ஷோபா சக்தி - ம்

33 views
Skip to first unread message

Raj Chandra

unread,
Sep 6, 2011, 9:55:08 PM9/6/11
to தமிழ் வாசகன்
ஷோபா சக்தியின் இரண்டாவது நாவல் ‘ம்’. ஈழமக்களின் அன்றாட அகதி வாழ்
அவலங்களை ஒரு கதை கேட்கும் மனோபாவத்துடன் ‘ம்...அப்புறம்’ என்ற நிலையில்
வைத்திருப்பதை சாடும் கதை. கதை நிறமி என்ற அழகானப் பெயர் கொண்ட ஒரு 15
வயது சிறுமி தன் கருவைக் கலைக்க ஒரு மேலைநாட்டு மருத்துவமனையில்
அமர்ந்திருப்பதில் ஆரம்பித்து அவள் தந்தை நேசக்குமாரன் தன் வரலாற்றை ஒரு
சிறையிலிருந்து எழுதுவதாக அமைகிறது.

நேசக்குமாரன் ஒரு பாதிரியாராக அவனின் தகப்பனால் கனவுக் காணப்பட்டவன்.
படித்துக் கொண்டிருக்கும்போது 1980-களின் ஆரம்பத்தில் இலங்கையில் நடந்த
அரசியல் நிகழ்வுகளில் தன்னைப் பிணைத்துக் கொள்கிறான். முதல் வன்முறை
கிறிஸ்துமஸ் தினத்தின் முதல் நாளில் தன் ஊர் புத்த விகாரையைக்
கொளுத்துவதில் ஆரம்பிக்கிறது. பின் இயக்கத்திற்கு ஊர் பிரச்சாரம்
செய்கையில் ஒரு கிராமத்தில் நடக்கும் உயர்சாதி, தலித் கலவரத்தில்
போலிசிடம் சிக்குகிறான்.

நேசக்குமாரன் போராடத் தயாராக இருந்தானே தவிர அடி வாங்கத் தயாராக இல்லை.
தன் இயக்கத் தோழர்களைக் காட்டிக் கொடுத்து போலிஸ் வன்முறையிலிருந்து
விடுபடுகிறான். அவனை அரசியல் கைதியாக இராணுவம் எடுத்தபின் அவனின் பயணம்
வெலிக்கட, யாழ்ப்பாணம் என்று பல சிறைகளைக் கண்டு மீள்கிறது. காட்டிக்
கொடுக்கும் புத்தி இறுதியில் தன் மகளின் கர்ப்பத்துக்குக் காரணமானவனையும்
விடுவதில்லை.

ஆரம்ப அத்தியாயத்தை அங்கதத்துடன் ஆரம்பிக்கும் ஷோபா, கதையின் வடிவம் ஏற,
ஏற மிகவும் dark-ஆக மாற்றிவிடுகிறார். 25 ஜூன் 1983 மற்றும் 27ஜூன் 1983
வெலிகட சிறைப் படுகொலைகளை இந்த அளவிற்கு graphical-ஆக எழுதிய ஒரு கதையை
இப்போதுதான் படிக்கிறேன். கொடூரம் என்பது குறைவான தமிழ் வார்த்தை.
இப்போது அடிக்கடி செய்திகளில் அடிபடும் டக்ளஸ் தேவானந்தா கொல்லப்படாமல்
தப்பித்த கைதிகளில் ஒருவர்.

'ம்’ ஒரு நாவலாக இலங்கையின் 1983-1990-களின் ஆரம்ப காலம் வரையிலான
சரித்திரத்தை சொல்லும் கதை. பல இயக்கங்கள் வந்து போகின்றன. எல்லோர்
மீதும் விமர்சனம் இருக்கிறது. ஷோபா சக்தியின் மறு பிரதி பக்கிரி என்னும்
பாத்திரத்தின் வழியே வரலாறு எப்படி பொய்க்கிறது என்பதை பதிவு செய்கிறது.

இதில் அரைகுறையாக நிற்பது நிறமியின் கர்ப்பம். இதை மட்டுமேஒரு
கதைக்கருவாக ஷோபா எடுத்துக் கொண்டிருந்தால் ஒரு உளவியல் நாவலாக
அமைந்திருக்கும். ஆரம்பத்தில் அப்படி கோடி காட்டிவிட்டு, பின் புத்தகம்
மொத்தமும் நேசக்குமாரனின் அலைச்சலைக் காட்டிவிட்டு சட்டென்று ஒரு
அத்தியாயத்தில் அவளின் கர்ப்பத்திற்குக் காரணமாக வருவது படிப்பவர்கள்
கற்பனைக்கு விட்டு விட்டாலும் முழுமையடையவில்லை.

புத்தகத்தில் வெலிகட மற்றும் அதன் பின்னான சம்பவங்கள் நிரம்ப மன
அழுத்தத்தைத் தருபவை. அதை காட்சிப்படுத்தியிருப்பதன் வெற்றி ஷோபாவைச்
சேரும். அந்த சம்பவங்களுக்கு நிகரானது நிறமியின் கர்ப்பம். ஒரே
மூச்சில் படித்துவிட்டு அயர்ந்து உட்கார்ந்திருந்த என்னைப் பார்க்க
நல்லவேளையாக வீட்டில் யாரும் இல்லை.

பதிப்பாளர்: கருப்பு பிரதிகள்
கிடைக்கும் இடம்: உடுமலையிலும், discovery book palace-ம் இல்லை. ஆனால
நூலகம்.நெட்-ல் pdf-ஆக இருக்கிறது: http://noolaham.net/project/38/3735/3735.pdf

Vilvam Lingam

unread,
Sep 8, 2011, 12:21:42 AM9/8/11
to tamilv...@googlegroups.com
a nice narration-vilvam

2011/9/7 Raj Chandra <kabi...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசகன்" group.
To post to this group, send an email to tamilv...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilvasagan...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilvasagan?hl=en-GB.


Reply all
Reply to author
Forward
0 new messages