Carbon-14 dating is a way of determining the age of certain archeological artifacts of a biological origin up to about 50,000 years old. It is used in dating things such as bone, cloth, wood and plant fibers that were created in the relatively recent past by human activities.
--அருமை. இதில் ஒட்டியிருக்கும் கரியைச் சுரண்டி எடுத்து c14 காலக்கணிப்பு செய்தால், இது பொ.உ.முதலாம் நூற்றாண்டா, அதற்கு முந்தையதா என்று தெரிந்துவிடுமே? தமிழக அரசின் தொல்லியல் துறை இப்போது கூட செய்யலாமே?சிக்கல் என்னவென்றால், நாம் இக்கால நுட்பங்களைப் பயன்படுத்தாமல், இன்றும், ”அவர்சொன்னார், இவர்சொன்னார் என்று so called முதுமுனைவர்கள் கூற்றுகளை ஆதாரமாய் நம்பிக்கொண்டிருக்கிறோம்”. இன்னமும் வையாபுரியார் காலக்கணிப்பையும் கமில் சுவலபிள் காலக்கணிப்பையும் இல்க்கியச் சான்றுகளுக்கு நம்பிக்கொண்டிருப்பது பொல, தொல்லியல் சான்றுகளுக்கும் முதுமுனைவர்களின் கூற்றை நம்ப முடியாது இது அறிவியல், வெஉம் opinion அல்ல.அன்புடன்,இராம.கி.From: நா.ரா.கி.காளைராசன்Sent: Thursday, November 28, 2019 8:57 PMTo: mintamilSubject: [SPAM]- Re: [SPAM]- [MinTamil] Re: எகிப்து நாட்டில் கண்ட தமிழி எழுத்து கொண்ட பானை ஓடு + மற்றும் சில தமிழி கொண்டவைவெஉம்--On Thu, 28 Nov 2019 at 19:26, Iraamaki <iraa...@bsnl.in> wrote:இது பற்றாது ஐயா. எந்த இடத்தில் கிடைத்தது? எதன் தொடர்பானது? – என்ற விவரங்கள் வேண்டும்.அன்புடன்,இராம.கி.From: நா.ரா.கி.காளைராசன்Sent: Thursday, November 28, 2019 6:52 PMTo: mintamilSubject: Re: [SPAM]- [MinTamil] Re: எகிப்து நாட்டில் கண்ட தமிழி எழுத்து கொண்ட பானை ஓடு + மற்றும் சில தமிழி கொண்டவைவணக்கம் ஐயா.இந்த இணையதளத்தில் காணக்கிடைக்கிறது.அன்பன்கி. காளைராசன்On Thu, 28 Nov 2019 at 17:43, Iraamaki <iraa...@bsnl.in> wrote:நூதலோசு இந்தப் பானைப்படம் இருக்கும் சுட்டியை அப்படியே கொடுங்கள். பின்னால் தரவூற்று கொடுக்க வாய்ப்பாய் இருக்கும்.அன்புடன்,இராம.கி.From: PandiyarajaSent: Thursday, November 28, 2019 5:27 PMTo: மின்தமிழ்Subject: [SPAM]- [MinTamil] Re: எகிப்து நாட்டில் கண்ட தமிழி எழுத்து கொண்ட பானை ஓடு + மற்றும் சில தமிழி கொண்டவை--நூதலோசு ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி. தாங்கள் காட்டியிருக்கும் இரண்டாவது படத்தைப் பார்த்ததும் துள்ளிக்குதிக்காத குறைதான்(வயது?!) இதில் நெடுங்கி(ளி) என்ற சொல்லில் காணப்படும் ங் என்ற எழுத்தில் புள்ளி காணப்படுகிறது. ஆனால் இதன் காலம் 1st Century AE என்று கூறப்பட்டிருப்பது மிகவும் தவறு. கி.மு 3ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய மாங்குளம் எழுத்துக்களைப் போலவே இதன் எழுத்து காணப்படுகிறது. தொடக்க கால பிராமி எழுத்துக்கள் மிகப் பெரும்பாலும் நேர் கோடுகளைக் கொண்டிருக்கும். அதிலும் க என்பது மிகச் சரியான + (Plus குறி) போலவே இருக்கும். மாங்குளம் கல்வெட்டு எழுத்துக்கள் அவ்வாறே இருக்கும். அதனையும் கி.மு 3-ஆம் நூற்றாண்டு என மகாதேவன் போன்றோர் கணித்தது, அசோகன் கால பிராமியை ஒப்பீடாக வைத்தே. இப்போதுதான் கீழடி, பொருந்தல் ஆகியவற்றுக்குப் பின் நம் தமிழ் பிராமி கி.மு 6-ஆம் நூற்றாண்டுக்கு முந்தையது எனத் தெரியவந்துள்ளது. தாங்கள் காட்டியுள்ள இராமநாதபுரம் பானையோட்டு எழுத்துக்கள் நிச்சயம் கீழடி, பொருந்தல் ஆகிய பிராமிஎழுத்துக்களோடு ஒப்பிடக் கூடியவை. அந்த எழுத்துக்களில் (தொல்காப்பியப்)புள்ளி காணப்படுவது, தொல்காப்பியத்தின் காலத்தை கி.மு 600 க்குக் கொண்டுசெல்கிறது. பூலாங்குறிச்சி எழுத்துக்கள் மிகவும் வளைவான கோடுகளைக் கொண்டவை. அதனால் அதனை கி.பி 3ஆம் நூ. என்பர். அதில் புள்ளி காணப்படுவதால் தொல்காப்பியர் கி.பி.3-ஆம் நூ. சேர்ந்தவர் என்று ஐராவதம் மகாதேவனும், அவரை ஒட்டி, இப்போது கணேசனாரும் கூக்குரலிட்டு வருகின்றனர். நான் கணேசனாருக்குச் சொன்னேன். கி.மு காலத்திய பிராமி எழுத்தில் புள்ளி ஒருநாள் கிடைக்கும். இதோகிடைத்துவிட்டது. இது ஒன்றை வைத்தே தொல்காப்பியர் கி.மு 6-ஆம் நூற்றாண்டுக்கு முந்தையவர் என்று துணிந்து சொல்லலாம்.ஐயா, இந்த இரண்டாம் (இராமநாதபுரம்) பானையோட்டு எழுத்தைப்பற்றிய செய்தியை எங்குக் கண்டீர்? அதனைப் பற்றிய மேலதிக செய்திகளைக் கொடுக்கமுடியுமா? நிச்சயம் அந்தச் செய்தியில் குறிப்பிட்டவாறு அதன் காலம் கி.பி அல்ல. புள்ளியைப் பார்த்தபின் அதன் காலத்தைப் பின்னுக்கு இழுக்கிறார்கள். ஆனால், புள்ளியைப் பார்த்தபின் தொல்காப்பியரைத்தான் முன்னுக்குத் தள்ளவேண்டும். அதனைப் பற்றிய மறு ஆய்வு தேவை. அது இப்போது எங்கே இருக்கிறது.என்னைப் பொருத்தமட்டில் அது மிக மிக முக்கியமான பானையோடு.மிக்க நன்றியுடன்,ப.பாண்டியராஜாநூ த லோ சுமயிலைஇவையாவும் பழம் செய்திகளேஇணைய உலாவினில் கண்ட ஆனால் இதுவரை நம் மடலிழைகளில் பேசப்படாத
பழம் பானை ஓடுகளில் காணும் தமிழி எழுத்துக்கள் கொண்டவை இவை மூன்றுPottery with Tamil-Brahmini inscriptions, Berenike, Egypt, First Century A.D.படிப்பு ??நெடுங்கி(ள்)ளி ???சாமுத ஹ ???
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAFh3n%3D-mXOJcfKaF_qCoiUXj0SsgD_nEZ_5SS4pJ4Jp%3Dv1k-uw%40mail.gmail.com.
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/2943C91EF63C451BB1B842CF038B6815%40LAPTOPOEHTB0H7.