பில் கேட்ஸ், ஓப்பன்ஹைமர், பீட்டில்ஸ் போன்ற உலகை மாற்றி அமைத்த
வெற்றியாளர்கள் ஆகட்டும், பெரிதாக சாதிக்க ஆரம்பித்து பின் சட்டென்று
காணாமல் போனவர்களாகட்டும் அவர்களின் செயல்பாடுகள் அவர்களின் அறிவினால்
மட்டும் அமையவில்லை. அவர்களின் வெற்றிகள் overnight-ல் உருவானதில்லை.
எப்படி என்பதை இந்தப் புத்தகத்தில் பார்க்கலாம். மால்கம் 10000 மணிநேர
கணக்கு ஒன்றை எல்லா இடத்திலும் தருகிறார். அது என்ன என்பதை புத்தகத்தில்
படியுங்கள்.
படித்து முடித்தப்பின் எனக்குக் கொஞ்சமாவது சில மனிதர்களின் வெற்றிகள்
எப்படி என்று தொடர்புபடுத்த முடிந்தது. கவனிக்க: இந்தக் கேள்விகள்
அவர்களின் extraordinary genious நிலையை எந்த அளவிலும் குறைத்து
மதிப்பிடவில்லை (மால்கம் கிளாட்வெல்லும் அதையே சொல்கிறார்):
1) இளையராஜாவின் 1977-ல் ஆரம்பித்தது அவரின் இசையறிவினால் மட்டுமேவா?
2) நாராயணமூர்த்தியின் Infosys வெற்றி 1995-களின் தொழில்துறை அலையின்
வெற்றி மட்டுமேவா?
3) ரஜினியின் சூப்பர் ஸ்டார் நிலை அவரின் ஸ்டைல் மட்டுமேவா?
4) அம்பானியின் வெற்றி அரசாங்கத்தின் நெளிவு, சுளிவுகளை நன்றாக அறிந்ததன்
விளைவு மட்டுமா?
5) ஏன் iPod 2002-03-க்குப் பின் மகத்தான வெற்றி அடைந்தது?
இப்படியே பல நிகழ்ச்சிகளுக்கு பதில்களைத் தேடலாம்.
அவசியம் படிக்கவேண்டிய புத்தகம்.
கிடைக்கும் இடம்:
http://www.amazon.com/Outliers-Story-Success-Malcolm-Gladwell/dp/0316017930/ref=sr_1_1?s=books&ie=UTF8&qid=1314070204&sr=1-1