தமிழ்நாட்டில் இப்போதைய காசு புரளும் வேலை மூன்றாவதுதான். அபாயகரமான
இந்த ட்ரெண்டில் உண்மையான வரலாற்றாய்ச்சியர்கள் காணாமல் போவது சோகம்.
ஆ. சிவசுப்பிரமணியன் (இனிமேல் ஆ.சி.) நா. வானமாமலை வழியில் கள ஆராய்ச்சி
செய்து எழுதுபவர். இவரின் ‘ஆஷ் கொலையும், இந்தியப் புரட்சி இயக்கமும்’
காலச்சுவடு வெளியீடாக வந்திருக்கிறது.
வில்லியம் டி’ எஸ்கார்ட் ஆஷ்: வ.உ.சி. பற்றி படிக்கும்போது தவறாமல்
வரும் ஒரு பெயர் ஆஷ். சுதேசிக் கப்பல் கம்பெனியை ஒழித்தவர்களில்
முதன்மையானவர். திருநெல்வேலியில் சுதந்திரப் போராட்டத்தை ஒடுக்கியவர்.
இதனால் தமிழகத்தில் உள்ள புரட்சிக் குழுவைச் சேர்ந்த வாஞ்சிநாதனால்
சுட்டுக் கொல்லப்பட்டார். இவ்வளவுதான் இந்த நிகழ்ச்சியைப் பற்றிய பொது
ஜனப் புரிதல். ஆ.சி. இதைத் தாண்டி இந்தக் கொலையின் மூல வித்து என்ன,
யார் யார் இதில் பங்கேற்றார்கள், ஆங்கில அரசாங்கம் எப்படிக்
குற்றவாளிகளைப் பிடித்தது, வழக்கு எப்படி நடந்தது, இறுதித் தீர்ப்பு என்ன
என்பதை விவரமாக பதிந்துள்ளார்.
பின்னினைப்பாக இந்த வழக்கு சம்பந்தமான அரசாங்கப் பதிவுகள், வழக்கு நடந்த
விதம், சம்பந்தப்பட்டவர்களின் வாக்குமூலங்கள் மற்றும் ஆ. இரா.
வேங்கடாசலபதியின் ஆஷ் சந்ததியினரின் சந்திப்பு (காலச்சுவடில் வந்தது -
http://www.kalachuvadu.com/issue-118/page12.asp) என தன் ஆராய்ச்சிக்கு
வலு சேர்க்கிறார். புரட்சியாளர்கள் ஆஷ் கொலை மக்களிடையே எழுச்சியாக
மாறும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் அவ்வாறு நிகழவில்லை. ஏன்
என்பதற்கு ஆ.சி. ஆராய்ந்த காரணங்கள் சிந்தனைக்குரியவை.
இதில் வரும் நீலகண்ட பிரம்மச்சாரி கல்கியின் ‘பொங்மாங்கடல்’ கதையில்
வருவார் (என்று நினைக்கிறேன்).
நான் இந்தப் புத்தகத்தை முக்கியமாகக் கருதுவது, ஆ.சி-யின் நேரடியான,
அலங்காரமற்ற, ஆரவாரமற்ற, அபத்தமான உரையாடல்களற்ற எளிய தமிழில் வரலாற்றை
எந்த சார்பும் இல்லாமல் எழுதிய விதம்.
பின்னினைப்பில் என்னை பாதித்தவை வாஞ்சியின் தந்தை சாட்சியம் மற்றும் ஆஷி-
ன் மனைவிக்கு உதவித் தொகை வழங்க நடந்த கடிதப் பரிமாற்றங்களும்.
படிக்கவேண்டிய புத்தகம்.
பதிப்பகம்: காலச்சுவடு
கிடைக்கும் இடம்: http://udumalai.com/?prd=&page=products&id=8167
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசகன்" group.
To post to this group, send an email to tamilv...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilvasagan...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilvasagan?hl=en-GB.