சுஜாதா-ஏறக்குறைய சொர்க்கம்

13 views
Skip to first unread message

Raj Chandra

unread,
Aug 8, 2011, 10:53:33 PM8/8/11
to தமிழ் வாசகன்
சுஜாதாவின் ‘ஏறக்குறைய சொர்க்கம்’ தொடர்கதையாக குமுதத்தில் வந்தது. கதை
ஒரு மத்தியமர் பிராமணக் குடும்பத்தை சேர்ந்த ஒருவனின் திருமண (கசப்பு)
அனுபவங்கள்.

ராமச்சந்திரன் (ராமு) தன் நண்பன் சந்துருவோடு திருவெள்ளறையில் காமுவை
பெண் பார்க்கப் போவதில் ஆரம்பிக்கிறது. காமுவை அவனால் சரியாகப் பார்க்க
முடியவில்லை. ஆனால் சந்துரு பார்த்துவிட்டு ராமுவிடம் ‘அவள் பேரழகி,
ஆனால் உனக்கு சரிப்படமாட்டாள்’ என்று முகத்தில் அறைந்தாற் போல சொல்ல,
ராமுவின் ஈகோ கழுதையாக உதைத்து அவளை திருமணம் செய்ய முடிவெடுக்கிறான். பல
லௌகீகத் தடைகள் வருகின்றன. எல்லாவற்றிற்க்கும் மேலாக அவன் அம்மா
திருமணத்திற்கு முதல் நாள் கோமாவில் படுக்கிறாள். இருந்தாலும் பிடிவாதமாக
மணக்கிறான்.

திருமணமானப் பின் காமுவின் அழகு பல ஆண்களை பேஸ்த் அடிக்க வைக்கிறது.
சந்துரு, ராமுவின் மானேஜர், வீட்டுக்காரர், மளிகைக்காரர் என்று பலரும்,
ராமுவின் அன்புக்குப் போட்டியிடுகிறார்கள். அவனுக்கு இதெல்லாம்
ஆரம்பத்தில் தமாஷாக இருந்தாலும், போகப் போக காமுவின் மேல் சந்தேகம்
வருகிறது. தெருவோரத்தில் நின்று வேவுப் பார்க்கிறான். கட்டிலின் கீழே ஆள்
இருக்கிறானா என்று தேடுகிறான். காமுவை அடிக்கிறான். கருவைப் பிடிவாதமாகக்
கலைக்க வைக்கிறான். மொத்ததில் பாயைப் பிறாண்டும் அளவிற்கு சந்தேகம்
முற்றுகிறது.


சந்தேகத்தில் தன் மேலதிகாரியைத் திட்ட அவர் அவனுக்கு வேலையில் டார்ச்சர்
தருகிறார். மொத்ததில் நண்பர்கள், மனைவி, நிம்மதி இழந்து திரியும்போது தன்
மனைவி ஒரு நடிகையானது தெரிகிறது. மீதி படித்துப் பாருங்கள்.


சுஜாதாவின் அதிகம் பேசப்படாத கதைகளில் இதுவும் ஒன்று. கதை Black Humor
வகையைச் சேர்ந்தது. சுஜாதா பலமுறை கதை தானே எழுதிக் கொண்டு செல்லும்
என்பார். இந்த கதை அதற்கு ஒர் உதாரணம். கதை உச்சம் பிடிக்கும் இடம் ராமு
தன் மனைவியைத் தேடி பித்துப் பிடித்தாற்போல திருச்சி/ஸ்ரீரங்கம் என்று
அலையும்போது வரும் நிகழ்ச்சிகள். ஆழ்மனம் அமைதியாக அரற்றிக் கொண்டிருக்க,
மூளை காண்பனவற்றையெல்லாம் போட்டுக் குழப்பிக்கொள்ளும். அதை எழுத்தில்
கொண்டு வருவது சுஜாதாவிற்கு முடிந்திருக்கிறது.


குமுதம் வாசகத் தளத்திற்கு இந்தக் கதை மகா அன்னியம். மனைவியை
சந்தேகிக்கும் கதை என்றால் அடுத்து எதிர்பார்ப்பது கொலை, போலீஸ் துரத்தல்
என்று. இதை மாற்றி ஜனரஞ்சக வாசகர்களுக்கு அமைப்பது சுஜாதா போன்ற ஸ்டார்
எழுத்தாளர்களுக்கு இருக்கும் சுதந்திரம்.


சுஜாதாவின் மத்யமர் சிறுகதைத் தொகுப்பு படித்திருக்கிறேன். ஒரிரண்டு தவிர
மற்றவை வலிந்துத் திணிக்கபபட்ட ‘மத்யமர்’ லேபிள். ஆனால் ‘ஏ. சொ’-இல் அவர்
மத்யமர் வகை என்று தானே முடிவு செய்து கொள்ளாமல் எழுதியதால் அதன்
வெளிப்பாடு classic-ஆக வருகிறது. உதாரணமாக காமுவின் அழகைப் பற்றி ராமு
அவளிடமே உரையாடும் இடம். கவனிக்க: அது romantic பேச்சு அல்ல. அவளின் அழகு
திருமணத்திற்கு முன் மற்றவர்களை சலனப்படுத்திய விதம் பற்றி, அதற்கு காமு
பதில் என இந்தக் கதையை வழக்கமான தள்த்திலிருந்து மேலே நகர்த்துவது.


கதையை நான் மிக ரசித்தது காமுவின் தரப்பிலிருந்து ஆசிரியர் ஒரு வாதம் கூட
வைக்கவில்லை. மொத்தமும் ராமுவின் பார்வையிலேயே உங்களுக்குத் தருவதால்
காமுவின் எண்ணம், செயல்கள் எல்லாம் ஒருவிதமான abstract ஓவியம் போல
மாறுகிறது. இதுதான் சுஜாதாவின் வெற்றி. A Beautiful Mind படத்தின்
திரைக்கதையைப் பார்த்தவர்களுக்கு நான் சொல்ல வருவது புரியும். சுஜாதா ஒரு
தேர்ந்த தொழில்நுட்பக் கதைசொல்லி, சந்தேகமில்லை.


கதையில் காமு ஒரு நடிகையாவது நம்ப முடியாவிட்டாலும் அது மத்திய ஆண்
வர்க்கத்தின் மனைவிப் பற்றிய மனோநிலையை ஒரு jerk அடிக்க வைக்கப்பட்ட
உத்தியாக எடுத்துக் கொண்டால் தொடர முடியும். சுஜாதா வேண்டுமென்றே உங்களை
சீண்டும் இடம். கால, நேர அளவுகளை வைத்துப் பார்த்தோம் என்றால் அவள் அந்த
அளவிற்கு புகழ் பெற்றது logic wise உங்களை விபரீதக் கற்பனைகளுக்கு கொண்டு
சென்றுவிடும். ரஜினி ஒரே பாடலில் பிச்சைக்காரனிலிருந்து கோடீஸ்வரனாக
மாறுவதை நீங்கள் ஜீரணிக்கக் கூடியவரா? அப்படியானால் காமுவும் ஒரே
அத்தியாய்த்தில் நடிகை ஆகலாம்.


அதன் பின்னும் ராமு தன் மத்தியமர் நிலையில் நின்று மனைவியை மீட்க
நினைக்கும் இடம்தான் சுஜாதாவின் Black humor-ன் உச்சக்கட்டம்.

- என்னுடைய பதிவில் கொஞ்ச நாள் முன் நான் எழுதியது (சில பத்திகளை
நீக்கியிருக்கிறேன்).

பதிப்பகம் : தெரியவில்லை
கிடைக்கும் இடம்: http://udumalai.com/?prd=&page=products&id=2539

Vilvam Lingam

unread,
Aug 9, 2011, 7:13:10 AM8/9/11
to tamilv...@googlegroups.com
நல்ல பதிவு -vilvam

2011/8/9 Raj Chandra <kabi...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசகன்" group.
To post to this group, send an email to tamilv...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilvasagan...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilvasagan?hl=en-GB.


Raj Chandra

unread,
Aug 9, 2011, 9:57:44 PM8/9/11
to தமிழ் வாசகன்
நன்றி வில்வம் :)

On Aug 9, 7:13 am, Vilvam Lingam <vilvam1...@gmail.com> wrote:
> நல்ல பதிவு -vilvam
>

> 2011/8/9 Raj Chandra <kabish...@gmail.com>
>
>
>

Srinivasan Uppili

unread,
Aug 9, 2011, 10:21:45 PM8/9/11
to tamilv...@googlegroups.com
அன்புள்ள ராஜ் சந்திரா,

அருமையான விமர்சனம்.  உங்கள் கரும்பலகை தளமும் நன்றாக இருக்கிறது.  மிகக் குறைவாகத் தான் எழுதுகிறீர்கள் என்று நினைக்கிறேன்.  நீங்கள் தற்போது அமெரிக்காவில் தான் இருக்கிறீர்களா ?

அன்புடன்,
ஸ்ரீனிவாசன் 

2011/8/8 Raj Chandra <kabi...@gmail.com>

Raj Chandra

unread,
Aug 10, 2011, 1:02:41 PM8/10/11
to தமிழ் வாசகன்
நன்றி ஸ்ரீனிவாசன். பிளாக்-ல் வருடத்துக்கு சில முறை ஜுரம் வருவது போல
எழுதுவேன் :). புத்தகம் படிப்பது, வேலை, மகள் என பல பொறுப்புகளால் 2
மணிநேரமாவது ஒதுக்கி எழுத முடிவதில்லை. சந்திரமௌலி இந்தக் குழுமத்தை
அறிமுகப் படுத்தியவுடன் இணைந்துவிட்டேன். அட்லீஸ்ட் படித்தவைகளைப் பற்றி
ஒரு பத்தியாவது மேலோட்டமாக எழுதலாம் என்று.

1996 -ல் இருந்து பாஸ்டன் அருகே வாசம்.
அன்புடன்
ராஜேஷ்.


On Aug 9, 10:21 pm, Srinivasan Uppili <supp...@gmail.com> wrote:
> அன்புள்ள ராஜ் சந்திரா,
>
> அருமையான விமர்சனம்.  உங்கள் கரும்பலகை தளமும் நன்றாக இருக்கிறது.  மிகக்
> குறைவாகத் தான் எழுதுகிறீர்கள் என்று நினைக்கிறேன்.  நீங்கள் தற்போது
> அமெரிக்காவில் தான் இருக்கிறீர்களா ?
>
> அன்புடன்,
> ஸ்ரீனிவாசன்
>

> 2011/8/8 Raj Chandra <kabish...@gmail.com>

> ...
>
> read more »

Reply all
Reply to author
Forward
0 new messages