ரோசாவா ரோஜாவா என்னும் மடலின் தொடராக வந்த இரண்டு பதிவுகள்
நினைவில் கொள்ளத்தக்கன:
(http://groups.google.com/group/mintamil/browse_thread/thread/
7a5b8bd8b8588f15#)
நவம்பர் 2, 2009 (மின் தமிழ் கூகுள் குழுமம்)
"எங்கள் குடும்பத்தில் 'விஜி', 'விஜயா' என்ற பெயருள்ள 80+ மாதர்
அனைவரும்
'விசி', 'விசயம்' என்றே அழைக்கப் பட்டார்கள் என்ற நினைவு. ஆனால் அதற்கு
அடுத்த தலைமுறையில் உள்ளவர்களை 'விஜி', 'விஜயா' என்று அழைப்பதே
வழக்கம்.
இதற்கு காரணம் மேற்குடி ஸமாசாரமா இல்லை பட்டின பிரவேசமா என்று
தெரியவில்லை. (எங்கள் பூர்வீகம் தஞ்சை). இந்தக் காலத்தில் 'விசி',
'விசயம்' என்ற உச்சரிப்பை ரொம்ப பட்டிக்காடாகவும் கர்நாடகமாகவும்
நினைப்பார்கள்.
LNS "
-------------
நவம்பர் 2, 2009 மீனா முத்து என்பவர் மடல்:
உறவினர்(பெண்மணி) ஒருவர் அத்தனை நன்றாக பேசுபவர் ஏனோ தன்
பேரக்குழந்தைகளின்
பெயரை (ஷ்ருதி,மகேஷ் அனுஷா) சுருதி மகேசு அனுசா என்றுதான் கூப்பிடுவார்
என்ன
சொல்லியும் அவருக்கு சொல்ல வரவில்லை..!
---------------------
அன்புடன்
செல்வா