gig economy: noun – a labour market
characterized by the prevalence of short-term contracts or freelance work as
opposed too permanent jobs. “working in the gig economy means constantly being
subjected to last-minute scheduling. Etymology.com இல்
- "light, two-wheeled carriage, usually drawn by one horse" (1791),
also "small boat," 1790, perhaps imitative of bouncing. There was a Middle
English ghyg "spinning top" (in whyrlegyg, mid-15c.), also "giddy girl" (early
13c., also giglet), from Old Norse geiga "turn sideways," or Danish gig "spinning top." Similar to words in
continental Germanic for "fiddle" (such as German Geige); the connecting sense might be "rapid or
whirling motion."
என்று போட்டிருக்கிறார்.
spinning top என்பதைப் பழகுதமிழில் பம்பரம் என்கிறோம். நூலைச் சுற்றிச்
சொடுக்கியவுடன் சுழன்றவண்ணம் அது தரையில் இறங்குகிறது. பின் சுற்றிக்கொண்டே தரையில்
ஓரளவு பரவுகிறது. சுற்றலோடு வலயம் போடுதலையும் செய்கிறது. தன்விசை குறைந்து
சூழ்விசை கூடும்போது அதன் சுற்றுவேகம் குறைந்து கொஞ்சஞ்கொஞ்சமாய் அதன்
தொய்ந்துபோய், குப்புறக் கவிழ்கிறது.
இந்தப் பொருளியல் அப்படிப் பம்பரம் போல் இயங்குவதால் gig economy என்று பெயரிட்டிருக்கிறார்.
தமிழில் பம்பரத்திற்குக் கறங்கு என்றும் பெயருண்டு. ”கிறுகிறு”
என்று வருகிறதாய்ச் சொல்கிறோமில்லையா? கறங்கு மயங்கி விழுவதைக் கிறங்குதல்
என்றுஞ் சொல்லுவோம்.
”பம்பரத்துக் ....... கறங்கியபடிய” என்பது கந்தபுராணம் திருநகரப் 28).
கறங்கு என்ற சொல் whirling, gyration போன்ற சொற்களைக் குறிக்கும். ஆங்கில gyration இந்த gig-ஓடும் நம் தமிழ்க் கறங்கோடும் தொடர்புகொண்டது. இது காற்றாடியையுங்
குறிக்கும். “கறங்குபோல விற்பிடித்த காலதூதர் கையிலே” என்பது கம்பராமாயணம் யுத்தகாண்டம் 1258 ஆம்
பாடலில் வரும்.
என்னைக்கேட்டால், கறங்குப் பொருளியல் என்பது gig
economyக்குச் சரிவரும்.
அன்புடன்,
இராம.கி.
Sent: Wednesday, March 01, 2017 7:54 PM
Subject: Re: [தமிழ் உலகம்] Gig economy
மிக்க நன்றி.
இன்னும் நிறைய ஆங்கிலச் சொற்கள் உள்ளன.
அதுவும் நாடாளுமன்றத்தில் தற்போது வரவு செலவுத் திட்ட அறிக்கை பற்றிய விவாதம்
நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இது பத்து நாட்களுக்குத் தொடரும்.
புதுச் சொற்கள் நிறையவே வரும். உடனடியாக மொழிபெயர்க்கவேண்டும், ஆங்கில
அகராதிகளைப் பார்த்து உடனுக்குடன் மொழிபெயர்க்க வேண்டும்.
குறுதி இணைச் சொல் கிடைத்தால் அனுப்பி வையூங்கள்.
அன்புடன்
பழனி, சிங்கை
--
You received this message because you are
subscribed to the Google
Groups "tamil_ulagam" group.
To post to this
group, send email to
tamil_...@googlegroups.comTo unsubscribe from this
group, send a blank email to
tamil_ulagam...@googlegroups.comFor
more options, visit this group at
http://groups.google.com/group/tamil_ulagam?hl=en---
You received this message because you are subscribed to the Google Groups
"tamil_ulagam" group.
To unsubscribe from this group and stop receiving
emails from it, send an email to
tamil_ulagam...@googlegroups.com.
For
more options, visit
https://groups.google.com/d/optout.