கருணாநிதியின் சொத்தைக் கணக்கு

576 views
Skip to first unread message

இரவா

unread,
Dec 3, 2010, 8:09:11 PM12/3/10
to தமிழாயம்
கருணாநிதியின் சொத்துக்கணக்கு வெளியீடு! (முழுமையான விபரம் இணைக்கப்பட்டுள்ளது)


(இலங்கைத் தமிழர்களுக்காக அடிக்கடி மத்திய அரசுக்கு கடிதம் எழுதும் கருணாநிதி தனது சொத்துக்கணக்கை தற்போது வெளியிட்டுள்ளார். ஆனால் தனது தனிப்பட்ட குடும்ப விடயங்களுக்காக மட்டும் நேரடியாக தொலைபேசியில் மத்திய அரசைத் தொடர்பு கொண்டு பேசுவார். இப்படியான கருணாநிதி கோபாலபுரம் வீட்டைத் தவிர எந்த சொத்தும் வாங்கவில்லை என்று கூறி உள்ளார். இதற்கும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். ).

 

அவரது முழுமையான அறிக்கையை வாசகர்களுக்காக தருகின்றோம்,

 

’’தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் அம்மையார் ஜெயலலிதா தொடங்கி, அந்தக் கட்சியிலே உள்ள அடிமட்டத் தொண்டர்கள் வரையிலும் - ஏன், தமிழகத்திலே உள்ள வேறுசில கட்சிகளின் நண்பர்கள் ஒரு சிலரும் - என்னைப் பற்றி குறிப்பிடும் போது - நான் ஏதோ "சல்லிக்காசு'' கூட கையிலே இல்லாமல் சென்னைக்கு வந்ததைப் போலவும் - இன்றைக்கு ஆசியாவிலேயே முதலாவது பணக்காரனாக இருப்பதாகவும் - என் பெயரில் ஏராளமான சொத்துக்களையும், எஸ்டேட்டுகளையும் வாங்கிக் குவித்திருப்பதைப் போலவும் பேசி வருகிறார்கள், எழுதி வருகிறார்கள்.

என்னைப் பொறுத்தவரையில் - என்னுடைய சொத்துகள் என்ன என்பதைப் பற்றி குறை கூறுபவர்களுக்கும் - அதை நம்பிக் கொண்டிருப்பவர்களுக்கும் ஒரு விளக்கம் அளிக்க வேண்டியது என்னுடைய கடமை என்று கருதுகிறேன். என்னதான் அவர்கள் என் குடும்பத்தைப் பற்றி குறைவாக எழுதினாலும், நான் சிசு பருவத்திலே இருந்த போதே, திருடர்கள் வீடு புகுந்து திருட வருகின்ற அளவிற்கும் - உயர்நிலைப் பள்ளியில் படிக்கவே திருவாரூரில் கொண்டு போய் சேர்க்கக் கூடிய அளவிற்கும் ஓரளவு வசதியுள்ள குடும்பம் தான் என்னுடையது.

மந்திரிகுமாரி நாடகம் எனக்கு 18 வயதாகும் போது "முரசொலி'' வாரப்பத்திரிகையைத் தொடங்கி விட்டேன். அப்போதே நாடகங்களை எழுதுகின்ற முயற்சியிலும் ஈடுபட்டேன். திராவிடர் கழகப் பிரசாரக் கூட்டங்களிலும் கலந்துகொண்டேன். 1949-ம் ஆண்டு சேலம் மாடர்ன் தியேட்டர்சில் எழுத்தாளராக பணியிலே அமர்ந்தேன். அந்தக் காலத்திலேயே அதற்காக மாத ஊதியமாக 500 ரூபாய் பெற்றேன்.

அதே ஆண்டு செப்டம்பர் 17-ந் தேதியன்று ராபின்சன் பூங்காவில் கொட்டும் மழையிலே தி.மு.கழகம் பேரறிஞர் அண்ணாவால் தொடங்கப்பட்டபோது, அந்தக் கூட்டத்திலே கலந்துகொண்டேன். அந்தக் கூட்டத்திற்கு வந்த போது விருதுநகர் நாடார் லாட்ஜில் தான் தங்கினேன். என்னுடைய "மந்திரி குமாரி'' நாடகம் சேலம் மாடர்ன் தியேட்டர்சாரால் திரைப்படமாக எடுக்கப்பட்ட போது எங்கள் குடும்ப வாழ்க்கை சேலத்தில் தொடங்கியது.

அப்போது சேலம் வந்த கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், என்னைச் சந்தித்து அவருடைய "மணமகள்'' திரைப்படத்திற்கு நான் தான் திரைக்கதை வசனம் எழுத வேண்டு மென்று கேட்டு ஒப்புதல் அளித்தேன். அந்தக் காலத்திலேயே அதற்காக 10 ஆயிரம் ரூபாய் ஊதியமாகப் பெற்றேன்.

கலைவாணர் பந்தயம் அதுபோலவே "இருவர் உள்ளம்'' திரைப்படத்திற்காக உரையாடலை நான் எழுதிய போது, அந்தப் படம் நூறு நாளைத் தாண்டி ஓடிய காரணத்தால், அந்தப் படத்தின் தயாரிப்பாளர், அருமை நண்பர் எல்.வி.பிரசாத் என் இல்லத்திற்கே வந்து முதலில் கொடுத்த பத்தாயிரம் ரூபாயைத் தவிர்த்து, மேலும் பத்தாயிரம் ரூபாயை என்னிடம் அளித்தார்.

நான் அந்தத் தொகையைக் கொண்டு என்னுடைய சொந்த ஊரான திருக்குவளையில் என் பெற்றோர் பெயரால் ஒரு தாய் சேய் நல விடுதியினைக் கட்டி, அதை அன்றைய முதல்-அமைச்சர் பெரியவர் பக்தவத்சலனாரை அழைத்துச் சென்று 12-11-1964-ல் திறந்து வைத்தேன். அண்ணாவால் அடிக்கல் நாட்டப்பட்ட அந்தக் கட்டிடத்தின் திறப்பு விழாவுக்கு நாவலர் தலைமை தாங்கினார்.

அப்போது நான் எதிர்க்கட்சியிலே இருந்தபோதிலும், முதல்-அமைச்சரை அழைத்துச்சென்று அந்த நிகழ்ச்சியினைச் சிறப்பாக நடத்தினேன். அந்தக் கால கட்டத்தில் சென்னைக்கே நான் குடிபெயர்ந்து தியாகராயநகரில் ஒரு வாடகை வீட்டில் குடும்பம் நடத்தினேன். அப்போது ஒரு நாள் கலைவாணர் என்னிடம் ஒரு பந்தயம் கட்டி, அதிலே ரூ.5 ஆயிரம் எனக்கு லாபம் கிடைத்தது. அது கண்டு வியப்பும், மகிழ்ச்சியும் அடைந்த கலைவாணர் அதற்குமேல் தேவையான பணத்தைத் தானே போட்டு எனக்கு ஒரு கார் வாங்கித் தருவதாகச் சொல்லி விட்டுச் சென்றார்.

மறுநாளே ஒரு புதிய கார் என் வீட்டிற்கு வந்தது. அதிலே என்னை உட்கார வைத்து, கலைவாணரே ஸ்டுடியோவிற்கு அழைத்துச் சென்றார். அந்தக் காரின் எண் கூட எனக்கு நினைவிலே உள்ளது - "வாக்சால்'' -4983. இவைகளைத் தொடர்ந்து இன்று வரை 75 படங்களுக்கு மேல் நான் திரைக்கதை வசனம் எழுதி ஊதியம் பெற்றுள்ளேன். 1957-ம் ஆண்டு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் குளித்தலை தொகுதியில் நின்று சட்டப் பேரவை உறுப்பினராக ஆனது முதல் இதுவரை தொடர்ந்து பேரவை உறுப்பினராகவோ, மேலவை உறுப்பினராகவோ இருந்து வருகிறேன்.

முரசொலி நாளிதழும் எத்தனையோ ஏற்ற இறக்கத்துடன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கிழமை இதழ்களாக குங்குமம், முத்தாரம், வண்ணத் திரை போன்றவைகளும், "ரைசிங் சன்'' ஆங்கில இதழும் நான் தொடங்கியவைதான். 1967 முதல் 1969 வரை பொதுப்பணித்துறை அமைச்சராகவும், அதன் பின்னர் ஐந்து முறை முதல்-அமைச்சராகவும் இருந்திருக்கிறேன். இந்தியாவிலே உள்ள அனைத்து மாநில முதல்-அமைச்சர்களையும் எடுத்துக்கொண்டால் எல்லா முதல்-அமைச்சர்களுடைய வீடுகளையும் விட வசதி குறைவான எளிமையான வீட்டிலேதான் நான் வாழ்ந்து வருகிறேன் என்பதை வெளிநாட்டிலிருந்து வந்த முக்கிய பிரமுகர்களே நேரில் கண்டு வியப்பு தெரிவித்துள்ளனர்.

செய்தியாளர்களைச் சந்திக்கக் கூட இடம் இல்லாத அளவிற்கு அவர்களே மிகுந்த சிரமத்திற்கு ஆளாகக்கூடிய வகையிலே உள்ள வீட்டிலேதான் இன்றளவும் வாழ்ந்து வருகிறேன். ஒவ்வொரு முறை முதல்-அமைச்சராக நான் தேர்ந்தெடுக்கப்படும் போதும் பொதுப்பணித்துறை அமைச்சராக பதவியேற்போர் - தம்பி துரைமுருகன் போன்றவர்கள் - அரசு சார்பில் உள்ள வீடுகள் ஒன்றில் நான் தங்க வேண்டுமென்று கேட்டு அழைத்துச் சென்றும் காட்டியிருக்கிறார்கள்.

எனினும் நான் தங்கி வந்த அதே "ஸ்ட்ரீட் வீடு'' என்பார்களே, அதாவது தெருவில் வரிசையாக உள்ள வீடுகளில் உள்ள ஒரு வீட்டிலேதான் வசித்து வருகிறேன். 45 ஆயிரம் ரூபாய்க்கு வீடு இந்த வீடு கூட நான் அமைச்சராக ஆவதற்கு முன்பு 45 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிய வீடுதான். அந்த வீட்டிலே ஒரு சில மாற்றங்கள் உதவியாளர்களின் வசதிக்காக செய்யப்பட்டிருக்கலாம்.

என் பிள்ளைகள் எல்லாம் கூட திருமணம் ஆகும் வரைதான் இந்த வீட்டிலே இருந்தார்கள். அதற்குப் பிறகு இந்த வீட்டிலே இடம் இல்லாமல் அவர்களே சொந்தத்தில் வீடு வாங்கிக் கொண்டு சென்றிருக்கிறார்கள். என்னிடம் செய்திகளைச் சேகரிக்க வரும் பத்திரிகையாளர்கள் இந்த வீட்டிலே என்னைச் சந்திக்கும் போது எவ்வளவு இன்னலுக்கு நெரிசல் காரணமாக ஆளாகிறார்கள் என்பதை அவர்களே நன்கறிவார்கள்.

ஆனால் அந்தப் பத்திரிகையாளர்கள் கூட நான் இத்தனை ஆண்டுக் காலம் இத்தனைப் பொறுப்புகளிலே இருந்தும் கூட, இவ்வளவு எளிமையாக இதே வீட்டில் வாழ்கிறேன் என்பதைப் பற்றி அவர்களே அதை உணர்ந்திருந்த நிலையிலும் அதைப் பற்றி எழுதாமல், அதிலேயும் ஒரு சிலர் - என்னைப் பற்றி அவதூறாக நான் பணக்காரன் என்று எதிர்தரப்பினர் விமர்சனம் செய்வதை எழுதும்போது - அவர்கள் கூட அதை நம்புகிறார்களா என்ற வேதனை என் மனதிலே தோன்றாமல் இருப்பதில்லை.

நான் இத்தனை பொறுப்புகளையும் என்னுடைய 87 வயதிற்குள் பார்த்திருக்கிறேன் என்ற போதிலும் சென்னையில் உள்ள இந்த ஒரு வீட்டைத் தவிர வேறு பெரிய வீடுகளையோ, தோட்டங்களையோ, எஸ்டேட்டுகளையோ விலைக்கு வாங்கியதும் இல்லை. அரசு நிலங்களை ஆக்கிரமித்துக் கொண்டதும் இல்லை. குறைந்த விலைக்கு பெற்றுக்கொண்டதும் இல்லை. ஆனால் என்னை ஆசியாவிலேயே பெரிய கோடீஸ்வரன் என்றெல்லாம் பேசுகிறார்கள், எழுதுகிறார்கள்.

ரூ.10 கோடி கிடைத்தது முரசொலி மாறன் மறைவுக்கு பின்னர் சன் தொலைக்காட்சி நிறுவனத்தை தனியாக நடந்த விரும்பி கேட்டதால் நானும் அதற்கு உடனடியாக ஒப்புகொண்டேன். அப்படி பிரிந்து சென்ற நேரத்தில் 2005-ம் ஆண்டு அக்டோபர் மாதம், "சன்'' தொலைக் காட்சி நிறுவனத்தின் சார்பில் எனக்கு 100 கோடி ரூபாய் கொடுத்தார்கள். அந்தத் தொகைக்கான வருமான வரியாக 22 கோடியே 50 லட்சம் ரூபாய் உரிய காலத்தில் முறைப்படி என்னால் செலுத்தப்பட்டுள்ளது. எஞ்சிய தொகையான 77 கோடியே 50 லட்ச ரூபாயை என்னுடைய மகன்களுக்கும், மகள்களுக்கும் பங்கிட்டுக் கொடுத்தேன்.

அதிலே எனக்கும் ஒரு பங்காக பத்து கோடி ரூபாய் கிடைத்ததில், ஐந்து கோடி ரூபாயை வங்கியிலே இருப்பு செய்து, அந்தத் தொகையைக் கொண்டு "கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை'' ஒன்று தொடங்கப்பட்டு, அதிலே கிடைக்கின்ற வட்டித் தொகையிலே இருந்து ஏழை-எளியோர்க்கு மருத்துவ உதவியாகவும், கல்வி வளர்ச்சி உதவியாகவும் 8.12.2005 முதல் 8.11.2010 வரை 2,145 பேர்களுக்கு 1 கோடியே 72 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் வழங்கியிருக்கிறேன்.

புத்தக கண்காட்சி வங்கியில் இருப்பு செய்யப்பட்ட இந்த ஐந்து கோடி ரூபாயில் -ஆண்டுதோறும் நல்ல புத்தகங்களை, சமுதாயச் சீர்திருத்தக் கருத்துகள் தாங்கிய புத்தகங்களை, எதிர்கால இளைஞர்களுக்கு ஆக்கபூர்வமாக வழிகாட்டுகின்ற அறிவார்ந்த புத்தகங்களை எழுதும் சிறந்த எழுத்தாளர்கள் ஐந்து பேரைத் தேர்வு செய்து, அவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் - பொற்கிழியாக வழங்கிட தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்திற்கு ஒரு கோடி ரூபாய் வழங்கினேன்.

அந்த ஒரு கோடி ரூபாய் நிதியைக் கொண்டு, அந்தச் சங்கம் "கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி அறக்கட்டளை'' என்ற பெயரில் ஓர் அறக்கட்டளையை ஏற்படுத்தி, அதன் மூலம் கிடைக்கும் வட்டித் தொகையில் இருந்து, 2008-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் அந்தச் சங்கத்தின் மூலமே சிறந்த எழுத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டு 2008, 2009, 2010 ஆகிய மூன்றாண்டுகளில் மொத்தம் இது வரை 17 அறிஞர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் பொற்கிழிகள் வழங்கப்பட்டுள்ளன.

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத் தொடக்க விழா 30.6.2008 அன்று நடை பெற்ற போது ஆண்டுதோறும் செம்மொழித் தமிழ் ஆராய்ச்சியில் சிறந்து விளங்கும் அறிஞருக்கு 10 லட்ச ரூபாய் பொற்கிழி விருது வழங்கிட ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என நான் அறிவித்து, அதன்படி செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் "கலைஞர் கருணாநிதி செம்மொழி அறக்கட்டளை'' தொடங்கிட 21.7.2008 அன்று ஒரு கோடி ரூபாய் வழங்கினேன்.

கோவையில் செம்மொழி மாநாடு நடைபெற்றபோது, பின்லாந்து நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் அஸ்கோ பர்போலா அவர்களுக்கு இந்த அறக்கட்டளையின் முதல் விருதாக பத்து லட்ச ரூபாய் வழங்கப்பட்டது. 2004-2005-ம் ஆண்டில் "மண்ணின் மைந்தன்'' படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதியதன் மூலம் கிடைத்த ஊதியம் 11 லட்சம் ரூபாய் - "கண்ணம்மா'' படத்திற்குத் திரைக்கதை வசனம் எழுதியதன் மூலம் கிடைத்த ஊதியம் 10 லட்சம் ரூபாய் இரண்டையும் சேர்த்து 21 லட்சம் ரூபாயை "சுனாமி நிவாரண நிதி''யாக அன்றைய முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம், மு.க.ஸ்டாலின் வாயிலாக நேரில் வழங்கப்பட்டது.

உளியின் ஓசை படம் 2008-ம் ஆண்டு, "உளியின் ஓசை'' திரைப்படத்தின் மூலம் கிடைத்த ஊதியம் 25 லட்சம் ரூபாயில் வருமானவரி போக, 18 லட்சம் ரூபாய் திரைத்துறையிலே பணியாற்றிய நலிந்த கலைஞர்களுக்கு 9.7.2008 அன்று தயாரிப்பாளர் சங்கத் தலைவர், ராம.நாராயணன் முன்னின்று ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் என்னால் நேரடியாக வழங்கப்பட்டது.

2009-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட "பெண் சிங்கம்'' திரைப்படத்திற்காகக் கிடைத்த 50 லட்சம் ரூபாயுடன், சொந்த நிதி 11 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் சேர்த்து - 14-9-2009 அன்று தமிழக அரசின் முதல்-அமைச்சர் நிவாரண நிதியிலே சேர்த்து, தமிழகத்திலே உள்ள அருந்ததிய சமுதாயத்தைச் சேர்ந்த மருத்துவக் கல்வி பயிலும் 56 மாணவர்கள், பொறியியல் கல்லூரிகளில் பயிலும் 1,165 மாணவர்கள் என மொத்தம் 1,221 மாணவ -மாணவியருக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் மொத்தம் 61 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் கல்வி வளர்ச்சி நிதியாக 26.10.2009 அன்று துÖய்மைப் பணிபுரிவோர் நலவாரியத்தின் மூலமாக வழங்கப்பட்டது. மேலும், தற்போது தயாரிக்கப்பட்டுவரும் "இளைஞன்'' திரைப்படத்திற்குரிய கதை வசனம் எழுதியமைக்கு 24.4.2010 அன்று வருமானவரி போக அளிக்கப்பட்ட 45 லட்சம் ரூபாய் ஊதியத்தைத் தமிழக அரசின் முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியிலே ஒப்படைத்து, அந்தத் தொகையினை - தமிழகத்திலே உள்ள மாற்றுத் திறனாளிகள் நல வாரியத்தின் வாயிலாக மாற்றுத் திறனாளிகளின் நலன்களுக்காகச் செலவிட வழங்கப்பட்டது.

ஒரு லட்சம் ரூபாய் பொற்கிழி 23.7.2009 அன்று நடைபெற்ற கலைஞர் காப்பீட்டுத் திட்டத் தொடக்க விழாவில் உரையாற்றிய பொழுது சென்னை கோபாலபுரத்தில் நான் வசித்து வருகின்ற வீட்டை, பிற்காலத்தில் ஏழை-எளியோர்களுக்குப் பயன்படக்கூடிய வகையில் மருத்துவமனையாக மாற்றிட நன்கொடையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு அதன்படி உரிய பத்திரப்பதிவுகள் செய்யப்பட்டுள்ளன.

14.4.2010 அன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக சென்னை மறைமலைநகரில் நடைபெற்ற அம்பேத்கார் பிறந்தநாள் விழாவில் "அம்பேத்கார் சுடர்'' எனும் விருது எனக்கு வழங்கப்பட்ட நிகழ்ச்சியில் தரப்பட்ட 50 ஆயிரம் ரூபாய் பொற்கிழியினை 15.4.2010 அன்று முதல்-அமைச்சர் பொதுநிவாரண நிதியில் சேர்க்க என்னால் வழங்கப்பட்டது. 25.5.1990 அன்று தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் சார்பாக - "தென்பாண்டிச் சிங்கம்'' என்ற பெயரில் நான் எழுதிய நாவல் சிறந்த புதினமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதற்காக "ராஜராஜன் விருது''ம், அந்த விருதுக்குரிய ஒரு லட்ச ரூபாய் பொற்கிழியும் எனக்கு அன்றைய குடியரசுத் துணைத் தலை வராக இருந்த சங்கர் தயாள் சர்மா ஆளுநராக அப்போதும் இருந்த பர்னாலா முன்னிலையில் வழங்கப்பட்ட போது, அந்த நிதியை அந்தப்பல்கலைக் கழகத்திடமே திரும்பக் கொடுத்து, அந்தத் தொகைக்குரிய வட்டியினைக் கொண்டு ஆண்டு தோறும் என் பெற்றோர் பெயரால் அறக்கட்டளை சொற்பொழிவுகளை நடத்துமாறு கேட்டுக்கொண்டேன்.

இந்த ஆண்டு இரண்டு நாட்களுக்கு முன்பு தான் அந்தச் சொற்பொழிவுகள் நடைபெற்றன. பிறந்தநாள் விழா என்னுடைய பிறந்த நாளன்று மாலைக்குப் பதிலாகவும், பொன்னாடைக்குப் பதிலாகவும் கழகத் தோழர்கள் அளித்த நிதியையும் கூட முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியிலே தான் சேர்த்திருக்கிறேன். 3.6.1986 அன்று என்னுடைய பிறந்த நாள் விழாவின்போது உண்டியலில் குவிந்த 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயை இலங்கை விடுதலைப் போராளிகள் இயக்கங்களுக்கு பகிர்ந்தளிப்பது என்று கழகப் பொதுக் குழுவிலேயே முடிவெடுத்து அவ்வாறே வழங்கப்பட்டது.

அதைப் போலவே என்னுடைய வேறு சில பிறந்த நாள்களில் உண்டியலில் குவிந்த நிதிகளிலிருந்து மறைமலை நகரில் (காட்டாங்குளத்தூர்) உள்ள சிவானந்த குருகுலத்தில் பயிலும் சிறுவர்களின் கல்வி செலவுகளுக்காக 13.6.1988-ல் 50 ஆயிரம் ரூபாயும், 7.6.1993-ல் 70 ஆயிரம் ரூபாயும், 6.6.1996-ல் ஐந்து லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டன. மேலும் 1994-ம் ஆண்டு பிறந்த நாளில் அளிக்கப்பட்ட நிதி பெங்களூரில் உள்ள தமிழ்ச் சங்கத்திற்கு என்னால் வழங்கப்பட்டது. நான் கலந்து கொள்ளும் பல்வேறு நிகழ்ச்சிகளில் எனக்கு பல்வேறு பரிசுப் பொருள்கள் வழங்குவதுண்டு.

அவற்றைக்கூட அரசு விழாக்களில் அவைகள் வழங்கப்பட்டால், அவற்றை தலைமைச் செயலகத்திலும், கட்சி நிகழ்ச்சிகளிலே வழங்கப்பட்டவை என்றால் அவற்றை கழகத் தலைமைக் கழகம், அண்ணா அறிவாலயத்திலே உள்ள கருவூலத்திலும் ஒப்படைத்திருக்கின்றேன். லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள, தங்க நாணயங்கள் கோர்க்கப்பட்ட மாலைகள், வெள்ளியிலான பல்வேறு பொருள்கள் எல்லாம் இப்போதும் அண்ணா அறிவாலயத்தில் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருப்பதை யார் வேண்டுமானாலும் சென்று காணலாம்.

எந்த சொத்தும் வாங்கவில்லை இறுதியாக தற்போது என் கணக்கிலே எவ்வளவு இருப்பு உள்ளது என்பதையும் நான் தெரிவிக்க விரும்புகிறேன். `சன்' தொலைக்காட்சி வாயிலாக எனக்குக் கிடைத்த பத்து கோடி ரூபாயில் "கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை''க்காக ஐந்து கோடி ரூபாய் கொடுத்ததைப் பற்றி நான் முதலில் குறிப்பிட்டிருப்பதைப்போல கொடுத்ததை அன்னியில் - எஞ்சிய 5 கோடி ரூபாயை வைப்பு நிதியாக வங்கியிலே செலுத்தி, அதற்காக கிடைத்த வட்டித்தொகையெல்லாம் சேர்ந்து -தற்போது வைப்பு நிதியாக 5 கோடியே 65 லட்சத்து 92 ஆயிரத்து 134 ரூபாயும் - சேமிப்புக்கணக்கில் (எஸ்.பி. அக்கவுண்ட்) 35 லட்சத்து 90 ஆயிரத்து 86 ரூபாயும் இன்றைய தேதியில் உள்ளது.

நான் வசிக்கின்ற இந்த வீட்டைக் கூட மருத்துவமனை அமைப்பதற்காக எழுதிக் கொடுக்க நான் அறிவித்த போது - நான் வாழ்ந்த இல்லம் என்பதற்காக இதை வைத்துக் கொள்ள வேண்டுமென்று வீட்டார் எண்ணிய போதும், நான் அழைத்து அவர்களை கையெழுத்திட்டுத் தருமாறு கேட்டபோது மறுவார்த்தை பேசாமல் கையெழுத்திட்டுக் கொடுத்துவிட்டார்கள். இந்த ஒரு வீட்டைத் தவிர என் பெயரில் நான் எந்தச் சொத்தையும் வாங்கிடவில்லை, சேர்த்திடவில்லை.

அதிக ஊதியம் பெற்றவன் தமிழ்த் திரைப்பட உலகத்திலே திரைக்கதை வசனம் எழுதுவதற்காக முதன் முதலில் அதிக ஊதியம் பெற்றவன்; தி.மு. கழகத்திலே சென்னையில் முதன் முதலில் சொந்தமாக ஒரு வீடும், காரும் - நான் எந்தப் பதவி பொறுப்புக்கும் வராத போதே வாங்கியவன் என்ற பெயர் எனக்கு உண்டு என்பதை அனைவரும் அறிவர். இதுதான் என்னுடைய சொத்துக் கணக்கு. இதை வைத்துத்தான் நான் ஆசியாவிலேயே முதல் கோடீஸ்வரன் என்கிறார்கள்.

லஞ்சம், ஊழல் ஆகியவைகளைப் பொறுத்து என் உதவியாளர்கள் கூறுவது போல நான் ஒரு "நெருப்பு'' மாதிரி! நான் முதன் முறையாக முதல்-அமைச்சராக இருந்தபோதே தஞ்சையில் கூட்டுறவு நிறுவனம் ஒன்றில் எனக்கு மிகவும் வேண்டிய உயிர் நண்பர் வழக்கறிஞர் தவறு செய்த போது, அவர் மீது நடவடிக்கை எடுத்து, அதன் காரணமாக அவர் தனது வழக்கறிஞர் பணியினையே செய்ய முடியாத அளவிற்கு ஆயிற்று! அது போலவே தான் சென்னை மாநகராட்சியில் திராவிட முன்னேற்றக் கழகம் பொறுப்பிலே இருந்தபோது, "மஸ்டர் ரோல்'' ஊழல் நடைபெற்றதாக பேரவையிலே குற்றச்சாட்டுகள் கூறப்பட்டபோது, சட்டப்பேரவையிலேயே எழுந்து அந்த மாநகராட்சி மன்றம் கலைக்கப்படும் என்றும், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்து அவ்வாறே செயல்முறை படுத்தியவன்தான் நான்.

இன்னும் சொல்லவேண்டுமேயானால் எனக்கு மிகவும் வேண்டிய நண்பர்களில் ஒருவர் கவிஞர் கருணானந்தம். அவருடைய ஒரே மகன் குலோத்துங்கனுக்கு மருத்துவக் கல்லூரியில் சேர ஒரு மதிப்பெண் குறைந்தது. முதல்-அமைச்சர் மனது வைத்தால் சேர்த்துக்கொள்ளலாம் என்று கேட்டபோது கூட நான் அதற்கு இணங்கவில்லை. அதனால் அந்தக் குடும்பத்துக்கு என் மீது எழுந்த கோபம் இன்னும் தீரவில்லை.

இதுபோன்ற சம்பவங்களை நான் எழுதிக் கொண்டே போகலாம். நான் இதையெல்லாம் எழுதுவதற்குக் காரணம் யாரிடமும் சான்றிதழ் பெறவேண்டும் என்பதற்காக அல்ல, என்னுடைய குணம், இயல்பு அப்படி என்பதை என் மீது குறை காண்போர் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். என் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், உற்றார் உறவினர்கள் அவரவர்கள் உழைத்து, ஒரு சிலர் தங்களுக்கென வீடுகளையோ, சொத்துக்களையோ வாங்கியிருக்கலாம்.

ஆனால் அதற்காக நான் எந்த விதமான நிதி உதவியோ, அரசு சார்பிலான உதவியோ செய்தது இல்லை என்பதையும் இந்த நேரத்தில் நான் உறுதிப் படுத்திட விரும்புகிறேன். நான் பல முறை சொல்லியிருப்பது போல மிக மிகச் சாதாரணமான, சாமான்யமான குடும்பத்திலே பிறந்த என்னை, இந்த அளவிற்கு தமிழ்நாட்டு மக்களுக்காக உழைப்பேன் என்ற நம்பிக்கையோடு ஐந்து முறை முதல்-அமைச்சராக்கி, 1957 முதல் 11 முறை சட்டமன்ற உறுப்பினராக்கி, 1969 முதல் நாற்பதாண்டு காலத்திற்கு மேலாக ஒரு கட்சியின் தலைவராக்கி இருக்கிறார்கள் என்றால், திராவிடத் தமிழ் மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி செலுத்துகின்ற நேரத்தில் என் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம் என்பதை அவர்களுக்கெல்லாம் தெளிவாக்கிடவும், என் மீது இன்னமும் குறை காண்கின்ற ஒரு சிலரும் என்னைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் இந்தக் கடிதத்தை எழுதியுள்ளேன்.

என் எஞ்சியுள்ள காலத்தையும் திராவிடத் தமிழ் மக்களின் நல்வாழ்வுக்காகவே செலவிடுவேன் என்று உறுதி கூறி - என்றைக்கும் ஏழையெளிய மக்களின் கவலை தீர்ப்பதையும், கண்ணீர் துடைப்பதையும் கடமையாகக் கொள்வேன் என்பதற்காகவே இந்தக் கணக்கைக் காட்டியிருக்கிறேன், கண்ணுடையோர் காண்பதற்காக! முகத்தில் இரண்டு புண்ணுடையோர்க்கல்ல!’’என்று தெரிவித்துள்ளார்.


 இருக்கும் வரை தமிழ் அணையில்
                  அன்புடன்                               
                      இரவா

வலைப்பூ:http://thamizmandram.blogspot.com/
இணையம்:  www.thamizhkkuil.net
ஆயம்: thami...@googlegroups.com

விஜி

unread,
Dec 4, 2010, 10:15:08 AM12/4/10
to thami...@googlegroups.com


2010/12/3 இரவா <vasude...@gmail.com>

.

என் எஞ்சியுள்ள காலத்தையும் திராவிடத் தமிழ் மக்களின் நல்வாழ்வுக்காகவே செலவிடுவேன் என்று உறுதி கூறி - என்றைக்கும் ஏழையெளிய மக்களின் கவலை தீர்ப்பதையும், கண்ணீர் துடைப்பதையும் கடமையாகக் கொள்வேன் என்பதற்காகவே இந்தக் கணக்கைக் காட்டியிருக்கிறேன், கண்ணுடையோர் காண்பதற்காக! முகத்தில் இரண்டு புண்ணுடையோர்க்கல்ல!’’என்று தெரிவித்துள்ளார்.

<<



வாயுள்ள பிள்ளை பிழைச்ச்ச்சுக்குது:))) 


 இருக்கும் வரை தமிழ் அணையில்
                  அன்புடன்                               
                      இரவா

வலைப்பூ:http://thamizmandram.blogspot.com/
இணையம்:  www.thamizhkkuil.net
ஆயம்: thami...@googlegroups.com

--
இருந்தமிழே உன்னால் இருந்தோம்! இமையோர்,
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டோம்!



--
நட்போடு விஜிசுதன்

"நாமார்க்கும் குடியல்லோம்"
 நமனை அஞ்சோம்"
http://www.karumpu.com
http://groups.google.com/group/muththamiz
கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை
கணபதி என்றிடக் காலனும் கைதொழும்
கணபதி என்றிடக் கருமம் ஆதலால்
கணபதி என்றிடக் கவலை தீருமே ...

Almighty

unread,
Dec 4, 2010, 3:06:08 AM12/4/10
to thami...@googlegroups.com, dheemth...@hotmail.com
ஐயா கலைஞர் அவர்களே…
இதோ உங்கள் சொத்து..பட்டியல்..எங்களுக்கு தெரிந்த வரை தனக்கு தானே எழுதிக் கொண்ட நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் பக்கம் 80 ல் கூறியிருப்பதை பார்க்கலாம்.
*1944 ம் ஆண்டு எனக்கும், பத்மாவதிக்கும் திருமணம் நடைபெற்றது. ஓராண்டு காலம் வரையில் வாழ்க்கையின் சுவைபடலம் பேரானந்தமாகத்தான் போய்க் கொண்டிருந்தது. எனக்கு நிரந்தர வேலை எதுவும் இல்லை. இதனால், மனஅமைதி குறைய தலைப்பட்டது. இப்படியே வேலை இல்லாமல் திரிந்து கொண்டிருந்தால், வாழும் காலம் எப்படி போய் முடிவது? என்ற கேள்விகள் எல்லா பக்கங்களிலிருந்தும் கிளம்பின. ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் வேலை தேடி அலைந்தேன். வாழ்வதற்கு என்ன வழி என்று தீவிரமாக யோசிக்க தொடங்கினேன். அதன் விளைவு நாடக நடிகனாக ஆனேன்.
இவ்வாறு தனது புத்தகத்தில் எழுதியிருக்கிறார் கருணாநிதி.

கருணாநிதியின
பக்கம் 81,82 ல்…………..
*விழுப்புரத்தில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தோம். அங்கு அறைகுறையாக உணவு கிடைக்கும். குளிப்பது என்பது அங்கு மிகவும் பெரிய பிரச்சனை. நாங்கள் குடியிருந்த இடத்திலிருந்து குளிக்க வேண்டுமென்றால், 1 கிமீட்டர் தூரமாவது செல்ல வேண்டும். வயலுக்கு தண்ணீர் பாய்ச்சப்படும் இடங்களில் தான் எங்களது குளியல். அந்த குழாய் தான் எங்களுக்கு குற்றால அருவி. குடிநீர் எல்லாம். குளித்து விட்டு வீட்டுக்கு கிளம்புவோம். கடுமையான வெயில் கொளுத்தும். சிறிய துண்டை இடையில் கட்டிக் கொண்டு, துவைத்த சட்டையை தோளில் உலரப் போட்டுக் கொண்டு சவுக்கார சோப்பினால் வெண்மையாக மாற்றப்பட்ட வேட்டியை, இரு கைகளாலும் தலைக்கு மேலே குடை போல பிடித்துக் கொண்டு அதனை உலர வைத்தவாறு வீட்டிற்கு வந்து உலர்ந்த பின் அவற்றை அணிந்து கொண்டு பிற்பகல் உணவிற்கு தவமிருப்போம்.
இதற்கடுத்து, 92,93 ம் பக்கங்களில்…………….
* பெரியாரின் ஈரோட்டு குடியரசு பத்திரிகை அலுவலகத்தில் துணை ஆசிரியராக பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. மாதம் சம்பளம் 40 ரூபாய். அதிலும் பிற்பகலும், இரவும் பெரியார் வீட்டில் சாப்பிடுவதற்காக இருபது ரூபாய் பிடித்துக் கொள்வார்கள். காலை, மாலை சிற்றுண்டிக்காக மாதம் 10 ரூபாய் போய் விடும். எனது இதர செலவுகள் ஐந்து ரூபாய். மீதம் 5 ரூபாயை தான் என்னை நம்பி அண்டி வந்த அருமை மனைவி பதமாவதிக்கு மாதந்தோறும் திருவாரூக்கு மணியார்டர் செய்வேன்.
பக்கம் 92,93 ல்…………………………
* பெரிய அளவில் வைத்திய உதவிகளை எனது தந்தையாருக்கு செய்ய வசதியான நிலையில் குடும்பம் இல்லை. என் தந்தை இறந்து விட்டார்.
இப்படி கருணாநிதி எழுதிவைத்துள்ளார்.
இன்றைக்கு கருணாநிதி குடும்பத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
1.கருணாநிதியின் கோபாலபுரம் வீடு
2. முரசொலி மாறனின் வீடு-கோபாலபுரம்
3. கிருஷ்ணன் கோவில் அருகில்-உறவினர்களின் வீடு
4. முரசொலி செல்வம், செல்வி வீடு- கோபாலபுரம் ( கருணாநிதியால் கொடுக்கப்பட்டது)
5. மு.க.முத்து வீடு-கோபாலபுரம்
6. ஸ்வர்ணம் வீடு- கோபாலபுரம்
7. அமிர்தம் வீடு- கோபாலபுரம்
8. எழிலரசி வீடு ( முரசொலி செல்வத்தின் மகள்) -கோபாலபுரம்
9.ஆலிவர் சாலையில் ராஜாத்தி அம்மாள் வீடு
10. மு.க.ஸ்டாலின் வீடு- வேளச்சேரி
11. உதயாநிதி பொழுது போக்கு வீடு- ஸ்னோபவுலிங்- நுங்கம்பாக்கம்
12. உதயநிதி தீம்பார்க்- (மாமல்லபுரம் அருகில்)
13. பில்லியர்ட்ஸ் மையம் ( வேளச்சேரி)
14. கலாநிதி மாறன் வீடு (அடையாறு போட்கிளப் ரோடு)
15. தயாநிதி மாறன் வீடு
16. டிஸ்கோ- குவாலிட்டி இன் அருணா, அமைந்தகரை
17. கொட்டி வாக்கத்தில் மாறனின் பண்ணை வீடு
18. டிஸ்கோ- எத்திராஜ் காலேஜ் எதிரில்
19. டெலிபோன் எக்சேஞ்ச் கட்டிடம் -நீலாங்கரை
20. எம்.எஸ் இன்டஸ்ட்ரீஸ்- ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி போரூர் அருகில்
21. முரசொலி கட்டிடம்- அண்ணாசாலை
22. சுமங்கலி கேபிள் கட்டிடம்- கோடம்பாக்கம் மேம்பாலம்
23. ராஜா அண்ணாமலை புரம் எம். ஆர்.சி நகரில் சன் தொலைக்காட்சிக்காக 32 கிரவுண்ட் நிலம்
25. சன்டிவியின் புதிய அப்-லிங்க் ஸ்டேசன்( கோடம்பாக்கம்)- மாதவன் நாயர் காலணி
26. இந்தியா சிமெண்ட்ஸ் பங்கு, சிமிண்ட் விலையை உயர்த்துவதற்காக
27. கோரமண்டல் சிமிண்ட் ஏற்படுத்தப்பட்டது
28. கூன் ஹுண்டாய்- அம்பத்தூர்- அண்ணாநகர்-அண்ணாசாலை
29. அந்தமான் தீவின் நிலங்கள்
30.அஸ்ஸாம் மாநிலத்தில் டீ, காபி தோட்டங்கள்
31. அம்பானியின் உரத்தொழிற்சாலையில் பங்கு
32. மேற்குவங்காளத்தில் தோல் தொழிற்சாலை
33. ஸ்டெர்லிங் சிவசங்கரனுடன் கூட்டு தொழில்
34. ஆந்திரா பார்டர் சிமெண்ட் ஏற்படுத்தப்பட்டது
35. பெண்டோபர் நிறுவனத்துடன் கூட்டு
36. கேரளாவில் மாமன், மாப்பிள்ளை நிறுவனத்துடன் காப்பி, மற்றும் ரப்பர் தோட்டங்கள்
37. செல்வம் வீடு
38. முக.ஸ்டாலின் சொத்துக்கள்
39. கருணாநிதி சொத்துக்கள்- திருவாரூர், காட்டூர், திருகுவளை.
40.முக.அழகிரி- மதுரை, திண்டுக்கல், கொடைக்கானல், மேலூர் சொத்துக்கள், மதுரை நகரின் வீடியே பார்லர்கள், கடைகள், ஸ்கேன் சென்டர்கள் உள்ளிட்ட பண்ணை வீடுகள்
41. செல்வம் வீடு-பெங்களுர்
42. உதயா டிவி இணைப்பு- பெங்களூர்
43. பூங்சி டிரஸ்ஸஸ்- பீட்டர்ஸ் சாலை
44.முக.தமிழரசன்- ரெயின்போ பிரிண்டர்ஸ், இந்திரா கார்டன்- சென்னை பீட்டர்ஸ் சாலை.
45. முக.தமிழரசன்- அந்தியூரில் உள்ள சொத்துக்கள்
46. தலைப்பாக்கடடு பிரியாணி சென்டர்- தி.நகர், ஜி.என்.செட்டி சாலை, சென்னை.
47. கோவையில் உள்ள டிபார்ட்மெண்டல் ஸ்டோர்
48. மல்லிகா மாறனின் உறவினர்களின் பெயரில் கும்பகோணம், மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் சென்னையில் சொத்துக்கள்.
இங்கு அழகிரி, கனிமொழியின் சொத்துக்கள் சேர்க்கப்படவில்லை.
திருவாரூரில் இருந்து கட்டிய வேட்டியும், தோளில் போட்ட துண்டுடன் , சென்னை நகருக்கு கள்ள ரயில் ஏறிவந்த கருணாநிதி குடும்பம் இன்று இந்திய பணக்காரர்கள் பட்டியலில்.


2010/12/4 இரவா <vasude...@gmail.com>

--

Almighty

unread,
Dec 4, 2010, 3:09:02 AM12/4/10
to thami...@googlegroups.com
இன்றைய மதுரையின் நாடாளுமன்ற வேட்பாளாராக திமுக சார்பில் கருணாநிதியின் செல்லப்பிள்ளை மு.க. அழகிரி நிறுத்தப்பட்டுள்ளார். மதுரை முரசொலி அலுவலகத்தை கவனித்துக் கொள்ள நீ தான் சரியான ஆள் என்று சொல்லி அழகிரியை, கருணாநிதி ரயிலேற்றி மதுரைக்கு அனுப்பி வைக்கிறார். இந்த சம்பவம் நடந்த ஆண்டு 1980. அழகிரியின் கையில் அப்போது இருந்த தொகை ரூ.81 ஆயிரம். அழகிரி வந்த உடனே ஆட்டம கண்ட மதுரையின் முரசொலி பதிப்பு சில மாதங்களிலேயே மூடுவிழா கண்டது. இனி சென்னைக்கு போவதும் கடினம். அங்கு ஏற்கனவே ஏராளமான வாரிசுகள் கலைஞரை சுற்றி கும்மியடிக்கும் போது, தானும் கூட்டத்தோடு கோயிந்தா போடுவது ஆகாது என்று நினைத்த அழகிரி, மதுரையிலேயே காலூன்ற முடிவு செய்கிறார்.
இதற்கடுத்து தனது சொத்து சேர்க்கும் படலத்தைதொடங்குகிறார். கருணாநிதி எப்போதெல்லாம் முதலைமச்சர் பதவியில் இருந்தாரோ…அப்பொழுதெல்லாம் மு.க.அழகிரி தென்மாவட்டங்களின் நிழல் முதலமைச்சராக இருந்து மாவட்ட ஆட்சித்தலைவர்கள், காவல் துறையினர், அதிகாரிகள் ஆகியோரை ஆட்டிப்படைத்து சொத்துக்களை மெல்ல குவிக்கிறார். சென்னையிலிருந்து தன்னந்தனியாக ரயிலேறிய அழகிரி, ஒரு கட்டத்தில் தமிழக தென்மாவட்டங்களின் அதிபதியாக தன்னை நிலை நிறுத்திக் கொள்கிறார்.
1980 ல், மதுரை திருநகர் 5 வது ஸ்டாப்பில் உள்ள குமாரசாமி என்ற வக்கீ்ல் வீட்டில், பக்தஜனசபையை சேர்ந்த தியாகராசன் என்பவர் அழகிரியை குடிஅமர்த்துகிறார். அழகிரிக்கு டி.எஸ்.பி சண்முகநாதன் என்ற போலீஸ் அதிகாரி துணையாக பாதுகாப்புக்கு இருக்கிறார். ஒரு ஆண்டு கழித்து சதுரிய நாராயணன் பிலிம்ஸ் வீட்டிற்கு பின்புறம் அழகிரி குடியேறுகிறார். பின்னர் 1987 ல் மதுரை டி.வி.எஸ் நகரின் அருகில் உள்ள அழகப்பன் நகரில் வந்து குடியேறுகிறார். இந்த பகுதி தான் தனது குடும்பத்துடன் வாசம் செய்ய ஏற்ற பகுதி என்று முடிவெடுக்கிறார். உடனே, சென்னையில் தனது பெயரில் தனது தந்தையார் கருணாநிதி வாங்கிப் போட்டிருந்த வீட்டை, நடிகர் சரண்ராஜிடம் 9 லட்ச ரூபாய்க்கு விற்று விட்டு மதுரை சத்யசாய் நகரில் 4 ஏ என்ற கதவு எண் உள்ள வீட்டை வாங்குகிறார். இந்த வீட்டை கருப்பசாமி என்பவர் மூலமாக மதுரை அரசரடியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்கிறார்கள். இப்போது அழகிரி குடியிருக்கும் அந்த வீட்டின் அப்போதை விலை 4.5 லட்சம் ரூபாய். அந்த வீட்டின் தரைதளம் குண்டும், குழியுமாக இருக்கிறது. இதனை விலைக்கு வாங்கிய பின்னர் சுமார் 5 கோடி ரூபாய் செலவழித்து வீட்டை நவீன வசதிகளுடன் புதுப்பிக்கிறார். இருந்தாலும், வாங்கிய வீடு போதுமான புழக்கத்திற்கு வசதியாக இடம் இல்லாமல் இருக்கிறது. என்ன செய்வது என்று சிந்தித்த அழகிரி, அக்கம்பக்கத்தில் யாரையாவது வீட்டை காலி செய்ய வைத்தால் மட்டுமே தனது வீட்டை விஸ்தரிக்க முடியும் என்ற முடிவுக்கு வருகிறார். அப்போது கண்ணில்படுகிறது அவரது வீட்டின் பின்புறம் இருந்த ஒரு அப்பாவி பிராமண பெண்ணின் வீடு. அதனை வாங்க நினைக்கிறார். பூர்வீக வீடான அதனை தர அந்த பிராமண பெண் மறுக்கிறார். பிறகென்ன..அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவமாட்டான் கதை தான். பாவம்.தலைதெறித்து வீட்டை காலி செய்கிறார் அந்தபிராமண பெண். அழகிரியின் வீடு விஸ்தாரமாகிறது. இதற்கடுத்து தனது வீட்டுக்கு அருகிலேயே செட்டில் விளையாட ஒரு இடம் வேண்டும் (1996 ம் ஆண்டு) என்று நினைக்கிறார். உடனே சத்யசாய் நகரில் ஒருவரிடம் இருந்த 12 செண்ட் நிலத்தை மிரட்டி ஒட வைத்து வாங்கி விடுகிறார். இந்த மூன்று சொத்துக்களையும் தனது மனைவி காந்தி அழகிரி பெயரில் வாங்கி சுகபோகமாக வாழ தொடங்குகிறார். இது மட்டுமா.. எதிர்காலத்தில் தனது குடும்ப உறுப்பினர்கள் வந்தால், வீட்டுக்குள்ளேயே அனைத்து வசதிகளும் இருக்க வேண்டும் என்பதற்காக, தனது வீட்டின் பின்புறம் இருந்த 3 ஏக்கர் நிலத்தை, செண்ட் 3 ஆயிரம் என்ற விலையில் தனது மகள் கயல்விழி பெயரில் வாங்கி வைக்கிறார். இதுதவிர மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரே உள்ள சட்டக்கல்லூரி விடுதி அருகில் உள்ள 1 ஏக்கர் காலி இடத்தையும் அழகிரியின் 2 வது மகள அஞ்சுகத்தின் பெயரில் வாங்குகிறார். இது தவிர மதுரையை ஒட்டியுள்ள செழிப்பான தோப்பு பகுதிகள் அழகிரியின் கண்ணில் படுகின்றன. இதில் மதுரையிலிருந்து உசிலம்பட்டி செல்லும் வழியில் உள்ள விக்கிரமங்கலம் என்ற இடத்தில் 5 ஏக்கர் தென்னந்தோப்பை வாங்கி அங்கு ஆடம்பர பங்களா, நீச்சல் குளம் கட்டி்யிருக்கிறார். இது மு.க.அழகிரியின் மாமனார் காராளன் பெயரில் வாங்கப்பட்டுள்ளது. இந்த இடம், அழகிரியின் மாமனார் காராளன் தன்னிடமிருந்த முந்திரி தோப்பை, திருச்சி மாவட்டம் முசிறி தொகுதி எம்.எல்.ஏ ஜோதிகண்ணனிடம் விற்றுவிட்டு, வி்க்கிரமங்கலத்தில் உள்ள இந்த தென்னந்தோப்பை வாங்குவதாக கணக்கு காட்டப்படுகிறது. இந்ததோப்பில் உள்ள தென்னை உள்பட மரங்களுக்கு மண் நிரப்புவதற்காக அரசு டிராக்டர்களும், அதிகாரிகளும் பயன்படுத்தப்படுகின்றனர். அழகிரி மகன் தயாநிதிக்கு மட்டும் சொத்து இல்லாமல் போகுமா? அழகர் கோயில் செல்லும வழியில் உள்ள கள்ளந்திரி என்ற இடத்தில், அழகிரியின் மகன் தயாநிதி பெயரில் ஒரு தென்னந்தோப்பும், பூவந்தி என்ற இடத்தில் தோடடமும், தோப்புகளும் வாங்கி போடப்பட்டுள்ளன. இது தவிர தென்மாவட்டங்களில் குறிப்பாக, திண்டுக்கல், கொடைக்கானல் ஆகிய இடங்களில் தான் அதிக அளவில் தோப்புகளும், பண்ணை வீடுகளும் இருக்கின்றன. கொடைக்கானலில் பல கோடி மதிப்புள்ள ஆடம்பர பங்களாக்கள், கட்டப்பட்டுள்ளன. கலைஞர் ஐயா உளியின் ஓசை கதையை இங்கு உட்கார்ந்து சிந்தித்து தான் எழுதினார். கொடைக்கானல் திமுக பிரமுகர் மாயன் வீட்டுக்கு மேற்கில் எட்டு ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு, இந்த இடத்தை பாராமரிக்க சுமார் 200 கோடி ரூபாய் வரை செலவு செய்ய்பட்டிருக்கலாம் என்று அந்த பகுதி மக்கள் கூறுகிறார்கள். அழகிரி இரண்டாவது மகள் அஞசுக செல்வி மற்றும் அவரது கணவர் விவேக் பெயரில் கோடிக்கணக்கில் டிபாசிட் செய்யப்பட்டுள்ளது. இவ்வளவும் போதாது என்று மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில், மாநகராட்சிக்கு சொந்தமாக உள்ள கடைகள் பலவற்றை குத்தகைக்கு எடுத்து அங்கு சிறுவர்களை சீரழிக்கும் வீடியோ கேம்ஸ் கடைகளை நடத்தி வருகிறார்.காந்தி சில்க்ஸ் என்ற பெயரில் தனது மனைவி காந்திக்கு பட்டுபுடவை விற்கும் கடை ஒன்றை வைத்து கொடுத்துள்ளார். இது தவிர பினாமிகள் பெயரில், ( மதுரை தங்கமயில் ஜுவல்லரிக்காரர்கள், அழகிரியின் வீட்டுக்கு காய்கறி வாங்கிவரும் பொட்டுசுரேஷ், தாய்மூகாம்பிகை திருமணமகால் நடத்தும் சேதுராமன், வீட்டுக்கு பணி செய்ய வந்து மர்மமான முறையில் இறந்து போன வழக்கில்குற்றவாளியான நாகேஷ்) உள்பட பினாமிகளின் பெயரில் பல ஏக்கர் நிலங்கள் வாங்கப்பட்டுள்ளன. இது தவிர அசையும் சொத்துக்களாக பல லட்சம் மதிப்புள்ள லேண்ட்ரோவர் கார் உள்பட ஏராளமான கார்கள் உள்ளன. வெறும் 81 ஆயிரத்துடன் மதுரைக்கு வந்த அழகிரியின் இன்றைய சொத்து மதிப்பை பார்த்து மதுரை மக்கள் மயங்கி விழாத குறை தான்


2010/12/4 இரவா <vasude...@gmail.com>

--

Almighty

unread,
Dec 4, 2010, 2:56:46 AM12/4/10
to thami...@googlegroups.com
எழுதியவர் மாதவராஜ்

முயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு நினைத்தது. எனவே ஒரு சட்டம் இயற்றி முயலிடம் அறிவித்தது.

“முயலே நான் சொல்வதைக் கேள். நான் இனி மேல் முன்கூட்டியே சொல்லாமல் உன் வீட்டுக்குள் நுழைய மாட்டேன். கதவைத் தட்டி முன் அனுமதி பெற்றுத்தான் வருவேன். சொல்லாமல் வீட்டுக்குள் வந்துவிட்டால், நீ பயப்படாமல் என்னிடம் புகார் செய்யலாம். அந்த உரிமையை உனக்கு கொடுக்கிறேன்”

இப்படி ஒரு சட்டத்தையும், உரிமையையும் அறிவித்த பிறகு ’இந்தச் சட்டத்தை முயல் சரியாக பயன்படுத்துமா, பயன்படுத்தாதா?’ என யோசித்த பாம்பு எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் ஒருநாள் முயலின் வீட்டுக்குள் புகுந்து முயலின் குட்டி ஒன்றை விழுங்கி விட்டது. பின்னர் வெளியே வந்து நின்று கொண்டது. முயல் புகார் செய்ய வருகிறதா இல்லையா என காத்திருந்தது.

நீண்ட நேரம் ஆகியும் முயல் வெளியே வரவில்லை. பாம்புக்கு கோபம் அதிகரித்துக் கொண்டே போனது. பொறுமையிழந்து முயலின் வீட்டுக்குள் பாய்ந்து சென்று முயலைப் பிடித்து கேட்டது.

“நான் கொண்டு வந்த சட்டத்தை நீ ஏன் பின்பற்றவில்லை?”

முயல் அமைதியாகப் பதில் சொன்னது.”குற்றவாளியும் நீதான். நீதிபதியும் நீதான். நான் எந்தக் குற்றவாளிக்கு தண்டனை வழங்க எந்த நீதிபதியிடம் முறையிடுவது? நீயே சொல்லு.”

பாம்பு கோபத்தோடு சீறி, முயலைக் கவ்வி ஒரே வாயில் விழுங்கி விட்டது. பின்னர் இப்படி அறிவித்தது:

“இந்த முயலைக் கொன்றது சும்மா இல்லை. சட்டப்படிதான். அனைத்துச் சட்ட நெறிமுறைகளும் சரியாகவே பின்பற்றப்பட்டுள்ளன. ஆமாம்”.

(இது ஒரு மீள் பதிவு. ‘எல்லாம் சட்டப்படிதான்’ என்னும் சீனப் பழங்கதை. தலைப்பு அதுவாகவே இப்படி மாறியிருக்கிறது!)



2010/12/4 இரவா <vasude...@gmail.com>

--

வேந்தன் அரசு

unread,
Dec 4, 2010, 5:33:59 PM12/4/10
to thami...@googlegroups.com
கலைஞர் குடும்பத்து கோவை மாப்பிள்ளைக்கு வரட்தட்சணையாக 100 கோடி கொடுக்கபப்ட்டதாக கோவையில் செய்திகள் உலவுகின்ரன்

--
வேந்தன் அரசு
 
எம் சொற்கள் உம்மை புண்படுத்தலாம்
ஆனால் அவை புண்படுத்துவதற்காக சொல்லப்பட்டவை அல்ல

இரவா

unread,
Dec 4, 2010, 8:27:54 PM12/4/10
to thami...@googlegroups.com
புள்ளி விவரங்களைக் கூ றிக்கொண்டிருக்கும் போது
இடையில் என்ன 'உலவு' கின்றன?

சாலைகளில் ஓடுகின்ற
சக்கரங்கள் தானறியும்
போடுகின்ற சாலைகளில்
மேடுகளும் பள்ளங்களும்!

நாமெல்லாம் கால்நடையாகச் சென்று வருகின்ற பாதசாரிகள்.
வெயிலுக்கு ஒதுங்குவோம்! மழைக்குப் பிடிப்போம்!

தேனெடுத்தவர்கள் தேன்குடிக்கின்றார்கள்.

 இருக்கும் வரை தமிழ் அணையில்
                  அன்புடன்                               
                      இரவா

வலைப்பூ:http://thamizmandram.blogspot.com/
இணையம்:  www.thamizhkkuil.net
ஆயம்: thami...@googlegroups.com


5 டிசம்பர், 2010 4:03 am அன்று, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> எழுதியது:

வேந்தன் அரசு

unread,
Dec 4, 2010, 8:55:39 PM12/4/10
to thami...@googlegroups.com


4 டிசம்பர், 2010 8:27 pm அன்று, இரவா <vasude...@gmail.com> எழுதியது:

புள்ளி விவரங்களைக் கூ றிக்கொண்டிருக்கும் போது
இடையில் என்ன 'உலவு' கின்றன?

சாலைகளில் ஓடுகின்ற
சக்கரங்கள் தானறியும்
போடுகின்ற சாலைகளில்
மேடுகளும் பள்ளங்களும்!

நாமெல்லாம் கால்நடையாகச் சென்று வருகின்ற பாதசாரிகள்.
வெயிலுக்கு ஒதுங்குவோம்! மழைக்குப் பிடிப்போம்!

தேனெடுத்தவர்கள் தேன்குடிக்கின்றார்கள்.
 
அன்னைக்கே சொன்னேன். நம் மூளையை எவருக்கும் அடகு வைக்ககூடாதுனு. வச்சா அவங்க செய்கிற தப்பு தண்டா எதுவும் நம் கண்ணுக்கு புலனாகாது.
 
ஒருவரின் குணமும்  நாடணும் குற்றமும் நாடணும்
 
 

 இருக்கும் வரை தமிழ் அணையில்
                  அன்புடன்                               
                      இரவா

வலைப்பூ:http://thamizmandram.blogspot.com/
இணையம்:  www.thamizhkkuil.net
ஆயம்: thami...@googlegroups.com


5 டிசம்பர், 2010 4:03 am அன்று, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> எழுதியது:
கலைஞர் குடும்பத்து கோவை மாப்பிள்ளைக்கு வரட்தட்சணையாக 100 கோடி கொடுக்கபப்ட்டதாக கோவையில் செய்திகள் உலவுகின்ரன்

--
வேந்தன் அரசு
 
எம் சொற்கள் உம்மை புண்படுத்தலாம்
ஆனால் அவை புண்படுத்துவதற்காக சொல்லப்பட்டவை அல்ல

--
இருந்தமிழே உன்னால் இருந்தோம்! இமையோர்,
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டோம்!

--
இருந்தமிழே உன்னால் இருந்தோம்! இமையோர்,
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டோம்!

இரவா

unread,
Dec 5, 2010, 8:14:10 PM12/5/10
to thami...@googlegroups.com


¤.1.76 XyN• ÚLÖz A[°eh ÙT¡V FZ¥ GÁ¿ ÙNÖ¥YÛR S•“YRÖ?
L£QÖŒ‡ ÚTor


ÙNÁÛ], zN.6-

J£ XyN†‰ 76 B›W• ÚLÖz A[°eh ÙT¡V FZ¥ GÁ¿ ÙNÖ¥YÛR Tz†RYŸL· ŒÛ\‹R, A½° TW«›£efÁ\, NyP• ÙR¡‹R C‹R LÖX†‡ÚX S•“YRÖ? GÁ¿ ˜R¥-AÛUoNŸ L£QÖŒ‡ i½]ÖŸ.

TÖP¥ ÙY¸œy| «ZÖ

˜R¥-AÛUoNŸ L£QÖŒ‡ LÛR, ‡ÛWeLÛR, YN]• Gµ‡›£eh• “‡V TP•, `CÛ[OÁ.' C‰, AYŸ LÛR-YN]• Gµ‡ ·[ 75-Y‰ TP• Bh•. C‹R TP†‡¥, L«OŸ TÖ.«^š LRÖSÖVL]ÖL Sz†‰ C£ef\ÖŸ. AY£eh Ú^ÖzL[ÖL —WÖ^ÖÍ–Á, W•VÖ S•’NÁ BfV C£Y£• Sz†‰ C£ef\ÖŸL·. rÚWÐf£ÐQÖ ÛPWe| ÙNš‰ C£ef\ÖŸ. UÖŸyzÁ RVÖ¡†‰·[ÖŸ.

ÙTÖjL¥ ÙY¸œPÖL ‡ÛWeh YW C£eh• C‹R TP†‡Á TÖP¥L· ÙY¸œy| «ZÖ, ÙNÁÛ] N†V• ‡ÚVyP¡¥ ÚS¼¿ CW° SP‹R‰. TÖP¥LÛ[ ˜R¥-AÛUoNŸ L£QÖŒ‡ ÙY¸›P, SzLŸ WÈÂLÖ‹† ÙT¼¿eÙLÖ PÖŸ.

«ZÖ«¥, ˜R¥-AÛUoNŸ L£QÖŒ‡ ÚTpVRÖY‰:-

RjL†RyzÚX ‘\eL«¥ÛX

R–²SÖyz¥ H\†RÖZ ÚTNÖ TP• KzV LÖX†‡¦£‹‰ LÛX†‰Û\›¥ SÖÁ C£efÚ\Á. GjL· ‡£YÖ¤¡¥ J£ ‡ÚVyP£eh ÙTVÚW iP ``L£QÖŒ‡'' ‡ÚVyPŸRÖÁ. GÁ ÙTVÛW ÛYeL«¥ÛX-L£QÖŒ‡ GÁT‰ ‡£YÖ¤¡ÚX J£ NÖ–›Á ÙTVŸ. Ajh RÛW›¥ AUŸ‹‰ TP• TÖŸ†‡£efÚ\Á. HÙ]Á\Ö¥, ÙTtr zeÙLy| YÖjL G]eh YN‡›¥ÛX, YÖš ‘¥ÛX GÁ\¥X-RÛW›ÚX EyLÖŸ‹RÖ¥RÖÁ I‹RÖ¿ ÚTWÖL S TŸL[ÖL EyLÖŸ‹‰ TP• TÖŸeL ˜z • GÁTR¼LÖL!

EP]zVÖL VÖWÖY‰ pÂUÖ°eh zeÙLy YÖjLeiP YN‡›¥XÖR L£QÖŒ‡ GÁ¿ ÙNÖ¥Xei|•. AÛYLÛ[ÙV¥XÖ• SÖÁ ÙT£ÛUVÖL†RÖÁ L£‰fÚ\Á.

ÙN¥Yo qUÖÁ ®yzÚX ‘\‹ÚRÁ, RjL†RÖ•TÖ[†ÚRÖ| RjL† RyzÚX J£ YyÚPÖ|-RjLeLW zÚVÖ| ‘\‹ÚRÁ SÖÁ GÁ¿ ÙNÖ¥¦eÙLÖ·[«¥ÛX. HÛZVÖL†RÖÁ ‘\‹ÚRÁ, HÛZVÖL†RÖÁ YÖ²‹ÚRÁ, HÛZLÚ[Ö|RÖÁ Sy“ ÙLÖ ÚPÁ, HÛZLºÛPV YÖ²°eLÖ†RÖÁ CÁÛ\eh• Byp SP†‡e ÙLÖ z£efÚ\Á GÁT‰RÖÁ G]eh·[ ÙT£ÛU.

SÖÁ HÛZVÖL ‘\eLÖU¥, TQeLÖW]ÖL ‘\‹‡£‹RÖ¥, ÙN¥YoqUÖÁ ®y| ‘·Û[VÖL ‘\‹‡£‹RÖ¥, C TzÙV¥XÖ• HÛZLÛ[ T¼½ LYÛX TP ÚRÖÁ½›£ehUÖ? A¡p «ÛX C‹R A[«¼h†RÖÁ C£eL ÚY |• GÁ¿ i½›£eL ˜z UÖ? GÁÙ\¥XÖ• SÖÁ G ‚ TÖŸefÁÚ\Á.

RÛW›¥ AUŸ‹‰ TP• TÖŸ†RÖ¥ ˜R¥ LÖypeh†RÖÁ ÚTÖL ÚY |•. CW PÖY‰ LÖypeh ÚTÖL ˜zVÖ‰. HÙ]Á\Ö¥, CW PÖY‰ LÖypeh ÚTÖh•ÚTÖ‰, ˜R¥ LÖypeh Y‹RYŸL· ‰ ‘V ÙY¼½ÛX TÖeh Gop¥ AjÚL E£ ÛP, E£ ÛPVÖL fPeh•. SÖ• R ‘†RY½ ÛLÛV ÛY†‰ RP« TÖŸ†RÖ¥, S•˜ÛPV ÛLÙV¥XÖ• VÖÚWÖ YÖ›ÚX ÙY¼½ÛX ÚTÖP, S•˜ÛPV ÛLÙV¥XÖ• pY‹‡£eh•. G]ÚY, CW PÖY‰ LÖypeh ÚTÖf\YŸL· ^ÖefWÛRVÖL ÚTÖL ÚY |•. A Tz TyP ‡ÚVyPŸL¸¥ ÚTNÖ TP• TÖŸ†‡£efÚ\Á.

1.76 B›W• ÚLÖz FZXÖ?

ÚTNÖ TP†‡¥, ‡ÛWeh ˜ÁÚ] TP• ÙR¡‹RÖ¥ iP, SÖ• AUŸ‹‡£efÁ\ CP†‡¼h ‘Á]Ö¥ J£YÁ ÛL›ÚX ÙULÖÚTÖÛ] ÛY†‰e ÙLÖ |, ‡ÛW›¥ GÁ] SPef\‰ GÁ¿ ÙNÖ¥¦eÙLÖ ÚP C£ TÖÁ.

``AÚRÖ TÖŸ, ’UÚN]Á Y£f\ÖÁ, AÚRÖ TÖŸ, TLÖsWÁ Y£f\ÖÁ, ’UÚN]Á gNLÛ] YÛRef\ÖÁ'' GÁTÛR YŸ‚†‰e ÙLÖ ÚP J£YÁ C£ TÖÁ. ``’UÚN]Û] TÖŸ, TLÖsWÛ] TÖŸ, T¥¨eh T¥ C£LÖR•; T¥¦|eh ˜eLÖR•''-GÁ¿ YŸ‚ TÖÁ. TP• TÖŸefÁ\ VÖ£eh• ``T¥¨eh T¥ C£LÖR•'' GÁfÁ\ÖÚ], G Tz A‰? LÖR• GÁ\Ö¥ T†‰ ÛU¥ A¥XYÖ? C£LÖR• GÁf\ÚTÖ‰ C£T‰ ÛU¥ A¥XYÖ? T¥¨eh T¥ C£LÖR•; T¥¦|eh ˜eLÖR• GÁ\Ö¥ ˜ T‰• C£T‰• I•T‰ ÛU¥ A¥XYÖ? J£ T¥¨eh• CÁÙ]Ö£ T¥¨eh• CÛPÚV I•T‰ ÛU¥ ALX• GÁ\Ö¥, YÖš GªY[° ALX• C£‹‡£eh•? C Tz J£YŸ C£‹‡£eL ˜z UÖ-TLÖsWÁ GÁ¿? AÁÛ\eh VÖ£• ÚLyP‡¥ÛX. CÁÛ\eh ÚLyf\ÖŸL[Ö GÁ]?

J£ XyN†‰ GµT†RÖ\Ö›W†‰ ˜Áż¿ I•T†‡W | ÚLÖz ¤TÖš FZ¥ GÁ¿ ÙNÖÁ]Ö¥, J£ XyN†‰ GµT†RÖ\Ö›W†‰ ˜Áż¿ I•T†‡W | ÚLÖz ¤TÖš GÁ¿ ÙNÖ¥¨•ÚTÖ‰, A‰ GªY[° ÙT¡V ÙRÖÛL, A‹R ÙRÖÛLÛV J£YŸ FZ¥ ÙNš‡£eL ˜z UÖ? VÖWÖY‰ J£YŸ AÛR ATL¡†‡£‹RÖ¥ CªY[° ÙT¡V LQeÛL-J£ RÖ¸ÚX Gµ‡eLÖyz]Ö¥, AÛR G Tz CÁÛ\eh S•“fÚ\ÖÚUÖ, Tz†RYŸL· ŒÛ\‹R, A½° TW«›£ef\, NyP• ÙR¡‹R, SÖQV†‡Á U‡ ÛT EQŸ‹R C‹Re LÖX†‡ÚX iP J£ XyN†‰ GµT†RÖ\Ö›W• ÚLÖz ¤TÖš GÁ\Ö¥ AÛR S•“fÁ\ SÖ•-AÁÛ\eh ``T¥¨eh T¥ C£LÖR•; T¥¦|eh ˜eLÖR•'' GÁ¿ AYÄÛPV YÖÚV ˜ TRÖ›W• ÛU¥ GÁ¿ TLÖsWÛ] YÛR†RÚTÖ‰, AÛR B]‹RUÖL ÚLy|eÙLÖ |RÖÁ TP†ÛR TÖŸ†ÚRÖ•. A Tz TP• TÖŸ†R HUÖ¸L¸ÚX J£Y]ÖL SÖÁ AÁÛ\eh C£‹ÚRÁ.

TP• TÖŸ†RYŸLºÛPV HUÖ¸†R]• A Tz C£‹R‰. GÛR ÚY |UÖ]Ö¨• ÙNÖ¥YÖŸL·. B]Ö¥, CÁÛ\eh J£ UÂRÁ A‹R LÖ¡V†ÛR ÙNšf\ÖÁ GÁ\Ö¥, AYÁ «tOÖ] ¢‡VÖL†RÖÁ ÙNšV ˜z •.

G Tz "G‹‡WÁ'' TP†‡ÚX s TŸ ÍPÖŸ WÈÂLÖ‹† J£ C£•“ UÂR]ÖL -ÚWÖÚTÖYÖL Y‹‰ C‹R LÖ¡VjLÛ[ ÙNšf\ÖÚWÖ, AÛR ÚTÖX, ÙNšV ˜z ÚU R«W RÂVÖL J£ UÂRÁ A Tz ÙNšV ˜zVÖ‰ GÁTÛR A½° ”ŸYUÖL CÁÛ\eh EQ£fÚ\Ö• AÛR LÖy|fÚ\Ö•. AÛR EQ£fÁ\ ŒÛX CÁÛ\eh SÖyzÚX Y‹‡£efÁ\‰.

hГ

C‹R TP†‡¥ Sz†‡£efÁ\ AÛ]Y£• RjLºÛPV ‡\ÛUÛV ÙY¸ T|†‡›£efÁ\ÖŸL·. C‹R TP†‡¥ YÖš “ A¸†RR¼h ˜R¥-AÛUoN£eh SÁ½ GÁ¿ hГ r‹RŸ ÚTr•ÚTÖ‰ ÙNÖÁ]ÖŸ-˜R¥-AÛUoNŸ C‹R TP†‡ÚX YÖš “ A¸†RR¼LÖL SÁ½ GÁ¿ h½ ‘yPÖŸ. C‹R TÖ†‡W†ÛR H¼¿, hГ SzeL ˜ÁY‹RR¼LÖL AY£eh SÖÁ SÁ½ ÙR¡«†‰e ÙLÖ·fÚ\Á. ``ÙT¡VÖŸ'' TP†‡ÚX U‚V•ÛUVÖŸ ÚYP†‡ÚX TÖŸ†‰, C‹R TP†‰eh Rh‹RYŸ hГRÖÁ GÁ¿ ÙNÖÁÚ]Á. AY£• AÛR H¼¿eÙLÖ |, C‹R TP†‡ÚX AYÛW SzeL ÛY†‡£ef\ÖŸL·. AYŸL· ÙNÖÁ]ÛR ÚTÖX, WÐV SÖyzÁ SÖYÛX ˜µÛUVÖL† Rµ« A¥X-‘ÁT¼½ A¥X-AjÙLÖÁ¿• CjÙLÖÁ¿UÖL A‹Re LÛR›¥ Y£fÁ\ ˜efVUÖ] LyPjLÛ[ÙV¥XÖ• ÙLÖtN˜• «PÖU¥ C‹R TP†‡ÚX CÛQ†‰ YN]• Gµ‡›£efÁÚ\Á.

ÙNÖ¥¦ ÙRÖÛXeL ÚY z ·[‰

SÖÁ TX iyPjL¸¥ ÚTp›£efÚ\Á. ÙT¡VÖÛW, A QÖÛY, GÁÄÛPV C[ÛUe LÖX†‡ÚX N‹‡eLÖU¥ C£‹‡£‹RÖ¥, SÖÁ J£ L•ïÂÍy BL C£‹‡£ ÚTÁ GÁ¿ ÙNÖ¥¦›£efÁÚ\Á. AR¼h H¼T, C‹R TP†‡¥ SÖÁ GÁ] L£‰fÁÚ\Ú]Ö, AÛYLÙ[¥XÖ• EÛWVÖP¥L[ÖL Y‹‡£efÁ\‰. B]Ö¥, AWpV¥ YÖÛP ®NeizV EÛWVÖP¥L[ÖL A¥X -ÙRÖ³XÖ[ŸLºÛPV EQŸ°LÛ[ - TÖyPÖ¸ UeLºÛPV EQŸ°LÛ[ ÙY¸ T|†‰fÁ\ -AYŸLºÛPV LÐPjLÛ[ ÙY¸ T|†‰fÁ\, EQŸ†‰fÁ\ LyPjL[ÖL C‹R TP†‡ÚX AÛYLÛ[ÙV¥XÖ• ryze LÖyz›£efÚ\Á.

A Tz TyP TP†ÛR CjÚL EjLºeh C‹R Œ¿Y]†‡Á NÖŸTÖL SÖÁ YZjhf\ ÚSW†‡¥, CÛR Ys¨eLÖL-TQ• N•TÖ‡ TR¼LÖL J£ÚYÛ[ UÖŸyzÄ• ÙTtN–Ä• A Tze L£‡›£‹RÖ¨•iP-GÁÛ] ÙTÖ¿†RYÛW›¥, N•TÖ‡ TR¼LÖL A¥X. HÙ]Á\Ö¥, AYŸL· ÙLÖ|†R TQ†ÛR EP]zVÖL LyP ÚY zV Y£UÖ] Y¡ÛVe Lyz«y|, —‡ÛV ˜µY‰• SÖÁ SÁÙLÖÛPVÖLÚY R‹‰«yÚPÁ GÁTÛR • jLÙ[¥XÖ• SÁ\ÖL A½®ŸL·. AÛR SÖÁ CjÚL ÙNÖ¥X ÚY zV AYpV–¥ÛX. GÁ] ÙNšY‰? LÖX†‡Á LyPÖV•. CÛRÙV¥XÖ• ÙNÖ¥¦† ÙRÖÛXeL ÚY z›£ef\‰. BLÚY, ÙNÖ¥¦›£efÚ\Á.

pYÖÈeh• G]eh•.....

WÈÂLÖ‹† ÙNÖ¥X ÚY zV AYpV–¥ÛX. HÙ]Á\Ö¥, VÖ£• AYÛW, AY£eh ÙLÖ|†R TQ†ÛR VÖ£ehe ÙLÖ|†RÖŸ GÁ¿ VÖ£• ÚLyL UÖyPÖŸL·. AYŸ ÙLÖ| TÖŸ. CW | ÛLLºeh• CÛPÚV, J£ ÛLVÖ¥ ÙLÖ|†RÛR CÁÙ]Ö£ ÛL A½VÖU¥ AYŸ ÙLÖ| T‰ G]eh† ÙR¡ •. GÁÛ] ÙTÖ¿†R YÛW›¥, J£ AWpV¥ YÖ‡VÖL, J£ Lyp† RÛXY]ÖL C£efÁ\ LÖWQ†RÖ¥, G]eh Y£f\ TQ•, TP†‡ÚX Y£fÁ\ TQ• CÛYLÙ[¥XÖ• GÁÄÛPV h|•T†‡¼h ÚSWzVÖL RW T|f\‰ GÁ\ ÙTÖ£· A¥X.

GÁÄÛPV h|•T†‡]Ÿ YÖ²YR¼h CÁ¿ ÚS¼\¥X, SÖÁ ÚNX• ``UÖPŸÁ ‡ÚVyP¡¥'' S•˜ÛPV YÖ¦ ÙNÖÁ]ÛR ÚTÖX, TP†‰ehe LÛR Gµ‡Ú]Ú], A‹Re LÖX†‡¦£‹‰ C‹Re LÖX• YÛW›¥ 75 TPjL· Gµ‡, JªÙYÖ£ TP†‡¼h• hÛ\‹RTyN• A‹Re LÖX†‡ÚXÚV - TWÖNe‡ Y‹R LÖX†‡ÚXÚV T†RÖ›W• ¤TÖš G]eh F‡V• ÙLÖ|†RÖŸL·. AR¼h ‘\h G]eh• pYÖÈeh• ÚNŸ‹RÖ¼ÚTÖX ``‡£•‘ TÖŸ'' TP†‡¼LÖL AY£eh C£TRÖ›W• ¤TÖš, G]eh C£TRÖ›W• ¤TÖš - GÁ] ÚYzeÛL TÖ£jL·. SzLŸ ‡XL• pYÖÈeh C£TRÖ›W• ¤TÖš - G]eh C£TRÖ›W• ¤TÖš A‹Re LÖX†‡ÚX ÙLÖ|†RÖŸL·. A‹R C£TRÖ›W• ¤TÖÛVe ÙLÖ |ÚTÖš sWeÚLÖyÛP›ÚX AYŸ ŒX• YÖjf]ÖŸ - SÖÁ LÖy}¡ÚX ŒX• YÖjfÚ]Á. A‹R ŒXjL· A TzÚV C£efÁ\]. AÛR TÖŸefÁ\ ÙTÖµ‰ C ÚTÖ‰• G]eh pYÖÈ›Á OÖTL• Y£•.

G Tz GÁÄÛPV ``TWÖNe‡'' TP†‡¥ -pYÖÈeh A‰ ˜R¥ TPUÖL C£‹‰, AYŸ ÙTV£• “Lµ• ÙT¼\ÖÚWÖ-G Tz G•.È.BŸ. GÁÄÛPV ``WÖ^hUÖ¡'' TP†‡ÚX Sz†‰ ÙTV£• “Lµ• ÙT¼\ÖÚWÖ-AÛR ÚTÖX, R•‘ «^šÛV ÙTÖ£†R YÛW›¥ C‰ AY£eh ÙTV£• “Lµ•, SzLŸ ‡XL• pYÖÈÛV ÚTÖX, “Wyp SzLŸ G•.È.BÛW ÚTÖX ÙTV£• “Lµ• AY£eh† R£•.

CªYÖ¿ L£QÖŒ‡ ÚTp]ÖŸ.




 இருக்கும் வரை தமிழ் அணையில்
                  அன்புடன்                               
                      இரவா

வலைப்பூ:http://thamizmandram.blogspot.com/
இணையம்:  www.thamizhkkuil.net
ஆயம்: thami...@googlegroups.com

வேந்தன் அரசு

unread,
Dec 5, 2010, 10:01:35 PM12/5/10
to thami...@googlegroups.com
கிரந்தம் ஒழிகனு போராடறாங்க


 
5 டிசம்பர், 2010 8:14 pm அன்று, இரவா <vasude...@gmail.com> எழுதியது:

இரவா

unread,
Dec 6, 2010, 12:07:02 AM12/6/10
to thami...@googlegroups.com
இராசு இராசேந்திரன் என்று எழுதினால் என்ன குறைந்து போகப் போகிறது?

தமிழர் என்னுஞ் சொல்லை ஆங்கிலத்தில் எழுதும் போது, TAMIழ்AR என்றோ
அல்லது TAMIழR என்றோ எழுதிப்பாருங்கள்! அப்போது யார்யாருக்கெல்லாம்
வலிக்குமோ அவர்கள் கேட்கும் கேள்விக்குப் பதில் எழுதுங்கள்.

6-12-10 அன்று, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> எழுதியது:


> கிரந்தம் ஒழிகனு போராடறாங்க
>
>
>
> 5 டிசம்பர், 2010 8:14 pm அன்று, இரவா <vasude...@gmail.com> எழுதியது:
>
>>
>>

>> *¤.1.76 XyN• ÚLÖz A[°eh ÙT¡V FZ¥ GÁ¿ ÙNÖ¥YÛR S•“YRÖ?
>> L£QÖŒ‡ ÚTor *

வேந்தன் அரசு

unread,
Dec 7, 2010, 9:03:42 PM12/7/10
to thami...@googlegroups.com


6 டிசம்பர், 2010 12:07 am அன்று, இரவா <vasude...@gmail.com> எழுதியது:

இராசு இராசேந்திரன் என்று எழுதினால் என்ன குறைந்து போகப் போகிறது?
 
Mr. Eravaaa
 
I am iraasu iraasenthiran
 
Glad to meet you.

C.R. Selvakumar

unread,
Dec 7, 2010, 9:27:52 PM12/7/10
to thami...@googlegroups.com
//Mr. Eravaaa
 
I am iraasu iraasenthiran
 
Glad to meet you.//
 
வேந்தனாரே, தப்பு தப்பா எழுதாதீங்க. Glad -ங்கிறது கிரந்தம் என்று தெரியாதா :)  Kilaadu அப்படி எழுதுங்க நல்ல தமிழில் :).
 
அன்புடன்
செல்வா


 
2010/12/7 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
--
இருந்தமிழே உன்னால் இருந்தோம்! இமையோர்,
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டோம்!



--
Regards
Selva
___________________
C.R.(Selva) Selvakumar

வேந்தன் அரசு

unread,
Dec 8, 2010, 7:23:57 AM12/8/10
to thami...@googlegroups.com


7 டிசம்பர், 2010 9:27 pm அன்று, C.R. Selvakumar <c.r.sel...@gmail.com> எழுதியது:

//Mr. Eravaaa
 
I am iraasu iraasenthiran
 
Glad to meet you.//
 
வேந்தனாரே, தப்பு தப்பா எழுதாதீங்க. Glad -ங்கிறது கிரந்தம் என்று தெரியாதா :)  Kilaadu அப்படி எழுதுங்க நல்ல தமிழில் :).
 
ஆம் செல்வா
 
கிரந்தம்னு ஒன்னு இல்லேனா எந்தை எனக்கு ராசேந்திரன்னுதான் சூட்டி இருபபார்
 
எங்கள் இல்லில் எல்லாருக்கும் ஒரு கிரந்த எழுத்தாவது இருக்கும்.
 
ராஜேந்திரன்
சத்தியராஜ்
ஜெகஞ்ஜோதி
ஜெயசந்திரன்
முத்துகிருஷ்ணன்
சரோஜினி
 
இன்று தமிழர்கள் ஆங்கிலத்தை முதல் எழுத்தாக கொள்வதுபோல் எங்கள் குடும்பத்தில் கிரந்தம்.உள் எழுத்து
 
என் மகன் விஜய்
மகள் மட்டும் சுதா கன்னல்மொழி
( என் தமிழ் வெறி இல்லாளிடம் பலிக்கலை)
 
பேரர்கள்
ஆதர்ஷ்
அக்‌ஷ்யா
இஷான்
 
பெற்றது அவர்கள் பேர் வைப்பது நாமாக இருக்கலாமா?
 
கிரந்தம் கடிது ஒழிக.
 

இரவா

unread,
Dec 8, 2010, 8:55:14 AM12/8/10
to thami...@googlegroups.com
தங்கள் மகளுக்குத் தமிழ்ப்பெயர் வைத்ததற்காக உங்கள் வீட்டில் ஏதும் தள்ளுமுள்ளு நடக்கவில்லையே!
அப்படியானால் உங்கள் தமிழ்ப் பற்றை உங்கள் இல்லத்தில் காட்டியிருக்கலாமே!

ஒன்றுமே தெரியாதது போல் வீட்டில் உம்மென்று இருந்துகொண்டு வீட்டிற்கு வெளியே வீராதி வீரர்போல் வேடம் காட்டுவதா?

குடும்பத்தலைவர் என்றால் சும்மா குந்திருப்பதல்ல!


 இருக்கும் வரை தமிழ் அணையில்
                  அன்புடன்                               
                      இரவா

வலைப்பூ:http://thamizmandram.blogspot.com/
இணையம்:  www.thamizhkkuil.net
ஆயம்: thami...@googlegroups.com


8 டிசம்பர், 2010 5:53 pm அன்று, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> எழுதியது:

C.R. Selvakumar

unread,
Dec 8, 2010, 9:03:50 AM12/8/10
to thami...@googlegroups.com
//குடும்பத்தலைவர் என்றால் சும்மா குந்திருப்பதல்ல! //
 
அன்புள்ள இரவா,
அப்புறம் குடும்பத்தலைவர் என்பது
குடும்பத்தலைவனாகவும் இருகக்லாம்
குடும்பத்தலைவியாகவும் இருக்கலாம்.
 
அன்புள்ள வேந்தனாரே
 
உங்கள் தமிழ்ப்பற்றைப் பாராட்டுகின்றேன்.
உங்களுடைய தனிக்கோணமான நகைவையையும்,
சிந்தனையையும் மிகப் பாராட்டுகின்றேன்.
 
வேந்தனாரே நீங்கள் தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு 100
குறுங்கட்டுரைகளாவது எழுதி ஆக்கம் தாருங்கள்
ஐயா. முடிந்தால் (கட்டாயம் முடியுன்ம்!) 
30-50 பக்க நூலாவது எழுதுங்கள்.
திறமை மிக்க நீங்கள் உங்கள் அறிவையும் ஆற்றலையும்
வருங்காலத்தினரோடு பகிர்ந்தளியுங்கள் ஐயா.
 
அன்புடன்
செல்வா

2010/12/8 இரவா <vasude...@gmail.com>

இரவா

unread,
Dec 8, 2010, 10:28:24 AM12/8/10
to thami...@googlegroups.com
அன்புச் செல்வா

குடும்பத்தலைவர் வேந்தன் இருக்கிறாரே! அவர், இரண்டு வரி எழுதினாலே எழு நாள் ஓய்வு எடுத்துக் கொள்பவர்.
பாம்புக்கு வாலும் மீனுக்கு தலையும் காட்டுகின்ற விலாங்கு மீன் வகையைச் சேர்ந்தவர்.
ஏதோ இங்கே அங்கே ஓடி ஒன்றிரண்டு வரிகள் எழுதுகிறார் என்பதற்காக 50 - 60 பக்கத்தில் நூலா? 100 குறுங்கட்டுரையா? இதெல்லாம் என்றைக்கு நடப்பது?

என்றைக்கு மன்னர் மான்யம் ஒழிக்கப்பட்டதோ அன்றைக்கே இவரின் ஆட்சியும் போனது!
வேந்தர் என்று ஆசைக்கு பேர் வைத்துக் கொண்டுள்ளார். இருக்கட்டுமே!

பட்டம்கிட்டம் எதுவும் கேட்க மாட்டார்! அவரை எழுதச் சொல்லித் தூண்டாதீர்கள். மனம் நெந்து போவார்!



 இருக்கும் வரை தமிழ் அணையில்
                  அன்புடன்                               
                      இரவா

வலைப்பூ:http://thamizmandram.blogspot.com/
இணையம்:  www.thamizhkkuil.net
ஆயம்: thami...@googlegroups.com


8 டிசம்பர், 2010 7:33 pm அன்று, C.R. Selvakumar <c.r.sel...@gmail.com> எழுதியது:

C.R. Selvakumar

unread,
Dec 8, 2010, 10:59:50 AM12/8/10
to thami...@googlegroups.com
அன்புள்ள இரவா,
 
தமிழ் விக்கிப்பீடியாவில் வேந்தனார் எழுதிய
பொனபோ என்னும் சிம்ப்பன்சி போன்ற குரங்கு பற்றிய கட்டுரை
அங்கு இலக்கியமாகப் போற்றப்படுகின்றது. அது மொழிபெயர்ப்பு
எனினும், எடுத்துக்காட்டாக இருக்கும்படி உள்ளது. அப்படி அவர்
ஒரு 10 கட்டுரை எழுதினால், அதுவே ஓர் அருமையான நூலாகும்.
 
வேந்தனார் துடுக்கான அரிவு, அறிவு வேந்தர்.

இரவா

unread,
Dec 8, 2010, 11:38:24 AM12/8/10
to thami...@googlegroups.com
அவர் குரங்கு பற்றி எழுதியது எனக்கும் தெரியும். இவர் குரங்கைப் பற்றி எழுதியதும் பலர் இவரைக் கண்டு நடுங்கவாரம்பித்தனர். எங்கே தங்களைப் பற்றி எழுதிவிடுவாரோ! என்று.

இனிமேல் அவரால் குரங்கைப் பற்றி எழுத முடியாது. ஏனென்றால் எல்லா குரங்குகளும் பரிணாம வளர்ச்சியடைந்து மனிதர்களாகி விட்டன.



 இருக்கும் வரை தமிழ் அணையில்
                  அன்புடன்                               
                      இரவா

வலைப்பூ:http://thamizmandram.blogspot.com/
இணையம்:  www.thamizhkkuil.net
ஆயம்: thami...@googlegroups.com


8 டிசம்பர், 2010 9:29 pm அன்று, C.R. Selvakumar <c.r.sel...@gmail.com> எழுதியது:

வேந்தன் அரசு

unread,
Dec 8, 2010, 9:20:43 PM12/8/10
to thami...@googlegroups.com


8 டிசம்பர், 2010 9:03 am அன்று, C.R. Selvakumar <c.r.sel...@gmail.com> எழுதியது:

//குடும்பத்தலைவர் என்றால் சும்மா குந்திருப்பதல்ல! //
 
அன்புள்ள இரவா,
அப்புறம் குடும்பத்தலைவர் என்பது
குடும்பத்தலைவனாகவும் இருகக்லாம்
குடும்பத்தலைவியாகவும் இருக்கலாம்.
 
அன்புள்ள வேந்தனாரே
 
உங்கள் தமிழ்ப்பற்றைப் பாராட்டுகின்றேன்.
உங்களுடைய தனிக்கோணமான நகைவையையும்,
சிந்தனையையும் மிகப் பாராட்டுகின்றேன்.
 
வேந்தனாரே நீங்கள் தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு 100
குறுங்கட்டுரைகளாவது எழுதி ஆக்கம் தாருங்கள்
ஐயா. முடிந்தால் (கட்டாயம் முடியுன்ம்!) 
30-50 பக்க நூலாவது எழுதுங்கள்.
திறமை மிக்க நீங்கள் உங்கள் அறிவையும் ஆற்றலையும்
வருங்காலத்தினரோடு பகிர்ந்தளியுங்கள் ஐயா.
 
நன்றி செல்வா
 
கட்டாயம் செய்வேன்
 
--

இரவா

unread,
Dec 8, 2010, 11:25:00 PM12/8/10
to thami...@googlegroups.com
 
நன்றி செல்வா
 
கட்டாயம் செய்வேன்
 
 
அதுதான் தெரியுமே! எப்போது? எதைப் பற்றி?

வேந்தன் அரசு

unread,
Dec 9, 2010, 8:08:55 AM12/9/10
to thami...@googlegroups.com


8 டிசம்பர், 2010 11:25 pm அன்று, இரவா <vasude...@gmail.com> எழுதியது:


 
நன்றி செல்வா
 
கட்டாயம் செய்வேன்
 
 
அதுதான் தெரியுமே! எப்போது? எதைப் பற்றி?
 
நான் நாளையே செத்துபோவேன் என்று நினைக்கவில்லை இரவா.
 

இரவா

unread,
Dec 9, 2010, 9:17:55 AM12/9/10
to thami...@googlegroups.com
அன்றறிவாம் என்னாது அறம் செய்க! மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை

என்றவர்க்கும் இதே பதில் தானா?


 இருக்கும் வரை தமிழ் அணையில்
                  அன்புடன்                               
                      இரவா

வலைப்பூ:http://thamizmandram.blogspot.com/
இணையம்:  www.thamizhkkuil.net
ஆயம்: thami...@googlegroups.com


9 டிசம்பர், 2010 6:38 pm அன்று, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> எழுதியது:
--

வேந்தன் அரசு

unread,
Dec 9, 2010, 8:24:26 PM12/9/10
to thami...@googlegroups.com


9 டிசம்பர், 2010 9:17 am அன்று, இரவா <vasude...@gmail.com> எழுதியது:

அன்றறிவாம் என்னாது அறம் செய்க! மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை
 
ஆயிரம் அறங்கள் இருக்கு இரவா
அவரவர்க்கு அவரவர் வழி
 

C.R. Selvakumar

unread,
Dec 9, 2010, 10:01:26 AM12/9/10
to thami...@googlegroups.com


2010/12/9 இரவா <vasude...@gmail.com>

அன்றறிவாம் என்னாது அறம் செய்க! மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை

என்றவர்க்கும் இதே பதில் தானா?

 
 
வேந்தனாரே, உங்கள் உறுதிமொழிக்கு நன்றி.
இரவா கூறியதோடு கீழ்க்ககணும் திருவள்ளுவப்
பெருந்தகையின் வரிகளையும் நாம் யாவருமே
எண்ணிப்பார்க்க வேண்டும்:
 
நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின்.
 
அன்புடன்
செல்வா
 
 இருக்கும் வரை தமிழ் அணையில்
                  அன்புடன்                               
                      இரவா

வலைப்பூ:http://thamizmandram.blogspot.com/
இணையம்:  www.thamizhkkuil.net
ஆயம்: thami...@googlegroups.com


9 டிசம்பர், 2010 6:38 pm அன்று, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> எழுதியது:



8 டிசம்பர், 2010 11:25 pm அன்று, இரவா <vasude...@gmail.com> எழுதியது:


 
நன்றி செல்வா
 
கட்டாயம் செய்வேன்
 
 
அதுதான் தெரியுமே! எப்போது? எதைப் பற்றி?
 
நான் நாளையே செத்துபோவேன் என்று நினைக்கவில்லை இரவா.
 
--
வேந்தன் அரசு
 
எம் சொற்கள் உம்மை புண்படுத்தலாம்
ஆனால் அவை புண்படுத்துவதற்காக சொல்லப்பட்டவை அல்ல

--
இருந்தமிழே உன்னால் இருந்தோம்! இமையோர்,
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டோம்!

--
இருந்தமிழே உன்னால் இருந்தோம்! இமையோர்,
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டோம்!
Reply all
Reply to author
Forward
0 new messages