குழந்தை அப்பாவாட்டம் (ஆட்டம்) இருக்கிறது. இதில் ஆட்டம் என்பதை ஈழத்தவர் ஓட்டம் என்பர். ஓட்டம் பொருந்துதற் கருத்துடையது. ஓட்டம் > ஆட்டம் ஆனது.மனசிருக்கணும் பச்ச புள்ளையாட்டம் https://www.youtube.com/watch?v=b2zMe5OOu6Uஓமன்
”ஓடுதல் = ஒத்தல், பொருந்துதல், கூடுதல். ஓட என்பது ஓர் உவம உருபு.
"ஓடப் புரைய என்றவை எனாஅ" என்று தொல்காப்பியம் கூறுதல் காண்க. (1232)
ஓடாவி = ஓவியன். ஓடு - ஓட்டம் - ஆட்டம் = ஒப்பு.
குரங்காட்டம் ஓடுகிறான் என்னும் வழக்கை நோக்குக. ” (தே. பாவாணர்)
நா. கணேசன்
சாலக்காரன், a hypocrite; an artful person.
சாலமாலம், tricks, artifice, evasion.
சாலம்பண்ண, to make a false promise without having a mind to fulfil it; to protract or delay; to play tricks.
சாலவித்தை, the magical art.
இந்திரஜாலம், legerdemain, jugglery.
9) வளவு / காணி -
ஒருவரின் வீடு இருக்கும் நிலப்பரப்பையோ அல்லது வெறும் நிலப்பரப்பையோ வளவு அல்லது காணி என்று ஈழத்தில் கூறுவார்கள்.
உதாரணம்
முன் வளவு /முற்றம் என்று வீட்டின் முன் வாசலிலிருந்து தெரு வரை யிலான (படத்தில் இருப்பது ) ஒவ்வொரு வீட்டினது நிலப்பரப்பையும் குறிப்பது. இதை தமிழகத்திலும் முற்றம் என்று சொல்வார்கள் என்றே நினைக்கிறேன். முறவாசல் என்பதும் இது தானா என்று பெரியவர்கள் தெளிய வைக்க வேண்டுகிறேன்.கோடி / பின் வளவு - கொல்லை, புழக்கடை என்று தமிழகத்தில் சொல்வார்கள் என்று நினைக்கிறேன். இது வீட்டின் பின் பக்க நிலப்பரப்பு.1) வளவு முழுக்க பூஞ் சோலையா இருந்தது ஒரு காலம்; சுடுகாடா போனது இந்தக் காலம் .2) இராசையா மாஸ்டரின் நாலுபரப்புக் காணியையும் மகேஸ் அக்கா வாங்கிட்டாவாம்.( இராசையா என்ற வாத்தியாருக்கு சொந்தமான நாலு பரப்பளவு நிலப்பரப்பை மகேஸ் என்ற பெண்மணி வாங்கிவிட்டாராம்)3) பின் வளவுக்குள் மாமரங்ளும் பலாமரங்களுமா பழுத்து செழிப்பா கிடக்குது( புழக்கடைப் பக்க நிலத்தில் மா, பலா மரங்கள் செழித்து காய்த்து இருக்கின்றன)4) கோடிக்குள்ள நிண்டு இவளவை ரெண்டு பேரும் அப்பிடி என்ன குசு குசுத்துக் கொண்டு நிக்கிறாளவையள் ?( இரண்டு பெண்களும் வீட்டின் புழக்கடைப் பக்கமாக நின்று என்ன இரகசியம் பேசிக் கொண்டு நிற்கிறார்கள் ?)5) காலமையளில எழும்பினால் முன் முற்றத்தையும் கோடியையும் கூட்டி கீட்டி சாணகத் தண்ணி தெளிச்சால் தான் அண்டைய பொழுது விளங்கும் எனக்கு.(தினமும் விடிகாலையில் வீட்டின் முன் பின் நிலப்பரப்பை பெருக்கி, தண்ணி (சாணகம் கரைத்த தண்ணீர்) தெளித்துவிட்டால் தான் அன்றைய பொழுது எனக்கு மங்களகரமாக இருப்பது போல் உணர்வு வரும் )
--//மச்சான் - மாமா பையன், தங்கை கணவர் .//இதில் ஒரு விநோதம் என்னவெனின், தாய்மாமன் அல்லது அத்தையின் மகனை மணம் செய்துகொள்ளும் முறை இருப்பதால், கணவனும் மச்சான் என அழைக்கப்படுவான்! :))
--
முத்தமிழ் குழுமம்
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு." -- பாவேந்தர்.
---
You received this message because you are subscribed to the Google Groups "முத்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to muththamiz+...@googlegroups.com.
பெயரைச் சொல்லக் கூச்சப்படும் மனைவிமார்கள்.... அழைப்பது வழக்கமே.
அதுவேதான் அங்கே 'இஞ்சேருங்கோ' ! :))
எதுக்கும் 'இஞ்சேருங்கோ'ந்னு ஒருக்கா கூப்பிட்டுப் பாருங்கோவன்! :O :P
காணி நிலம் வேண்டும்... பராசக்தி காணி நிலம் வேண்டும் - பாரதியார்
--
--
இருந்தமிழே உன்னால் இருந்தோம்! இமையோர்,
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டோம்!
---
You received this message because you are subscribed to the Google Groups "தமிழாயம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizayam+...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
12) அரியண்டம் - தொல்லை, தொந்தரவு, பிரச்சினை, அருவருப்பான, அசிங்கமான...என்ற அர்த்தங்களில் ஈழத்தமிழில் இந்த சொல் பாவிக்கப்படும்.
University of Madras Lexicon ல்* n. Dial. var.of அரிகண்டம்².=அரியண்டம்என்று தந்திருக்கிறார்கள்.
உதாரணம் :1) உதென்ன இவனோட பெரிய அரியண்டமாக் கிடக்கு.
( இதென்ன இவனுடன் பெரிய தொந்தரவாக இருக்கிறது)2) இதில நிண்டு அரியண்டம் குடுக்காமல் அங்கால போ( இங்கே தொந்தரவு தராமல் தள்ளிப் போ)3) இந்த அரியண்டத்துக்காக தான் நான் இங்க வாறதில்லை..(இந்த பிரச்சினையின் நிமித்தமாகத் தான் நான் இங்கு வருவதில்லை)4) சைக்..அந்த ஒழுங்கைக்குள்ள ஒரே சேறும் சகதியுமாய் ஒரே அரியண்டமாயிருக்குது.(சே... அந்த சந்துக்குள் சேறும் சகதியுமாக அருவருப்பாக இருக்கிறது)5) உப்பிடி அரியண்டக் கதைகள் கதைப்பாயெண்டால் நான் இங்க வந்திருக்கவே மாட்டன்..( இந்த மாதிரி அசிங்கமாக பேசுவாயென்று தெரிந்திருந்தால் நான் இங்கு வந்திருக்கவே மாட்டேன்)
10)படலை - Gate. முற்ற வாயிலை மூடிவைக்கும் படல் .
( தமிழகத்தில் தமிழில் எப்படி Gate அல்லது படலையை சொல்வீர்கள் என்று கணேசன் ஐயா போன்றவர்கள் தான் சொல்ல வேண்டும். இணையத்தில் கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட தமிழக நண்பர்களிடம் கேட்டு கிடைத்த பதிலில் 99% “கேட்” என்பது தான். ஒருவர் மட்டும் வாசல், வாயிற்படி என்று சொன்னார். ஆனால் அது மிகத் திருத்தமான சொல் என்று எனக்கு தோன்றவில்லை... வாசலை மூடி , திறக்க வல்ல ஒரு அமைப்பின் பெயர் தான் நான் எதிர்பார்ப்பது. வாசல் அல்ல; கதவு என்பது கூட வீட்டில் இருக்கும் அமைப்பு . )படலை என்ற சொல் அகராதியில் பல்வேறு அர்த்தங்களுடன் பொருந்திப் போயிருக்கிறது. ஆனால் நம்மவர்கள் ஈழத்தில் , விக்கிபீடியாவில் சொல்லப்பட்டிருப்பது போல் வேலியால் அல்லது மதிலால் சுற்றிவர வேயப்பட்ட ஒரு காணியின் நுழைவாயிலில் மூடி திறக்கவல்ல அமைப்பை “படலை” என்கிறோம். அதாவது Gate என்பதன் (ஈழத்து) தமிழ் அர்த்தம் “படலை”பெரும்பாலும் எங்கள் வீடுகளைச் சுற்றி தென்னோலைகளால், அல்லது பனை ஓலைகள், பனை மட்டைகளால் வேயப்பட்ட வேலிகள் இருக்கும் காணிக்குள் நுழையும் வாசலில் பனை ஓலை, பனம் மட்டை அல்லது மரதட்டிகளால் அடைப்பு போன்று செய்து கதவாக பொருத்தி வைப்பார்கள். காலப் போக்கில் மதில் சுவர்கள் எழும்பத் தொடங்கிய பின்னர் இரும்பு, அல்லது அலுமியத்திலான படலைகள் Gate என்ற நவநாகரீக ஆங்கிலப் பதத்துடன் வந்துவிட்டாலும் இன்றளவும் படலை என்பதே அதன் தமிழாக்கமாக நாம் கொண்டிருக்கிறோம்.
படலை என்ற வார்த்தை அகநானூறு, புறநானூறு, ஐங்குறு நூறு , அரிச்சந்திர புராணம், சிலப்பதிகாரம் போன்ற நூல்களில் பல பாடல்களில் வந்திருக்கிறதாம்.படல் என்ற சொல்லிருந்து படலை உருவாகியிருக்கிறதாம்.உதாரணம் :1) உப்பிடியே படலையை திறந்து போட்டு மூடாமல் வாறது?2) குமர் பெட்டையளுக்கு படலையடியில் என்ன கதை காரியம் வேண்டிக்கிடக்கு ?3) அடியேய்..ஆமிக்காரங்கள் படலையடியில வந்து நிக்கிறாங்களடி ....
--
--
இருந்தமிழே உன்னால் இருந்தோம்! இமையோர்,
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டோம்!
---
You received this message because you are subscribed to the Google Groups "தமிழாயம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizayam+...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
ஆக்கினை என்ற சொல்லுக்கு அகராதியில் பலவிதமான அர்த்தங்கள் இருக்கின்றன. அவையாவன
கட்டளை
உத்தரவு
தண்டனைஎனினும் ஈழத்துப் பேச்சு வழக்கில் இந்த ஆக்கினை என்ற வார்த்தை அன்றாட உபயோகத்தில் சிரமங் கொடுத்தல், தொந்தரவு செய்தல் போன்ற அர்த்தங்களிலேயே பெரும் பாலும் இடம்பெறுகிறது.
எங்கள் தாலாட்டுப் பாடல் ஒன்றில் இப்படி வருகிறது.
”ஆராரோ ஆரீவரோ
ஆரடிட்து நீர் அழுதீர்?
அடித்தவரை சொல்லியழும்.
ஆக்கினைகள் செய்து வைப்போம்.”
யோகாசனத்தில் “ஆக்கினை தவம்” என்றொரு முறை இருக்கிறதாம். (ரிஷி ஐயா இது பற்றி விளக்குவார் என எதிர்பார்க்கிறேன்)
ஆக ஆக்கினை என்ற பதம் மிகப் பழமை வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்பது எனது ஊகம்.
உதாரணம்:
1) உதென்ன பெரிய ஆக்கினையா கிடக்குது?
(இது என்ன பெரிய தொந்தரவாக இருக்கிறது)
2) வரதன்ர ஆக்கினை தாங்காமல் தான் அவன்ர பெண்சாதி கிணத்துக்குள்ள குதிச்சவளாம்.
(வரதனின் கொடுமை தாங்க முடியாமல் தான் அவனுடைய மனைவி கிணற்றுக்குள் குதித்தாளாம்)
3) பள்ளிக்கூடம் போக மாட்டன் எண்டு இவன் ஒரே ஆக்கைனைப்படுத்துறான்.
(பாடசாலைக்குப் போக முடியாது என்று இவன் அடம்பிடித்து தொந்தரவு செய்கிறான்)
4) இப்பிடியே நீ அவளை ஆக்கினைப்படுட்திக் கொண்டிருந்தியெண்டால் ...ஒரு நாளில்லை ஒரு நாள் அவள் உன்னை கொன்றே போட்டுடுவாள்.
( இந்த மாதிரி அவளை நீ துன்புறுத்திக் கொண்டிருந்தால் ஒரு நாள் இல்லாவிட்டால் ஒரு நாள் அவள் உன்னைக் கொன்றுவிடுவாள்)
5) புதுச்சட்டை வாங்கித் தா எண்டு வீட்டில பிள்ளையளின்ர ஆக்கினை / ஆக்கினையை தாங்க முடியவில்லை.
(புது உடை வாங்கித் தர சொல்லி வீட்டில் பிள்ளைகளின் தொந்தரவு / தொந்தரவை தாங்க முடியவில்லை )
சொதி, (பெயர்ச்சொல்.)
ஈழத்து
சமையலில் உணவுகளின் பெயர்கள் கூட சிலது வித்தியாசமானவை; எனக்கு நன்றாக
நினைவு இருக்கிறது சன் தொலைக்காட்சியில் கிராமத்து விருந்து என்ற சமையல்
நிகழ்ச்சியில் பரவை முனியம்மா அவர்கள் கிராமத்து சமையல் குறிப்புகள்
தருவார். அப்போது ஒரு நாள் கோவக்காய் பால் கறி செய்து காட்டினார். அந்த
குறிப்பினூடாக அவர் சொன்ன இன்னொரு விசயம் “கோவாக்காயில் மாத்திரமே பால்கறி
செய்யக் கூடியதாக இருக்கும். கத்தரிகாய் போன்றவற்றில் பால்கறியே செய்ய
முடியாது என்று சொன்னார்”. ஆனால் எங்கள் வீடுகளில் ஆட்டிறைச்சிக்
குழம்புக்கு காம்பினேஷனே கத்தரிக்காய் பால் கறி தான் முதல் தேர்வாக
இருந்து வருகிறது கால காலமாய்.
இது போல சொதியும் எமது சமையலில் மிக முக்கியமானது. தமிழ் நாட்டு மக்கள் சமையலில் நான் அதை கண்டதில்லை.ஆனால் இணையத்தில் தேடிய போது திருநெல்வேலி மாவட்டத்தில் திருமண விருந்துகளில் சொதி பரிமாறப்படுவதாக படித்தேன். நெல்லை சீமை சொதியின் சமையல் செய்முறை எம்மவர்களின் சொதியுடன் கொஞ்சம் வேறுபட்டிருக்கிறது. நெல்லை சீமை சொதி
மாப்பிள்ளை சொதி என்று இன்னொரு வகைச் சொதிக் குறிப்பும் பார்த்தேன். இந்த சொதியில் பாசிப்பருப்பு கூட போடுகிறார்கள் . :)
நம்மவர்கள் செய்யும் சொதி குழம்பு போல் கெட்டியாக இருக்காது. நீர்த்தன்மை அதிகமானதாக இருக்கும்.
ஈழத்தில் தமிழில் சொதி என்றும் சிங்கள பிரதேசங்களில் ஹொதி என்றும் சொல்லப்படுகிறது. சொதிக்கு “ஆணம் “ என்று இன்னொரு பெயரும் உண்டு.
ஆக்கினை என்ற சொல்லுக்கு அகராதியில் பலவிதமான அர்த்தங்கள் இருக்கின்றன. அவையாவன
கட்டளை
உத்தரவு
தண்டனை
எனினும்
ஈழத்துப் பேச்சு வழக்கில் இந்த ஆக்கினை என்ற வார்த்தை அன்றாட உபயோகத்தில்
சிரமங் கொடுத்தல், தொந்தரவு செய்தல் போன்ற அர்த்தங்களிலேயே பெரும் பாலும்
இடம்பெறுகிறது.
எங்கள் தாலாட்டுப் பாடல் ஒன்றில் இப்படி வருகிறது.
”ஆராரோ ஆரீவரோ
ஆரடிட்து நீர் அழுதீர்?
அடித்தவரை சொல்லியழும்.
ஆக்கினைகள் செய்து வைப்போம்.”
யோகாசனத்தில் “ஆக்கினை தவம்” என்றொரு முறை இருக்கிறதாம். (ரிஷி ஐயா இது பற்றி விளக்குவார் என எதிர்பார்க்கிறேன்)
ஆக ஆக்கினை என்ற பதம் மிகப் பழமை வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்பது எனது ஊகம்.
உதாரணம்:
1) உதென்ன பெரிய ஆக்கினையா கிடக்குது?
மாட்டேன், மாட்டோம், மாட்டான், மாட்டன், ....
மாலும் நான்குவ தனனும் மாமறை நாலும் நாடரு நம்பர னேஎவ ராலும் நீக்கஅ ரிதிவ்வ ருத்தம்நின் ஏலும் நல்லருள் இன்றெனில் சற்றுமே
- வள்ளலார் - 1267
இல்லை நின் கழற்கு அன்பு அது என் கணே
ஏலம் ஏலும் நல் குழலி பங்கனே
கல்லை மென்கனி ஆக்கும் விச்சை கொண்டு
என்னை நின் கழற்கு அன்பன் ஆக்கினாய்
எல்லை இல்லை நின் கருணை எம்பிரான்
ஏதுகொண்டு நான் ஏது செய்யினும்
வல்லையே எனக்கு இன்னும் உன் கழல்
காட்டி மீட்கவும் மறு இல் வானனே.
ஒன்றுகை, v. noun. Uniting, un ion, ஒன்றுதல்.
தமிழ் தமிழ் அகரமுதலி
சத்தி
ஆற்றல்; பிரபுசத்தி, மந்திரசத்தி, உற்சாகசத்திஆகியமூவகைஅரசர்ஆற்றல்கள்; மூன்றுபெருங்கொடி; கொடிநாட்டுங்குழி; சிவனதுஅருள்; உமை; சத்திதத்ததுவம்; ஞானவதி; வேல்; சூலம்; சொல்லாற்றல்; கந்தகம்; நெல்லிக்காய்க்கந்தகம்; நீர்முள்ளி; வாந்திசெய்கை; வேம்பு; கொம்மட்டி; பேய்ப்புடல்; விருந்து; குடை; இசைச்செய்யுள்.
தமிழ் நாட்டில் வாந்தி அல்லது வாந்தி எடுத்தல் என்பதற்கு நிகராக ஈழத்தில் ஓங்காளம் அல்லது சத்தி என்ற வார்த்தைகள் பயன்படுத்தப்படுகிறது.சில வேளைகளில் ஓங்காளம் என்பது வாந்தி வருவது போன்ற ஒரு அசூசையான நிலையையும் குறிக்கும் சொல்லாக பயன்படும். அதாவது வெளியேற்றப்படாத வாந்தி அல்லது வாந்தி வருவதற்கு அறிகுறியான நிலமையை சொல்வதாக இருக்கும் வார்த்தை.உதாரணம்:
- சாப்பிட்ட சாப்பாடு சரியில்லை... அப்போதையிலிருந்து ஓங்காளிச்சுக் கொண்டு இருக்குது.
- சத்தி சத்தியா எடுத்து களைச்சுப் போனன்.
- ரோட்டோரம் எல்லாம் ஒரே நாத்தம். வயித்தை பிரட்டிக் கொண்டு சத்தி வருது.
ஈழத் தீவின் மக்கள் பயன்படுத்தும் சமையலில் அரம்பைத் தாழை இலை நறுமணம் ஊட்ட வெகுவாகப் பயன்படுகிறது.தமிழ்நாட்டு, கேரள கடற்கரை முஸ்லீம்களும் புலவுச்சோறு செய்யும்போது பயன்படுத்தும் மணப்பொருள் இந்தப் புலவுத்தாழை.மலையாளத்தில் பிரியாணி-கைதை என்கின்றனர்.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
நிச்சயமாக பயன்படுத்தலாம். எந்த இழை என்பதற்கு தொடுப்புக் கொடுங்கள். நன்றி.”கந்த ரம்பை” என திருச்செந்தூர்த் திருப்புகழில் அருணகிரிநாதர் அரம்பைத் தாழையைச்சொல்வது அவருக்கு முன்னர் 1500 ஆண்டுக்காலமாக எப்படிப் பொருந்துகிறதுஎன நாளை எழுதுகிறேன்.நா. கணேசன்
நன்றிஅன்புடன்சுவாதி
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
முகநூலில் இந்த வார்த்தையை சுரதா யாழவன் என்ற சகோதரர் நினைவூட்டினார்மனநோயை பனி என்றும் எங்களூரில் சொல்வார்கள்.இடைச்செருகல்19) விசர்/பைத்தியம்/பனி.
உதாரணம்
6) அந்த மனுசன் பனி பிடிச்சு திரியுது
7) உனக்கென்ன பனியே?2015-11-17 10:23 GMT-05:00 Swathi Swamy <mswat...@gmail.com>:19)விசர் நாய் - வெறி நாய். (A mad dog)
இன்றைய சொல் “விசர்”.
விசர் / பைத்தியம் - மனநோய்,பைத்தியம்,
நினைவிழந்த நிலை, பிரமை பிடித்த மனநிலை
Mental Illness.மனநோயை ஈழத்து தமிழில் விசர் அல்லது பைத்தியம் என்று குறிப்பிடுவர்.பைத்தியம் என்ற சொல் நோயின் பெயராகவும், மனநோய் பாதிக்கப்பட்டவரை சுட்டும் சொல்லாயும் வழக்கிலிருக்கிறது.விசரன் - மனநோயால் பாதிக்கப்பட்ட ஆண்.விசரி - மனநோயால் பாதிக்கப்பட்ட பெண்.விசரர்/ விசரன்கள்/விசரிகள் - மனநோயால் பாதிக்கப்பட்ட பலர் .மனநோயாளிகளை மட்டுமல்ல முட்டாள்தனமாக செயல்படும் அல்லது பேசும் ஒருவரை கூட விசரன் அல்லது விசரி என்று பொதுப்படையாக பேச்சு வழக்கில் குறிப்பிடுவர்.உதாரணம் :
- உனக்கு என்ன விசரே?
- இந்த மனுசனுக்கு சரியான விசர்.
- நேற்று அங்கோடைப் பக்கம் போன போது நிறைய விசர் பிடிச்ச மனிதர்களை பார்த்தம்.
- விசர் நாய் கடிச்சால் பொக்கிளை சுத்தி கனக்க ஊசி போட வேணும் .
- அங்கோடை, முல்லேரியா, தெல்லிப்பளை ஆசுபத்திரிகளில தான் விசர் நோய்க்கு வைத்தியம் பார்க்கிறவை.
--
--
இருந்தமிழே உன்னால் இருந்தோம்! இமையோர்,
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டோம்!
---
You received this message because you are subscribed to the Google Groups "தமிழாயம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizayam+...@googlegroups.com.
19)விசர் நாய் - வெறி நாய். (A mad dog)
இன்றைய சொல் “விசர்”.
விசர் / பைத்தியம் - மனநோய்,பைத்தியம்,
நினைவிழந்த நிலை, பிரமை பிடித்த மனநிலை
Mental Illness.
, n. < வேசறு-. 1. Weariness, fatigue; மனச்சோர்வு. 2. Sorrow; துக்கம். வேசறவொழிதி (காஞ்சிப்பு. தழுவக். 214).
இது தான் சென்னைத் தமிழில் bejaru (பேஜாரு) என மருவி வழங்குகிறது.
இந்தப் படுமழை ஒரே பேஜாரு,
வேசறிக்கை vēcaṟikkai
, n. < id. See வேசறவு. இன்ப வீட்டினிடைத் துயின்றே வேசறிக் கை தீர்வேனோ (திருப்போ. சந். கொச்சகக்கலி. 4).
வேசறு-தல் vēcaṟu-
, 6 v. intr. cf. ஏசறு-. [T. vēsaṟu, K. bēsaṟu.] 1. To be weary, fatigued; மனஞ்சோர்தல். 2. To be vexed, distressed; வருந்துதல். என்பிழைக்கே குழைந்து வேசறுவேனை (திருவாச. 6, 50).
வேசாடல் vēcāṭal
, n. perh. வேசறவு + ஆடு-. [K. pēcāṭa.] Mental agitation; மனக்கலக் கம். (யாழ். அக.)
வேசாடை vēcāṭai
, n. See வேசடை. (யாழ். அக.)
வேசாறல் vēcāṟal
, n. < வேசாறு-. [T. vēsāru, K. bējaru, M. bējāra.] 1. Weariness; சோர்வு. 2. Sorrow; துக்கம். நினைக்கினும் வேசாற லாறுமடி (அருட்பா, vi, அனுபவ. 44). 3. Becoming consoled or pacified; ஆறுகை. (யாழ். அக.) 4. Rest; களைப்பாறுகை. (யாழ். அக.)
வேசாடல் = மனக் கலக்கம், வேசறு- இத்தோடு தொடர்புடைய சொல் விசர் = பைத்தியம்.
நா. கணேசன்
மனநோயை ஈழத்து தமிழில் விசர் அல்லது பைத்தியம் என்று குறிப்பிடுவர்.பைத்தியம் என்ற சொல் நோயின் பெயராகவும், மனநோய் பாதிக்கப்பட்டவரை சுட்டும் சொல்லாயும் வழக்கிலிருக்கிறது.விசரன் - மனநோயால் பாதிக்கப்பட்ட ஆண்.விசரி - மனநோயால் பாதிக்கப்பட்ட பெண்.விசரர்/ விசரன்கள்/விசரிகள் - மனநோயால் பாதிக்கப்பட்ட பலர் .மனநோயாளிகளை மட்டுமல்ல முட்டாள்தனமாக செயல்படும் அல்லது பேசும் ஒருவரை கூட விசரன் அல்லது விசரி என்று பொதுப்படையாக பேச்சு வழக்கில் குறிப்பிடுவர்.உதாரணம் :
- உனக்கு என்ன விசரே?
- இந்த மனுசனுக்கு சரியான விசர்.
- நேற்று அங்கோடைப் பக்கம் போன போது நிறைய விசர் பிடிச்ச மனிதர்களை பார்த்தம்.
- விசர் நாய் கடிச்சால் பொக்கிளை சுத்தி கனக்க ஊசி போட வேணும் .
- அங்கோடை, முல்லேரியா, தெல்லிப்பளை ஆசுபத்திரிகளில தான் விசர் நோய்க்கு வைத்தியம் பார்க்கிறவை.
2015-11-16 9:18 GMT-05:00 Swathi Swamy <mswat...@gmail.com>:
--
16)ஏலும் - இயலும் /முடியும்ஏலாது - இயலாது / முடியாது
On Monday, November 16, 2015 at 6:19:18 AM UTC-8, சுவாதி சுவாமி wrote:18 ) சுளகு - முறம்அரிசியிலிருந்து உமியை பிரித்தெடுக்க அதாவது அரிசி புடைக்க பயன்படுத்தும் , பனை ஓலை , பிரம்பு போன்றவற்றைக் கொண்டு பின்னப்பட்ட ஒரு உபகரணம்.தமிழகத்தில் முறம் என்று வழக்கில் இருப்பது. சூர்ப்பம் என்றும் சொல்வார்களாம். ஈழத்தில் சுளகு என்று சொல்கிறோம்.
முறம் என்று சொல்வோம். சூர்ப்பம் என்று யாரும் சொல்வதில்லை. அது வடசொல், தூற்று- எனும் வினைச்சொல் தருவது என்பர் வடமொழி அறிஞர்.தானியத்தைப் பதர் நீக்க முறத்தால் தூக்கித் தூற்றுவது.சூர்ப்பம் போல நகம் உள்ளவள் சூர்ப்பணகை. சூர்ப்பம் போல் காதுள்ளவர் கணபதி.நா. கணேசன்
2015-11-16 9:39 GMT-05:00 Swathi Swamy <mswat...@gmail.com>:2015-11-15 11:20 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:ஈழத் தீவின் மக்கள் பயன்படுத்தும் சமையலில் அரம்பைத் தாழை இலை நறுமணம் ஊட்ட வெகுவாகப் பயன்படுகிறது.தமிழ்நாட்டு, கேரள கடற்கரை முஸ்லீம்களும் புலவுச்சோறு செய்யும்போது பயன்படுத்தும் மணப்பொருள் இந்தப் புலவுத்தாழை.மலையாளத்தில் பிரியாணி-கைதை என்கின்றனர்.ஆமாம் ஐயா...இரம்பை என்றே நாமும் அழைக்கிறோம்.சிங்களத்தில் இரம்பே என்று சொல்வார்கள். சிங்கள பிரதேசங்களில் இது அதிகமாக கிடைக்கிறது. அவர்களு தமது சமையலில் அதிகமாக இதை பயன்படுத்துவார்கள்.
முகநூலில் இப்பதிவை பகிர்ந்தேன். அதன் பின் மட்டுநகர் தமிழில் வேறு பெயர்களிலும் விளக்குமாறுக்கு இருப்பதை அறியமுடிந்தது.
அவையாவன: கட்டுமாறு,
வாருக்கட்டு,
ஈர்க்கில் கட்டு,
வார்கல்
2) காலமை எழும்பினதும் தும்புத்தடியால் வீடு பெருக்காவிட்டால் வீடு விடியாது.
--
--
இருந்தமிழே உன்னால் இருந்தோம்! இமையோர்,
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டோம்!
---
You received this message because you are subscribed to the Google Groups "தமிழாயம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizayam+...@googlegroups.com.
உரலில் இடிக்கும்போது இடிபடும் பொருள் சிந்தாமல் இருக்க முறங்களை அரணாக வைக்கும் வழக்கம் உண்டு. அதனால் சுளகு என்பதை mudguard எனும் சொல்லில் வரும் பொருளிலும் பயன்படுத்தலாம்
”நல்வேம்பின் இலை சுளகா” எனும் கலித்தொகை அடிகளல் அது பெறப்படும்
காம்பறை என்பது சிங்களத்தில் அறை என்ற பொருளாகும். ஆனால் எங்கள் ஊர் தமிழில் சவக்காம்பறை என்ற சொல் தாரளமாகவே புழக்கத்தில் இன்றும் இருக்கிறது.
29) இன்றைய தேர்வுச் சொற்கள் பெயர் சொற்களாலானவை. மன்னிக்கவும் இச் சொற்கள் கொஞ்சம் கடுமையானவை மட்டுமல்ல பொது இடங்களில் பேசும் நாகரீகமான வார்த்தை வடிவங்கள் அல்ல .. அதே சமயம் பேசத்தகாத தூஷணையும் அல்ல.
சீரற்ற ஒழுக்கத்தினை கொண்ட மனிதனை குறிக்கும் கொஞ்சம் வீச்சம் கூடிய கடுமையான வார்த்தை வடிவங்கள் அவை.காவாலி - ஒழுக்கங் கெட்ட கொடியவன்.
காவாலி / கடப்புலி/ விடுகாலி//வங்கோலை - நடத்தை தவறான மனிதன் . ஒழுக்கமற்றவன்.
5) வங்கோலை ராஸ்கல் உனக்கு அவ்வளவு தைரியமா?4) நவமணிண்ட ரெண்டு மக்களும் விடுகாலிகளாப் போட்டான்கள்.3)கண்ட கண்ட காவாலி கடப்புலியளோடு ரோடு ரோடா திரி..அப்ப தானே அப்பாண்ட பெயரை கெடுக்கலாம் என்ன?2) இதென்ன காவாலித்தனம் ?1) இஞ்ச....உந்தக் காவாலி சேட்டையை என்னட்டைக் காட்டாதை ...!உதாரணம்இந்த வார்த்தைகள் மிக உக்கிரமான வெறுப்பின் அல்லது கோபத்தில் ஒருவரை பார்த்தோ அல்லது ஒருவரைப் பற்றியோ அவரது ஒழுக்கச்சிர் கேட்டை சுட்டிக் காட்டி இடித்துரைக்கும் சொற்களாக அடையாளப்படுத்தப்படுவை.வங்கோலை - ராஸ்கல் - கெட்டவன்கடப்புலி - கெட்டவன்விடுகாலி - கட்டுக்கடங்காதவன். கட்டுப்பாடற்றவன்2015-11-26 11:50 GMT-05:00 Swathi Swamy <mswat...@gmail.com>:28)5) நீங்கள் இரண்டு பேரும் இப்பிடியே உந்த சதுரங்க விளையாட்டில் மாறி மாறி அழாப்பிக் கொண்டிருங்கோ..விளையாட்டு முடிஞ்ச மாதிரி தான் இண்டைக்கு,,4) எல்.பி.டபிள்.யூ வெண்டால் என்னவெண்டே தெரியாதா பந்து எறியிறவனுக்கு.? அவுட் அவுட் எண்டு அழாப்பிக் கொண்டிருக்கிறானே? (வினைச் சொல்லாக அழாப்பி)3 ) குமார் சரியான அழாப்பி. அவனை விளையாட்டில் சேர்க்க கூடாது. (பெயர் சொல்லாக அழாப்பி)2) இப்பிடி உன்ர ஆத்தாப் போக்கிலி தனத்தை என்னட்டையும் காட்டுவாய் எண்டு நான் நினைக்கேலை ...( அவன் ஒரு நேர்மையற்றவன் ..சுய அறிவுள்ளவன் எவனும் அவனிடம் நீதி நியாயம் பேச மாட்டான்)1) அவன் ஒரு ஆத்தாப் போக்கிலி ..அவனோட போய் நீதி நியாயம் பேசுறவன் விசரனாத் தான் இருப்பான்.உதாரணம் :பெரும்பாலும் இந்த வார்த்தை ஆடுகளங்களில் விளையாட்டுக்களில் தான் பாவிக்கும் சந்தர்ப்பங்கள் வரும். உதாரணத்திற்கு சிறுவர்கள் கிரிக்கெட் விளையாட்டில் ஒருவரை அவுட் ஆக்கினால் தான் அவுட் இல்லை என்று விவாதிப்பவரை அழாப்பி என்பர்.ஆத்தாப் போக்கிலி - நேர்மையற்றவர், குழப்பவாதி என்ற வார்த்தைகள் பொருத்தமாயிருக்கும் என்று நினைக்கிறேன்.போக்கிலி :போக்கிலி, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்விளக்கம்
ஆத்தாது - இயலாது அல்லது முடியாது என்ற உணர்வை தரவல்ல சொல்வடிவம்.
- ஆக ஆத்தாப் போக்கிலி என்பது வீச்சம் கூடிய அர்த்தத்துடன் ஒரு குழப்பவாதியையோ அல்லது நேர்மையற்றவரையோ அல்லது ஒழுக்கமற்றவரையோ குறிப்பதாக எடுத்துக் கொள்ளலாம்.
ஆத்தாப் போக்கிலி தனம் - ஒரு இடத்தில் ஒரு மாதிரி கருத்து சொல்லிவிட்டு இன்னோர் இடத்தில் தான் சொன்ன கருத்தை திட்டவட்டமாக மறுத்து பேசுவது , விதண்டாவாதம் செய்வதைக் குறிக்கும்.
அதே போல் ஈழத்தமிழர்கள் உபயோகிக்கும் மற்றும் இரு சொற்கள் அழாப்பி, அழாப்புதல். (எந்த லகரம் சரியாக இருக்கும் இந்த வார்த்தைக்கு என்பது இன்னமும் குழப்பமகவே இருக்கிறது எனக்கு. ஆனால் மட்டக்களப்பு தமிழ் சொற்கள் பட்டியலில் இந்த மௌவ்வு ழனாவையே தந்திருக்கிறார்கள். )
இந்த இரு வார்த்தைகளுக்கும் சரியான அர்த்தம் சொல்லும் ஒற்றை வார்த்தைச் சொல் அகராதியிலோ இணையத்திலோ எனக்குக் கிடைக்கவில்லை
அழாப்பி - சரி, பிழை , நியாயம், அநியாயம் தெரிந்திருந்தும் தன்
சுயநலத்துக்காக அந்த நியாயத்துக்கு புறம்பாய் நிற்கும் ஒரு குழப்பவாதி.
அழாப்பி என்பது ஒருவரை சுட்டும் பெயர் சொல்லாகவும் , அவரின் செயற்பாட்டைக் குறிக்கும் வினைச்சொல்லாகவும் பயன்படுத்தப்படும். (அப்பாடா நானும் இலக்கணம் தெரிஞ்சு வைச்சிருக்கிறன் , அதுவும் சரியா பிழையா எண்டு பெரியவர்கள் வந்து சொன்ன பின் தான் தெரியும் :) )
அழாப்புதல் -
குழப்புதல், விதண்டாவாதம் என்ற வார்த்தைகள் பொருத்தமாயிருக்கும் என நினைக்கிறேன்.
(உன்னுடைய அநியாயப் போக்கை என்னிடமும் பிரயோகிப்பாய் என்று நான் எதிர்ப்பார்த்திருக்கவில்லை )
2015-11-25 12:47 GMT-05:00 Swathi Swamy <mswat...@gmail.com>:சாமத்தியச் சடங்குஇது சம்மந்தமான சடங்கை சாமத்தியச்சடங்கு என்று சொல்வார்கள். இது பற்றிய விபரங்களை கீழ் வரும் சுட்டியில் தெரிந்து கொள்ளலாம்.27)
இன்றைய தேர்வாக எங்கள் தமிழ் குடும்பங்களில் நடக்கும் ஒரு முக்கிய சடங்கு இடம் பெறுகிறது.
சாமத்தியம் / பெரிசாவது / - பூப்படைதல்.குப்பைத் தண்ணி வார்த்தல் / முதற் தண்ணி வார்த்தல்- பூப்படைந்த 3ம் நாள் சடங்கு.
சாமத்தியச் சடங்கு - பூப்புனித நீராட்டு விழா. பூப்படைந்து ஒரு மாதத்தில் பெரும்பாலும் நடத்தப்படும் சடங்கு.தொடமாட்டாள் - மாதவிலக்கான பெண்.குமர் /குமரி/ செல்வி - பூப்படைந்த பெண், கன்னி, செல்விசிறுமி என்ற பருவத்திலிருந்து குமாரி என்ற இளம் பெண் பருவத்தை மேவும் பெண்னின் பௌதிக மாற்றத்தை சாமத்தியப்படல் / பெரிசாதல் என்பர். பேச்சு வழக்கில் அவள் பெரிசாயிட்டாள் என்றோ அவள் சாமத்தியப்பட்டிட்டாள் என்றோ வரும்.
இன்றும் இந்த சடங்கு நடைமுறியிலிருக்கிறது. ஆனால் ஒரு காலத்தில் உறவுகளோடும் நண்பர்களோடும் சேர்ந்திருந்து தங்கள் வீட்டுப் பெண்ணின் மங்கள நாளாக சம்பிரதாய முறைப்படி நடந்த இந்தச் சடங்கு இப்போதெல்லாம் ஆனால் பழமையின் அடையாளங்களைத் தொலைத்த அல்லது புறக்கணித்த - உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் முன்னால் தங்கள் தங்கள் தனிப்பட்ட பண வசதியையும், அந்தஸ்தையும் காட்டக் கிடைத்த சந்தர்ப்பமாக வெறும் ஆடம்பர கொண்டாட்டமாக மாறிவிட்டது என்பது வேதனைக்குரியது.உதாரணம்:1) பக்கத்து வீட்டு பொன்னையாவின் மகள் மார்க்கிரேட் பெரிசாயிட்டாளாம்.2) சாமத்தியப்பட்ட பெட்டையை பார்க்கப் போகேக்கில வெறும் கையோட போக ஏலாது. ஒரு நல்லெண்ணெய் போத்திலாவது கொண்டு போக வேணும்.3) சந்திராவின் மகளுக்கு நாளைக்கு குப்பை தண்ணி வார்க்கினமாம்; மாசக் கடைசியில நல்ல நாள் பார்த்திருக்கினை சாமத்தியச் சடங்குக்கு.4) அவள் இண்டைக்கு கோவிலுக்கு வர ஏலாது..தொடமாட்டாம இருக்கிறாள்
5) இவள் கமலி குமராகி ஏழு எட்டு வருசமாப் போச்சுது ...இனி கலியாணத்துக்கு மாப்பிள்ளை கீப்பிள்ளை ஏதும் பாக்க வேண்டாமே?6) ஒரு குமர் பிள்ளை இப்பிடியே உடுப்பு போடுறது? ஒழுங்கான சட்டையா போட்டுட்டு வா பார்க்கலாம்.7) குமரி எண்ட நினைப்பில்லாமல் இதென்ன இப்பவும் சின்ன பபாவுக்கு நிக்கிறாள் இவள்?
(ஒலிப்புமுறை) ISO 15919: /īyāppiciṉi/
கஞ்சன்
கருமி
niggard
miser
உதாரணம் :

சுடலை என்ற சொல்லுக்கு மயானம் என்பது
மட்டுமல்ல சவக்காரம் என்றும் பொருளுமுண்டாம். எங்கள் ஊரில் soap என்பதை
சவக்காரம் அல்லது சவுக்காரம் என்போம்.
சவம்/பிரேதம்/பிணம்/மையத்து - உயிரற்ற சடலம்/பிணம்
முஸ்லீம் மக்கள் இயற்கை எய்தியவரின் உடலை மையத்து என்று சொல்வார்கள்
பிரேதபரிசோதனை - Embalming.
பிணவறை/பிரேத அறை/ சவக் காம்பறை. - Mortuary or Morgue
--
--
இருந்தமிழே உன்னால் இருந்தோம்! இமையோர்,
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டோம்!
---
You received this message because you are subscribed to the Google Groups "தமிழாயம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizayam+...@googlegroups.com.
29) இன்றைய தேர்வுச் சொற்கள் பெயர் சொற்களாலானவை. மன்னிக்கவும் இச் சொற்கள் கொஞ்சம் கடுமையானவை மட்டுமல்ல பொது இடங்களில் பேசும் நாகரீகமான வார்த்தை வடிவங்கள் அல்ல .. அதே சமயம் பேசத்தகாத தூஷணையும் அல்ல.
சீரற்ற ஒழுக்கத்தினை கொண்ட மனிதனை குறிக்கும் கொஞ்சம் வீச்சம் கூடிய கடுமையான வார்த்தை வடிவங்கள் அவை.காவாலி - ஒழுக்கங் கெட்ட கொடியவன்.
காவாலி / கடப்புலி/ விடுகாலி//வங்கோலை - நடத்தை தவறான மனிதன் . ஒழுக்கமற்றவன்.
கடப்புலி - கெட்டவன்
விடுகாலி - கட்டுக்கடங்காதவன். கட்டுப்பாடற்றவன்
வங்கோலை - ராஸ்கல் - கெட்டவன்
இந்த வார்த்தைகள் மிக உக்கிரமான வெறுப்பின் அல்லது கோபத்தில் ஒருவரை பார்த்தோ அல்லது ஒருவரைப் பற்றியோ அவரது ஒழுக்கச்சிர் கேட்டை சுட்டிக் காட்டி இடித்துரைக்கும் சொற்களாக அடையாளப்படுத்தப்படுவை.
உதாரணம்
1) இஞ்ச....உந்தக் காவாலி சேட்டையை என்னட்டைக் காட்டாதை ...!
2) இதென்ன காவாலித்தனம் ?
3)கண்ட கண்ட காவாலி கடப்புலியளோடு ரோடு ரோடா திரி..அப்ப தானே அப்பாண்ட பெயரை கெடுக்கலாம் என்ன?
4) நவமணிண்ட ரெண்டு மக்களும் விடுகாலிகளாப் போட்டான்கள்.
5) வங்கோலை ராஸ்கல் உனக்கு அவ்வளவு தைரியமா?
22)
இன்றைய சொல் விளக்குமாறு / ஈர்க்குமாற்று/தும்புத்தடி /கட்டுமாறு .துடைப்பம் என்று தமிழகத்தில் பொதுவாக சொல்லப்படும் .துடைப்பம் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் வாரியல் என்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் விளக்குமாறு என்றும் அழைக்கபடுவது ஈழத்தில் விளக்குமாறு, ஈர்க்க்மாறு, கட்டுமாறு(மட்டக்களப்பு தமிழ்) , தும்புத்தடி அழைக்கப்படும்.வீடு, வளவு கூட்டிப் பெருக்கவென்று உபயோகப்படும் சாதனம். தென்னம் பொச்சுகளிலிருது உருவாக்கிய நாரினாலும், தென்னோலைகளிலிருந்து வார்ந்த ஈர்க்குகளினாலும் தயாரிக்கப்பட்டவை .1700 களில் தான் தடி வைத்த விளக்குமாறுகள் ,தும்புத்தடிகள் பாவனைக்கு வந்திருக்க வேண்டும் . அதன் முன் உட்கார்ந்த நிலையில் கூட்டிப் பெருக்கும் விளக்குமாறு அல்லது ஈர்க்குமாறுகள் மட்டுமே பாவனையில் இருந்திருக்கும்.”Manufacture
In 1797, the quality of brooms changed when Levi Dickenson, a farmer in Hadley, Massachusetts, made a broom for his wife, using the tassels of sorghum, a grain he was growing for the seeds. His wife spread good words around town, therefore caused a need for Dickenson's sorghum brooms. The sorghum brooms held up well, but ultimately, like all brooms, fell apart. This made Dickenson invent a machine that would make better brooms, and faster than he could. In 1810, the foot treadle broom machine was invented. This machine played an integral part in the Industrial Revolution.
.In Swaziland, witches' broomsticks are short bundles of sticks tied together without a handle.
United States
One source mentions that the United States had 303 broom factories by 1839 and that the number peaked at 1,039 in 1919. Most of these were in the Eastern United States; during the Great Depression in the 1930s, the number of factories declined to 320 in 1939. The state of Oklahoma became a major center for broom production because broom corn grew especially well there, with The Oklahoma Broom Corn Company opening a factory in El Reno in 1906. Faced with competition from imported brooms and synthetic bristles, most of the factories closed by the 1960s.”
தும்புத்தடி
ஈர்க்குமாறு, விளக்குமாறு, கட்டுமாறுஆங்கில சிறுவர் கதைகளிலும், திரைப்படங்களிலும் தடி வைத்த தும்புத்தடி சுனியக்காரிகள் பயணிக்கும் வாகனமாக சித்தரிக்கப்படுகிறது.அதே போல் ஈழத்தில் முழிவியலத்துக்கு உதவாத பொருளாக தும்புத்தடி, விளக்குமாறு கருத்தப்பட்டு வருகிறது.உதாரணம்:1)ஒவ்வொரு நாளும் ஈர்க்குமாற்றால் வளவு கூட்டி தண்ணி தெளித்தால் தான் புளூதி கிளம்பாமல் இருக்கும்.2) காலமை எழும்பினதும் தும்புத்தடியால் வீடு பெருக்காவிட்டால் வீடு விடியாது.3) எங்க அந்த விளக்குமாறு..? (ஒரு விசயம் அல்லது ஒருவர் கோபத்தைக் கிளறினால் அவரை தாக்குவதற்காக பாவிக்கப்படும் சொல்லாடல்)
இத்தனை அர்த்தங்கள் ஆணைக்கு இருந்தாலும் எங்களிடம் புழங்கப்படும் ஆணை கடவுள் மீதோ அல்லது ஒருவர் மீதோ குறிப்பிட்டு அல்லது அவரை சாட்சியாக வைத்து செய்து கொடுக்கும் உறுதிமொழி அல்லது வாக்குறுதி அல்லது சத்தியம் செய்யும் போது பொருத்தப்படும் வார்த்தை இது.
உதாரணம் :
- அம்மாவாணை - அம்மா மீது சத்தியம் / அம்மா மேல் ஆணை
வணக்கம் ,
முருகனை ஏன் தமிழ்க் கடவுள் என்று சொல்கிறோம் ?
முருகனுக்கும் தமிழுக்கும் என்ன தொடர்பு ?
நன்றி ,
நிரஞ்சன்
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
சத்தியம்
(இலக்கியப் பயன்பாடு)
இத்தனை அர்த்தங்கள் ஆணைக்கு இருந்தாலும் எங்களிடம் புழங்கப்படும் ஆணை கடவுள் மீதோ அல்லது ஒருவர் மீதோ குறிப்பிட்டு அல்லது அவரை சாட்சியாக வைத்து செய்து கொடுக்கும் உறுதிமொழி அல்லது வாக்குறுதி அல்லது சத்தியம் செய்யும் போது பொருத்தப்படும் வார்த்தை இது.
உதாரணம் :அதே போலவே
உரையாடலில் பயன்படும் போது .................
45) இதே போல் இரண்டு வினைச்சொல் சேர்ந்த வார்த்தைகளும் உண்டல்லவா? அவற்றையும் பார்க்கலாமே
வந்து கொண்டிருந்தேன் - வந்து கொண்டிருந்தன்
வந்து கொண்டிருக்கிறேன் - வந்து கொண்டிருக்கிறன்
வந்து கொண்டிருப்பேன் - வந்து கொண்டிருப்பன்
1) அண்டைக்கு ஆமிக்காரங்கள் வரேக்கில அம்மன் கோவில் வெளிவீதில தான் வந்து கொண்டிருந்தன்.
2) கொஞ்சம் பொறுங்கோ...இந்தா..பக்கத்தில தான் வந்து கொண்டிருக்கிறன்
3) நாளைக்கு இந்நேரம் யாழ் தேவில யாழ்ப்பாணத்துக்கு வந்து கொண்டிருப்பன்.
*******************************************************************
போய் வந்தேன் - போய் வந்தன்
இதே போல் ஆண் பால், பெண்பால், பலர் பால் வகைகளும் மூன்று காலங்களில் பொருந்தி வரும்.
44) இன்றைக்கு கொஞ்சம் எங்கள் வட்டாரத் தமிழின் இலக்கண முறையில் ஒரு சின்ன விசயத்தைப் பார்க்கலாமென்று முயன்றிருக்கிறேன்.
இடம், பால், காலம் காட்டும் விகுதிகள் சொற்களுடன் சேரும்போதும் ஈழத்து பேச்சுத்தமிழ் பல வேறுபாடுகளைக் காட்டுகின்றது.1) வந்தேன் - வந்தனான்/வந்திட்டன்வருகிறேன் - வாறன்./வந்து கொண்டிருக்கிறன்
வருவேன் - வருவன் /வரப் போறன்உதாரண வாக்கியங்கள் :
1)
- நான் நேற்று இரவு வந்தனான்
- நான் அப்பவே வந்திட்டன்
- நான் நாளைக்கு வேலைக்கு வாறன்.
- நான் இப்ப வீட்டை தான் வந்துகொண்டிருக்கிறன்.
- நான் வாற மாசம் தான் வேலைக்கு வருவன்
- அம்மா நான் திரும்பி ஊருக்கு வரப் போறன்.
இதை ஆண் பால் , பெண் பால், பலர்பாலில் பார்த்தால்வந்தான் - வந்தவன்/வந்திட்டான்வருகிறான் - வாறான்/வந்து கொண்டிருக்கிறான்வருவான் - வருவான் /வரப் போறான்
2)
- அவன் நேற்றுத் தான் வேலைக்கு வந்தவன்
- அவன் வெளிநாட்டுக்குப் போய்ட்டு வந்திட்டான்
- சந்திரன் வேலையால வாறான்
- பாலன் யாழ்ப்பாணம் போய்ட்டு திரும்ப வந்து கொண்டிருக்கிறான்.
- எண்டைக்காவது ஒரு நாள் அவன் இஞ்ச வருவான்
- இவன் ராசன் எப்ப தான் இங்க வரப் போறான்?
வந்தாள் - வந்தவள்/வந்திட்டாள்வருகிறாள் - வாறாள்/வந்துகொண்டிருக்கிறாள்வருவாள் -வருவாள்/வரப் போறாள்
3)
- அமுதா எப்பவோ ஒருக்கா இங்க வந்தவள்
- நவமணி எப்பவோ வீட்ட வந்திட்டாள்
- இண்டைக்கு தான் மகிழாவும் இஞ்ச வாறாள்.
- கிட்டத் தான் தமிழினி வந்து கொண்டிருக்கிறாள்
- ஒரு நாளைக்கு சுகந்தியும் கவிஞரா வருவாள்
- சொர்ணம் வரப் போறாள்...எல்லாரும் ஓடிப் போங்கோ
வந்தார்கள் - வந்தவை /வந்தவையள் /வந்திட்டினம்வருவார்கள் - வருகினம் /வந்துகொண்டிருக்கினம்வருகிறார்கள் - வருவினம். /வந்திடுவினம்/வரப் போயினம்
- அவை நாலு பெடியளும் ஒருக்கா இங்க வந்தவை
- அவையள் வந்தவையள்
- அம்மாவும் அப்பாவும் அப்பவே கோவிலுக்குப் போய்ட்டு வந்திட்டினம்
- இப்ப தான் மாமி வீட்டாக்கள் வருகினம்
- அண்ணாவும் அக்காவும் கலியாணத்துக்கு வந்து கொண்டிருக்கினம்,
- நான் நினைக்கிறன் எப்பிடியும் நாளைக்குள்ள பிள்ளையள் வருவினம்./வந்திடுவினம்.
- பாலாவும் பிரேமாவும் நத்தாருக்கு நியூயோர்க் வரப் போயினம்.
இப்படியே மற்ற சொற்களுக்கும் உதாரண வாக்கியங்கள் அமைக்கலாம்.
2)
போனேன் - போய்ட்டன் / போனன்போகிறேன் - போறன்/போய்ட்கொண்டிருக்கிறன்போவேன் - போவன்/போகப் போறன்
போனான் - போனவன் /போய்ட்டான்போகிறான் -போறான் / போய்க்கொண்டிருக்கிறான்போவான் - போவான் / போகப் போறான்போனாள் - போனவள்/போய்ட்டாள்போகிறாள்- போறாள்/போய்க் கொண்டிருக்கிறாள்போவாள்-/போவாள்/போகப் போறாள்போனார்கள்- போய்ட்டினம்/போனவைபோகிறார்கள்-போயினம்/போய்க்கொண்டிருக்கினம்போவார்கள் -போவினம்/போகப் போயினம்
இப்படியே மற்ற சொற்களுக்கும் ஆண் பால், பெண் பால், பலர் பால் பொருத்திப் பாருங்கள்..
3) செய்தேன் - செய்தன் / செய்தனான்/செய்திட்டன்
செய்கிறேன்ன் - செய்யிறன்/செய்து கொண்டிருக்கிறன்
செய்வேன் - செய்வன் /செய்யப் போறன்
4) படித்தேன் - படிச்சன்/படிச்சனான்/படிச்சிட்டன்
படிக்கிறேன் - படிக்கிறன்/படித்துக் கொண்டிருக்கிறன்
படிப்பேன் - படிப்பன்/ படிக்கப் போறன்
5)நடந்தேன் - நடந்தன் /நடந்திட்டன்/நடந்தனான்
நடக்கிறேன் - நடக்கிறன்/நடந்து கொண்டிருக்கிறன்
நடப்பேன் - நடப்பன்/நடக்கப் போறன்

ஆடிப்பிறப்பின் சிறப்பினை கூற
வந்த ஈழத்தின் சிறப்புக்குரிய கவிஞர் நவாலியூர் சோமசுந்தரப் புலவர் அவர்கள் பாடிய பாடல் பிரபலமானது.

நாங்கள் எங்கள் இதை
எப்படி பயன்படுத்துகிறீர்கள்
என சொல்லுங்கோ
எங்களுக்கும் உங்களுக்கும் ரொம்ப குழப்பம்
இதன் பயன்பாட்டில்
புரியவில்லை தம்பி
நாங்கள் - We
எங்கள் - Our
இந்த இரண்டையும் நீங்களும் அப்படித் தானே பயன்படுத்துகிறீர்கள்?
haa haa haa
ஆமாக்கா
அப்புறம் என்ன?
உங்க இலங்கைத் தமிழர்கள் பேச்சுக்கும் எங்க பேச்சுக்கும்
உள்ள வேறுபாடு சொல்றேன் கேளுங்க
சொல்லுங்கோ :)
நீங்க ,நான், மாமா எல்லாரும் ஒரு இடத்துல பேசிக்கிட்டு இருக்கோம்
சரியா?
அப்படினா நீங்க ரெண்டு பேரு மட்டும் போறீங்கனுதான் எனக்குப் புரியும்
உங்க மொழில மூனு பேரும் போவோம் என்று சொல்வீர்கள்
நான் நீங்க.ள் அவர் இருக்கும் போது எல்லாரையும் சேர்த்து தான் நாங்கள் என்கிறோம்.. அதாவது உங்களையும் எங்களோடு சேர்த்தே சொல்கிறோம்
எங்களுக்கு நீங்க ரெண்டு பேரு மட்டும்னு தான் புரியும்
இதையே நாங்க எப்படி சொல்லுவோம் தெரியுமா?
ம்ம் இப்ப புரியுது.. சரி அப்ப நீங்கள் எப்படி அதை சொல்வீர்கள்?
சொல்லுங்கோ
நாம சினிமாவுக்குப் போவோம்
:) நாம என்றால் நாங்கள் தானே?
ஆமாக்கா
ஆனா நீங்க நானு உங்களுக்கு வேண்டியவர் இருக்கும் போது நாங்கள் என்று நீங்க சொல்லும் போது
நீங்கள் ரெண்டு பேர் மட்டும்னு தான் புரியும்
சரி.. இப்ப நான், நீங்கள், பிராணநாதர், ஜோ எல்லாரும் ஒரு இடத்தில் இருக்கிறோம்..
ஹா ஹா ஹா இதனால ரொம்பகுழம்பியிருக்கேன் தேனுசா வீட்டுல
நான் உங்கள் நாலு பேரையும் ஒருமித்து சுட்டுவது என்றால் நீங்கள் என்று சொல்வேன் அல்லவா?
அதை எப்படி சொல்வீர்கள்? நீங்க ந்னு தானே?
நீங்கள்தான்
எங்கள் பற்றி சொல்றேன்
கேளுங்க
நாம நாலு பேருக்கும் சிக்கன் பிடிக்கும்
ஒரு தடவை நான் தமிழ் பிரவாகம் குழுமம் தொடங்கின புதுசுல எங்கள் குழுமம் , எங்கள் குழுமம் என்று எழுதினதை ஒருவர் கண்டித்து எழுதினார்.. அதென்ன இத்தனை பேரையும் சேர்த்து வைச்சுக் கொண்டு குழுமம் உங்களோடது மட்டும்ன்னு சொல்லுறீங்க என்று
ஏன் என்று இன்று வரை புரியவில்லை
அதேதான்
பெரிய வேறுபாடு இருக்குக்கா
என்னடா நம்மள வச்சிக்கிட்டே இப்படி சொல்றாங்களேனு தோணும்
சிக்கன் மேட்டருக்கு வாரேன்
எங்கள் பற்றி சொல்றேன் கேளுங்க நாம நாலு பேருக்கும் சிக்கன் பிடிக்கும்
இங்க ஸ்வாதி சொல்றாங்க
எங்களுக்கு கடைசியா சிக்கன் வச்சிருக்காங்க
அப்படினா நீங்க சொல்றது 4 பேருக்கும் கடைசியா வச்சிருக்காங்க
சரியா?
ஆமாம்
எங்களுக்குப் புரிவது, உங்க ரெண்டு பேருக்கு மட்டும் கடைசியா வச்சிருக்காங்க
இதையே நாங்க எப்படி சொல்லுவொம்னா
நாங்கள் - நாம் வேறுபாடு
எங்கள் - நம் வேறுபாடு
அதான் அதை எப்படி விளக்கமாக எழுதுவது என்று ரொம்ப பிரச்சினையா இருக்கிறது. இது பற்றி கணேசன் ஐயாவுடன் தொடர்பு கொண்டு கலந்து பெசி தான் விளக்கமாக எழுத வேண்டும்.
சரிங்க அக்கா
உங்க பேச்சுல நீங்க நல்லாத்தான் பேசுவீங்க
ஒரு அறையில் படுத்திருக்கோம்
கொசு கடிக்குது
காலைல சொல்றீங்க
ஸ்வாதி : “எங்களுக்கு கொசு கடிச்சது”
பாலாஜி : “ஐய்யே, அப்ப எங்களுக்கு தாலாட்டா பாடுச்சு, எங்களையும்தான் கடிச்சிச்சு”
நீங்க நினைப்பீங்க எங்களுக்கும் தானே கொசு கடிச்சுதுன்னு
ஹஹஹஹஹ்
ஹா ஹா ஹா
நாலு பேரும் வேர்வையில் நனைஞ்சு போயிட்டோம் கரண்ட் இல்லாம
நமக்கு கொசு கடிச்சிருச்சுன்னு சொல்லனும் உங்க வழக்கில
நாங்கள் வேர்வையில் நனைஞ்சிட்டோம்னு எங்கிட்ட சொன்னா
அப்ப நான் மட்டும் குளிர்ல நடுங்கினேனானு தோனும்
நம்மை விட்டு மூன்றாம் பேருடன் பேசும் போது நாங்கள் எங்கள் சரியா இருக்கும்
விளங்குது... ம்ம்ம்ம்
நமக்குள்ளே பேசும் போது நாம் நம் சரியா இருக்கும்
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
நன்றி அக்கா
:) நான் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேணும்
இதை எப்படி எல்லாருக்கும் விளங்கிற வகையில எழுதி முடிக்கிறது என்பது தான் இப்ப பிரச்சினையே எனக்கு..
பேசாமல் உக்களுடன் இப்ப பேசினதையே காப்பி & பேஸ்ட் செய்து போட்டுடலாம் என்று நினைக்கிறேன் :)
பட் டிங்கரிங் பார்த்துப் போடுங்க
ஓஒமோம்..
நம்மை விட்டு மூன்றாம் நபரிடம் பேசும் போது நாங்கள் எங்கள்
நமக்குள்ளே பேசும் போது நாம் நம்
இது எங்கள் வழக்கம்
உங்களுடையது
நாங்கள் எங்கள்
அதான் குழப்பம்...
ஆமாம்.
இன்னொரு நண்பரிடம் கேட்குறேனு சொன்னீங்களே
கேட்டுட்டு விளக்கமா போடுங்க
நம்ம பதிவை பார்த்து மேற்கொண்டு மத்தவங்க குழம்பிடாம :)
அதே தான்










(நன்றி: தமிழ்விக்கிபீடியா)
(நன்றி: தமிழ் விக்கிபீடியா) 

உறவு முறைச் சொற்கள்
எங்கள் பேச்சு வழக்கில் பல உறவு முறை சொற்கள் மற்றைய வட்டாரத் தமிழிலிருந்து வேறுபாட்டவையாக இருக்கின்றன்.
பண்டைய தலைமுறையில் ஆச்சி , அப்பு என்ற வார்த்தைகள் தாய் தந்தையைக் குறிப்பவையாக இருந்தனவாம். எமக்கு முந்தைய சந்ததியினர் ஐயா என்றும் தற்காலத்தில் அப்பா , அம்மா என்றும் அழைக்கும் வழக்கில் இருக்கிறது.
உதாரணங்கள் :
1)ஆச்சி ! அப்பு வந்த உடன கோவிலுக்கு போவமே?
(அம்மா அப்பா வந்ததும் கோவிலுக்கு போவோமா ? )
2)அப்பு! நாங்கள் வெளிக்கிட்டாச்சு..நீங்களும் வாறீங்களா?
(அப்பா! நாங்கள் புறப்பட்டுவிட்டோம். நீங்களும் வருகிறீர்களா?)
3)ஐயா! நாளைக்கு சந்தைக்கு போவீங்களே?
(அப்பா! நாளைக்கு சந்தைக்கு போவீர்களா?)
அப்பு என்று தந்தையை அழைத்த காலத்தில் தந்தையோடு கூடப் பிறந்தவர்களை பெரியப்பு, சித்தப்பு , குஞ்சியப்பு என்று முறை சொல்லியும், பிற்காலத்தில் பெரியய்யா , சின்னைய்யா , குஞ்சியைய்யா என்றும் இப்போது பெரியப்பா , சித்தப்பா என்றும் மாற்றத்திற்குள்ளாகியிருக்கின்றன,
உதாரண வாக்கியங்கள்:
1)பெரியப்பு சரியான பயந்தாங்கொள்ளி.
(பெரியப்பா மிகவும் பயந்த சுபாவமுள்ளவர்)
2)சித்தப்பு நல்ல கெட்டிக்காரர்
3)குஞ்சியப்பு இல்லாமல் குஞ்சியாச்சி ஒரு இடமும் போக மாட்டா.
இப்படியே தாய் தந்தையின் பெற்றோர்களை பெத்தப்பு, பெத்தாச்சி என்றும் அம்மாச்சி , அப்பாச்சி என்றும் சில வீடுகளில் தாத்தா பாட்டி என்றும் தற்காலத்தில் அம்மப்பா , அம்மம்மா ,அப்பப்பா ,அப்பம்மா என்றும் மாற்றத்துக்குள்ளாகியிருக்கின்றன்.
உதாரணங்கள்
1)பெத்தப்புவுக்கும் பெத்தாச்சிக்கும் வெத்திலை பாக்கு வாங்கிக் குடுத்தே சொத்தெல்லாம் அழிஞ்சு போயிடும் போல இருக்கே..
ஒரு காலத்தில் தந்தையைக் குறிக்க பயன்படுத்தப்பட்ட அப்பு என்ற சொல் தற்காலத்தில் தாத்தாவையும் , வயதான முதியவரையும் அழைக்கும் உறவு முறைச் சொல்லாகவும் , வயதானவர்கள் குழந்தைகளையோ அல்லது பிள்ளைகளையோ அழைக்கும் செல்ல வார்த்தையாகவும் மருவி இருக்கிறது,
உதாரணங்கள் :
1)அப்பு ! நான் தானே உங்கட செல்லப் பேத்தி? (தாத்தா உறவு)
2)அப்பு! இந்த கிழண்டின வயசில எங்க கால்நடையாய் கிளம்பிட்டாய்? (முதியவரை குறிக்கும் சொல்)
3)அப்பு! என்ர செல்லமெல்லே... (செல்ல வார்த்தை)
அதே
போல் ஆச்சி என்ற வார்த்தை தற்காலத்தில் பாட்டியையோ அல்லது மூதாட்டியையோ
அழைக்கும் சொல்லாகவும் அன்புமிகுதியில் பெண் குழந்தையையோ அல்லது பெண்ணையோ
அழைக்கும் செல்ல வார்த்தையாகவும் மருவி இருக்கிறது.
அம்மான் - தாய் மாமன்
மாமா - தாய் மாமன் / அத்தை கணவர்.
மாமி - தாய் மாமன் மனைவி, அப்பாவின் தங்கை.
பெற்றோருக்கு அடுத்த படியாக முக்கியத்துவம் கொடுக்கப்படும் உறவாக தாய்மாமன் உறவு எங்கள் மத்தியில் மதிக்கப்படுகிறது.
ஒரு பெண் குழந்தை பிறந்ததிலிருந்து , அவள் ருதுவாகி வரும் வரை ஒவ்வொரு கால கட்டத்திலும் அந்தப் பெண்ணுக்கு நடக்கும் சடங்குகளில் தாய் தந்தையரை விட தாய் மாமனுக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
பிறந்த
குழந்தையை தொட்டிலில் கிடத்துவதிலிருந்து சகல விசேசங்களிலும் தாய்
மாமாவின் பங்கு தான் முக்கியமாக இருக்கிறது. தமிழகத்தில் தாய்மாமனுக்கு
அக்கா மகளாகிய மருமகளை திருமணம் செய்து கொடுக்கும் முறை இருக்கிறது. ஆனால்
எங்கள் ஊரில் அந்த வழக்கு இல்லை. தந்தையை இழந்த பெண்ணுக்கோ பிள்ளைக்கோ தாய்
மாமன் தான் தந்தையின் இடத்தில் இருந்து எல்லாவற்றையும் நடத்தி வைப்பார்.
உதாரண வாக்கியங்கள்.


பாடசாலை என்பதே தமிழில் இல்லாத சொல். நாங்க பள்ளிக்கூடம் என திரைப்படமும் எடுத்தோம்
2016-01-02 5:23 GMT+05:30 Swathi Swamy <mswat...@gmail.com>:2016-01-01 16:19 GMT-05:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:பாடசாலை என்பதே தமிழில் இல்லாத சொல். நாங்க பள்ளிக்கூடம் என திரைப்படமும் எடுத்தோம்<<
பாடசாலை என்னும் சொல் உண்டு. திருவரங்கத்தில் வேதம் பயிலும் இடம் வேத பாட சாலை...பாடசாலை என்னும் பெயர்ப்பலகைகளை பல இடங்களில் தமிழகத்தில் பார்த்துவருகிறேன்ஆயுதம்செய்வோம் காகிதம் செய்வோம் பாடலில் பள்ளிச்சாலைகள் செய்வோம் என்றார் பாரதி.