அருஞ்செயல் புரிந்துள்ளார் மயூரநாதன்!!

6 views
Skip to first unread message

C.R. Selvakumar

unread,
Feb 7, 2010, 8:18:41 AM2/7/10
to தமிழ் மன்றம், tamil_ulagam, முத்தமிழ், தமிழமுதம், சந்தவசந்தம், tamilwi...@googlegroups.com, thami...@googlegroups.com
அன்புடையீர்,
 
வணக்கம்.
 
இ. மயூரநாதன் என்னும் அன்பர் தமிழ் விக்கிப்பீடியாவில் 3,000 உக்கும் கூடுதலான
கட்டுரைகள் எழுதி அருஞ்செயல் புரிந்துள்ளார். ஆம் மூவாயிரத்திற்கும் கூடுதலான
கட்டுரைகள்! அவர் அயராது ஆண்டுக்கணக்கில் உழைத்தது மட்டுமல்லாமல்,
ஆழ ஆழ எண்ணி எந்த எந்தத்
தலைப்புகளில் கட்டாயம் கட்டுரைகள் இருக்க வேண்டும் என்று எண்ணி மிகச்
செப்பமுடன் ஆக்கி வளம் சேர்த்து வருகின்றார். அவர் செய்து வருவது
ஒருவகையான பயன்பெருக்கும் அறிவு வேள்வி என்றே நான் புகழ்வேன்.
நண்பர்களே தமிழ்மீது அன்பும் அக்கறையும் கொண்டவர்கள்,
தமிழ் விக்கிப்பீடியாவில் வந்து நல்லாக்கம்
தரும் படைப்புகளைத் தாருங்கள். சிறுதுளி பெருவெள்ளம். கட்டுரைத் தலைப்புகளுக்கோ
பஞ்சமே இல்லை! !தமிழ் விக்கிப்பீடியாவில் இன்று பதிவு செய்துள்ளவர்களின் எண்ணிக்கை
15,000 ஐ (பதினைந்தாயிரத்தைத்) தாண்டியுள்ளது. ஆனாலும் தொடர்ந்தும்
தரமாகவும் உழைப்பவர்கள் எண்ணிக்கை குறைவே. இதுகாறும் தமிழ் விக்கிப்பீடியாவில்
21,054 (இருபத்தி ஓராயிரத்து ஐம்பத்து நான்கு) கட்டுரைக்ள் எழுதப்பட்டுள்ளன.
 
வாழ்க இ.மயூரநாதன்!
 
அன்புடன்
செல்வா

வேந்தன் அரசு

unread,
Feb 7, 2010, 9:49:53 AM2/7/10
to tamilwi...@googlegroups.com, தமிழ் மன்றம், tamil_ulagam, முத்தமிழ், தமிழமுதம், சந்தவசந்தம், thami...@googlegroups.com
மயூரநாதனுக்கு என் பாராட்டுகள்
 
அவர்போல் சிலரால் உண்டாலம்ம இவ்வுலகம்


--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
”உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே.”
Reply all
Reply to author
Forward
0 new messages