இந்திரா பார்த்தசாரதி - குருதிப்புனல்

10 views
Skip to first unread message

Raj Chandra

unread,
Aug 10, 2011, 11:18:28 PM8/10/11
to தமிழ் வாசகன்
கீழவெண்மணி கிராமத்தில் நடந்த கொடூரம் நம் அனைவருக்கும் தெரியும். அதை
அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட நாவல். சிவா தன் நண்பன் கோபாலைப் பார்க்க
டெல்லியிலிருந்து கிராமத்திற்கு வருகிறான். அந்த ஊரின் பெரும் புள்ளி
கண்ணையா நாயுடு. அவருக்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் இடையே அவ்வப்போது
உரசல் நடக்கிறது.

கோபாலின் நண்பர் வடிவேலுக்கும், கண்ணையாவுக்கும் நடக்கும் தகராறில்
கோபால் தலையிட வன்முறையில் முடிகிறது. கண்ணையாவை எதிர்ப்பவர்கள்
எல்லோரும் அவரின் ஆண்மையை மறைமுகமாகக் குறிப்பிடுவதில் ஆவேசமாகும் அவர்,
வயல் வேலைகளுக்கு வெளியாட்களைக் கொண்டு வருகிறார். அதன் பின் நடக்கும்
பல அசம்பாவிதங்களில் கிராமமே நிலைகுலைகிறது. இறுதியாக கண்ணையா நாயுடு
ஒரு குடிசைக்குள் பெரும்பாலும் பெண்கள், குழந்தைகளை அடைத்து எரிப்பதைப்
பார்க்கும் கோபால் தீவிர புரட்சியில் (நக்ஸலைட்?) இறங்குவதாக முடிகிறது.

ஆரம்பத்திலிருந்தே இ.பா. தமிழக அரசியலையும், அதைத் தொடரும் தமிழ்
சமூகத்தையும் ஒருவித அங்கதம் கலந்த எரிச்சலுடனேயே விவரிக்கிறார். இதைத்
தமிழகத்தை விட்டு வெளியே சென்ற பல பேரிடம் கண்டிருக்கிறேன். அவர்
கூற்றில் உண்மை இருந்தாலும் 50 பக்கங்களுக்குப் பிறகு ஆயாசம்
ஏற்படுகிறது. நாயுடுவின் ஆண்மைக் குறைபாடே கதையின் முக்கிய சம்பவங்களை
நிர்ணயிக்கிறது. இதை அப்போதைய கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள்
சுட்டிக்காட்டியிருக்கின்றனர் (புத்தகத்தின் முன்னுரைபடி). இ.பா இதை
தீர்க்கமாக மறுத்தாலும் கதை வழிநடப்பில் பாலியல் நிகழ்ச்சிகள் பல
திருப்பங்களுக்குக் காரணமாகின்றன.

நாவல் களம் தமிழக வரலாற்றில் மிகத் தீவிரமான ஒன்று, ஆனால் இதை நோக்கி
செலுத்தும் சம்பவங்கள் எல்லாம் கோபாலுக்கும் நாயுடுவுக்கும் நடக்கும்
மோதலாகக் காண்பித்தது கதாசிரியரின் சறுக்கல்.

இந்த நாவல் பலராலும் குறிப்பிடப்படுவதற்குக் காரணம் வேறு யாரும் இந்த
நிகழ்ச்சியை வைத்து தமிழில் இன்னும் எழுதவில்லை என்பதாகவும் இருக்கலாம்
(நான் ‘செந்நெல்’ படிக்கவில்லை).

இந்தக் கொடூர சம்பவத்தை ஒரு அ-புனைவாக ஆ.சிவசுப்பிரமணியன் போன்ற
ஆராய்ச்சியாளர்கள் எழுதினால், எதற்காக உயிர் துறந்தோம் என்றே தெரியாமல்
இறந்த மக்களுக்கு அஞ்சலியாவது கிடைக்கும்.

பதிப்பகம்: கிழக்கு
கிடைக்கும் இடம்: உடுமலை (http://udumalai.com/?prd=Kuruthi
%20punal&page=products&id=919) அல்லது nhm.in

RV

unread,
Aug 11, 2011, 10:35:02 PM8/11/11
to தமிழ் வாசகன்
புத்தகத்தின் பலம் கீழ்வெண்மணி பற்றி ஒருவர் துணிந்து எழுதியது. அது
பெரிய விஷயம். பலவீனம், அனாவசியமாக ஆண்மைக்குறைவு என்று எங்கேயோ போனது.
படிப்பவர்களுக்கு, ஏதோ ஆண்டவன் குறை வைத்துவிட்டான், அவனை திருப்பி
திருப்பி சீண்டினார்கள், அதில் வந்த கடுப்பில் தீ வைத்துவிட்டான் என்று
தோன்றினால் ஆச்சரியம் இல்லை. அது இ.பா.வின் நோக்கம் இல்லைதான்; அவரது
உண்மையான நோக்கம் சிறு, பர்சனல் விஷயங்கள் பெரும் அனர்த்தங்களுக்கு
காரணங்களாக அமைவதுண்டு, அதுவே வாழ்க்கையின் அபத்தம் என்று சொல்லுவதுதான்
என்று நினைக்கிறேன். ஆனால் அயோக்கியத்தனம் செய்தாலும் இத்தனை நாள்
இவ்வளவு குரூரமாக நடக்காதவன் ஏன் இப்படி மாற வேண்டுமென்று தோன்றலாம்.
அதுதான் இ.பா.வின் தோல்வி. பொதுவாக இ.பா.வின் கதைகளில் எல்லாரும்
பேசிக்கொண்டே இருப்பது போல இதிலும் உண்டு, ஆனால் ஆக்ஷன் கொஞ்சம் அதிகம்.

http://siliconshelf.wordpress.com/2010/09/16/இந்திரா-பார்த்தசாரதியின/

http://siliconshelf.wordpress.com/2010/12/15/கீழ்வெண்மணி/ - மேலும்
இரண்டு கீழ்வெண்மணி புத்தகங்கள் - செந்நெல், மற்றும் கீழைத்தீ

Reply all
Reply to author
Forward
0 new messages