சாதிமறுப்பு திருமணத்திற்கான ஆர்வமான வரவேற்பு.

0 views
Skip to first unread message

Saravana Rajendran

unread,
Nov 25, 2012, 1:35:52 AM11/25/12
to ♥ Vimalanathan ♥ Palanisamy, Albert Fernando, Aldrin M ஆல்டிரின் ் Who AM I, Cicero™ ., kayathargirl pasi, piravakam, Rajendra Saravana, S.Prince ennares Periyar, SARU priyan..., Sivakumar T நானும் கடவுள் (Smiles), tamil_...@googlegroups.com, tamil2friends, Tamiz, thanthaiperiyar, V Ramesh, அன்புடன், பண்புடன், ராஜா ரகுபதி
பெரியார் திடலில் நடைபெற்று வரும் ஜாதி மறுப்பு இணை தேடல்
நிகழ்வு-மன்றல்2 012. இங்கேகண்ட காட்சி என்னை ஆச்சர்யத்தில் தள்ளியது.
இந்த நிகழ்வில் ஜாதி மறுப்பு, மத மறுப்பு, மாற்றுத் திறனாளி, மணமுறிவு
பெற்றோர், துணையை இழந்தோர் என்று தனித்தனியேகவுன்டர்கள் இருக்கின்றன.
இவைகளில் காலை 9 மணிக்கு தொடங்கி பதிவுகள் நடைபெற்று வருகின்றன. இதில்
ஆச்சர்யம் என்னவென்றால், மற்ற கவுன்டர்களை எல்லாம்விட ஜாதி மறுப்பு
கவுன்டரில் கூட்டம் மொய்க்கிறது. ஜாதி மறுப்பு திருமணம் செய்ய
விரும்புவோர் கவுன்டரில் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமாக பதிவு செய்து
வருகின்றனர். இதில் கூடுதல் சிறப்பு என்னவெனில் அதில் பெரும்பாலானோர்
தங்கள் பெற்றோர்களுடன் வந்திருக்கிறார் கள். இளைஞர்கள் மட்டுமல்ல
பெரியவர்களும் ஜாதி மறுப்பு திருமணத்திற்கு காட்டும் ஆதரவை
பார்க்கும்போது, ஒன்றை மட்டும் உரக்க சொல்லிக் கொள்ளலாம்----பெரியார்
வாழ்வார்! பெரியாரியல் வெல்லும்!!
தமிழ் மண்ணின் ரசாயனத் தன்மையை பெரியார் மாற்றியிருக்கிற ார், அவரின்
தாக்கம் எந்த அளவுக்கு ஊடுருவி சென்றுள்ளது என்பதற்கு இந்த ஒன்றே தக்க
சான்று!

--
*Mumbailive <http://mumbailive.mobie.in>*
Find mumbai follow mumbai
TPI-Mumbai
09819166850/9029512535

Photo1.jpg
Photo4.jpg
Photo5.jpg
Photo2.jpg
Photo3.jpg
Reply all
Reply to author
Forward
0 new messages