26/11 நினைவுகள்

0 views
Skip to first unread message

Saravana Rajendran

unread,
Nov 26, 2012, 8:51:13 AM11/26/12
to S.Prince ennares Periyar, Rajendra Saravana, Albert Fernando, tamil_...@googlegroups.com, அன்புடன், thanthaiperiyar, piravakam, tamil2friends, பண்புடன், Tamiz
  2008 மும்பை வரவிருக்கும் பிரதம மந்திரிக்கான சில பாதுக்காப்பு  விளக்கங்களை குறித்து அப்போதைய துணை முதல்வர் ஆர் ஆர் பாட்டில் மந்திராலாயாவில் அவரது அலுவலகத்தில் பேட்டி கொடுத்தார், அங்கேயே சிற்றூண்டி அருந்தியதால் மும்பை மாநகராட்சி வர தாமதமானது சரியாக 7 மணிக்கு நானும் கிரீஸ் சித்ரே(நவ சக்தி-மராட்டி) ரிப்போட்டரும் பெஸ்ட் வேனில் மும்பை மாநகராட்சி வந்தோம் நேரம் சரியான 7:40,
       அன்று உள்ள செய்திகளை எழுதிக்கொண்டு இருந்தோம்,
     8: மணி கீழே சென்று தேனீர் குடித்து விட்டு மீண்டும் மாநகராட்சி பத்திரிக்கை பிரிவிற்கு 2-ம் தளம் வந்து சேர்ந்தோம்,
     8:30 பணி எல்லாம் முடித்து விட்டு அரட்டை அடித்து கொண்டு இருந்தோம்
     8: டைம்ஸ் அலுவலகத்தில் இருந்து யாரோ சி எஸ் டியில் சண்டை போடுகிறார்கள், என்று யோகேஸ் ஜாதவ் என்ற அப்போதைய நவ் பாரத் டைம்ஸ் ரிப்போர்டர் போன் செய்தார்,
   8:40 மேயர் எங்கள் அனைவரையும் உள்ளேயே இருக்கச்சொல்லி உத்தரவிட்டார், மேல் மாடியில் சென்ற சில காவலர்கள் இவ்வாறு கூறினார்கள், பல பேர் " துப்பாக்கியால் சுடுகின்றனர், குண்டு வைக்கின்றனர், என்றார்கள்,
  9:10 தாஜ், டிரைடைன், மற்றும் நரிமன் ஹௌஸில் தாக்குதல் நடந்தது குறித்து காவல்த்துறை ஆணையர் அலுவலகத்தில் இருந்து மேயருக்கும்(சுபா ராவல்) எங்களுக்கும் தகவல் வந்தது, அப்போது அலுவலகத்தில் இருந்தவர் நான், லஸ்மன் போஜ்னே, கிரீஸ் சிட்ரே, மனீஸ், அல்பேஸ் மாத்ரே, சுனில் சாகேப், லிங்காயத் ஜி, ரமாகாந்த், கல்பனா ஜி, மாருதி மோரே இவர்கள் அனைவரும் மும்பை மாநகராட்சி பத்திரிக்கை பிரதிநிதிகள்,
      11 மணி டைம்ஸ் நவ் டீவி கசாபின் புகைப்படைத்தை (மங்கலாக இருக்கும்) ஒலிபரப்பியது, அதன் ஊடேயே காம்டே, சலாஸ்கர் மற்றும் மிக முக்கியமானவரான் ஹெமந்த் கர்கரே சுடப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்றும் பிறகு அவர்கள் இறந்து விட்டார்கள் என்றும் செய்தி வந்தது,
இடையில் ஆஜ் தக் ரிப்போர்டர் மெட்ரோ தியேட்டர் முன்பு தீவிரவாதிகள் கண்மூடி சுட்டதில் காயமானார்,
   மும்பை முழுவதும் தாக்குதல் மற்றும் குண்டு வெடிப்பதாக தகவல் பரவியது ஆனால் வில்லே பார்லே, பைகுல்லா போன்ற இடங்களில் கார்களில் வைத்த குண்டு வெடித்தது, இது பற்றி இன்றுவரை எந்த ஒரு தகவலும் தெரியவில்லை

 
        சி எஸ் டி ரெயில் நிலைய மேலார் பூல் சிங் என்பவர் சுமார் ஒரு மணி நேரம் எச்சரிக்கை அறிக்கை விட்டுக்கொண்டு இருந்தார், அவர் தற்போது பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று விட்டார்,

தாக்குதல் தொடரும்


--
Mumbailive
Find mumbai follow mumbai
TPI-Mumbai
09819166850/9029512535

INDIA_(F)_0625_-_Key_Mumbai_terror_.jpg
Reply all
Reply to author
Forward
0 new messages