2012 திசம்பர் 31-ம் தேதி கூடிய அவரது கட்சியின் முக்கிய கூட்டத்தில்
"பெரும்பாலான பெண்கள் சிறுவயதில் பெற்றோரையும் பிறகு கணவனையும் மகனையும்
சார்ந்திருப்பார்கள், எனக்கு கொட ுப்பினை இல்லை, எப்போதுமே எல்லா
செயல்களையும் எனக்கு நானே முடிவு எடுத்துக்கொண்டு, தனித்து நின்று
சந்தித்த்க்கொண்டு இருக்கிறேன்,
இது என்னுடைய தனித்திறமை என்று நான் சொல்லமாட்டேன், இது விதி,
தலையெழுத்து என்றார்.
10 வருடங்களுக்கு முன்பு ஒரு நம்பிக்கைகரமான வார்த்தை முன்பு எழுதியதை
யாரும் எழுதிகொடுத்து படிக்கவேண்டிய அவசியமில்லை,என்பதும் அதே போல் இன்று
கூறியவற்றையும் பிறர் ஏழுதிகொடுத்து படிக்க அவசியமில்லை என்பதும் இங்கே
கவனிக்கவேண்டிய ஒன்று.
ஏன் இந்த அவநம்பிக்கை,
பெரியாரின் கனவே இதுதானே ஆணுக்கு நிகர் ஒரு பெண் நிலைத்து நிற்கவேண்டும்
அப்போது தான் இந்த சமூகம் சமநீதி பெறும் என்ற கோட்பாட்டிற்கு உதாரணமாக
நின்றுகொண்டு சமீபத்தில் நீங்கள் கூறிய கருத்து முரன்பட்டதாக
அமைந்துள்ளது,
நீங்கள் முன்பு கூறிய வார்த்தைகளை பேணிவந்திருப்பின் தமிழகம் பெண்விடுதலை
பெற்ற மாநிலமாக திகழ்ந்திருக்குமே,
ஆனால் நீங்களே 13 அம்ச கோரிக்கை வைக்கவேண்டிய சூழல் உறுவாகி விட்டதே
பாலியல் வன்கொடுமை பிடியில் சிக்கி காரசாரமான விவாதங்கள் போராட்டங்கள்
நடந்து கொண்டிருக்கும் நிலையில் முதல்வரின் விதி, தலையெழுத்து என்ற
பேச்சு உங்களை ரோல் மாடலாக கொண்டு பயணிக்கும் பல பெண்களின் உள்ளத்தில்
அவநம்பிக்கையை விளைவிக்குமே
--
--
*Mumbailive <http://mumbailive.mobie.in>*
Find mumbai follow mumbai
TPI-Mumbai
09819166850/9029512535