ஏ.கே. செட்டியார் தீவிர காந்தி பக்தர். அவரின் பக்தியானது காந்தியைப்
பற்றிய ஒரு அற்புதமான ஒரு ஆவணத்தைத் தயாரித்த அனுபவங்களே ‘அண்ணல்
அடிச்சுவட்டில்’ புத்தகம். மாண்டிஸோரி அம்மையாரிடத்தில் காந்தியைப்
பற்றி ஒரு சிறு பேட்டி வாங்குவதிலிருந்துத் துவங்கி, நியூயார்க்,
சுவிட்ஸர்லாந்து, தென் ஆப்ரிக்கா, லண்டன், இத்தாலி என்று சுற்றி பல
செய்தி நிறுவனங்களிடம் காந்தி தொடர்புடைய திரைச்சுருள்களை
சேகரிக்கிறார். பின் பம்பாயில் அவைகளை காலகட்டம் வாரியாகத் தொகுத்து
38000 அடி செய்திப்படமாக மாற்றினார்.
மேற்கண்ட செயல்கள் வெகு சுருக்கமாக இருந்தாலும் அது முடிவதற்கு ஏறத்தாழ
இரண்டரை ஆண்டுகளும், பல ஆயிரம் கிலோமீட்டர் பயணங்களும், பொருள்
செலவுகளும் ஏராளம். 1939-ல் யுத்தம் ஆரம்பித்த சமயத்தில் இத்தாலி,
அமெரிக்கா என்று போர் அபாயம் மிகுந்த பகுதிகளில் காந்தியின் நினைவில்
சுற்றியிருக்கிறார். பல இடங்களில் நிறவெறிக்கும் ஆளாகியிருக்கிறார்.
ஏ. கே. செட்டியாரின் எழுத்து முறையைக் குறிப்பிடவேண்டும். மிகத்
தெளிவாக, எளிமையான தமிழில் சிறு சிறு வாக்கியங்களாக எழுதி நம்மை
புத்தகத்திற்க்குள் சுலபமாக இழுத்து விடுகிறார். பின்னுரையில் அவர் 1947
ஆகஸ்ட் 15-ம் அன்று டெல்லியில் இருந்த அனுபவம் மிக முக்கியமான ஒரு
ஆவணம். இவரின் இந்த முயற்சி பல தேசியத் தலைவர்களோடு பழக வாய்ப்புக்
கொடுத்துள்ளது. ஆனாலும் ஆணவம் அவர் எழுத்துக்களில் இல்லை. காந்தியைப்
பின்பற்றுவராக இருப்பதால் அதில் ஆச்சரியம் இல்லை.
காந்தியின் படம் எடுக்கும்போது அவருடைய வார்தா ஆசிரமத்திலேயே பல நாட்கள்
தங்கியிருந்தாலும் அவர் காந்தியை சந்திப்பதைத் தவிர்த்திருக்கிறார். ஏன்
என்பதை புத்தகத்தில் படியுங்கள் :).
அவசியம் படிக்கவேண்டிய புத்தகம்.
சரி...இப்போது அந்தப் படம் எங்கிருக்கிறது?
பல முரண்பாடானத் தகவல்கள் இருந்தாலும் செட்டியார் மறைந்தபின் யாருக்கும்
அதன் இடம் தெரியவில்லை.
பதிப்பகம்: காலச்சுவடு
கிடைக்கும் இடம்: http://udumalai.com/?prd=&page=products&id=4290
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசகன்" group.
To post to this group, send an email to tamilv...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilvasagan...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilvasagan?hl=en-GB.