சிற்பி அறக்கட்டளை விருது வழங்கும் விழா

4 views
Skip to first unread message

அருணன் கபிலன்

unread,
Jul 27, 2012, 11:30:44 AM7/27/12
to tamil...@googlegroups.com
  கவிஞர் சிற்பி அறக்கட்டளை வழங்கும் 17  ஆம்  ஆண்டு விருதுகள் அறிவிப்பு

              1996 ஆம் ஆண்டு தொடங்கி, கடந்த பதினாறு ஆண்டுகளாக, ஆண்டுதோறும் கவிஞர் சிற்பி அறக்கட்டளை தமிழகத்தின் சிறந்த கவிஞர்களுக்கு விருது வழங்கிச் சிறப்பித்து வருகிறது.   அந்த வரிசையில்   17ஆம்  ஆண்டுக்கான  விருது மற்றும் பரிசுகள்  திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் நா. முத்துக்குமார் மற்றும் வானம்பாடிக் கவிஞர் தேனரசன்ஆகியோருக்கு வழங்கப்படுகின்றன. 
               வானம்பாடி இயக்கத்தின் மூத்த கவிஞர்களுள் ஒருவரும் வெள்ளைரோஜா. மண்வாசல். காலத்தோடு ஆகிய கவிதைத்தொகுதிகள் நல்கியவ்ரும் ஆன கவிஞர் தேனரசன் சிறந்த ஆய்வாளரும் கூட. கங்கை கொண்டான் கவிதைகளை ஆராய்ந்து எம்.பில் பட்டம் பெற்றவர். இவரோடு இணைந்து பரிசு பெறுகிறவர், கவிஞர் நா. முத்துக்குமார்.  பட்டாம்பூச்சி விற்பவன். நியூட்டனின் மூன்றாம் விதி,  கிராமம் நகரம் மாநகரம். கண்பேசும் வார்த்தைகள், , முதலிய நூல்கள் படைத்துள்ளவரும் திரைப்படப்படப் பாடலாசிரியரும் ஆனவர் கவிஞர் நா.முத்துக்குமார் இலக்கியப் பரிசு பெறுகிறார்.  வருகிற 2012ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி பொள்ளாச்சி என்.ஜி. எம் கல்லூரியில் கோவை பாரதிய வித்யாபவன் தலைவர் பி.கே. கிருஷ்ணராஜ் வாணவராயர் விழாத் தலைமையேற்று விருதுகளை வழங்குகிறார். சாகித்ய அகடமி விருதுபெற்ற எழுத்தாளர் பிரபஞ்சன் சிறப்புரை ஆற்றுகிறார். இச் செய்தியினை அறக்கட்டளையின் தலைவர் கவிஞர் சிற்பி அறிவித்துள்ளார்.

Reply all
Reply to author
Forward
This conversation is locked
You cannot reply and perform actions on locked conversations.
0 new messages