2011-10-10 17:19:04 இச்செய்தியை படித்தோர் - (4358)

வியட்நாம்
நாட்டை சேர்ந்த இளம் பெண்மணியான Phuong எனும் 26 வயதான அழகிய பெண் தனக்கு
ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக 70 வயது பாட்டியின் தோற்றத்தை பெற்றுள்ள சேகமான
சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம்
பற்றி மேலும் தெரியவருவதாவது:- குறித்த பெண்மணி கடந்த 2008 ம் ஆண்டு
கடலுணவு வகைகளை அதிகம் சாப்பிட்டுள்ளார். இதன் பின்னர் இவரது முகம் வீங்கி
ஒவ்வாமை நிலைக்கு ஆளாகியுள்ளார். இதனால் பெரிதும் பாதிக்கப்பட்ட இவர் தனது
கணவரான 34 வயதான Nguyen Thanh Tuyen என்பவரது உதவியுடன் வைத்திரை
நாடியுள்ளார்.

பின்னர்
வைத்திய சிகிச்சைக்காக சென்ற பெண்மணி டாக்டர்களின் ஆலோசனைக்கு அமைய
ஒவ்வாமை மருந்துகளை தொடர்ச்சியாக உட்கொண்டு வந்துள்ளார். இருந்தும் இவரது
முகம் மேன்மேலும் விகாரமடைவதை அவதானித்த இவர் இன்னும் பல மூலிகை
மருந்துகளையும் உட்கொண்டு பலனளிக்காததால் 2009 ம் ஆண்டு தான் பயன்படுத்திய
அனைத்து மருந்துகளையும் நிறுத்திக்கொண்டார்.
ஆனால்
அதன் விளைவு தற்போது பெண்ணின் உருவம் 70 வயது கிழவி போன்று மாறிவிட்டது.
இவரை அயலவர்கள் மற்றும் உறவினர்கள் குரலின் மூலமே அடையாளம் கண்டுகொள்வதாக
தெரிவித்தார்கள். இவருக்கு கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்களும் காணப்படுவதாக
தெரிவிக்கப்படுகிறது.
இதுபற்றி
குறித்த பெண் கருத்த தெரிவிக்கையில்:- எனக்கு இதுவரை எந்த குழந்தைகளும்
இல்லை. ஆனால் என் முகம் வயதானாலும் வயிறு அதிக குழந்தைகள் பெறக்கூடிய
இளமையாகத்தான் இருக்கிறது. மேலும் நான் விகாரம் அடைந்தாலும் என் கணவர்
என்னை அன்பாக கவனித்த வருகிறார். எனக்குறிப்பிட்டார்.
http://www.kingtamil.com/more.php?id=1440
--
With Regards,
s.m.sethupathy,
sms communication,
Tanjore -1.
mobile :9944 186 173
www.questionpaperlink.co.cc
www.sethu-panguvarthagam.blogspot.com