புதுச்சேரி : ஆரோவில் தமிழ் மரபு மையத்தில் குழந்தைகளுக்கான புத்தகக் கண்காட்சி துவங்கியது.
ஆரோவில் தமிழ் மரபு மையமும், புதுச்சேரி கபிலன் பதிப்பகம் சார்பில் குழந்தைகளுக்கான புத்தகத் திரு விழா கடந்த 8ம் தேதி ஆரோவில் தமிழ் மரபு மையத்தில் துவங்கியது.
புதுச்சேரி, மதுரை மற்றும் சென்னையில் இருந்து பல்வேறு பதிப்பகங்களின் குழந்தை நூல்கள் கண் காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. திருக்குறள், பொது அறிவு நூல்கள், சிந்தனை நூல்கள், தத்துவ நூல்கள், அகராதிகள், சிறுகதைகள், டிக்ஷ்னரி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான நூல்கள் மற்றும் குறுந் தகடுகள் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு நாளும் குழந்தைகளுக்கான விழாக்களும் சிறப்புப் பயிலரங்கங்களும் நடந்து வருகிறது.
வரும் 18ம் தேதி வரை தினம் காலை 9.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை நடக்கிறது. குறைந்த விலையில் குழந்தைகளுக்கான புத்தகங்கள் கிடைப்பதால், பெற்றோர்கள் குழந்தைகளுடன் வந்து வாங்கிச் செல்கின்றனர்.
கண்காட்சிக்கான ஏற்பாடுகளை ஆரோவில் தமிழ் மரபு மைய நிர்வாகி கவிஞர் மீனாட்சி மற்றும் நிர்வாகிகள் செய்துள்ளனர். கண்காட்சி தொடர்பான தகவல்களுக்கு 0413-2623773 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.