புத்தக விமர்சனம்: The Righteous Mind: Why Good People are Divided by Politics and Religion

8 views
Skip to first unread message

சனாதனி

unread,
May 7, 2012, 4:41:05 AM5/7/12
to தமிழ் வாசகன்
The Righteous Mind: Why Good People are Divided by Politics and
Religion
By Jonathan Haidt
(Pantheon Books, 419 pp., $28.95)

http://www.tnr.com/article/books-and-arts/magazine/102760/righteous-mind-haidt-morality-politics-scientism

இப்புத்தக விமர்சனத்தில் இருந்து நான் புரிந்துகொண்டவை:

- மனிதர்களிடையில் ஏன் சண்டை உண்டாகிறது என்பதை இப்புத்தகம் ஆராய்கிறது.

- மதம் மற்றும் அரசியல் சண்டைகள் பற்றி இப்புத்தகம் பேசினாலும், நம்
ஒருமையில் நிகழும் சண்டைகள் பற்றியும் பதில்கள் இப்புத்தகத்தில்
கிடைக்கலாம்.

- இப்புத்தகம் அறிவியலியப் போக்கின் (scientism) குறைகளைச் சுட்டுகிறது.

- நாம் ஏன் சண்டை போடுகிறோம் எனும் கேள்விக்கு, டார்வினின் பரிணாமவியல்
முழுமையான பதில் தெரிவிக்காது என்கிறது.

- டார்வின் கருத்தின்படி, தனிமனிதர்களுக்கு இடையிலும், குழுக்களுக்கும்
இடையில் நடக்கும் வாழ்வாதாரப் போட்டியில் வெற்றி பெறுகிற உயிரினங்கள் வாழ
உரிமை பெறுகின்றன.

- இந்தப் போட்டியில் வெல்ல அவசியப்படுபவை ஒழுக்கம், அரசியல், மற்றும்
மதம் என்று அழைக்கப்படுகின்றன.

- இங்கனம் உருவான சிந்தனையை, ”புதிய நாத்திகம்” என்று இப்புத்தக
ஆசிரியரான ஹைட் (Haidt) அழைக்கிறார். மறுக்கிறார்.

- அறிவியலியப் பார்வையால் புரிந்துகொள்ள முடியாத நம்பிக்கை, சடங்கு
போன்றவை நீண்ட காலும் வாழும் உரிமையை அளிக்கின்றன என்கிறார்.

- மதச்சார்பற்ற குழுக்களை விட, மதம்-சடங்கு சார்ந்த குழுமங்கள்
பல்லாயிரம் ஆண்டுகள் தொடரமுடிந்திருப்பதை அவர் சுட்டுகிறார்.

- தனிமனித மற்றும் குழுவின் வாழ்வாதாரத் தேவைகள் போட்டி மற்றும்
சண்டைகளை உருவாக்கி அவற்றில் ஈடுபடும் தனிமனித ஜீன்கள் மற்றும் குழும
ஜீன்களின் தலைமுறையை முடிவுக்குக் கொண்டு வந்து விடுகின்றன.

- ஆனால், தனிமனித மற்றும் குழும வாழ்வாதாரங்களைத் தாண்டிய, ஒரு மெய்மை
குறித்த நம்பிக்கை கொண்ட மானுடம் பல தலைமுறைக்கும் தொடர முடிகிறது
என்கிறார்.

- இந்த மெய்மைப் போக்கிற்கு உடல் ரீதியான உறவுகள் (kinship) அவசியம்
இல்லை என்பதைச் சுட்டுகிறார்.

- அதாவது, தனிமனிதரோ அல்லது ஒரு குழுவோ சடங்குகளில் ஈடுபட மெய்ம்மைப்
போக்கு (நம்பிக்கை) போதுமானதாக இருக்கிறது. உடல் ரீதியான ஜீன் கடத்தல்
கட்டாயம் இல்லை என்கிறார்.

- ஒரு தனிமனிதனின் செயல்பாட்டை முடிவு செய்வதில் பகுத்தறியும்
வெளிமனத்தின் பங்கு, பகுத்தறிய முடியாத ஆழ்மன-நனவிலி மனத்தின்
செயல்பாடுகளின் அடிப்படையில்தான் அமைகிறது.


- ஆகவே, பகுத்தறிவின் விளைவாய் உருவாகிற தத்துவ, அறிவியல்
கண்டுபிடிப்புகளைச் சொல்லும் அறிவியலியப் போக்கால் மானுட உயிரினத்தின்
நீண்டகால வாழ்க்கை வெற்றி ரகசியங்களைக் கண்டு பிடித்து விட முடியாது
என்கிறார்.

- ஆனால், ஹைடின் இக்கருத்துக்களுக்கு மாறாக, மெய்ம்மை சார்ந்த
செயல்பாடுகள் மானுடத்தை மேலும் மேலும் தவறான செயல்களில் ஈடுபடுத்துவதையே
வரலாறு சுட்டுகிறது.

- பரிணாமவியல் உளவியலாளர்களில் சிலர் டார்வினின் குழுமத் தகவமைப்பு
தவறானது, ஒதுக்கப்பட வேண்டியது என்கிறார்கள். பலர் இதை
ஏற்றுக்கொள்ளவில்லை. குழுமம் மற்றும் தனிமனிதருக்குப் பாதிப்பைத்
தவிர்ப்பவையே ஒழுக்கம் என்று சமூகம் சொல்வதாக அவர்கள் டார்வின்
கருத்தின்படிச் சொல்கிறார்கள். இதனால், அவர்களுக்கிடையேயும் சண்டை.

- ஹைட் இந்தப் போக்கை மேற்கத்திய மதச்சார்பற்ற ஒழுக்கவியல் பார்வை
என்கிறார்.

- நாக்கு பல சுவைகளை அறியக்கூடியது. ஆனால், ஓரிரண்டு சுவைகளை மட்டும்
முக்கியத்துவம் கொள்ள வைப்பதாக மேற்கத்தியப் போக்கு இருக்கிறது
என்கிறார்.

- ஒழுக்கம் சார்ந்த தரிசனங்கள் சுதந்திர ஆர்வம், கடமை உணர்வு,
பொறுப்புணர்வு, மற்றும் புனிதம் போன்றவற்றையும் அண்டி இருக்கின்றன
என்கிறார்.

- மேற்கத்தியத் தனிமனித மையப் போக்கு சொல்வதற்கு மாறாக, குழுமப்
போக்குத்தான் ஊக்குவிப்பையும் சமூகப் புரிதலையும் உண்டாக்குகிறது என்று
மானுடவியல் அடிப்படையில் பேசுகிறார்.

- அதனால், மதம் எனும் குழுமப் போக்குத்தான் வாழ்வியல் ஒழுக்கங்களை
நிர்ணயிக்கின்றது என்கிறார்.

- ஆனால், ஜீன்கள் மற்றும் ரத்தப் பிரிவுகள் போன்ற இயற்கைக் காரணிகள்;
குழுமம் சார்ந்தப் போக்கிற்கான காரணிகள் அப்படி அல்ல. அவை, சமூக
வரலாற்றுக் காரணிகளால் உருவாக்கப்படுபவை.

- இன்று ஒரு குழுமத்தில் இருக்கும் ஒருவர், வேறொரு குழுமத்திற்கு
மாறுகிறார். அல்லது, தன் குழுமத்திற்கு எதிரான நடவடிக்கைகளைச்
செய்கிறார்.

நாட்ஸிக் கைதிகளின் மேல் இரக்கம் காட்டி, நாட்ஸிக் குழுமத்தைச் சேர்ந்த
சிலர் உதாரணம் ஆகிறார்கள்.

- ஆகவே, அறிவியலியப் போக்கின் அடிப்படையில் சமூகத் தனிமனிதச்
செயல்பாடுகள் மற்றும் ஒழுக்கங்கள் புரிந்துகொண்டு விட முடியாது என்கிறார்
அவர்.

- அறவுணர்வு, நற்குணங்கள், பழக்கங்கள், பயிற்சிகள், அடையாளங்கள்,
அமைப்புக்கள், தொழில்நுட்பம், மற்றும் பரிணாமம் அடைந்த உளவியல்
செயல்பாடுகள் போன்றவற்றின் ஊடுபாடுகளால்தான் சமூக விதிகளின் கட்டமைப்பு
உருவாகிறது என்கிறார். இவையால்தான் சுயநலமற்ற மானுடச் செயல்பாடுகள்
சாத்தியமாகின்றன என்கிறார்.

- ஆகவே, விதிகளின் அடிப்படையில் மானுட ஒழுக்கத்தைப் புரிந்துகொண்டு விட
முடியாது என்கிறார்.

- அதே சமயம், பாலியல் போட்டிகள் மற்றும் வாழ்வாதாரப் போட்டிகளில் பல
டார்வின் கருத்துப்படியான இயற்கைத் தகவமைப்புக் காரணிகளால் உருவாகின்றன
என்பதை ஹைட் மறுக்கவில்லை. இக்காரணிகளை, வேறு காரணிகள்
முறியடித்துவிடவில்லை.

- மேலும், ஹைட் தனது கருத்திற்கு ஆதரவாகக் குறிப்பிடும் சம்பவங்கள்
யூகங்களாகவோ அல்லது ஆதாரமற்றவையாகவோ இருக்கின்றன.

- பன்மைக் குழுக்கள் கொண்ட சமூகத்தில் விதிகளின் அடிப்படையில் ஒழுக்கத்தை
வலியுறுத்துவதற்கு மாறாக, பயன்பாட்டுவாதம் (utilitarianism) சிறந்தது
என்கிறார்.

- பன்மைத் தன்மை என்பதே பயன்பாட்டுவாதத்திற்கு எதிரானதாக முடியும் என்பதை
அவர் உணரவில்லை.

- பெரும்பாலான மக்கள் பயன்பாட்டுவாதத்தை ஏற்றுக்கொள்வதில்லை.

- பன்மைத் தன்மை கொண்ட நாட்டில் குழுமங்களிடையே ஒழுக்கம் சார்ந்த ஒத்த
புரிதல் இருக்காது. ஒருமித்த புரிதல் இல்லாத போது, அனைவருக்கும் பொதுவான
ஒரு சட்டகத்தை உருவாக்கிவிட முடியாது.

- மானுட தரிசனங்கள் பகுத்தறிவைவிடச் சிறந்தவை என்கிறார் ஹைட். தனிமனிதப்
பகுத்தறிவை எதிர்க்கிறார்.

- வரலாற்றின் விபத்துக்களை, அதாவது விதிவிலக்குகளை அடிப்படையாகக் கொண்டு
உலகப் பொது விதிகளை கண்டடையும் அறிவியலை அவர் மறுக்கிறாரே.

- அமெரிக்காவின் ரிபப்ளிக்கன் கட்சிக்காரர்கள் ஒழுங்கு விதிகளை அதிகம்
புரிந்துகொள்கிறார்கள். டெமோக்ரட்டுகளால் புரிந்துகொள்ள முடியவில்லை.

- டெமோக்ரட்டுகளும், ரிபப்ளிக்கன்களும் அதிகம் உறவாடாவிட்டால்
உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் சண்டைகள்தான் எஞ்சும் என்கிறார்.

- ஜான் ஸ்டூவர்ட் மில் வரையறுத்த சமூகப் புரிதல்கள் (ரிபப்ளிக்கன்களின்
போக்கு) அல்லது எமிலி ட்ர்க்ஹெய்மின் சமூகப் புரிதல்கள்
(டெமோக்ரட்டுகளின் போக்கு) - இந்த இரண்டில் ஒன்றே பின்பற்றப்படும்
என்கிறார்.

- ஆனால், மதம் பலகீனமாக உள்ள யூரோப்பிய நாடுகளில் இவரது கருத்துத்
தவறாகப் போய்விடுகிறதே.

- இருப்பினும், இப்புத்தகம் உபயோகமானதுதான். அறிவியலியப் போக்கின்
குறைபாடுகளை புரிந்துகொள்ள உதவுகிறது.

- உதாரணமாக, பரிணாம உளவியல் அடிப்படையில் சமீபத்தில் நடந்த டீ பார்ட்டியை
விளக்கிவிட முடியாது.

- சீனாவில் மாவோவின் கம்யூனிசப் பொருளாதாரத்தைத் தூக்கி எறிந்துவிட்டு,
சந்தைப் பொருளாதாரத்துக்கு வந்தவர்களை இடதுசாரிகள் என்பதா வலதுசாரிகள்
என்பதா ?

- அறிவியலியப் போக்கைத் தாண்டவேண்டிய காலகட்டத்திற்கு நாம்
வந்துவிட்டோம். மண்டை ஒட்டு அளவை வைத்தும், முரணியக்கப் பொருள்முதல்வாதம்
வைத்தும் நாம் செயல்பட்ட காலங்களைத் தாண்டியதுபோல.

- வரலாற்றுக் காரணிகளால் எழுந்த பிரச்சினைகளுக்கு அறிவியலியப் போக்குத்
தீர்வு தரும் என்பதுதான் நவீனம் என்று இப்போது அறியப்படுகிறது.

- இந்த அறிவியலியப் போக்கு எனும் மாயை முற்றிலும் நம்மிடம் இருந்து
போய்விடும் என்பது மற்றொரு மாயையே.

- நம்மூர் பழனிசித்த வைத்தியர் முதல் அமெரிக்காவின் ஸையண்டாலஜிஸ்ட்டுகள்
வரை இந்த அறிவியலியப் போக்கு அளிக்கும் நம்பிக்கையக் குணமாக்கித்
தீர்த்துவிட முடியாது.

.

Reply all
Reply to author
Forward
0 new messages