நம்மாழ்வார்

2 views
Skip to first unread message

arunan kapilan

unread,
Sep 21, 2012, 9:24:45 AM9/21/12
to tamil...@googlegroups.com


"பதுக்க விடக் கூடாது!' இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்: 


கடந்த, 1969ல், பசுமை புரட்சி ஏற்பட்ட காலத்தில் இருந்தே, தமிழகம், உணவுப் பற்றாக்குறை மாநிலமாகத் தான் இருக்கு. பஞ்சாபில் இருக்கிறவங்க, அரிசியே சாப்பிடறதில்லை. தமிழகத்துக்கு ஏற்றுமதி பண்றதுக்காகவே, அவங்க அரிசி உற்பத்தி பண்றாங்க. ஆந்திராவில் இருந்து பொன்னி வருது. கர்நாடகத்தில் இருந்து டீலக்ஸ் பொன்னி வருது. இந்தியா முழுதும் நல்லா இருந்தா, நாம அதைப் பத்தி கவலைப்படாம, இறக்குமதி பண்ணிருவோம். இந்தியா முழுதும், இன்னிக்கு, 28 சதவீதம் மழை குறைவுன்னு அரசே சொல்லுது. தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்கள்ல, நாலரை லட்சம் ஏக்கர்ல, நெல் பயிர் பண்றோம். அறுவடையின் போது தான், நெல் பற்றாக்குறை வரும். ஆனா, விதைக்கும் போதே பற்றாக்குறைன்னு சொல்றாங்க. இது எப்படி? இது முழுக்க முழுக்க பதுக்கல்! விலை உயர்வுக்கு, பதுக்கல் மிக முக்கியக் காரணம். உணவுப் பொருளை அரசு பதுக்க விடக் கூடாது. இரண்டாவதா, பருவ மழை பெய்யலியே தவிர, அங்கங்கே கொஞ்சமா மழை பெய்துட்டு தான் இருக்கு. புன்செய் பயிர்களுக்கு, இந்த மழை போதும். நெல்லுக்கு தேவையான தண்ணீர்ல, பத்துல ஒரு பங்குக்கும், குறைவா இருந்தா போதும். இந்த தானியங்கள் நல்லா விளையும். புன்செய் பயிர்களான கேழ்வரகு, கம்பு, சோளம் போன்ற, சத்துள்ள தானியங்களை பயிரிட, மக்களிடையே ஆர்வத்தை, அரசு தூண்ட வேண்டும். மூன்றாவதாக, ஒற்றை நாற்று சாகுபடி மூலம், நெல் விளைச்சலை, இரண்டு பங்கு கூட்ட முடியும். அரசாங்கம் நடத்தின பல, "மாதிரி வயல்'களிலேயே, விளைச்சல் இரட்டிப்பாகி, இது உறுதிபடுத்தப்பட்டிருக்கு. அரசு அதிகாரிகளுக்கு, போதிய பயிற்சி கொடுத்து, எங்கெல்லாம் நெல் பயிராகுதோ, அங்கெல்லாம், இந்த ஒற்றை நாற்று சாகுபடி முறையை அறிமுகப்படுத்தினா, குறைஞ்ச இடத்திலேயே, இரண்டு பங்கு நெல் உற்பத்தியை பெருக்க முடியும். இந்த மூன்றையும் செஞ்சாலே, உணவுப் பொருள் பற்றாக்குறையால் ஏற்படுகிற விலைவாசியை கட்டுப்படுத்தலாம்

alternative text


C. Arunan
Kapilan Pathippagam
321. I st Floor,
3rd Main Road,
Mahaveer Nagar,
Kuruvadikkuppam,
Puducherry - 605 008.
Mobile- 94423 79558 
INDIA

Reply all
Reply to author
Forward
0 new messages