்துவர்கள் கூறுகின்றனர்.
>
> இருக்கும் வரை தமிழ் அணையில்
> அன்புடன்
> இரவா
>
> வலைப்பூ:http://thamizmandram.blogspot.com/
> இணையம்: www.thamizhkkuil.net
> ஆயம்: thami...@googlegroups.com
>
> 22 ஜூன், 2011 5:16 pm அன்று, Ganesan, N. <naa.gane...@gmail.com> எழுதியது:
> > விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டோம்!- Hide quoted text -
அன்புடன்,
இராம.கி.
On Jun 21, 4:51 pm, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> 20 ஜூன், 2011 10:51 pm அன்று, இரவா <vasudevan...@gmail.com> எழுதியது:
அன்புடன்,
இராம.கி.
On Jun 21, 4:51 pm, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> 20 ஜூன், 2011 10:51 pm அன்று, இரவா <vasudevan...@gmail.com> எழுதியது:
On Jun 22, 1:09 am, இராமகி <p...@giasmd01.vsnl.net.in> wrote:
> தனித்த பொருள் ஆண் என்பதே. அதே போல பெண்ணை என்ற சொல்லிற்குப் பெண்பனை
> என்ற பொருள் இருந்தாலும், இருபாலிற்கும் பொதுவான பெயராகவும் இந்தச் சொல்
> பயன்பட்டிருக்கிறது. அவருடைய கட்டுரையில் பல்வேறு செய்திகளைத்
> தொகுத்திருக்கிறாரே ஒழிய சொல்ல வந்த கருத்தை ஏரணத்தோடு தருக்கவில்லை.
>
ஆ, பெற்றம், கறவை, சுரப்பி என்றாலும் பெண் பசுதான்.
பலன் மிகுதி காரணமாக, இச் சொற்கள் (ஆ, ... ) பொதுவாகப்
பசுக்களைக் குறிக்கின்றன. அதேபோல், பெண்ணை என்னும்
பெண்பனை இருபால்களுக்கும் பொதுவாக சில சமயம் சொல்லலாம்.
இதனை என் கட்டுரையில் விளக்கியுள்ளேன்.
பாவாணர் அதனால்தான் குறிப்பிடுகிறார்:
"பெண்-பெண்ணை = காய்க்கும் பெண்மரம், பெண்பனை, பனை”
ஏற்றை ஏறு ஆண் மரங்கள் எல்லாவற்றுக்கும் வரும் சொல்.
ஆனால் மரங்களில் ஆண்பனை உள்ளது பனையே. பனை பெண்ணை
தான் குலைதரும். தென்னையில் ஆண், பெண் இல்லை, (தென்னை - எல்லா மரமும்
காய்ப்பன.)
நா. கணேசன்
ஏற்றை-வெல்லம் செய்யலாம் என்கிறார் பனைவாரியத் தலைவர்
குமரி அனத்தன். பெண்ணையை நுங்குக்குப் பயன்படுத்தலாம்
என்கிறார்.
”தென்னையில் ஆண் மரம், பெண் மரம் என்று கிடையாது. பனையில் ஆண் பனை
அலகுப்பனை என்றும், பெண் பனை பருவப்பனை என்றும் அழைக்கப்படுகிறது. பெண்
பனையில் நுங்கு கிடைக்கிறது. இரண்டிலும் பதநீர் எடுக்க முடியும். ஆனால்,
பெண் பனையில் வரும் பாளைகளில் பதநீர் எடுத்தால் பிறகு நுங்கு கிடைக்காது,
பனம் பழம் கிடைக்காது, பனை விதை கிடைக்காது.” - குமரி அனந்தன்.
நா. கணேசன்
http://yousufansari.blogspot.com/2010/12/blog-post_4330.html
வீணாகும் பனைமரங்கள்!
குமரி அனந்தன்First Published : 21 Dec 2010 01:58:08 AM IST
இந்தியாவில் 8 கோடி பனைமரங்கள் நிற்கின்றன என்றும், அவற்றுள்
தமிழ்நாட்டில் 5 கோடி இருப்பதாகவும் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு
புள்ளிவிவரம் சொல்லிற்று. இப்போது நிச்சயமாக அவ்வளவு மரங்கள் இருக்கும்
என்று கூற முடியாது. ஆனால், இருப்பவைகளையாவது முறையாகப் பயன்படுத்த
வேண்டாமா? பனைமரத்தைப் பற்றி நாம் சாதாரணமாக நினைத்து விடுகிறோம். இதன்
பயன்களும், முக்கியத்துவமும் ஏன் யாருக்கும் புரிவதில்லை.
÷தாலசாஸ்திரம் என்ற நூல் பனைமரத்தால் 801 பலன்கள் கிடைக்கின்றன என்று
கூறுகிறது. எத்தகைய நிலத்திலும் வளரும் தன்மையுடையது பனை. மழை பெய்யும்
காலத்தில் கிடைக்கும் நீரையும், தன்வேர்களால் நிலத்திலிருந்து உறிஞ்சும்
நீரையும் கொண்டே பனைமரம் வாழ்கிறது. இதற்கென நீர் பாய்ச்சுவதோ,
உரமிடுவதோ, பூச்சி மருந்து தெளிப்பதோ கிடையாது. இவ்வாறு இயற்கைதரும்
அற்புத மரத்தைக் கற்பகத்தரு என்றே அழைத்தார்கள்.
பனம் பழச்சாற்றை வெயிலில் துணியில் பரப்பிக் காயவிட்டுத் துண்டுகளாக்கி
"பனாட்டு' என்ற பெயரில் இனிப்புப் பண்டமாகச் சுவைத்திருக்கிறார்கள்.
தென்னையில் ஆண் மரம், பெண் மரம் என்று கிடையாது. பனையில் ஆண் பனை
அலகுப்பனை என்றும், பெண் பனை பருவப்பனை என்றும் அழைக்கப்படுகிறது. பெண்
பனையில் நுங்கு கிடைக்கிறது. இரண்டிலும் பதநீர் எடுக்க முடியும். ஆனால்,
பெண் பனையில் வரும் பாளைகளில் பதநீர் எடுத்தால் பிறகு நுங்கு கிடைக்காது,
பனம் பழம் கிடைக்காது, பனை விதை கிடைக்காது.
பனங்கொட்டை மண்ணில் புதைக்கப்பட்டு கிழங்காகிறது, கிழங்கை எடுக்காமல்
அப்படியே விட்டுவிட்டால் அது பனைமரமாகிவிடுகிறது. எனவே பெண் பனைகளைவிட
ஆண் பனைகளில் பதநீர் எடுப்பதே நல்லது.
÷பதநீர், உடலுக்கு நலம் தருவது, பலம் தருவது. இரவு முதல் அதிகாலை வரை,
விண்மீன்களும், நிலாக் கதிர்களும் ஒளிபாய்ச்சுகின்றன. காலை முதல் ஞாயிறு
தன் கதிர்களால் குளிப்பாட்டுகிறது. தொழிலாளி பாளையைச் சீவிச் சுரக்கும்
நீரில் கடல்வயிற்றுச் சிப்பியின் சுண்ணாம்பும் சேர்ந்து
பதப்படுத்துகிறது.
÷இந்தப் பதநீரைக் குடித்தால் உடல் வெப்பமடையும் நேரத்தில்
குளிர்ச்சியூட்டுகிறது. உடல் குளிர்ச்சியாயிருந்தால் வெப்பமூட்டுகிறது.
÷நரம்பும் சதையும் பழுதடைந்தால் இதயத்தின் செயல்பாடு முடங்கிப்போகும்.
இவ்வாறு நிகழ்ந்துவிடாமல் பதநீரிலுள்ள சுண்ணாம்புச் சத்து பாதுகாக்கிறது.
பல்லும் எலும்பும் பதநீரால் உறுதிப்படுகின்றன.
÷பதநீரிலிருக்கும் இரும்புச் சத்து நரம்பு மண்டலத்துக்குச் செயலூக்கத்தை
அளிப்பதோடு நோய் எதிர்ப்புச் சக்தியையும் கொடுக்கிறது.
÷பதநீரிலிருக்கும் தையமின் என்ற உயிர்ச்சத்து, மூளையைச் சுறுசுறுப்பாகச்
செயல்பட வைக்கிறது. ரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது.
÷வைட்டமின் பி2 எனப்படும் "ரிபோபிளேவின்' என்கிற சத்து, குளுக்கோமா
என்கிற கண்நோய் வராமல் தடுத்துப் பாதுகாக்கிறது. பதநீரிலிருக்கும்
நியாசின் எனும் மூலக்கூறு மனத்தடுமாற்றம் வராமலும், வாய்ப்புண் வராமலும்
காக்கிறது.
÷மண்ணில் எந்தவித முதலீடும் இல்லாமல், பராமரிப்பும் இல்லாமல், உரமிடுதல்
நீர்பாய்ச்சுதல் என்று செலவே இல்லாமல் வளர்ந்து நிற்கும் மரங்களிலிருந்து
இத்தனை நலன்களைத் தரும் பதநீரை நாம் எடுக்கிறோமா? எடுக்காமல் இருப்பது
மடமை அல்லவா?
÷பனையைச் சார்ந்த காகமும் அமுதுண்ணும் - என்ற பழமொழியே தமிழ்நாட்டில்
உண்டு.
÷பதநீரைக் கூழாக்கி சிரட்டையில் ஊற்றி எடுப்பதைக் கருப்பட்டி,
கற்பகக்கட்டி என்கிறோம். பதநீரைப் பக்குவமாகக் காய்ச்சிக் கூழாக்கி சில
நாள்களில் படிக வளர்ச்சிப்படி கற்கண்டாகத் தயாரிக்கலாம். இவையனைத்தும்
அருமையான சக்தி படைத்தவை.
வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் சிறைசென்று தளர்ந்து மெலிந்துபோன
ம.பொ.சி.யை அழைத்துக் கொண்டு ராஜாஜி, சென்னையிலிருந்த காந்தி மகானிடம்
அழைத்துச் சென்று, ""இவர் பனை ஏறும் குலத்தைச் சேர்ந்தவர், ஆனால்
கள்ளுக்குப் பரம எதிரி'' என்று அறிமுகப்படுத்தினார்.
காந்தி ஒட்டி உலர்ந்து மார்பு கூடுதட்டிப் போயிருந்த
ம.பொ.சி.யைக்காட்டி ""இவர் பதநீர் குடித்தால் தேறிவிடுவார். நான்
புளித்தகள்ளுக்கு எதிரி. இனிக்கும் பதநீருக்கு நண்பன். நான் கரும்புச்
சீனி சாப்பிடுவதில்லை, இனிப்புக்குக் கருப்பட்டிதான் சாப்பிடுகிறேன்''
என்றார்.
குஜராத் மாநிலத்தில் பிறந்த அண்ணல் மகாத்மா காந்தியடிகளுக்குத்
தெரிந்திருந்தது பனையின் பெருமை. பதநீரின் அருமை.
÷ஒரே ஒரு மாவட்டத்திலிருந்து நான் பெற்ற அதிகாரபூர்வமான புள்ளிவிவரத்தைத்
தருகிறேன் . விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அன்புடன் எனது
வேண்டுகோளை ஏற்றுத் தந்த தகவல்.
÷பருவமடைந்த 72,555 மரங்களில் மட்டுமே தொழிலாளர்கள் ஏறிஇறங்கிப் பயனைக்
கொண்டு வருகிறார்கள். பருவமடைந்துவிட்டோம்; பதநீரும், நுங்கும் தருவதற்கு
நாங்கள் தயாராய் இருந்தும் எங்களைப் பயன்படுத்துவாரில்லையே; உலக
மக்களுக்கு நாங்கள் உதவ முடியவில்லையே என்று ஓலைக்கரங்களால் தங்கள்
தலைகளில் அடித்துக் கொண்டு அழுது அரற்றும் மரங்கள் 14,22,099.
÷நாம் பயன்படுத்துவது ஒரு லட்சத்துக்கும் குறைவு. பயன்தரத்
தயாராயிருந்தும் நாம் எடுத்துக் கொள்ளாத மரங்கள் 14 லட்சத்துக்கும்
அதிகம். இது ஒரே ஒரு மாவட்டத்தில். அதுவும் சிறிய மாவட்டமாகிய
விருதுநகரில்.
இவ்வாறாயின் தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்டங்களில் இவ்வாறு நாம்
பயன்படுத்தாமல் நிற்கும் பனைமரங்கள் எவ்வளவு?
÷வீட்டுமுன் நின்றாலும், தோப்புத்துறவுகளில் நின்றாலும் சும்மாதானே
பயனற்று நிற்கின்றன என்று 200, 300 ரூபாய்க்கும் வெட்டி
விற்றுவிடுகிறார்கள். அவை செங்கல்சூளைகளில் விறகாகி எரிகின்றன. இந்நிலை
தொடருமானால், வருங்காலச் சந்ததிகளுக்கு பனை மரங்களைப் படம் வரைந்துதான்
காட்ட வேண்டிவரும்.
÷10 ஆண்டுகளுக்கு முன் லண்டன் சென்ற நான், அங்கிருந்து நுங்கு குழம்பு
(நுங்கு ஜாம்), பனம்பழச்சாறு கொண்ட டப்பாக்களை வாங்கிவந்து தமிழக
முதல்வர் கருணாநிதியிடம் காட்டினேன். அதிகாரிகளை அழைத்து இவைபோல்
செய்யுங்கள் என்று ஆணையிட்டார். செய்தார்கள். மகிழ்ச்சி பொங்க அவற்றைச்
சுற்றுலாப் பொருட்காட்சி நடக்கும் தீவுத்திடலில் காட்சிக்கும்,
விற்பனைக்கும் வைத்தேன். மக்கள் மகிழ்ச்சியோடு வாங்கிச் சென்றார்கள்.
அதோடு நின்றுவிட்டது.
இத்தனைக்கும் தமிழக முதல்வர் பனைத்தொழிலின் மீதும், தொழிலாளர்கள் மீதும்
மிகுந்த அக்கறை கொண்டவராக இருக்கிறார். பனை ஏற உரிமம் பெறவும்,
நலவாரியத்தில் உறுப்பினராவதற்கும் விதித்திருந்த கட்டணங்களையே
நீக்கிவிட்டார்.
நலவாரிய உறுப்பினர்கள் வருமான வரம்பு நிபந்தனைகளுக்கு உள்படாமல் கலைஞர்
காப்பீட்டுத் திட்டத்தைப் பயன்படுத்த உரிமை அளித்துவிட்டார்.
அரசு சார்ந்த பனைவெல்லக் கூட்டுறவுச் சம்மேளனங்கள் தொழிலாளிகள் மரமேறி
இறக்கிக் கொண்டுவரும் பதநீருக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ.4 வீதம்
வாங்குவது, உழைப்புக்கேற்ற வகையில் இல்லை; அதிக விலை கொடுக்க வேண்டும்
என்று முறையிட்டதை ஏற்று இரண்டரை மடங்கு உயர்த்தி இப்போது லிட்டர் ரூ.10
வீதம் வாங்க வேண்டும் என்று ஆணையிட்டுள்ளார்.
இந்தக் கொள்முதல் தமிழகமெங்கும் நடைபெற வேண்டும்; அதற்குக் கணிசமாக நிதி
ஒதுக்கீடு செய்யவேண்டும்.
ஒரு பனைமரத்தைச் சரியாகப் பயன்படுத்தினால், ரூ.3,000 வருமானம்
கிடைக்கும். இப்போது தமிழகமெங்கும் தோராயமாக 3 கோடி பனைமரங்கள் நிற்பதாக
வைத்துக்கொண்டால், ஆண்டொன்றுக்கு ரூ.9,000 கோடி வருமானம் பெறலாம்.
இந்த மரங்களில் ஏறி இறங்கப் போதுமான ஆள்கள் இல்லை. அனுபவசாலிகளைக்
கொண்டு புதியவர்களுக்குப் பயிற்சி கொடுக்க வேண்டும். பயிற்சி
அளிப்பவர்களுக்கும், பயிற்சி பெறுபவர்களுக்கும் போக்குவரத்துச் செலவு,
உணவு, உறைவிடம் கொடுத்து ஊக்க ஊதியமும் கொடுக்க வேண்டும்.
நமக்கு முந்தைய தலைமுறை செய்த இந்த அற்புதப் பணியை நாமும் செய்ய
முடியும் என்ற நம்பிக்கையோடு புதியவர்களை உடல் உழைப்பாலேயே மரங்களில்
ஏறிப் பயன் பெற ஒருபுறம் பயிற்சி அளிக்க வேண்டும்.
இன்னொருபுறம், பனை ஏறக் கருவியொன்று மிக அவசரமாகக் காண வேண்டும். பல
ஆண்டுகளுக்கு முன்பு நெல்லை மாவட்டம் குட்டம் என்ற ஊரில் பசுபதி
மார்த்தாண்டன் என்பவர் பனையில் பொருத்த சைக்கிள் மிதிப்பதுபோல் மிதித்து
மேலே செல்லும் கருவியொன்றைக் கண்டுபிடித்தார். அம் முயற்சி முழுமை பெறும்
முன் அவர் மறைந்துவிட்டார்.
இப்போது கோபிச்செட்டிபாளையம், கோயமுத்தூர் போன்ற இடங்களில் சிலர் இந்த
முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகக் கூறுகிறார்கள். அவர்களுக்கும்
எல்லாவிதமான ஊக்கமும் நாம் கொடுக்க வேண்டும்.
கோவை வேளாண் பல்கலைக்கழகம் வடிவமைத்துக் கொண்டிருக்கும் கருவியை நான்
இருமுறை நேரில் சென்று காணும் வாய்ப்பைத் தந்தார்கள். தொடர்ந்து அக்
கருவியை மேம்படுத்த முயன்று கொண்டிருக்கிறார்கள்.
கனமற்ற - ஆனால் உறுதியான - உலோகத்தால் இதைச் செய்ய வேண்டும். ஒருவர்
தூக்கிச் செல்லும் எடைதான் இருக்க வேண்டும். சக்கரங்களைப் பொருத்தி
பனந்தோப்பில் இழுத்துச் செல்லும் வகையிலும் அமைக்கலாம்.
மிக எளிதில் பொருத்த, பயன்படுத்திக் கழற்றி அடுத்த மரத்துக்கு எடுத்துச்
செல்லும் வகையில் ஒரு கருவியை நம்மால் செய்ய முடியும் என்று தொழில்நுட்ப
வல்லுநர்கள் இதை ஒரு சவாலாக ஏற்க வேண்டும்.
இவ்வாறு செய்யும் கருவிகளை ஆய்வுசெய்து தேர்வு செய்யப்படுவனவற்றுக்கு
நல்ல பரிசுகளை அரசும், தொண்டுள்ளம் கொண்ட அறக்கட்டளைகளும் கொடுக்கலாம்.
இத்தகைய கருவிகள் பரவலாகச் செய்யப்பட்டால் பலர் பயிற்சி பெற வருவர்;
மக்கள் பனை மரங்கள் மூலம் பலன் பல பெறுவர்.
இப்போது குளிர்பானம் மற்றும் சோடா விற்கும் கடைகளிலெல்லாம் பதநீர்
கிடைக்க வேண்டும். அரசும் பனை வளர்ச்சி வாரியமும், தொழிலாளர் நல
வாரியமும், சம்மேளனங்களும், தொழில்நுட்ப வல்லுநர்களும் இதை தேசபக்தியோடு
அணுகி, நாட்டுத் தொண்டெனக் கருதிச் செயலில் முனைய வேண்டும்.
ஆம், மண்ணின் மரத்தில் கிடைக்கும் அமுது பதநீர். சிறுகடைகளிலும்
கிடைக்கும் வகையில் பதநீரைக் கொடுப்போம். இப்போது விஞ்ஞான முறையில்
பக்குவப்படுத்த 20 நாள்களுக்கு மேலாகவும் பதநீரைக் கெட்டுப் போகாமல்
வைத்திருக்கும் காகித டப்பாக்கள் கிடைக்கின்றன. அவற்றையும் குப்பிகளையும்
பயன்படுத்தி, பதநீரை எங்கும் விநியோகிப்போம்.
பெட்டிக்கடைகள் முதல் பெரிய விடுதிகள் வரை பதநீர் கிடைக்க வழி காண்போம்.
இதைப் பதப்படுத்தி, ஏற்றுமதிக்கு வழிகோலினால் தமிழகம் செழிக்கும்.
தமிழகக் கிராமப் பொருளாதாரம் மிகப்பெரிய மாற்றங்களைக் காண முடியும்.
வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைந்து கொண்டிருக்கிறோமே என்பதை
இனியும் உணராமல் இருந்தால் எப்படி?
ஏரணத்தின் படி மேலேயுள்ள உங்களது கூற்று ஒரு வெற்றகத் தருக்கம் (vacuous
argument.) உங்களுக்குத் தெரிந்தது ஆண்பனை. அதனால் ஏற்றை ஆண்பனை
ஆகிவிடாது. தாழையிலும், பப்பாளியிலும் ஆண், பெண் என்ற வேறு பாடு உண்டு.
பலாவிலும் ஆண், பெண் வேறுபாடு உண்டு. ஆண் பலா காய்க்காது. வெறும் பூக்
கொடுத்து உதிர்ந்து போகும். பெண்பலா மட்டுமே காய்க்கும். ஆண், பெண்
வேறுபாடு பல மரங்களுக்கு உண்டு. புதலியற் கட்டுரைகளைத் தேடிப்
படியுங்கள். ஏற்றை என்பது பொதுச்சொல். அது பொதுவாய் ஆண் மரத்தையும்,
புதரையும் குறிக்கும். அது பனைக்கு மட்டுமே உரிய விதப்புச் சொல் அல்ல.
அப்படிப் பாவிப்பது தவறான பயன்பாடு.
பெண்ணை என்பதும் பாவாணர் சொல்லிவிட்ட காரணத்தாலேயே பெண்>பெண்ணை என்று
ஆகிவிடாது. பெண்மரம் என்பது ஒரு பொருள். நான் மறுக்கவில்லை. ஆனால்
அதுமட்டுமே ஒற்றைப் பொருளல்ல. பொதுவான பனையைப் பெண்ணை என்ற சொல்
குறிக்கும் சான்றுகள் மிகப்பல உண்டு. பெண்ணை என்ற பெயர் பொதுவான பனையைக்
குறிக்க எப்படிப் பிறந்திருக்கும் என்று ஓர்ந்து பாருங்கள். உங்கள்
பார்வை வழியாகப் பார்த்தால் அதுமட்டுமே சரியென்று தோன்றும். உங்கள்
பார்வையை விட்டு வெளியே வந்து சொற்பிறப்பை ஓர்ந்து பாருங்கள்.
அப்பொழுதுதான் பலரும் ஏற்கும் வகையில் சரியான சொற்பிறப்புக் காரணம்
கிடைக்கும். நூ.த.லோ.சு கொடுத்த சான்றுகள் பலவும் பெண்ணை என்ற சொல்லாற்
பொதுப் பனையைக் குறிப்பவை.
அன்புடன்,
இராம.கி.
On Jun 23, 7:56 am, iraamaki <iraam...@bsnl.in> wrote:
> "ஏற்றை ஏறு ஆண் மரங்கள் எல்லாவற்றுக்கும் வரும் சொல்.
> ஆனால் மரங்களில் ஆண்பனை உள்ளது பனையே."
>
> ஏரணத்தின் படி மேலேயுள்ள உங்களது கூற்று ஒரு வெற்றகத் தருக்கம் (vacuous
> argument.) உங்களுக்குத் தெரிந்தது ஆண்பனை. அதனால் ஏற்றை ஆண்பனை
> ஆகிவிடாது. தாழையிலும், பப்பாளியிலும் ஆண், பெண் என்ற வேறு பாடு உண்டு.
> பலாவிலும் ஆண், பெண் வேறுபாடு உண்டு. ஆண் பலா காய்க்காது. வெறும் பூக்
> கொடுத்து உதிர்ந்து போகும். பெண்பலா மட்டுமே காய்க்கும்.
மெய்யாலுமா? பலா தென்னை போல என்றுதான் படித்திருக்கிறேன். தென்னை போல்,
பலாவிலும்
ஒரே மரத்தில் ஆண்பூ, பெண்பூ பூக்கின்றன. ஆண் பூக்கள்
சிறு காயாகிப் பின்னர் உதிர்ந்துவிடுவன. ஆனால், பெண்பூக்கள்
அதே மரத்தில் பழமாகப் பெரிதாகும்.
http://lee.ifas.ufl.edu/Hort/Videos_and_Powerpoints/Jackfruit.pdf
Jackfruit:
Artocarpus heterophyllus
• A monoecious species but with separate
male and female flowers on the same tree.
Male fruits emerge first and the female fruits are
pollinated after emergence in the same tree,
> ஆண், பெண்
> வேறுபாடு பல மரங்களுக்கு உண்டு. புதலியற் கட்டுரைகளைத் தேடிப்
> படியுங்கள். ஏற்றை என்பது பொதுச்சொல். அது பொதுவாய் ஆண் மரத்தையும்,
> புதரையும் குறிக்கும். அது பனைக்கு மட்டுமே உரிய விதப்புச் சொல் அல்ல.
> அப்படிப் பாவிப்பது தவறான பயன்பாடு.
>
> பெண்ணை என்பதும் பாவாணர் சொல்லிவிட்ட காரணத்தாலேயே பெண்>பெண்ணை என்று
> ஆகிவிடாது. பெண்மரம் என்பது ஒரு பொருள். நான் மறுக்கவில்லை. ஆனால்
> அதுமட்டுமே ஒற்றைப் பொருளல்ல. பொதுவான பனையைப் பெண்ணை என்ற சொல்
> குறிக்கும் சான்றுகள் மிகப்பல உண்டு. பெண்ணை என்ற பெயர் பொதுவான பனையைக்
> குறிக்க எப்படிப் பிறந்திருக்கும் என்று ஓர்ந்து பாருங்கள். உங்கள்
> பார்வை வழியாகப் பார்த்தால் அதுமட்டுமே சரியென்று தோன்றும். உங்கள்
> பார்வையை விட்டு வெளியே வந்து சொற்பிறப்பை ஓர்ந்து பாருங்கள்.
பெண் என்பதிலிருந்து பெண்ணை சொல் பிறக்கவில்லையா?
அதன் மிகுபயனால் பெற்றம், ஆ பொதுவாகச் சொல்வதையும்
ஓர்வோம்.
அன்புடன்,
நா. கணேசன்
> அப்பொழுதுதான் பலரும் ஏற்கும் வகையில் சரியான சொற்பிறப்புக் காரணம்
> கிடைக்கும். நூ.த.லோ.சு கொடுத்த சான்றுகள் பலவும் பெண்ணை என்ற சொல்லாற்
> பொதுப் பனையைக் குறிப்பவை.
>
> அன்புடன்,
> இராம.கி.
>
> On Jun 23, 4:24 pm, "Ganesan, N." <naa.gane...@gmail.com> wrote:
>
>
>
> > On Jun 22, 1:09 am, இராமகி <p...@giasmd01.vsnl.net.in> wrote:
>
> > > தனித்த பொருள் ஆண் என்பதே. அதே போல பெண்ணை என்ற சொல்லிற்குப் பெண்பனை
> > > என்ற பொருள் இருந்தாலும், இருபாலிற்கும் பொதுவான பெயராகவும் இந்தச் சொல்
> > > பயன்பட்டிருக்கிறது. அவருடைய கட்டுரையில் பல்வேறு செய்திகளைத்
> > > தொகுத்திருக்கிறாரே ஒழிய சொல்ல வந்த கருத்தை ஏரணத்தோடு தருக்கவில்லை.
>
> > ஆ, பெற்றம், கறவை, சுரப்பி என்றாலும் பெண் பசுதான்.
> > பலன் மிகுதி காரணமாக, இச் சொற்கள் (ஆ, ... ) பொதுவாகப்
> > பசுக்களைக் குறிக்கின்றன. அதேபோல், பெண்ணை என்னும்
> > பெண்பனை இருபால்களுக்கும் பொதுவாக சில சமயம் சொல்லலாம்.
>
> > இதனை என் கட்டுரையில் விளக்கியுள்ளேன்.
>
> > பாவாணர் அதனால்தான் குறிப்பிடுகிறார்:
> > "பெண்-பெண்ணை = காய்க்கும் பெண்மரம், பெண்பனை, பனை”
>
> > ஏற்றை ஏறு ஆண் மரங்கள் எல்லாவற்றுக்கும் வரும் சொல்.
> > ஆனால் மரங்களில் ஆண்பனை உள்ளது பனையே. பனை பெண்ணை
> > தான் குலைதரும். தென்னையில் ஆண், பெண் இல்லை, (தென்னை - எல்லா மரமும்
> > காய்ப்பன.)
>
> > நா. கணேசன்- Hide quoted text -
On Jun 23, 11:37 pm, இரவா <vasudevan...@gmail.com> wrote:
> தென்னையில் வலம்புரி, இடம்புரி என இரு வேறு வகைகள் இருக்கின்றன. அவற்றுள்
> வலம்புரியை ஆணாகவும் இடம்புரியைப் பெண்ணாகவும் கருதுகின்றனர். இவ்விரண்டில்
> இடம்புரி அதிகமான காய்களைக் காய்க்கும் என்றும் தென்னை ஆராய்ச்சியாளர்கள்
> கூறுகின்றனர்.
>
இருக்கலாம். தென்னை ஆராய்ச்சியாளர்களிடம்
படங்கள் பெற்று பதிவிடுங்கள். வலம்புரி, இடம்புரி சங்குகள்
உள்ளன, அதுபோலா? என்று பார்க்கணும். இடம்புரிச்
சங்கே எண்ணிக்கையில் அதிகம் என்பதும் ஒப்பிடலாம்.
ஆனால் ஒன்று:
தோப்பில் எல்லா மரங்களும் காய்க்கும். பலா மரங்களும்
எல்லா மரங்களும் காய்க்கும்.
ஆனால், தாழை எனப்படும் குடும்பத் தாவரங்கள் -
பனை, ஈஞ்சை, தாழம்புதை - ஆண் தாவரம் காய்க்கா,
பெண்ணையே காய்த்துப் பலன் ஈனும்.
http://nganesan.blogspot.com/2011/06/pennai-female-palmyrah-tree.html
நா. கணேசன்
> இவ்வேறுபாட்டை அறிய தென்னை மட்டையில் உள்ள சோலைகள் வலத்திலிருந்து
> தொடங்குகின்றதா அல்லது இடத்திலிருந்து தொடங்குகின்றதா என்பதைக் கொண்டு
> அறியலாம்.
>
> மேலும், தென்னையைப் பற்றிய பல அறிய செய்திகள், திருவள்ளுவரின் பஞ்சமித்திரம்
> என்னும் நூலில் காணப்படுகிறது. அதனைக் கண்டு பின்னர் எழுதுகின்றேன்.
>
> இருக்கும் வரை தமிழ் அணையில்
> அன்புடன்
> இரவா
>
> வலைப்பூ:http://thamizmandram.blogspot.com/
> இணையம்: www.thamizhkkuil.net
> ஆயம்: thami...@googlegroups.com
>
> 23 ஜூன், 2011 7:05 pm அன்று, Ganesan, N. <naa.gane...@gmail.com> எழுதியது:
>
>
>
>
>
> > இருந்தமிழே உன்னால் இருந்தோம்! இமையோர்,
> > விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டோம்!- Hide quoted text -