நாவிதர் மற்றும் மருத்துவர் எனப்படுகின்ற சாதியினர், அம்பட்டர் என்ற பெயரில் அந்தணப் பிரிவில் இருந்துள்ளனர்.
இன்றைக்கும் வைணவக் கோயில்களின் பூசாரிகள் 'பட்டர்' என்றே அழைக்கப் படுகின்றனர்.
அமாத்தியரான அம்பட்டர்கள் குறித்து தொல்காப்பிய உரையாசிரியர் இளம்பூரணர், "அமாத்திய நிலையும் சேனாபதி நிலையும் பெற்ற அந்தணாளர்க்கு அரசர் தன்மையும் வரைவில் வென்றவாறு" என்கிறார்.
ஊர்ப் பார்ப்பான்
அகநானூற்றில் "வேளாப் பார்ப்பான் வாளரந் துமித்த வளை" என்ற 24 ஆம் செய்யுளுடக்கு, அந்நூல் பழைய அரும்பதவுரைக்கார்ர் – வேளாப் பார்ப்பான் – யாகம் பண்ணாத ஊர்ப் பார்ப்பான்; இவர்களுக்குச் சங்கறுக்கையுந் தொழில்" என்று எழுதியுள்ளார்.
இதனால், வைதிகச் சடங்கு நடத்தாத பிராமணரை "ஊர்ப்பார்ப்பான்" என்பது அக்கால வழக்கென்பது தெரியலாம். ஊர்ப்பார்ப்பான் என்பதனால், இவர்கள் மேற்கொண்ட தொழில், நகரவதிகார முதலிய இலௌகிக விருத்திகள் என்று சொல்லலாம். முதலிராசேந்திரன் காலத்தில் வரையப்பட்ட (தீர்க்காலிதிரு) வல்லத்துச் சாஸனமொன்று – ஊரார் சொல்ல எழுதினேன்; இவ்வூர் "ஊர்க்காணத்தான்" ஊர்ப்பார்ப்பான் பரதயன் கிழவன் ஈசுவரசன்மன்"(S,I.I.IV-90)எனக் கூறுவது மேலே நான் கூறிய கருத்தை நன்கு விளக்குதல் காணலாம்.
அகநானூற்றுக் கூற்றால், "சங்கறுப்ப தெங்கள் குலம்" என்று கூறிய நாக்கீரர், ஊர்ப்பார்ப்பார் குலம் இத்தகையது போலும். "சிறந்த கொள்கையொடு அணிவளை போழுநர்" என்று சாத்தனார் மணிமேகலையில் கூறுவது இவ்வூர்ப் பார்ப்பாரது குலவொழுக்கத்தை நினைத்தென்று கருத இடமுண்மையுங் காண்க.
ஐயங்கார்
பூணூல் அணியும் பழக்கம் ஆரியர்களுடையது அல்ல. ஆப்பிரிக்காவின் எகிப்பது நாட்டிற்கு ஆரியர்கள் செல்வதற்கும் முற்பட்ட காலத்தைச் சேர்ந்த பாறை ஓவியங்கள் கிடைத்துள்ளன. அதில் உள்ள உருவங்கள் சிலவற்றில் பூணூல் போன்று மார்புக்குக் குறுக்கே வரையப்பட்டுள்ளது. அது பூசாரிகளின் ஓவியங்களாக இருக்கலாம் என அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், பூணூல் அணிதல் என்பது சூரிய வழிபாடு தொடர்புடைய ஒரு மதச் சின்னம். இஸ்லாமியர்கள் தலையில் குல்லாய் அணிவது போல இது ஒரு மதச் சின்னம் அவ்வளவே. இது குறித்து விரிவான விளக்கங்கள் உண்டு. மேலும் தமிழகத்தில் (ஆரியர்கள்) பார்ப்பனர்கள் மட்டும் பூணூல் அணிபவர்கள் அல்ல. தொல்காப்பியம் சொல்லுகின்ற முதல் மூன்று வர்ணத்தவருமே பூணூல் அணிபவர்கள்தான். இன்றைக்குத் தாழ்த்தப்பட்டவர்களாகச் சொல்லப்படும் பறையர் சமூகத்தவர், தாங்கள் பூணூல் அணிவது குறித்து இன்றுவரையிலும் பாடிவரும் பாடல்களை வரலாறு தெரிந்தவர்கள் அறிவார்கள்.
"முந்திப் பிறந்தவன் நான்
முதல் பூணூல் தரித்தவன் நான்
சங்குப் பறையன் நான்
சாதியில் மூத்தவன் நான்"
- என்கிறது அப்பாடல்.
மேலும், மரபாக இருந்துவரும் ஞானவெட்டியார் பாடல்கள்,
"... ... பூணூலந்
தரணிமுத லென்பறையில் தழைத்த தாண்டே"
"பூணூல் தரித்துக் கொள்ளுவோம் - சிவ சிவ
பொறியுமைம் புலனையுந் தொழுது கொள்ளுவோம்
வேண விருதுகளும் விகிதமாய்
வெண்குடை, வெண்சாமரமும் பிடித்துக் கொள்வோம்"
"பூணூல் பிறந்ததெங்கே -சிவசிவ"
|
ஆரிய வேதங்கள் |
வேதங்களிற் கூறப்படும் தேவர்கள், தயஸ், வருணன், மித்திரன், ஆதித்தர், சூரியன், சாவித்தர், பூசன், விஷ்ணு, அஸ்வினிகள், உசாக்கள், இரதி, இந்திரன், உருத்திரன், மருத்துவர், வாயு, அல்லது, வாதா, பிருதுவி, அக்கினி, பிரகஸ்பதி, சோமன், சிந்து ஆறு, விபாஸ் ஆறு, சுதுட்ரி (Sutlej) ஆறு, சரஸ்வதி (ஆறு) முதலியோராவர். தேவுக்களும் முன்பு இறப்பவர்களாயிருந்தார்கள். சோம இரசத்தைப் பருகி அவர்கள் இறப்பை ஒழித்தார்கள். தெய்வங்கள், வடிவில் மனிதனைப் போன்றனவே. தீக்கடவுளின் நாக்கும் உறுப்புக்களும் நெருப்பின் சுவாலைகள். சிலர் போர்க்கடவுளர். இந்திரன், இவ்வகையினன். கடவுளர், குதிரை அல்லது வேறு விலங்குகள் பூட்டிய தேரில் வானத்தில் சவாரி செய்கிறார்கள். அவர்களுடைய உணவு, பால், நெய், இறைச்சி, தானியம் முதலியன. அவர்களுக்கு அவ்வுணவு பலிகள் மூலம் கிடைக்கின்றன. அக்கினி அவர்களுக்கு அவைகளைக் கொண்டுபோய்ச் சேர்க்கிறான். சில சமயங்களில் அவர்கள் தமது தேர்களில் வந்து பலிகளை ஏற்கின்றனர். அவர்களின் இருப்பிடம் வானத்திலுள்ள சுவர்க்கம். அவர்களுக்கு ஆற்றல் மிக உண்டு. அவர்களை மகிழ்விப்பதால் அவர்கள் மக்களுக்கு நேரும் இடையூறுகளைப் போக்குகின்றனர். உலகிலுள்ள எல்லா உயிர்களின் மீதும் அவர்கள் அதிகாரம் செலுத்துகின்றனர். |
|
உரிய என்ப" (தொல்.செய்.106) என்னும் தொல்காப்பியச் சூத்திரம் விளக்குகின்றது. இதனால் தமிழரின் சமய சம்பந்தமான கருத்துக்கள் மறை, வேதம் எனப்பட்டன. வேதம் என்பதற்கும் மறை என்னும் பொருளேயாகும். வேதம் என்னும் சொல், மற்றைய ஆரிய மக்களின் மொழிகளிற் காணப்படாமையால், அது தமிழ்ச்சொல் என்பது நன்கு துணிப்படும். வேதம் என்னும் சொல்லுக்கு உண்மையான அடியைக் காணமாட்டாத ஆரிய மக்கள், அதற்கு அடி, 'வித்' எனக் கூறலாயினர். தமிழிலிருந்து வேதங்களிற் சென்று ஏறியுள்ள பல தமிழ்சொற்கள் உள்ளன என்பதைக் கால்டுவெல், கிற்றெல் முதலிய ஆராய்ச்சி வல்லார் காட்டியுள்ளார். "தமிழ்ச் சொற் பிறப்பு ஒப்பியல் அகராதி" என, நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் வெளியிட்டு வரும் நூலில், தமிழிலிருந்து வடமொழியில் சென்று வழங்கும் பல தமிழ்ச் சொற்களுக்குத் தப்பாக வடமொழி மூலங்கள் கூறப்பட்டிருத்தல் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. இன்று தமிழில் வழக்கொழிந்த அரிய தமிழ்ச்சொற்கள் பலவற்றை மலையாளம், கன்னடம், தெலுங்கு, துளு முதலிய மொழிகள் காப்பாற்றி வைத்திருக்கின்றன. அவ்வாறே ஆரிய மொழியும் வழக்கிறந்த பல தமிழ்ச் சொற்களைக் குறிக்கும் சொற்கள், அப்பொருளின் வெவ்வேறு இயல்புகளைக் குறிக்கும் சொல் மூலங்கள் வாயிலாகப் பிறந்து வழங்கின. அவற்றுட் சில தமிழில் வழக்கிறந்துபோக, மற்றவை சில வடமொழியிற் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, பாய் என்னும் அடியாகப் பரி என்னும் சொல்லும், அசை என்னும் அடியாக அசுவம் என்னும் சொல்லும் பிறந்தன. அசுவம் என்னும் சொல் தமிழில் வழக்கிறந்தது. அது இன்று வடமொழியிற் காணப்படுதலின், அது வடமொழிச் சொல் என்று கருதப்படுகின்றது. இவ்வாறே வேதம் என்பது மறை என்னும் பொருளில் வழங்கிய தமிழ்ச் சொல் என்பது திண்ணம். இப் பெயரையே ஆரியர் தமது பாடல்களுக்கு இட்டு வழங்கினர். வேதங்களில் மறைத்தற்குரியது யாதும் இன்மையால், அப்பெயர் இடுகுறிப்பெயராக அவைகளுக்கு இடப்படலாயிற்று. தமிழர் தமது சமயத் தொடர்பாக வழங்கிய பெயர்களை, ஆரிய மக்களும் ஆண்டமையின் பிற்காலங்களில் பெரும் மயக்கம் உண்டாவதாயிற்று. |
|
வேதபாடல்கள் எவ்வாறு பயன்படத்தக்கன |
இந்திரன் பெரிய கடவுளாயிருந்தபோதிலும் விலிஸ்தெங்கா என்னும் ஓர் அசுரப்பெண், அவனைக் கடவுளர்களின் இடத்திலிருந்து தன்னிடத்துக்கு மந்திரத்தால் இழுத்தாள். பின்பு அவன் பெண்களினிடையில் பெண்வடிவிலும். ஆண்கள் இடையில் ஆண் வடிவிலும் இருந்தான். மற்றக் கடவுளர்களைப் போல, இந்திரன் குணங்களில் மாத்திர மல்லாமல், வடிவிலும் மனிதனைப் போலவே இருந்தான். சௌத்திராமணி என்னும் கிரியையில் அவன் வடிவம் செய்து வைக்கப்படுகின்றது. |
ஆரியரின் வருணன் என்னும் கடவுட்பெயர், விரி என்னும் அடியாகப் பிறந்ததெனக் கூறுவர் கோவின் என்னும் ஆசிரியர்.1 |
ஆரியர் இவ்வாறு செய்யும் யாகங்களுக்கு அசுரர் எதிராக இருந்து வந்தனர். அவர்கள் அவ்வகை யாகங்கள் வலிமையால் தடை செய்ய முயன்று வந்தார்கள். யூபத்தில் மிருகங்கள் கட்டப்பட்டதும், அசுரர் அதனை நோக்கி வந்தார்கள். ஆரியர் யாகச்சாலையைச் சுற்றி ஒன்றன்பின் ஒன்றாக மதில்போல நெருப்பை வளர்த்து. அசுரரை அணுக முடியாமற் செய்தனர். இராவணனாதியோரும். ஆரிய முனிவர்கள் செய்யும் யாகங்களை அழித்து வந்தார்கள் என இராமாயணத்திற் படிக்கிறோம். |
|
-விட்டுணு புராணம். |
|
கணவன் இன்னொரு தேசத்தில் இறந்தானானால் மனைவி, அவனுடைய செருப்பை எடுத்து மார்போடு வைத்துக் கட்டிக்கொண்டு நெருப்பில் விழிக்கடவள்
|
ஆஹம சிற்ப சதஸ்?
ஆஹமம் என்றால் விக்ரகங்களை... தெய்வ சிற்பங்களை எப்படியெல்லாம் வழிபடவேண்டும் என்கிற சூத்திரங்களைச் சொல்லிக் கொடுப்பதுதான் ஆஹமம்.
சிற்பம்?
இன்றும் நாம் கோயில்களுக்குச் செல்கையில் கர்ப்ப கிரகத்தில் பார்க்கும் தெய்வச் சிற்பங்கள் தமிழ்நாட்டுக்கே உரிய தனிச் சிறப்பு. நீங்கள் வட இந்தியக் கோயில்களுக்கு சென்றால்கூட நமது தென்னிந்திய சிற்பங்களைப்போல நுட்பமும், அழகும் ஒரு சேர வாய்த்திருத்தல் கடினம்.
பழங்கால மன்னர்கள் ஆங்காங்கே பிரம்மாண்டமாக கட்டி வைத்த கோயில்களின் கோபுரங்களில்கூட சிறு சிறு சிற்பங்கள் தமிழர்களின் நுண்கலைத் திறத்தை எடுத்துக் காட்டும்.
இப்படிப்பட்ட சிற்பங்களையும், அவைகளை வழிபட வகுக்கப்பட்ட ஆஹமங்களையும் பற்றிய பெருமித உணர்வை எழுப்பிட வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது தான் ஆஹம சிற்ப சதஸ்.
இந்த அமைப்பை நடத்தவேண்டியதற்கான பொறுப்பை காங்கிரஸ் முக்கியஸ்தரான சா. கணேசனிடம் ஒப்படைத்தார் மகாபெரியவர்.
ஆஹம சிற்ப சதஸ் அமைப்பு என்ன பண்ணியது?
கோயில் கோயிலாக போவோம். ஆலய தத்துவ பிரச்சாரம். பூஜாதத்துவ பிரச்சாரம். இவை இரண்டும்தான் நோக்கம். கோயிலின் பிரகாரத்தில்தான் கூட்டம் நடக்கும்.
கோபுரத்தின் அழகு. பிரகாரங்களின் அழகு. மதில் சுவர்களின் அழகு. கோயிலின் படிகளில் படிந்த அழகு, கர்ப்பக்ரஹத்தில் தெய்வச் சிற்பத்தின் தேக அழகு இவற்றைப் பற்றியெல்லாம் விளக்குவோம்.
இந்த இடத்தில் ரிக் வேதத்தில் சொல்லப்பட்டிருக்கும் செய்தியை மகாபெரியவர் என்னிடம் சொன்னதுபோல நான் உங்களிடமும் சொல்கிறேன்.
"ஆதிகாலத்தில்... அதாவது சிருஷ்டிக்கு முன்னால் உலகம் உருவம் இல்லாமல் இருந்தது. அப்போது பகவான் ஒரு தச்சனாக வந்தான். உலகத்துக்கு உருவமும், வடிவமும் கொடுத்தான். பகவான் உலகத்தை 'விஸ்வகர்மா'வாக வந்து வடிவமைத்ததுபோல... அவருக்கு நாம் சிற்பங்களைச் சமைத்து வைத்தோம். அதனால் சிற்பங்கள் எல்லாம் 'விஸ்வகர்மா'வாக வந்து பகவான் செய்தவற்றின் தொடர்ச்சிதான். எனவே, நாம் சிற்பங்களை பகவானாக பார்த்து ஆராதிக்கவேண்டும்" என ஆஹம சிற்ப சதஸ்-ஸின் கூட்டங்களில் பேசினோம். நாங்கள் மட்டுமல்லாது ஆஹமங்கள் அறிந்த பட்டாச் சார்யார்களாகவும் அழைத்து வந்த அக்கூட்டங்களில் பேச வைத்தோம்.
இந்த இறை இயக்கம் 15 ஆண்டுகளாய் வெற்றிகரமாக நடந்தது.
திருவிடைமருதூர் சத்திரத்தில் நானும், அவரும் ஒரு நாள் தங்கியிருந்தபோது அந்த மனக்குறையை என்னிடம் எடுத்து வைத்தார். "ஏன் தாத்தாச்சாரியாரே - நாம எவ்வளவோ சபை நடத்துகிறோம். உபன்யாஸம் பண்றோம். ஹோமம் பண்றோம். ஆனா...
பிராமணாளுக்கும், மத்தவாளுக்கும் இதனால நெருக்கம் உண்டாகியிருக்கோ? இல்லியே... அப்படியானா நம்மகிட்டதான் ஏதோ தப்பு இருக்கு. இவா ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கிறா மாதிரி ஏதாவது பண்ணணுமே..." என்ற மகாபெரியவரிடம் நான் கொஞ்சம் ஆலோசனைகளைத் தந்தேன்.
நீண்ட நேரமாக பேசிக் கொண்டிருந்தோம். இவா ரெண்டு பேரையும் இணைக்க கடவுள்தான் பாலம். கடவுளை மட்டும் வச்சிண்டு சேர்க்கறது எப்படி? ரெண்டு பேருக்கும் தெரியக்கூடிய பாஷையை எடுத்துப்போம்.
தமிழ்தானே!
ஆழ்வார்களோ பாசுரம், நாயன்மார்களோட பாடல்கள். இன்னும் சுலபமா திருப்பாவை, திருவெம்பாவை இது ரெண்டையும் வச்சே சேர்க்க முடியாதோ?"
திருவிடைமருதூர் சத்திரத்தில் மகாபெரியவர் என்னிடம் இந்த திட்டத்தை தெரிவித்தபோது அவருடைய கண்களில் ஞானத்தோடு நம்பிக்கையும் மின்னியது.
"இதப்பாரும் எல்லா கோயில்கள்லயும் திருப்பாவை திருவெம்பாவை உற்சவம் நடத்துவோம். இதுக்கு முன்னாடி நாம நடத்தின உபன்யாஸங்களைவிட இது இன்னும் நன்னா போய்ச் சேரும். ஏன்னா - நாம எடுத்துண்டதும் தமிழ். சொல்றதும் தமிழ் என்ன சொல்றீர்?"
என மகாபெரியவர் கேட்டபோது, சகல ஜனங்கள்மீதும் அவருக்கு இருக்கும் ஈர்ப்பு எனக்குப் புலப்பட்டது.
நாங்கள் இப்படி பெரிய திட்டம்பற்றி சத்தமாக சிரித்துப் பேசிக் கொண்டிருந்தபோதும்... சத்திரத்தில் இருந்த மேலும் சிலருக்கு அது புரியவில்லை. ஏன் அவர்கள் செவிடா என்று கேட்காதீர்கள்.
"
"
"நீங்களும் மகா பெரியவரும் ஏன் சமஸ்கிருத்திலேயே பேசிக்கொள்கிறீர்கள்? இதை நாங்கள் கேள்வி கேட்டால்... ஸ்நானத்தை முடிச்சுப் போடுகிறீர்கள். பேசிக் கொண்டிருப்பதற்கும் குளிப்பதற்கும் என்ன சம்பந்தம்...?"
...மறுபடியும் புரியாமல் என்னிடம் கேட்டார்கள். சத்திரத்தில் இருந்த சிலர் அன்று நான் அவர்களுக்கு பதில் சொல்லிவிட்டேன். அந்த பதிலை உங்களுக்குச் சொல்வதற்கு முன்... மகாபெரியவர் திருப்பாவை ...திருவெம்பாவை என்னும் கருத்துருவை தேர்ந்தெடுத்ததை அவர் மூலம் கேட்ட வழியில் சொல்கிறேன்.
தமிழ் மாதங்களில் ஆடி மாதம் முதல் மார்கழி வரையிலான ஆறு மாதங்கள் தட்சணாயணம் என அழைக்கப்பெறும். அதாவது சூரியன் தென்திசை வழியாக பயணிக்கும் காலம் என இதற்குப் பொருள். (அயணம் என்றால் வழி என இங்கே அர்த்தப்படும்.!
தை முதல் ஆனி வரையிலான மீதமுள்ள ஆறு மாதங்களும் உத்தராயணம் என அழைக்கப்பெறும். அதாவது சூரியன் வடதிசை வழியே பயணிக்கும் என பொருள்.
தட்சணாயண காலத்தில் பகல்பொழுது சுருக்கமாகவும், ராப்பொழுது அதிகமாகவும் இருக்கும்.
உத்தராயண காலத்தில் ராப்பொழுது சுருங்கி பகல் பொழுது விஸ்தாரமாகும்.
இப்படிப்பட்ட தட்சணாயண காலத்தின் விடிகாலைகளில் தமிழச்சிகள் தங்களது தோழிமார்களை கூட்டிக்கொண்டு நதிக்கரைக்குச் செல்வார்கள். குளிர் கூத்தாடும் வைகறைப் பொழுதில் நதியோர சிலுசிலு நடுக்கத்தையெல்லாம் தங்களது மென்மையான பாதங்களால் மிதித்து ஈர வஸ்திரங்களோடு 'பாவை தெய்வம்' பேரை சொல்லி நீராடி தொழுதார்கள் தமிழச்சிகள்.
இப்பண்பாடு நீட்சியாகி... தங்களுக்கு சிறந்த கணவன் வேண்டி கடவுளை தொழுவதற்காக விடிகாலைகளில் நீராடினார்கள்.
இந்த நிலையிலிருந்தும் வளர்ந்து... 'நமது கோரிக்கைகளை விடிகாலையில் கடவுளிடம் சொல்கிறோம். நாம் எழுந்திருந்தது போல் கடவுளும் எழுந்திருப்பாரோ அவரை முதலில் எழுப்ப வேண்டும்' என எண்ணிய பக்தைகள் முதலில் கடவுளை எழுப்புகிறார்கள்.
கடவுளை மனித வழியில் அணுகுவது என்ற கலாச்சாரம் இது. பிற்பாடு... கடவுளையே கணவனாக அடையவேண்டும் என்ற 'நாயக' நாயகி பாவம்' வரை வளர்ந்தது இந்தப் பண்பாடு.
தொடர்ந்து அதிகாலைகளில் நீராடி... கடவுளை எழுப்புவதற்காக, கட்டுப்பாட்டோடு இதில் கலந்துகொள்ள வேண்டும் என்பதற்காக நோன்பு, அதாவது விரதமாக இதை அனுஷ்டிக்க ஆரம்பித்தனர். பாவையர் மட்டுமே பங்கு பெற்ற பக்தி நோன்பு, ஆதலால் 'பாவை நோன்பு' ஆயிற்று.
இத்தகைய தூய தமிழ் கலாச்சாரத்தைத் தான் சைவத்தின் மாணிக்கவாசகப் பெருமானும், வைணவத்தின் ஆண்டாள் சுடர்க்கொடியும் பக்தி இலக்கியங்களில் பயன்படுத்தினார்கள்.
திருப்பாவை, திருவெம்பாவை என தமிழ்ரசம் சொட்டும் பக்திப்பாக்கள் செய்தார்கள்.
இத்தகைய தமிழ் பாக்களைத்தான் சைவ-வைஷ்ணவ ஒற்றுமைக்கும், பிராமணர்-பிராமணர் அல்லாதார் நெருக்கத்துக்கும் பயன்படுத்த நினைத்தார் மகாபெரியவர்.
தமிழை, தமிழ்ப்பண்பாட்டு அடிப்படையிலான இலக்கியத்தை 'பாவைமாநாடு' என்ற பெயரில் உற்சவமாக தொடங்கி வைத்தார் மகா பெரியவர். அப்படிப்பட்டவர் ஏன் என்னோடு உரையாடும்போது சமஸ்கிருதத்தில் உரையாடுகிறார் என்ற சந்தேகம் உங்களுக்குள் உயிர்த்திருக்கும்.
கும்பகோண மடம்... சூரியன் வானத்தின் மேற்குப் பக்கமாய் மேய்ந்து கொண்டிருந்தான். மஞ்சள் நிறக் கதிர்கள் பூமியின் மீது பொலபொலவென உதிர்கின்றன. ஒருவிதமான ஊதல் காற்று கும்பகோணத்தையே குளிப்பாட்டிக் கொண்டிருந்தது.
அந்த நாளுக்கான மாலைநேர பூஜைகளுக்காக மடம் தயாராகிக் கொண்டிருந்தது. மகாபெரியவர் ஸ்நானம் முடித்திருந்தார்.
மதியம் சிறிது நேரம் தூங்கினால் கூட 'மடி' அதாவது ஆச்சாரம் போய்விடும். மறுபடியும் குளிக்கவேண்டும். அந்த வகையில் குளித்து முடித்துவிட்டிருந்தார் மகாபெரியவர்.
அந்த நேரமாய் பார்த்து ஒரு சில பக்தர்கள் அவரைப் பார்த்தே தீருவது, அருளாசி பெற்றே தீருவது என்ற முடிவில் காத்திருந்தார்கள். அவர்களில்... நாட்டுக்கோட்டை செட்டிநாட்டிலிருந்து வந்திருந்த அருணாசலம் என்ற பக்தர்... மகாபெரியவரை பார்த்து அவரிடம் அருள்மொழிகள் வாங்கிவிட்டுத்தான் போவது என்ற உறுதியோடு இருந்தார்.
அந்த நேரம் நானும் மடத்தில் இருந்ததால், அருணாசலத்திடம் சொன்னேன்... 'இதோ பாரப்பா, இன்றைக்கு நீ மகாபெரியவரை பார்க்க முடியாது. நாளை வாயேன்..' என்றேன்.
'இல்லை சாமி இப்பவே அவரை பார்க்கணும்' என்றார் பக்தர்.
எங்கள் பேச்சுச் சத்தத்தை கேட்ட சிலர்... விஷயத்தை மகாபெரியவரிடம் சொல்ல அவர் என்னை உள்ளே அழைத்தார்.
போனேன். கேட்டார் சொன்னேன்.
'இதோ பாரும் தாத்தாச்சாரி... அவரை பாக்கறதுக்கு நேக்கு ஒண்ணுமில்லை. பாத்தால் ஏதாவது கேப்பார். பதிலுக்கு நான் தமிழ் பேசவேண்டிவரும். நோக்குதான் தெரியுமே. தமிழ் பேசினால் எனக்கு தீட்டு. மறுபடியும் ஸ்நானம் பண்ணணும். பூஜைக்கு நேரமாயிடுத்துல்யோ... அதனால் நான் மௌனம் அனுஷ்டிக்கிறேன்னு சொல்லி அனுப்ச்சிடுங்கோ..." என என்னோடு சமஸ்கிருத சம்பாஷணை நிகழ்த்தினார் மகாபெரியவர்.
நானும் வெளியே வந்தேன். நான் சொன்னதுதானப்பா... சுவாமிகள் மௌனத்தில் இருக்கார். நாளைக்கு வாயேன்.. என்றேன்.
'அப்படியா? தெய்வத்தை இன்னிக்கே பார்க்கலாம்னு எதிர்பார்ப்போட வந்தேன். சரி...
நாளைவரை ஏதும் சத்திரத்தில் தங்கிவிட்டு வர்றேன்' என தாய்மொழியாம் தமிழில்'
மகாபெரியவரை தெய்வமாக மதித்து ஆதங்கப்பட்டுக் கொண்டே சென்றார் அருணாசலம்.
அன்பு அரங்கர்க்கு!
வணக்கம்.
உங்களிடம் ஒரு சில கேள்விகளைக் கேட்க விரும்புகிறேன்.
கேள்வி – 1.
வேதத்தின் கருத்துகள் பதியப்பட்டிருப்பதாக க் கூறுகின்ற, சங்க இலக்கியத் தொகை நூல் "பரிபாடல்" எந்த நூற்றாண்டைச் சார்ந்த்து?
கேள்வி – 2
தொல்காப்பியம் கூறும் கடவுளர்கள் எல்லாம் வேதக்கடவுளர்கள் என்றால், தொல்காப்பியக் காலத்தில் வடமொழி எழுத்து வடிவம் கொண்டிருந்ததா?
கேள்வி – 3
"பரிபாடலிலே, "அந்தணர் அருமறைப் பொருள்" என்றும், "அந்தணர் அருமறை" என்றும் "ஒரு சார் அறத்தொடு வேதம் புணர் தவம் முற்றி...திறத்தின் திரிவு இல்லா அந்தணர்"
என்றும் கூறப்பட்டுள்ளது என்றால், பரிபாடலின் காலத்தில், வடமொழி தமிழகத்தில் பேசப்பட்டதா?
கேள்வி - 4
"நான்மறைக் கேள்வி நவில்குரல் எடுப்ப
ஏம இன்துயில் எழுதல்"
என்னும் வரிகள், வேதபாடசாலையைத் தான் குறிபிடுகிறது! என்று எவ்வாறு நிறுவுகின்றீர்கள்?
கேள்வி – 5
எழுத்து வடிவமும் இல்லாத ஒரு மொழி. இலக்கணமும் இலக்கியமும் இல்லாத ஒரு குடியின் கருத்துகள், இலக்கிய வளமும் இலக்கண நலமும் பெற்று, நிலைத்த
குடியினயினரான தமிழர் இலக்கியத்தில் இடம் பெற்றிருக்கின்றன! என்று ஓயாமல் க்குறிக் கொண்டிருப்பது நகைப்பிற்குரியதாகத் தெரியவில்லையா?
கேள்வி – 6
வேதம் எப்போது எழுதப்பட்டது? எப்போது எழுதி முடிக்கப்பட்டது? எழுதியது யார்? அவற்றின் உள்ளடக்கம் எவ்வளவு?
கேள்வி – 7
தமிழில் உள்ள கருத்துகளைக் கேட்ட பேச்சு மொழி வழக்கினர், பிற்காலத்தில் தங்கள் மொழியில் சேர்த்திருக்கலாம் அல்லவா?
கேள்வி – 8
தற்போது எழுத்து வடிவம் பெறாத மொழியைப் பேசும் நரிக்குறவர்கள், தங்கள் மொழி வரிவடிவம் பெற்ற பின்பு, அவர்கள் மொழியிலுள்ளவை தான் தமிழில் உள்ளன! என்று கூறினால் ஏற்றுக் கொள்வீர்களா?
மேற்காணும் கேள்விகளுக்கு சான்றுகளுடன் கூடிய பதில்களை எதிர்பார்க்கின்றேன்.
அன்பு அரங்கர்க்கு!
வணக்கம்.
உங்களிடம் ஒரு சில கேள்விகளைக் கேட்க விரும்புகிறேன்.
திரு வாசுதேவன், என்ன இது ஒரு முக்கியமான நபரின் குரல் இதுவரை
கேட்கவில்லையே என்று
நினைத்தேன். வந்துவிட்டீர்கள். ஆனால் இவ்வளவு நாள் விட்டுவிட்டு நான்
மின்தமிழிலிருந்து விலக முடிவு
செய்துகொண்டிருக்கும் இந்த வேளையில் வந்து கேள்விகளை அடுக்குகிறீர்கள்.
என்ன செய்ய? நீங்கள்
கேட்ட கேள்விகளுக்கு விளக்கமாக நான் பதில் கூறினால் அதுவே ஒரு
புத்தகமாக ஆகிவிடும். அதற்கான
பொறுமையும் நேரமும் இப்பொழுது எனக்கு இல்லை.
மேலும், இந்த இழை எழுதத்தொடங்கியதின் நோக்கம், பெரும் உழைப்பும், தம்
கொள்கைகளின்பால் ஈடுபாடும்,
அதற்காக தம் குடும்ப சொத்துக்களையே சம்பிரதாயத்தின் பொது சொத்தாக ஆக்கி
உழைத்துக்
கொண்டிருக்கும் ஒரு பெருமகனாரைப் பற்றி இணைய உலகிற்கு
சொல்வதற்குத்தான். ஸ்ரீவைஷ்ணவ
சம்பிரதாயத்தில் பெரும் பணிகள் ஆற்றிக் கொண்டிருப்பவரான ஸ்ரீ உ வே S
கிருஷ்ணஸ்வாமி
ஐயங்காரைப்பற்றித்தான் குறிப்பிடுகிறேன். ஒருவருடைய கருத்துகள் எத்துணை
முக்கியமோ அத்துணை முக்கியம்
அவரைப் பற்றிய விவரமும், நினைவும். ஏனெனில் நம்மில் பலர் ஏதோ
கருத்துகள் பஞ்சுபோல் காற்றில்
பறந்துகொண்டிருக்கின்றன, அப்படியே கையை நீட்டி எடுத்துக் கொண்டால் போகிறது
என்ற எண்ணம்
கொண்டவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒவ்வொரு கருத்தும்
சிந்திப்பவனின் எத்தகைய நோவைப் பெற்று
வெளிவருகின்றன என்பதை உணர இயலாது. இணையதளமும் இத்தகைய உழைக்காமல்
உட்கார்ந்து
வெறுமனே பலனடையும் போக்கை ஒருவிதத்தில் ஆதரிப்பதாக உள்ளது. என்
கருத்துக்களையே தங்கள்
கருத்துக்கள் போல் மற்ற தளங்களில் சென்று கூசாமல் எழுதியிருக்கும்
உதாரணங்களும் உண்டு. என்ன
செய்வது? பிச்சையிலும் இழிந்து திருட்டில் புகுந்துவிட்ட அந்த
ஆத்மாக்களைக் கண்டு அருவருப்பும், இரக்கமும்
கொள்வதை விட வேறு செயற்பாலது இல்லை. இது போகட்டும் முக்கியமற்ற
விஷயம். எனவே திரு
ஐயங்கார் எப்படி சங்க இலக்கியங்களை அணுகினார், திருமால் நெறிக்கேற்ப
அமைந்த பாடல் பகுதிகளுக்கு
எப்படி பொருள் கண்டார், அதில் எத்தகைய உண்மை உள்ளது, யாரும்
புகத்துணியாத துறையில், அந்தக்
காலத்தில் எப்படி இதனுள் புகுந்தார் என்பதையெல்லாம் காட்டத்தான் எழுத
முயன்றேன். அந்த முயற்சி தவறு
என்று உணர்த்தப் பட்டேன். சரி கடையை மூடுவோம் வாழ்க மனிதர் என்று
புறப்படலாம் என்று நினைக்கும்
போது நீர் வேறு கேள்விகளை வீசுகிறீர்? டாக்டரும் புலவருமான நீங்கள்
மிரட்டினால் சின்னவனான நான்
எங்கே போக? இருந்தாலும் என்னால் முடிந்த அளவு விடை கூற முயற்சி
செய்கிறேன்.
பரிட்சை எழுதுவதுபோல் கேள்வி கேள்வியாக எடுத்து பதில் தரலாம். ஆனால்
எனக்கு தேர்வு பரிட்சை
என்றாலே பிடிக்காது. மேலும் கால ஆராய்ச்சி, பனுவலின் அடுக்குத்தரம்,
வாய்மொழி இலக்கியம் வரிவடிவ
இலக்கியம் ஆகிய இரண்டின் ஊடாட்டம், இலக்கண இலக்கியங்களின் இணக்கமும்,
முரணும் என்று பல
படிகளில் உங்கள் கேள்விகள் போகின்றன. இவையனைத்துக்கும் நான் அலசி
ஆய்ந்து பதில் கூறினால்,
நீங்களே யோசித்துப் பாருங்கள், எனக்கு வேறு எதற்கும் நேரமே இருக்காது.
மேலும் இவற்றையெல்லாம்
நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள் என்று நான் எண்ணவில்லை. நான் என்ன
அணுகுமுறையை மனத்தில்
கொண்டிருக்கிறேன் என்றறியும் உங்கள் நோக்கத்தையே இவை சுட்டுவனவாகக்
கொள்ளலாம். அந்த
அடிப்படையிலேயே பதில் கூறுகிறேன். அதற்குமுன் உங்கள் அணுகுமுறை என்ன
என்பதைப் பற்றி நான் என்ன
புரிந்துகொண்டிருக்கிறேன் என்று கூறிச்செல்லல் பொருத்தம்.
'ஆரியர் வெளியிலிருந்து வந்தவர்கள். திராவிடர் இங்கேயே இருந்தவர்கள்.
தமிழ் நாகரிகத்தை ஊடுருவி ஆரிய
நாகரிகம் அதன் கருத்துகளையும், பல நலன்களையும் தன்னுடையதாக
ஆக்கிக்கொண்டுவிட்டது. அவ்வாறு தான்
தமிழ் நாகரிகத்திடமிருந்து பெற்ற பயன்களை தன்னுடைய சொந்த வெளிப்பாடுபோல்
காட்டிக்கொண்டு
எங்கிருந்து பெற்றோம் என்று குறிப்பிடாமல் கபளீகரம் செய்துவிட்டது.
தமிழர் கோட்டையும் வயலும்
படையுமாக, குடி கூழ் அமைச்சு என்று நிலைத்த நாகரிகத் தன்மையர். தம்
மொழிக்கு எழுத்து வடிவம்
ஏற்படுத்திக்கொண்டு பல கலைகளையும், இயல்களையும் வளர்த்தவர்கள். ஆரியர்
இடம் விட்டு இடம்
பெயர்ந்துகொண்டு, வாய்மொழி இலக்கியத்தையே பேணிக்கொண்டு, அங்கங்கு
இருக்கும் இனங்களின் சமுதாய
வாழ்வில் உட்புகுந்து, அவர்களின் பயனைத் தம்முடையதாக ஆக்கிக் கொண்டு,
தம்மிடமிருந்தே மற்றவர்
அனைத்தும் பெற்றனர் என்று ஒரு மயக்கத்தை விடாமல்
தோற்றுவித்துக்கொண்டிருப்பவர்' -- இதுவே உங்கள்
அணுகலின் சாரம் என்று நினைக்கிறேன். உங்கள் கேள்விகளும்
நுணுகிப்பார்த்தால் இந்த எண்ணமே
உங்களுடையது என்று காட்டுகிறது.
அநேகமாக இதற்குப் பதில் சொல்லிவிட்டால் உங்கள் பெரும்பான்மையான
கேள்விகளுக்குப் பதில் சொன்னதாக
ஆகிவிடும். ஆரியர் என்போர் எங்கோ இருந்து வந்தவர், துருவப் பிரதேசமா,
மத்திய ஆசியாவா என்றெல்லாம்
கற்பனைக் கொள்கைகளாகப் பரப்பிவிட்டதற்கு வேதங்களிலும்,
பிராம்மணங்களிலும், ஆரண்யகங்களிலும்,
உபநிஷதங்கள், காலத்தால் முந்தைய புராணங்கள் ஆகியவற்றிலும் அகச்சான்று
எதுவும் இல்லை. நூல்களின்
உட்சான்றுகளை வைத்து நோக்குழி, ஆப்கானிஸ்தானத்தை உள்ளிட்டதும், சரஸ்வதி
கரையை அகப்படுத்தினதுமான
வடமேற்கு நிலப்பரப்பில் வாழ்ந்துவந்த இனம் தம்முள் இரண்டுபட்டுப்
பிரிந்து கங்கை யமுனை விந்தியம்,
என்ற படித்தரஙகளில் பரவிய ஒரு பிரிவாகவும், வடமேற்கு நிலப்பரப்பில்
ஆர்யணம் (இன்றைய ஈரான்) என்ற
பகுதியை மையமாக வைத்து மத்திய தரைக்கடல் பகுதி, பாபிலோன் முதலிய
இடங்களுக்குப் பரவிய
பார்சிகர்களாகவும் விரிந்ததைத் தான் நூல்களின் அகச்சான்றுகள் பலபட
தெரிவிக்கின்றன. ஆனால் சரஸ்வதியின்
கரையைத் தாண்டி கங்கை யமுனை என்று பல காலங்களில் குடியேறி, விந்தியம்
வரை வந்த இனம்
நெடுநாள் விந்தியத்தின் தெற்கில் பரவாமல் நின்றுவிட்டது என்பதற்கு மூல
நூல்களின் அகச்சான்றுகள் திடமாக
உள்ளன. ஆரியர் வசிக்கத் தகுந்த பூமி என்பதின் தெற்கெல்லை விந்தியம்
என்று மனுதரும சூத்திரம்(II 21--24)
தெளிவாகக் கூறுகிறது. மனுதர்மத்தின் கட்டளை ஆரிய நாகரிகத்தின்
மீறமுடியாத ஒன்று. விந்தியம் தாண்டி
தெற்கில் உள்ள இடங்கள் மிலேச்ச பூமி(புரியாத மொழி பேசுவோர் வசிக்கும்
இடம்) என்று மனு கூறுகிறார்.
பின்னர் காலத்தின் கட்டாயத்திலும், சமுதாய மாற்றங்களாலும் ஆரியர்
தெற்கிலும் குடியேறியதை அகத்தியர்
பற்றிய கதைகளும், ஸ்ரீராமாயணமும் தெரிவிக்கின்றன. சங்கப் பாடல்களிலும்,
தொல்காப்பியம், அதன்
இளம்பூரணர் உரை, பின்பு நச்சினார்க்கினியர் உரை ஆகியவற்றிலும் இதற்கான
குறிப்புகள்
காணக்கிடைக்கின்றன.
ஆரியர், தமிழர் என்ற வேறுபாடும், சில நேரங்களில் அதன் காரணமாக எழுந்த
பிணக்கமும் நச்சினார்க்கினியர்,
பேராசிரியர் உரைகளிலேயே குறிப்பிடப்படுகின்றன. (தொல். செய்யுளியல் 490). அதை
திரு வையாபுரிப்பிள்ளையும்
எடுத்துக்காட்டி எப்படி யாரோ ஒருவன் ஆரியம் நன்று தமிழ் தீது என்று வாதாட
அது கண்டு வெகுண்டு நக்கீரர்
அவன் சாமாறு பாட, அந்தப் பாடல் மந்திரம் என்பதற்கு உதாரணமாக
உரையாசிரியர்களால் எடுத்துக்காட்டப்
பட்டமையைத் தெரிவிக்கிறார். எனவே ஆரியம் தமிழ் என்ற வேறுபாடு அந்நியர்
புகுத்திய சூழ்ச்சி என்பது
பொருளற்ற பேச்சு. அகத்தியனாரும் ஏற்கனவே இருந்த மொழிக்கு இலக்கணம்
கண்டார் என்று கூறுவதனால்
அவருக்கும் முன்னால் தமிழின் தொன்மை அறியற்பாலது. அதனால்தான் 12-13 ஆம்
நூற்றாண்டுகள் கிபி இல்
ஆசாரிய ஹ்ருதயம் என்ற மிக உயர்ந்த நூலைச் செய்த ஸ்ரீஅழகிய மணவாளப்
பெருமாள் நாயனார்
'வடமொழி போலே ஆகஸ்தியமும் அனாதி. தமிழை அகஸ்தியர் பரவச் செய்தார்
என்பதனால் தமிழுக்கு
அகத்தியம் என்ற பேர் வந்ததே அன்றி அகத்தியர் உண்டாக்கின மொழி என்ற
அர்த்தத்தில் அன்று.' என்று
திட்ட வட்டமாக தம் நூலான ஆசார்ய ஹ்ருதயத்தில் கூறியிருக்கிறார்.
சங்க காலத்தில் காலத்தால் பழைய பாடல்களில் அந்தணரின் புலால் உண்ணும்
பழக்கம் குறிப்பிடப்படுகிறது.
வேள்விதான் அவர்களின் மிகுந்த அக்கறைக்குரிய ஒன்றாகக் காட்டப்படுகிறது.
சங்கத்திலும் பங்கு கொண்டு
புலவர்கள் அரசனைப் பாடிப் பரிசிலாக வேள்வி இயற்றுவதற்கான பொருள் பெற்ற
செய்தியும் சங்கப் பாடல்கள்
தெரிவிக்கின்றன. அதற்கும் பரிபாடலில் திருமாலை பாஞ்சராத்திர ஆகமக்
கருத்துக்களோடு புலவர் பாடுவதற்கும்
பெரிய மாற்றம் தெரிகிறது. வேள்வியில் ஈடுபாடு ஆகம ரீதியான வழிபாடாக
மாறியது என்பதற்குள் பெரும்
சமுதாய மாற்றம் ஏற்பட்டது என்பது வரலாறு தரும் செய்தி. இந்த மடை
மாற்றத்தின் பெரும் நாயகரே புத்த
ர்தான். அவருடைய ஆளுமை, அவர் தந்த அறம், அவர் நிறுவிய பௌத்த சங்கம்
மூன்றும் ஏற்படுத்திய பூத
எழுச்சியான திருப்பம், சமணர்களின் அமைதியான அதே நேரத்தில் மிக அழுத்தமான
'பிரதேச மொழிகளில்
ஈடுபாடு என்பதன் மூலம் சமயப் பிரசாரம்' என்ற ஆழ்ந்த நோக்கு உள்ள உத்தி
இவையெல்லாம் சேர்ந்து
ஏற்படுத்திய மாற்றத்தைத்தான் பரிபாடல் காட்டுகிறது. எனவே பரிபாடலின்
காலம் என்பது முக்கியமாகிறது.
திரு வையாபுரிப்பிள்ளை அவர்கள் பரிபாடலையும், கலித்தொகையையும்
பிற்காலத்திய சங்க இலக்கியமாகத்தான்
கருதுகிறார்கள். சங்க இலக்கியத்தில் வழங்காத சொற்களை நிரல்படுத்தி அவரது
வாதம் அமைகிறது.
உதாரணமாக 'நான்', 'ஆனால்' 'ஆமாம்' போன்ற சொற்கள் வரும்போது அது
முற்சங்க காலம் என்று கொள்ள
இடமில்லை என்பது அவரது வாதம். அவரது நூல்வரிசையின் முன்பின்
காலத்தொடர்ச்சி அசைக்க முடியாத
ஒன்று. கால ஆராய்ச்சியில் திரு பிள்ளை அவர்கள் பரிபாடலை 6 --7 ஆம்
நூற்றாண்டு கிபி என்கிறார்.
அவருடைய கொள்கையை திரு சக்கிரபாணி அவர்கள் நன்கு மறுத்திருக்கிறார் என்று
கேள்வி.(இன்னும் நான்
பார்க்கவில்லை) எப்படியாயினும் திரு பிள்ளை அவர்கள் கூறிய காலத்தில்
இருநூறு ஆண்டுகள் முன்னர்
எனலாமேயன்றி நிச்சயமாக முற்சங்க நூலாக இருக்க வாய்ப்பில்லை. எனவே
நீங்கள் கூறவருவது போல்
பரிபாடலின் வரிகள் சங்க காலத்திய நிலையை பிரதிபலிக்கின்றது என்பதைவிட
பக்தி இயக்கத்தின் தோற்றுவாயைச்
சேர்ந்த காலத்தை பிரதிபலிக்கிறது என்றும் கூறலாம். அப்பொழுது
சிலப்பதிகாரத்தில் காணும் ஆய்ச்சியர்
குரவை வரிகளில் தெரியும் பக்தி இதற்கு ஒரு முன்னோட்டமாக அமையும். ஆனால்
நான் இங்கு எடுத்துக்
கொண்ட தலைப்போ, அல்லது திரு ஐயங்கார் நிறுவ முற்படுகின்ற கருத்தோ சங்க
இலக்கியங்கள்
வேதங்களினின்றும் வந்தது என்பதோ, அல்லது சங்க இலக்கியங்களில் வேதக்
கருத்துக்கள்தான் முழுக்க முழுக்க
நிரம்பியிருக்கின்றது என்றோ அல்ல. சங்க இலக்கியங்கள் எப்படி வேதங்களைப்
போற்றுகின்றன என்பதுதான்.
அதற்கு பரிபாடலில் மிகுதியும், பழம் சங்க காலத்திய பாடல்களில்
அருகியும் குறிப்புகள் காணப்படுகின்றன.
அடுத்து நீங்கள் வேதத்தின் வாய்மொழித் தன்மையைப் பற்றி
குறிப்பிடுகிறீர்கள். சங்க இலக்கியங்களே
வாய்மொழி இலக்கியமாக ஒரு காலத்தில் இருந்து பின்னரே எழுத்து வடிவம்
கண்டது என்று திரு
கைலாசபதியின் கருத்தும், அதற்கு மாற்றுக் கருத்தும் நிலவுவதை நீங்கள்
அறிந்திருக்கலாம். ஒரு வேளை
சங்க இலக்கியங்கள் வாய்மொழி இலக்கியமாக இருந்தன என்று முடிவாகி விட்டால்
அப்பொழுது சங்க
இலக்கியத்தின் மதிப்பும், தூய்மைத் தன்மையும் குறைந்துவிடுமா? மேலும்
வேதங்கள் வாய்மொழி இலக்கியமாக
வெறுமனே பாடப்படவில்லை. அதனுடைய பாடவரிசையும் நிரல்களும் துல்யமாக
எண்ணிக்கை இடப்பட்டு, பதம்,
ஜடம், கிரமம், கனம் என்றெல்லாம் மிக நெடுங்காலமாக பேணப்பட்டு
வந்திருக்கிறது. ஒரு சொற்கோவையைப்
பிரிப்பதானாலும் இப்படித்தான் பிரிக்க வேண்டும் என்று நியதிகள்
நெடுங்காலமாக உண்டு. உச்சரிப்பு
பிறழ்ந்துவிடும் என்பதற்காகவே இடி இடித்தாலோ, மழைகாலத்திலோ, துக்க
சம்பவங்கள் மரணம் போன்று
நடந்து அந்த உணர்ச்சிகள் மலிந்து இருக்கும் நேரத்திலோ, அல்லது பாட்டு
பாடுகின்ற இடத்திலோ
வேதத்தைச் சொல்லக் கூடாது என்றெல்லாம் வரம்புகள் பேணப்பட்டன. எனவே அவை
வாய்மொழி இலக்கியம்
என்றதனால் மட்டும் கட்டுக்கோப்பு குலைந்தனவாக, கலப்படம் நிறைந்ததுவாக எண்ண
முடியாது.
அடுத்து நீங்கள் கூறவருவது தமிழிலிருந்து வடமொழிக்குப் போய் தன்
அடையாளம் இழந்து, முகவரி இழந்து,
பெற்றுக்கொண்டவர்கள் தங்களுடையதாகக் காட்டிக் கொள்ளும் சாத்தியப்பாடு.
இது வேதங்களில் சாத்தியம்
இல்லை என்பதைத்தான் மேலே விளக்கினேன். ஆனால் காவியங்கள், நாடகங்கள்,
கூத்து, கலைகள்,
தத்துவங்கள் முதலியவற்றில் இந்த சாத்தியம் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு
வினோதத்தைத்தான் தமிழினி
இதழில் நான் எழுதிய கூத்து என்ற கட்டுரையில் காட்டினேன். அதாவது பாணம்
என்ற நாடக வகை
தமிழிலிருந்து வடமொழிக்குச் சென்றிருக்கிறது. ஆனால் அதன் மூலமொழிக்
குறிப்பு எதுவும் நாடகக் காரர்களால்
தரப்படவில்லை. பிறகு நுணுகிச் சென்று பார்த்தால் சங்க இலக்கியத்தின்
பாணர் அங்கு நாடக வடிவமாய்
ஆகியிருக்கிறார். அது தமிழிலிருந்து வந்தது என்று சொல்லியிருந்தால்
பிரச்சனை இல்லை. ஆனால் அதற்குப்
பதில் பாண் என்றால் பேச்சு என்று பொருந்தாத சொல்பிறப்பியல் சாகசங்கள்
வடமொழி அறிஞர்களால்
மேற்கொள்ளப் படுகின்றன. பிறகு சங்கத்தமிழ் எதுவுமே தெரியாத நடனக் கலைஞர்
வந்து பாணத்திலிருந்துதான்
பாணரே தமிழில் ஏற்பட்டது என்று கூறும் அவலமும் நடக்கும். ஆனால் இதுபோன்ற
நிகழ்வுத் துணுக்குகளை
நாம் கவனமாக இனம் கண்டு நிறுவுதல்தான் அழகு. அதை விடுத்து எல்லாமே
இங்கிருந்து போனதுதான்
என்று மொட்டையாக எண்ணிக்கொண்டு இருந்தோமானால் நாம் மீண்டும் பிழையே
புரிகிறோம். அறிவின் திறம்
முற்றிய பண்டிதத் தன்மையினால்தான் ஆய்வின் உண்மைகள் அடையப் படுகின்றன.
வெறும் கோஷ்டிக்
கூச்சல்களினால் ஒருவருக்கொருவர் சொறிந்துவிடலாம். வேறு ஒன்றும் ஆகாது
என்பதை நடுநிலை மிக்க
நன்மதியாளர் எவரேனும் இருப்பின் அவர்கள் நினைவில் இருத்துவார்களாக.