அரசியல் வரலாறு என்பது இருமுனைக் கத்தியைப் போன்றது. தமிழில் திராவிட
இயக்கம் பற்றிய புத்தகங்கள் நிறைய இருப்பினும் அவை ஒன்று
அக்கட்சிக்காரர்களாலேயே எழுதப்படுவது, இன்னொன்று அவர்களின்
எதிர்தரப்பினரால்...உண்மை இவை இரண்டுக்கும் நடுவில் படிப்பவர் புரிந்துக்
கொள்ளவேண்டும். மூன்றாவது வகையில் ஒரு வெளி மனிதர் எந்த விருப்பு
வெறுப்பில்லாமல் எழுத நினைப்பது. ‘திராவிட இயக்க வரலாறு’ முதல் மற்றும்
மூன்றாம் வகையைச் சேருகிறது.
திராவிட இயக்க வரலாறு 2 பாகங்களைக் கொண்டது. முதல் பாகம், ஏன்
திராவிடர்கள் சார்பாக ஒரு அரசியல் கட்சி வேண்டும் என்பதில் ஆரம்பித்து
நீதிக்கட்சியின் தோற்றத்தில் தொடங்கி, தி.க-வாக பரிணாமம் கொண்டு, திமுக-
வாகப் பிளந்து அண்ணாவின் மரணத்தோடு முடிகிறது.
ஆர். முத்துக்குமாரின் திராவிட இயக்க சார்பு உள்ளவர் எனினும், வரலாற்றை
எழுதும்போது விருப்பு வெறுப்பு இல்லாமல் எழுதுகிறார். முக்கியமாக
நீதிக்கட்சி உருவான விதம், பெரியாரின் பங்கு, திக-வின் வளர்ச்சி,
அண்ணாவின் தனிக்கட்சி முடிவு போன்றவை ஒரு வெளி மனிதனின் கோணத்தில்
வரலாற்றை நன்கு ஆராய்ந்து எழுதப்பட்டவை.
1970-களுக்குப் பிறகு பிறந்தவர்கள் இந்த இயக்கங்களைப் பற்றி தெளிவாக
கட்சி சார்பில்லாமல் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் இதைப் போன்ற
புத்தகங்கள் நிறையத் தேவை.
இந்தப் புத்தகம் ஒரு வரலாறு மட்டுமே (வெகு எளிதாக நான் சொல்வதாகத்
தெரிந்தாலும், இதை எழுதியவரின் உழைப்பை அளவிடமுடியாது). திறனாய்வு
கிடையாது. ஆனால் இதைப் போன்ற புத்தகங்களின் வழியேதான் ஆய்வுகள் உருவாக
வேண்டும். அதுவும் அந்த வரலாற்றில் இருக்கும் பாத்திரங்கள் சிலர்
இன்னும் active-ஆக அரசியலில் இருக்கும்போதே நிகழ வேண்டும்.
முத்துக்குமாரின் புத்தகம் அதற்கு ஒரு வழியாக இருக்கும் என்று நம்பலாம்.
இதைப் பற்றி சந்திரமௌலி எழுதிய விமர்சனம் ஒன்றைப் படித்ததாக நினைவு.
சுட்டிக் கிடைத்தால் பிறகு இணைக்கிறேன்.
பதிப்பகம் : கிழக்கு
கிடைக்கும் இடம்: பாகம் 1 - https://www.nhm.in/shop/978-81-8493-598-1.html
பாகம் 2 - https://www.nhm.in/shop/978-81-8493-599-8.html
வணக்கம்
நண்பர் முத்துக் குமாரின் திராவிட இயக்க வரலாறு நூலுக்கு நான் எழுதிய
விமர்சன சுட்டி கிழக்கில் அந்த புத்தகத்தின் சுட்டியிலேயே கிடைக்கிறது என
நினைக்கின்றேன்
எனினும் அந்த புத்தகத்தைக் குறித்து இரண்டு சந்தர்ப்பங்களில் என் வலைப்
பூவில் எழுதினேன்
http://mowlee.blogspot.com/2011/01/34th-book-fair-chennai-part-1.html
ஒவ்வொரு வருடமும் புத்தகக் கண்காட்சிக்கு செல்லும் போது வாங்க வேண்டிய
பட்டியல் இல்லாமல் செல்வதில்லை. அந்தப் பட்டியலில் சில மாற்றங்களும்
நிகழும். அப்படியாக அமைந்தது இந்த 2011 வருட சென்னை புத்தகக் கண்காட்சி.
சின்ன விஷேசம் ஹரன் பிரசன்னாவிடமும். பா.ராகவனிடமும் ஆட்டோகிராப்
வாங்கினேன். நான் ஆட்டோகிராப் வாங்கும் 3 வது 4 வது பிரபலங்கள் இவர்கள்.
இதற்கு முன் நான் கவாஸ்கரிடமும், குண்டப்பா விஸ்வநாத்திடமும் மட்டும்
தான் வாங்கியிருக்கிறேன். ஒவ்வொரு புத்தகம் வாங்கும் போது அதனை
வாங்குதற்குரிய காரணம் இருக்கும். இன்னார் சொன்னார் ; இங்கே ரிவ்யூ
படித்தேன் என்பதாய். அதையும் தாண்டி புத்தகம் வாங்குதற்குரிய வலுவான பின்
புலக் காரணம் இருக்கும். இந்த 2011 சென்னை புத்தகக் கண்காட்சியில்
வாங்கிய புத்தகங்களுக்கான அப்படியான பின்புலம் குறித்த பதிவுகளாக எழுத
ஆசை..
வாங்கிய புத்தகப் பட்டியலை வரிசையிட்டு சொல்லிவிட்டு ஒவ்வொரு புத்தகம்
வாங்கிய காரணப் பின்புலம் குறித்து தொடர் பதிவுகள் எழுதுகிறேன்
1. கிழக்கு பதிப்பகம் திராவிட இயக்க வரலாறு இரண்டு பாகங்கள்
2. கிழக்கு பதிப்பகம் காந்திக்குப் பின் இந்தியா இரண்டு பாகங்கள்
3. கிழக்கு பதிப்பகம் ஹரன் பிரசன்னாவின் கவிதை தொகுப்ப் நிழல்கள்
4. கிழக்கு பதிப்பகம் உணவின் வரலாறு
5. காலச்சுவடு பதிப்பகம் ஆஷ் கொலையும் இந்திய புரட்சி இயக்கமும்
6. கிழக்கு பதிப்பகம் மஹாத்மா காந்தி கொலை வழக்கு
7. பூம்புகார் பதிப்பகம் தொல்காப்ப்பிய பூங்கா
8. பாரதிய வித்யா பவன் க்ருஷ்ணாவதாரம். கே.எம் முன்ஷி ஏழு பாகங்களும்
9. கிழக்கு பதிப்பகம் ப்ராஜெக்ட் மானேஜ்மென்ட்.. இரா.மு
10. கிழக்கு பதிப்பகம் அசோகமித்ரன் 18வது அட்சக் கோடு
11. காலச்சுவடு பதிப்பகம் உப்பிட்டவரை
12. நர்மதா பதிப்பகம் தேர்ந்தெடுக்கப்பட்ட 220 பாராயணப்பாடல்கள்
13. புதிய தலைமுறை பத்தாயிரம் மைல் பயணம் ( இறையன்பு)
14. காலச்சுவடு பதிப்பகம் திலக மஹரிஷி
14. பரதன் பப்ளிகேஷன்ஸ் கண்ணனைத் தேடி
15. என்.சி.பி.ஹெச். நா. வானமாமலை.. தமிழர் நாட்டுப் பாடல்கள்
16. கிழக்கு பதிப்பகம் உருப்படு
17. உயிர்மை கணையாழியின் கடைசி பக்கங்கள்
18. உயிர்மை சுஜாதவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் மூன்றாம் தொகுதி
19. பெங்குவின் பதிப்பகம் நாரயணமூர்த்தி பெட்டர் இந்தியா பெட்டர்
வேர்ல்ட்
கிழக்கு பதிப்பகம் பதிப்பித்துள்ள திராவிட இயக்க வரலாறு இரண்டு பாகங்கள்:
எண் 8:காண்டீபன் வேதாசலம் தெரு, செங்கல்பட்டு இந்த விலாசத்தில் இரண்டு
வருடங்களுக்கு மேல் குடியிருந்தேன். அந்த வீடு சம்பத் என்பாருக்கு
சொந்தமானது. சம்பத்தின் தந்தை மறைந்த திரு பலராமன். நான் மாடி போர்ஷனில்
ஒரு சிறிய அறையில் குடியிருந்தேன். ஈ.வே. இராமசாமி தொடங்கி பல திராவிட
இயக்க தலைவர்களுடன் திரு. பலராமன் நட்பு கொண்டிருந்தார் எனும் தகவலை
திருமதி. பலராமன் மூலம் அறிந்திருந்தேன். அவரது அபூர்வ photo collection
எனது நினவுகளில் எப்போதும் வந்து போகும் .. திரு. பலராமன் ஈ.வே.கி சம்பத்
நினைவாகத்தான் சம்பத் என பெயரிட்டார் என அந்த அம்மையார்
சொல்லியிருக்கிறார். திரு.பலராமன் வீட்டுக்கு வந்து அவருடன் உணவு
அருந்தாத திராவிட இயக்க தலைவர்களே இல்லை என அந்த மூதாட்டி சொல்லும் போது
அறியாமையும் , அதையும் தாண்டிய ஒரு பெருமையும் மிளிரிடும்.. இப்படி
திராவிட இயக்கம் தொடர்பான பிரமுகர்களின் நிகழ்வுகளை யதார்த்தமாக ஒரு
மூதாட்டியிடம் கேட்டுப் பெறும் வாய்ப்பு...
அப்போதிலிருந்தே திராவிட இயக்கம் தொடர்பான தகவல்களில் அதனை விழைந்து
சேகரிக்கும் ஆர்வம்..
அரசாணை 44 ஆதி திராவிட நலத்துறை.. இட ஒதுக்கீட்டு வரலாற்றில் முக்கிய
இடம் கொண்ட அரசாணை. இதனை அப்போது நான் பணியாற்றிக் கொண்டிருந்த அரசு
சார்பு நிறுவனத்தில் அமுல் செய்ய அப்போதைய இயக்குநரான ஓர் ஐ.ஏ.எஸ்
அதிகாரி முனைந்த போது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய நிர்பந்தம்..
அந்த நிறுவனத்தின் பணியாற்றும் பொறியாளர் சங்கத்தின் தலைவர் நான்.. இட
ஒதுக்கீடு தொடர்பான வரலாற்றினை தெரிந்து கொள்ள கன்னிமரா நூலகம், புனித
ஜார்ஜ் கோட்டையில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான நூலகம், சட்ட மன்ற
நடவடிக்கைகளின் ஆவணங்கள் என தேடி தேடி படித்த போது.. அதனோட ஜஸ்டிஸ்
கட்சி , சமூக நீதி, திராவிட இயக்கங்கள் என இணைந்த வரலாற்றினையும் படிக்க
வேண்டியதானது.. அப்போது தொகுத்த ரெபரென்சுகளை இப்போது மீண்டும் எடுத்துப்
பார்க்கிறேன்
இப்படியான ஆர்வப் பயணத்தில் ஒரு தருணம் தான் நான் இந்தப் புத்தகத்தை
வாங்கிய இந்த தருணம். இரண்டு பாகங்களையும் படித்து முடித்தபின்பு விரிவாக
விமர்சனம் எழுத வேண்டும்
மற்றொன்று
http://mowlee.blogspot.com/2011/03/blog-post.html
திராவிட இயக்க வரலாறு- முத்துக்குமார் ஒரு பார்வை
கிழக்கு பதிப்பகம் பதிப்பித்துள்ள திராவிட இயக்க வரலாறு இரண்டு
பாகங்கள்.. புத்தகம் வாங்கிய விபரத்தினை எனது முந்தைய பதிவில்
சொல்லியிருந்தேன்.
அந்த பதிவில் இந்த புத்தகத்திற்கான விரிவான விமர்சனம் எழுத வேண்டும் என்ற
எனது ஆசையினையும் சொல்லியிருந்தேன்.
வரலாற்று நிகழ்வுகளைப் புத்தக வடிவில் பதியும் போது, ஒரு எழுத்தாளருக்கு
உருவாகும் கருத்துப் பிம்பங்கள், யூகங்கள், சமூக நிகழ்வுகள் மீது தான்
கொண்ட கருத்துகள் இந்த கண்ணோட்டத்தில் புத்தகம் செல்லும்.. நூலாசிரியர்
முத்துக்குமார் அப்படி அல்லாது..
நிகழ்வுகளை நிகழ்வுகளாகவே சொல்லியிருப்பதை பாராட்ட வேண்டும் சபாஷ்
முத்துக்குமார்
திராவிட இயக்க வரலாற்றினை எங்கிருந்து துவங்குவது என யோசித்த நிலையில்
இது பிராமணர் , பிராமணர் அல்லாதார் எனும் நிலையில் தொடங்கலாம் என்ற
விபரத்தினை சொல்லி
1909 தொடங்கப்பட்ட சென்னை பிராமணர் அல்லாதார் சங்கத்தின் பிறப்பில்
புத்தகத்தை தொடங்கியுள்ளார்.. இது புத்தக ஆசிரியரின் முன்னுரையில்..
புத்தகத்தின் முதல் அத்தியாயத்தில் காலம் இதுவென குறிப்பிடாத ஆனால்
இந்தியாவில் ஆங்கிலேயர் ஆண்டு கொண்டிருந்த காலம் என புரிந்து
கொள்ளும்படியான ஒரு சம்பவத்துடன் புத்தகம் தொடங்குகிறது.. ஆங்கிலேயர்கள்
ஏன் பிராமணர்களை வேலைக்கு வைத்துக் கொண்டனர் என்பதற்காக
உத்தமதானபுரத்தில் நடந்த (! ? ) ஒரு சம்பவம் சொல்லியுள்ளார்
முத்துக்குமார்.
சபாஷ்.
இந்த புத்தகம் எழுதுவதற்காக "ஆய்வுக்கும் ஒப்பீட்டு ஆய்வுக்கும்" என 50
புத்தகங்களை முதல் பாகத்திலும் 195 புத்தகங்களை இரண்டாம் பாகத்திலும்
Bibliography குறிப்பிடும் திரு. முத்துக்குமாரின் மேலான கவனத்துக்கு
1982 ம் ஆண்டு அமைக்கப்பட்ட பிற்படுத்தப்பட்டோர் நலம் இரண்டாம் கமிஷனின்
அறிக்கையின் முதல் பாகம் பக்கம் 6 மற்றும் 7 ல் காணப்படும் வாசகங்களை
கவனத்தில் கொண்டு வர விழைகிறேன். அந்த அறிக்கை சொல்லும் காலத்தினையும்
கவனத்தில் கொள்ள் வேண்டும்
அந்த கமிஷனின் தலைவர் அம்பாசங்கர் ஐ.ஏ.எஸ்
"During 1853 the British Government found the virtual monopoly of a
single caste in Public Service. The reveneue Establishment in Nellore
District was controlled by 49 Brahmins all from Same
family" (Ambasankar Commission report Vol 1 page 6)
"Between 1894 and 1904 in Provincial Civil Service out of 16 Officers
15 were Brahmins; amonth 21 Assistant Engineers 17 were
brahmins" (Ambasankar Commission report Vol 1 page 7)
இந்த விபரங்களையும் சேகரித்து புத்தகத்தில் பதிந்திருக்கலாம் என
கருதுகிறேன்.
ஆங்கில ஆட்சியில் பிராமணர்கள் முக்கியத்துவம் பெற்றார்கள் எனும் கருத்தை
பதிந்திருக்கும் நூலாசிரியரின் கவனத்துக்கு அதே ஆங்கிலேயர் ஆட்சியின்
ஆவணத்தில் பல்வேறு சாதிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க மாவட்ட ஆட்சித்
தலைவர்கள் அறிவுறுத்தப்பட்ட சான்றினையும் தெரிவிக்க கடமைப்பட்டவனாகிறேன்
"Collectors should be careful to see that the subordinate appointments
in their districts are not monopolised by members of a few influential
families. Endeavour should always be to divide the principal
appointments in each district among the several caste
[Board of Revenue Proceedings dated 9th March 1854(B.S.O 128.2 of
1854)]
முத்துக்குமாரின் ரெபரன்ஸ் பட்டியலில் பிறரின் புத்தகங்கள் தலைவர்களின்
சரிதங்கள் இடம் பெற்றுள்ளன .. ஆனால் அரசு ஆவணத் தொகுப்புகள் எதுவும்
காணப்படவில்லை .. இது சற்றே அல்ல நிறையவே வியப்பளிக்கிறது..
இந்திய வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வான மான்டேகு செம்ஸ்போர்ட்
அறிக்கையினைக் குறித்து முத்துக்குமாரின் பதிவுகளைப் மிகவும் பாராட்ட
வேண்டும்.. ஆனால் மான்ட்போர்ட் அறிக்கை எனப்படும் இந்த அறிக்கையின்
முக்கிய சங்கதிகள் 3 என குறிப்பிடுகிறார் நூலாசிரியர்.
ஆனால் மான்ட்போர்ட் அறிக்கையின் முக்கிய சங்கதிகள் 4
1. There should be as far as possible, complete popular control in
Local Bodies and the largest possible independences for them of
outside control
2. The provinces are the domain in which the earlier steps towards the
progressive realisation of responsible government should be taken.
Some measures of responsibility should be given at once, and our aim
is to give complete responsibility as soon as the condition permit.
This
involves at once giving the provinces the largest measure of
independence, legeslative, administrative and financial of the
Government of India which is compatible with the due discharge by he
latter of its own responsibilities.
3. The Government of India must remain wholly responsible to
Parliament and saving such responsibility its authority in essential
maaters must remain undisputable pending experience of the effect of
the changes now to be introduced in the provinces. In the meantime the
Indian Legislative Concil should be enlarged and made more
representative and its opportunities of criticizing the Government
increased
4. In proportion as the foregoing changes take effect, the contrl of
Parliament and the Secretary of State over the Government of India and
provincial governments must be relaxed
இந்திய அரசமைப்பின் வரலாற்றினை குறித்த ஒரு சிறந்த புத்தகத் தொகுப்பு
Indian Consitutional Documents By A.C Banerjee இதனை அவசியம் வாசிக்க
வேண்டும் என திரு. முத்துக்குமாரினை அன்புடன் வேண்டுகிறேன்.
அதே போல் மான்டேகுவின் மனைவி வெனடியா மான்டேகு தொகுத்த மான்டேகுவின்
இந்தியன் டைரி இந்த புத்தகமும் முத்துக்குமார் படிக்க வேண்டும்.
மான்ட்போர்ட் அறிக்கையினை தயார் செய்ய மிகவும் பிரயத்தனப்பட்டிருப்பதனை
அந்த டைரி வடிவத்தில் காணலாம் .. சாம்பிளுக்கு
ஒன்று பார்க்கலாம்
ஏப்ரல் 16, 1918 ம் தேதியின் டைரி வாசகம்
This Morning Duke Roberts and I Went on hammering away at the report,
pruning, altering , changing, every day it gets better; but this work
from ten in the morning till twelve in night, with also some work
before breakfast, is very very very waering. If the work was hard the
report
ranks, "with the great state papers which are landmarks of
constitutional progress in the history of the British Empire". Even a
critic like Craddoc is made to concede that the report was a wonderful
piece of work.
இட ஒதுக்கீட்டு வரலாற்றில் ஒரு மைல் கல் கம்யூனல் ஜி.ஓ இதனைக் குறித்து
ஒரு சாப்டர் முத்துக்குமார் தந்துள்ளார்
ஆனால் மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த அரசு ஆவணம் குறித்து இன்னும்
விபரமாக சொல்லியிருக்கலாம்.
முதல் வகுப்புவாரி பிரதிநிதித்துவ ஆணை என்ற அந்ததஸ்து கொண்ட அரசாணை
G. O Ms No 1071 of Public Department dated 4th Novemeber 1927
இந்த அரசாணையின் படி ஐந்து விதமான இட ஒதுக்கீடு ஆணையிடப்பட்டது
1. பிராமணர் அல்லாதார் 41.67 %
2. பிராமணர் 16.67%
3. ஆங்கிலோ இந்தியரும் கிறிஸ்துவரும் 16.67%
4. முகமதியர்கள் 16.67%
5. தாழ்த்தப்பட்டவ்ரும் மலைஜாதியினரும் 8.33 %
இந்த அரசாணையில் சில மாற்றங்கள் செய்து 1947 நவம்பரில் ஓர் அரசாணை
வெளியானது
G. O Ms No 3437 Public (Services) dated 21-11-1947
இந்த அரசாணையில் தான் பிராமணர் அல்லாதாரில் பிற்படுத்தப்பட்டவர்கள் என
தனிப்பிரிவு முதன் முதலில் ஏற்படுத்தப்பட்டது.
இந்திய அரசமைப்புசட்டம் 26 ஜனவரி 1950 முதல் அமுல் செய்யப்பட்ட உடன் இந்த
இரண்டு அரசாணைகளும் சக்தி இழந்தன
காரணம் சம்பகம் என்பவர் சென்னை இராஜதானி அரசுக்கு எதிராக தொடர்ந்த
வ்ழக்கில் உச்ச நீதி மன்றம் 1951ல் அளித்த தீர்ப்பு
இந்திய அரசமைப்பு சட்டம் ஷரத்து 14 மற்றும் 15ன் கீழ் வழங்கிய சம
உரிமைகளுக்கு எதிரான அம்சஙள் கொண்ட அந்த அரசாணைகள்
செயலிழந்தன
அரசமைப்புச் சட்டம் அமுலுக்கு வந்த பின் அதற்கு முந்தைய அரசு ஆணைகள்
சட்டங்கள் அரசமைப்பு சட்டத்தின் ஷரத்துகளுக்கு
முரண்பட்டவை ஆயின் அவை செல்லாதவை ஆகும்
சம்பகம் வழக்கின் தீர்ப்பு சென்னை இராஜதானியில் போராட்டத்தை
தோற்றுவித்தது
இந்த போராட்டங்கள் குறித்து முத்துக்குமார் பதிவு செய்திருக்கலாம்
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முதல் திருத்தம் ஏற்படக் காரணமான இந்த
போராட்டமும் அதை தொடர்ந்து நாடாளுமன்ற விவாதங்களும் நேருவின் முயற்சியும்
நூலாசிரியர் கவனத்திற்கு கொன்டு வர ஆசைப்படுகிறேன்
நேருவின் நாடாளுமன்ற விவாத உரையினை இங்கே குறிப்பிடவும் ஆசைப்படுகிறேன்
The House knows very well and there is not need for trying to hush it
up that his particular matter in this particular shape arose because
of certain happenings in Madras ( Parliamentary Debates Volume XII -
XIII Par 2 Column 9615)
இப்படி சில விடுதல்கள் இருந்தாலும் நூலாசிரியர் முத்துக்குமாரின் முயற்சி
மிகவும் பாராட்டுக்குரியது.
மிகக் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமெனில், சரித்திர நூலாசிரியர் இராமசந்திர
குஹா தனது காந்திக்குப் பின் இந்தியாவில் ஒரு செய்தி சொல்லியுள்ளார்.
"ஐரோப்பாவின் சில நாடுகளின் புவியியல் பரப்பை விட அதிக பரப்பளவு கொன்ட
தமிழ்நாடு அதன் தலைவர்கள் , இயக்கம் குறித்து விரிவான் புத்தகங்கள் அந்த
மொழியில் இல்லை"
இராமசந்திர குஹாவின் ஆதங்கம் முத்துக்குமாரி திராவிட இயக்க வரலாறு நூல்
மூலம் தீர்க்கப்பட்டிருக்கிறது என திட்டமாகச் சொல்லலாம்
இது போன்ற ஆராய்ச்சி மனப்பாங்கு கொண்ட இளைஞரை ஊக்குவித்து நூலெழுத
வாய்ப்பு தந்து , அதனை செம்மையாக அச்சிட்டு அழகுற வடிவமைத்து
வெளியிட்டுள்ள கிழக்கினை மனதாரப் பாராட்டுகிறேன்.
முத்துக்குமாரின் முயற்சியில் விளைந்த இந்த நூல் தொகுதியினை ஒரு ரோஜாவைப்
பார்க்கும் ஆர்வமுள்ள சராசரி ஆசாமி போல் இல்லாது அந்த ரோஜா மலர்வதில்
அந்த தோட்டக்காரனின் உழைப்பினை ஒரு சகாவாக வியக்கிறேன். உழைப்பு, விடா
முயற்சி இதனை இந்த நூலின் எல்லா இடத்திலும் காண முடிகிறது
நேரடியாக பின்னர் வாய்ப்பு கிட்டும் போது பிசிக்கலாகவே செய்கிறேன்.
இப்போது இணையம் வழியாக செய்கிறேன். எனது கரத்தினை முத்துக்குமாருக்கு
நீட்டி கரம் குலுக்குகிறேன். நீங்கள் என் எதிரே இப்போது நிற்பதாக
நினைத்து ஒரு சல்யூட் செய்கிறேன் முத்துகுமார்
கிரேட் வொர்க்..
நன்றி. nhm.in - ல் சுட்டியை மட்டும் எடுத்துக்கொண்டு கீழே உங்களின்
விமர்சனத்தை கவனிக்கவில்லை.
பதிந்தமைக்கு நன்றி.