இன்று டிசம்பர் 6.. பாபா சாகேப் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினம்
இன்று. அம்பேத்கர் அவர்களின் வாழ்நாள் முழுவதும் போராட்டம் தான். பத்து
ஆண்டுகளாக தமிழில் அவரது போராட்ட வாழ்கைத் திரைப்படத்தை வெளியாகவிடாமல்
சில சக்திகள் தடுத்து வைத்திருந்ததை உடைத்து வழக்கறிஞர் சத்தியச்சந்திரன
் எழுத்தாளர் மதிமாறன் உள்ளிட்ட பல தோழர்களின் முயற்சியால் படம்
வெளியானதே பெரும் சாதனை தான். அதேப்போலவே இப்போதும் தொலைக்காட்சியில ்
ஒளிபரப்பவும் போராட்டம் நடத்த வேண்டிய சூழல்.
அதனால் வேறுவழியின்றி இன்று அம்பேத்கர் அவர்களின் நினைவு தினத்தை
முன்னிட்டு `பொதிகை தொலைக்காட்சியில ் மதியம் 3மணிக்கு’ அவரது திரைப்படம்
ஒளிபரப்பாகிறது.
அவரால் இடஒதுக்கீடு பலன் பெற்ற பிற்படுத்தப்பட் ட, ஒடுக்கப்பட்ட மக்கள்
மட்டுமல்லாது சாதி ஒழிய விரும்பும் அனைவரும் பார்க்க வேண்டிய படம்.
இன்று ஒடுக்கப்பட்ட மக்கள்ஓரளவுக்கு எழுச்சிப்பெற்ற நிலையிலும்
தர்மபுரியில் சாதிவெறி கோரத்தாண்டவம் ஆடிய நிலையில் இந்தப்படம் இன்னும்
முக்கியத்துவம் பெறுகிறது.. முக்கியமாக சாதிவெறியர்களிட ம் மட்டுமல்லாது
தலித் ஓட்டுப் பொறுக்கிகளிடமிர ுந்தும் அந்த மக்கள் எப்படி கவனமாக இருக்க
வேண்டும் என்பதை கற்றுக்கொடுக்கு ம் படமும் கூட
--
*Mumbailive <http://mumbailive.mobie.in>*
Find mumbai follow mumbai
TPI-Mumbai
09819166850/9029512535