எகிப்து நாட்டில் 2100 ஆண்டுகள் பழைமையான தமிழி (அ) பழந்தமிழ் எழுத்துரு பொறிக்கப்பட்ட பானை ஓடு!

39 views
Skip to first unread message

Muthamizh Vendhan

unread,
Jan 25, 2021, 10:30:08 AM1/25/21
to anb...@googlegroups.com, beyo...@googlegroups.com, canad...@googlegroups.com, currentt...@googlegroups.com, dinamo...@googlegroups.com, eelatami...@googlegroups.com, elanth...@googlegroups.com, ethi...@googlegroups.com, germa...@yahoogroups.com, housto...@googlegroups.com, il...@googlegroups.com, indonesia...@googlegroups.com, indray...@googlegroups.com, kee...@googlegroups.com, malaysianta...@googlegroups.com, musli...@googlegroups.com, mutht...@googlegroups.com, naalo...@googlegroups.com, naamt...@googlegroups.com, nallana...@googlegroups.com, namak...@googlegroups.com, namb...@googlegroups.com, namtho...@googlegroups.com, nanji...@googlegroups.com, paga...@googlegroups.com, panb...@googlegroups.com, periyarvizhippuna...@googlegroups.com, pira...@googlegroups.com, puduvai...@googlegroups.com, save-...@googlegroups.com, sira...@googlegroups.com, Tamil2...@googlegroups.com, tamila...@googlegroups.com, tamil...@googlegroups.com, tamil...@googlegroups.com, tamilmusl...@googlegroups.com, tamiln...@googlegroups.com, thamil...@yahoogroups.com, thamiz...@googlegroups.com, thamizhe...@googlegroups.com, thami...@googlegroups.com, thamizh...@googlegroups.com, thami...@googlegroups.com, thantha...@googlegroups.com, thiru-th...@googlegroups.com, thiruma...@googlegroups.com, unita...@googlegroups.com, vijaymakk...@googlegroups.com, maarimuthu pazhani, mintamil, tamil_...@googlegroups.com, tamilmanram, உலகத்தமிழ், தமிழாயம்

எகிப்து நாட்டில் 2100 ஆண்டுகள் பழைமையான தமிழி (அ) பழந்தமிழ் எழுத்துரு பொறிக்கப்பட்ட பானை ஓடு!

எகிப்தின் செங்கடல் கடற்கரையில் பழங்கால துறைமுகமான குவாசிர்-அல்-காதிமில் கிடைத்த பழந்தமிழ் எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓட்டின் ஒளிப்படத்தை நீண்ட நாட்களாக தேடி கொண்டிருதேன். தொல்லியல் ஆய்வாளரும் பேராசிரியருமான திரு க. இராஜன் அவர்களின் "தொல்லியல் நோக்கில் சங்ககாலம்" என்ற புத்தகத்தில் அந்த "கணன் (அ) கண்ணன்" பானை ஓட்டின் எழுத்துரு ""கோட்டுருவமாக"" வரையப்பட்டிருந்தது. மற்றபடி வேறு எங்கும் அந்த ஒளிப்படம் குறித்த தகவல் இல்லை. அந்த பானை ஓட்டின் ஒளிப்படத்தை பலரிடம் கேட்டும் கிடைக்கவில்லை. ஒருவேளை அவர்களிடமும் இல்லையா என தெரியவில்லை.

சரி 1978 மற்றும் 1982 க்கு இடையில் மூன்று கட்ட அகழ்வாராய்ச்சிகளை மேற்கொண்ட சிகாகோ பல்கலைக்கழகத்தின் ஓரியண்டல் கல்வி நிறுவனத்தின் (Oriental Institute of the University of Chicago)டொனால்ட் எஸ். விட்காம்ப் (Donald S. Whitcomb) மற்றும் ஜேனட் எச். ஜான்சன் (Janet H. Johnson) ஆகியோரை மின்னஞ்சல் ஊடாக தொடர்புகொண்டேன். சில நாட்களிலேயே Janet Johnson அவர்களிடமிருந்து பதில் வந்தது. அந்த படத்தினை அனுப்பிவைத்திருந்தார். அவருக்கு என் நன்றி. அந்த ஒளிப்படம் உங்களின் பார்வைக்கு.

-முத்தமிழ்-
...

மியோஸ் ஹார்மோஸ் (இன்றைய குவாசிர்-அல்-காதிம்) - எகிப்து [Myos Hormos (present-day site of Quseir al-Quadim)] - Egypt

கணன், சாதன்

எகிப்தின் செங்கடல் கடற்கரையில் ரோமானிய குடியேற்றத்துடன் கூடிய பழங்கால துறைமுகமான குவாசிர்-அல்-காதிமில், டொனால்ட் எஸ். விட்காம்ப் (Donald S. Whitcomb) மற்றும் ஜேனட் எச். ஜான்சன் (Janet H. Johnson) ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில், சிகாகோ பல்கலைக்கழகத்தின் ஓரியண்டல் கல்வி நிறுவனம் (Oriental Institute of the University of Chicago) 1978 மற்றும் 1982 க்கு இடையில் மூன்று கட்ட அகழ்வாராய்ச்சிகளை மேற்கொண்டது. இது எகிப்திலுள்ள குவாசிர் நகரத்திற்கு 8 கி.மீ வடக்கே உள்ளது. கிரேக்க குறிப்புகளில் வரும் “மியோஸ் ஹார்மோஸ் (Myos Hormos) என்ற இடமாக அடையாளப்படுத்தப்படுகின்றது.

இங்கு தமிழி எழுத்துப் பொறிப்புள்ள இரு பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இவற்றில் “கணன் [kanan (or) kannan]”, “சாதன் [catan (or) cattan (or) chatan]” என்ற எழுத்துப் பொறிப்புகள் உள்ளன. இவை கண்ணன், சாத்தன் என்ற பெயர்களை உடைய வணிகர்களைக் குறிப்பிடுகின்றன. இவை பொ.ஆ. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. ரோமானியர் காலத்தில் சிறந்து விளங்கிய துறைமுகமாகவும், சங்ககாலத் தமிழகத் துறைமுகங்களுடன் வணிகத்தொடர்பு கொண்டவையாகவும் இருந்துள்ளது.

...
tb1.jpg
tb2.jpg
tb3.jpg
Reply all
Reply to author
Forward
0 new messages