Elie Wiesel - Night

6 views
Skip to first unread message

Raj Chandra

unread,
Aug 30, 2011, 8:56:52 PM8/30/11
to தமிழ் வாசகன்
1) "Men to the left, women to the right"

- இந்த எட்டு வார்த்தைகளில் தன் குடும்பம் பிரிக்கப்பட்டு தாயையும்,
தமக்கைகளையும் விஷ வாயு கூடத்துக்குள் செல்வதைப் பார்க்கும் ஒருவன் என்ன
செய்வான்?

2) ரஷ்யத் துருப்புகள் ஜெர்மனியை விரட்ட ஆரம்பித்த 1944-ல் தன் ஊரின்
முனையில் ஜெர்மனிய இராணுவத்தைப் பார்த்த ஒரு யூதர் என்ன செய்வார்?

3) யூதர்களை ஆடுமாடுகளாக அடைத்த இரயில் வண்டி ஒரு நிலையத்தில்
நிற்கிறது. இரயிலுக்கு அதுதான் கடைசி நிலையம். இரயிலிலிருந்து ஒருவர்
அந்த நிலையத்தின் பெயரைப் படிக்கிறார்: ‘Auschwitz'. அவர்கள் யாருக்கும்
அந்த ஊரில் என்ன இருக்கிறது என்று தெரியாது.

4) வீஸலின் நண்பர் முகாமில் தன் மனைவி, மகள் உயிரோடுதான் இருப்பதாகவும்,
மறுநாள் இரயிலில் அவர்கள் வருவதாகவும், அவர்களுக்காக மட்டுமே தான்
உயிரோடு இருப்பதாகக் கூறுகிறார். மறுநாளிலிருந்து அவரை அவர்கள்
பார்க்கவில்லை.

5) தன்னோடு வதை முகாமில் துணையாக இருந்த தந்தை மகனுக்கு
சுமையாகிவிடுகிறார். இறப்பின் வாயிலில் நின்று அவர் புலம்பும்போது மகன்
யாரோ போல சலனமற்று இருக்கிறான்.

6) விடுதலை கிடைக்கிறது. ஆனால் அவனின் குடும்பம் சாம்பலான பின்.

மேற்கண்டவையெல்லாம் எலீ வீஸலின் ‘இரவு’ புத்தகத்தில் நடந்த சம்பவங்கள்.
வீஸலின் சம்பவ விளக்கங்களில் ஆச்சரியமாக அசோகமித்திரனின் ‘செய்தி
வாசிக்கும் தொனி’ தென்படுகிறது. அது சரித்திரத்தை இன்னும் பயங்கரமாக
மாற்றுகிறது.

தமிழில் மொழிபெயர்ப்பு எப்படி என்று தெரியவில்லை. அதனால் நான் சிபாரிசு
செய்வது ஆங்கிலப் பதிப்பை:http://www.amazon.com/Night-Oprahs-Book-Club-
Wiesel/dp/0374500010/ref=sr_1_1?s=books&ie=UTF8&qid=1314752094&sr=1-1

தலையணை வரலாறுகள் விவரிக்க இயலாத மனித இயலாமையை இந்த 120 பக்கங்கள்
முகத்தில் அறைவது போல சொல்கிறது.

அவசியம் படியுங்கள்.

Reply all
Reply to author
Forward
0 new messages