வணக்கம்.
தமிழ் விக்கிப்பீடியா இன்று (நவம்பர் 22, 2009)
20,000 கட்டுரைகள் இலக்கை எட்டியது!
தமிழ் விக்கிப்பீடியா
4.6 மில்லியன் சொற்களுக்கு மேல் அடங்கிய
ஓர் இலவச கலைக்களஞ்சியம்.
இன்றுவரை 13,186 பேர் பதிவு செய்துள்ள
ஒரு தளம். இது பற்றி சில தகவல்கள்:
பக்கங்கள்= 56,289
கட்டுரைகள்= 20,006
கோப்புகள்= 3,722
தொகுப்புகள்= 456,422
பயனர்கள் = 13,186
தமிழ் விக்கிப்பீடியா உலகளாவிய பன்மொழி அறிவுத்தொகுப்புத்
திட்டம்
யாரும் படித்துப் பயன்பெறுவது மட்டுமன்றி, அதில்
உள்ள படங்கள் கருத்துகளை இலவசமாகப் பயன்படுத்தலாம்.
நீங்களும் முன்வந்து கூட்டுழைப்பு தாருங்கள்!
ஒப்பரிய நல்லவோர் ஆக்கப்பணி.
பயன் பெருக்கும் பணி.
இடையறாது உழைத்துவரும் மயூரநாதன், சிறீதரன் கனகு, நற்கீரன்,
ரவிசங்கர், சுந்தர், சிவக்குமார், மணியன், கலை, சந்திரவதனா
இரகுநாதன், மகிழ்நன், பரிதிமதி. குறும்பன், சத்தீசு, அராபத் ரியாத்,
தகவலுழவன், பாலசந்திரன்.... என்று பல
தன்னலமற்ற விக்கிப்பங்களிப்பாளர்களை நான்
நெஞ்சார நினைத்து வாழ்த்துகிறேன்!
வாருங்கள் தமிழ் அன்பர்களே
இன்னும் விரைவாய் முன்னேறுவோம்.
அறிவுச்செல்வங்களை நல்ல தமிழில்
எழுதி அறிவுக்கோயிலை எழுப்புவோம்!
உண்மையான ஆக்கப் பணி இது!
கற்றோர் கடமை என்று நான் கூறுவேன்!
அன்புடன்
செல்வா