Fwd: [Tamilamutham] முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில் இந்து, டைம்ஸ் ஆப் இந்தியா போன்ற ஆங்கிலப் பத்திரிகைகளின் அப்பட்டமான தமிழர் விரோதப் போக்கும் வெளிப்படையான மலையாளச் சார்பும்

2 views
Skip to first unread message

Srinivasan.G

unread,
Jan 4, 2012, 10:47:08 AM1/4/12
to muthami...@googlegroups.com, prakriti-a-call-to-...@googlegroups.com, tamil...@googlegroups.com, tamilco...@googlegroups.com, tn...@googlegroups.com, tamil_wordpre...@googlegroups.com, tamilt...@googlegroups.com


---------- Forwarded message ----------
From: Srinivasan.G <ng.s...@gmail.com>
Date: 2012/1/4
Subject: Fwd: [Tamilamutham] முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில் இந்து, டைம்ஸ் ஆப் இந்தியா போன்ற ஆங்கிலப் பத்திரிகைகளின் அப்பட்டமான தமிழர் விரோதப் போக்கும் வெளிப்படையான மலையாளச் சார்பும்
To: fun...@googlegroups.com, hindu-r...@googlegroups.com, upscp...@googlegroups.com, ilant...@googlegroups.com, indray...@googlegroups.com, ishv...@googlegroups.com, uyiru...@googlegroups.com




---------- Forwarded message ----------
From: Srinivasan.G <ng.s...@gmail.com>
Date: 2012/1/4
Subject: Fwd: [Tamilamutham] முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில் இந்து, டைம்ஸ் ஆப் இந்தியா போன்ற ஆங்கிலப் பத்திரிகைகளின் அப்பட்டமான தமிழர் விரோதப் போக்கும் வெளிப்படையான மலையாளச் சார்பும்
To: arul...@googlegroups.com, chennai...@googlegroups.com




---------- Forwarded message ----------
From: Srinivasan.G <ng.s...@gmail.com>
Date: 2012/1/4
Subject: Fwd: [Tamilamutham] முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில் இந்து, டைம்ஸ் ஆப் இந்தியா போன்ற ஆங்கிலப் பத்திரிகைகளின் அப்பட்டமான தமிழர் விரோதப் போக்கும் வெளிப்படையான மலையாளச் சார்பும்
To: tamil...@googlegroups.com, beyo...@googlegroups.com




---------- Forwarded message ----------
From: Muthamizh Vendhan <mutha...@gmail.com>
Date: 2012/1/3
Subject: [Tamilamutham] முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில் இந்து, டைம்ஸ் ஆப் இந்தியா போன்ற ஆங்கிலப் பத்திரிகைகளின் அப்பட்டமான தமிழர் விரோதப் போக்கும் வெளிப்படையான மலையாளச் சார்பும்
To: முத்தமிழ் வேந்தன் <mutha...@gmail.com>




முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில்

இந்து, டைம்ஸ் ஆப் இந்தியா போன்ற ஆங்கிலப் பத்திரிகைகளின்

அப்பட்டமான தமிழர் விரோதப் போக்கும் வெளிப்படையான மலையாளச் சார்பும்

 

      நடுநிலையான ஏடுகள் என்று பிதற்றிக் கொள்ளும் Times of India, The Hindu, Frontline, Tehelka போன்ற ஆங்கிலப் பத்திரிகைகள் முல்லைப் பெரியாறு பிரச்சனையில் தமிழ்நாட்டுக்கு எதிராக தொடர்ந்து கட்டுரைகள் எழுதியும், செய்திகளை வெளியிட்டும் வருகின்றன. சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட இந்து'ம் அதன் இருவார இதழான பிரண்ட்லைன்' பத்திரிகையும் தமிழக அரசிடமிருந்து நிறைய சலுகைகளைப் பெற்றுக்கொண்டு, நமது வரிப்பணத்தில் பிழைப்பு நடத்திக் கொண்டு, தமிழர்களுக்கு எதிரான கருத்துக்களை தொடர்ந்து துணிச்சலோடு எழுதி வருகின்றன. நமது வாசகர் தளத்தின் மீது அமர்ந்து கொண்டு, நமது விளம்பரங்களிலிருந்து பெறப்படும் வருமானத்தைக் கொண்டு பிழைப்பு நடத்திக் கொண்டு நமக்குத் துரோகம் செய்து கொண்டிருக்கின்றன.

 

     Times of India, The Hindu ஆகிய இரண்டு நாளேடுகளிலும் (தமிழகப் பதிப்புகளில்), Frontline ஆங்கில ஏட்டிலும் Mullaiperiyar என்று எழுதாமல், திட்டமிட்டே Mullaperiyar என்று (‘i’ இல்லாமல் முல்லா பெரியார்' என்ற தெளிவான மலையாள நிலைப்பாடு எடுத்து) எழுதி வருவதை சற்று கூர்ந்து படிப்பவர்கள் புரிந்து கொள்வர். (அந்த வகையில் முல்லைப் பெரியார் (Mullaiperiyar) என்று சரியாக இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏட்டில் எழுதப்படுகிறது; கேரளத்தில் தமிழர்கள் மீது நடந்த தாக்குதல்களையும், தமிழ்ப் பெண்கள் மீது நடந்த வன்முறை வெறியாட்டங்களையும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில ஏடு மட்டுமே பரவலாக பதிவு செய்து வெளியே கொண்டு வந்தது என்பதையும் இங்கே பதிவு செய்ய வேண்டியுள்ளது).

 

     முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில் தமிழகத்தின் நியாயங்களையும், இங்கு நடக்கின்ற மக்கள் எழுச்சியையும் மறைத்தும், நம் மக்களின் போராட்டங்களை இருட்டடிப்புச் செய்தும், அல்லது வேண்டா வெறுப்பாக சிறு சிறு செய்திகளாக குறுக்கிப் போடுவதுமான வேலைகளை இந்த ஆங்கிலப் பத்திரிகைகள் (தமிழகத்திலிருந்து வெளிவரும் பதிப்புகள்) தொடர்ந்து செய்து வருகின்றன. ஆனால் கேரளாவின் செயல்பாடுகளை அப்படியே நியாயப்படுத்தி எழுதுவதும், அவற்றை பெரிய பெரிய செய்திகளாக்கி தேசிய செய்திகளாக பதிவு செய்வதையும் கண்கூடாகப் பார்க்கிறோம்.

 

     தமிழகத்திலிருந்து வரும் இப்பத்திரிகைகளில் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில் நமக்கான அனைத்து நியாயங்கள் இருந்தாலும், தமிழர்களுக்கு எதிராக எழுதுவது குறித்தோ, மலையாளிகளுக்கு ஆதரவாக வெளிப்படையாக கட்டுரைகளை வெளியிடுவது குறித்தோ இந்து, டைம்ஸ் ஆப் இந்தியா போன்ற ஏடுகள் கொஞ்சம் கூட தயக்கம் காட்டுவது இல்லை; வெட்கப்படுவது கிடையாது; கேட்டால் கருத்துச் சுதந்தரம், பத்திரிகைச் சுதந்தரம், சனநாயகம் என்று வாய்கிழியப் பேசுவார்கள். 30 இலட்சம் தமிழர்களின் வாழ்வாதாரத்தை நாசமாக்கும் வேலைக்குத் துணை போவதும், வெறிபிடித்தலையும் கேரள அரசியல்வாதிகளுக்கு வால் பிடிப்பதும் எப்படிக் கருத்துச் சுதந்தரமாகும்?

[

     கடந்த பிரண்ட்லைன் ஆங்கில இதழில் (டிசம்பர் 30, 2011) ராமசாமி ஐயர் என்ற ஒரு ஐயனிடமிருந்து மூன்று பக்கப் பேட்டி ஒன்றை பதிவு செய்துள்ளனர். அபத்தமான, தமிழர்களின் வாழ்வாதாரத்திற்கு ஆப்பு வைக்கின்ற, ஆபத்தான கருத்துக்களை அப்படி பேசியுள்ளான் இந்த ஐயன்! தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் பகுதியில் உள்ள அனைத்துத் தமிழர்களும் விவசாயத்தை விட்டுவிட்டு வேறு தொழில் செய்ய தயாராக இருக்க வேண்டுமாம்! உடனடியாக இல்லையென்றாலும் பரவாயில்லை; இன்னொரு பத்தாண்டுளில் இப்பகுதி மக்கள் இதற்குத் தயாராகிக் கொள்ள வேண்டும்' என்ற அறிவுரையை முன்மொழிந்துள்ளான்! இதுபோன்ற ஏகப்பட்ட விஷயங்களை (விஷங்களை) முத்தாக பொழிகிறார். அந்தப் பேட்டியை சற்று சுருக்கி இந்து நாளேட்டில் ஒரு கட்டுரையாகவும் (டிசம்பர் 29, 2011) வெளியிட்டுள்ளனர். (பார்க்க: பின் இணைப்பு).

     ''முல்லைப் பெரியாறு அணை உடைக்கப்பட வேண்டும், புதிய அணை கட்டப்பட வேண்டும்'' என்று மலையாளிகளின் பேட்டிகளையும், அவர்களுக்குச் சாதகமான செய்திகளையும் முதல் பக்கச் செய்திகளாகவும், தேசியச் செய்திகளாகவும் இந்து ஏடு வெளியிடுகிறது. ஆனால் நமது பொறியியல் அறிஞர்கள், அரசியல்வாதிகளின் கட்டுரைகளோ, செய்திகளோ, பதிலுரைகளோ, மாநிலச் செய்திகளாக குறுக்கி வெளியிடுகிறார்கள் அல்லது வெளியிட மறுக்கின்ற போக்கும் நிலவுகிறது. (விதிவிலக்காக, முன்னாள் பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகனின் கட்டுரை (டிசம்பர் 31, 2011) வெளிவந்துள்ளது. (பார்க்க: பின் இணைப்பு)

 

     இப்போக்கைக் கண்டித்தோ, எதிர்த்தோ தமிழர் நலனில் அக்கறை கொண்டு செயல்படும் கட்சிகள், இயக்கங்கள், மனித உரிமை அமைப்புகள் எதுவும் செய்வதில்லை. நம்முடைய மவுனத்தை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, வெறிகொண்ட மலையாள ஆங்கில பத்திரிகையாளர்களும், இந்து' ராம் போன்ற பார்ப்பனர்களும் இதைத் தங்கள் பணியாகவே தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றனர். ஈழப் பிரச்சனையில் தமிழர்களைக் கொன்று குவிப்பதை எப்படி நியாயப்படுத்தி எழுதினார்களோ, அதேபோல் முல்லைப் பெரியாறு பிரச்சனையில் இவர்கள் செயல்படுகின்றனர். இதற்கு நாம் ஏதாவது செய்ய வேண்டாமா?

·        டைம்ஸ் ஆப் இந்தியா, தி இந்து போன்ற ஆங்கில பத்திரிகைகளின் அப்பட்டமான மலையாளச் சார்பு, தமிழர் விரோத போக்கைக் கண்டித்து, தமிழர் நலனில் அக்கறையோடு போராடும் அனைத்துக் கட்சிகளும், அமைப்புகளும் வெளிப்படையாக அறிக்கைகள் விடவேண்டும்; அவற்றுக்கு பேட்டிகள், செய்தகிள் வழங்குவதைத் தவிர்க்க வேண்டும்.

·        இந்தப் பத்திரிகைகளில் மலையாள நிருபர்களின் ஆதிக்கம், தமிழர் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து அப்பத்திரிகை அலுவலகங்களுக்கு முன் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள், தர்ணாக்கள் நடத்த வேண்டும்;

·        தமிழக அரசு இந்த ஏடுகளுக்குத் தரும் விளம்பரங்கள், சலுகைகளை நிறுத்துமாறு தமிழக அரசுக்கு நிர்பந்தம் தரவேண்டும்;

·        முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில் இந்த பத்திரிகைகளின் மலையாளச் சார்பு பிரச்சாரத்திற்கு எதிராக தமிழக மக்கள் மத்தியில் கருத்துப் பரப்பல் செய்ய வேண்டும். குறிப்பாக, தேனி, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் சங்கங்கள், மாணவர் அமைப்புகள், இளைஞர் அமைப்புகள், வழக்கறிஞர் சங்கங்கள் மற்றும் தொழிலாளர் அமைப்புகள் போன்றவை மதுரையில் செயல்படும் இந்து, டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை அலுவலகங்களுக்கு எதிரே அறவழியில் போராட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டும். இப்பத்திரிகைகளின் அப்பட்டமான தமிழர் விரோத போக்கைக் கண்டித்து நகரங்களிலும், கிராங்களிலும் சுவரொட்டிப் பிரச்சாரம் செய்ய வேண்டும். இப்பத்திரிகைகள் பேசும் ''போலியான நடுநிலைமை'' முகமுடியை நம் மக்கள் முன் கிழித்து எறிய வேண்டும். முல்லைப் பெரியாறு அணையை உடைப்பது சரி' என்று நியாயப்படுத்தும் பத்திரிகைகளுக்கு மதுரையிலும், சென்னையிலும் என்ன வேலை? என்ற பிரச்சாரத்தை வலுவாக மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும்.

·        டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை (சென்னை அலுவலகம்) மலையாளிகளின் ஆதிக்கத்தில் எவ்வாறு இருக்கிறது, தமிழர்கள் நலன்களுக்கான செய்திகள் எவ்வாறு அவ்வலுவலகத்தில் முழுக்க இருட்டடிப்பு செய்யப்படுகிறது என்பதை வெளிப்படையாக ராதிகா கிரி என்ற எழுத்தாளர் The Weekend Leader இணைய இதழில் எழுதியுள்ளார். இதற்கு Times of India ரூ.100 கோடி இழப்பீடு கேட்டு இந்த இணைய இதழின் ஆசிரியர் வினோஜ் குமார் மற்றும் எழுத்தாளர் ராதிகா கிரி மீதும் வழக்குத் தொடுக்கப் போவதாக மிரட்டியுள்ளது. உண்மையைச் சொல்லும்போது மலையாள வெறியர்களுக்கு எவ்வளவு கோபம் வருகிறது! (பார்க்க: பின் இணைப்பு)





--
தாய்மொழி தமிழினை தழைத்திடச் செய்வோம்..
வாய்மொழி வழக்கில் பிறமொழி தவிர்ப்போம்..!
அரும்பல கலைகளை தமிழினில் படைப்போம்..
வரும்தலை முறைக்கு அதை வளமுறக் கொடுப்போம்..!



--
*G.SRINIVASAN 
*
Salem
Mobile : 9789247339





--
*G.SRINIVASAN 
*
Salem
Mobile : 9789247339





--
*G.SRINIVASAN 
*
Salem
Mobile : 9789247339





--
*G.SRINIVASAN 
*
Salem
Mobile : 9789247339


The_Hindu_Frontpage_03012012_1.jpg
Mullaiperiyar_Tehelka_The_Editor_Dec_2011.jpg
The_Hindu_03012012_Page_2.jpg
Two States and a water issue_Ramasamy_Iyer_The_Hindu_29122011.docx
Unwarranted fears on Mullaiperiyar_Duraimurugan_The_Hindu_31122011.docx
Damned if you do_Tehelka.pdf
Ramasamy_Iyer_Frontline_Vol_28_Issue_26_Dec_17-30, 2011.pdf
Rising emotions_Theweekendleader.pdf

thayumanavan ganesan

unread,
Jan 6, 2012, 9:02:23 PM1/6/12
to tamilt...@googlegroups.com, Narayanan Nambi
Dear Sir,
                  Thank you for timely exposure of so-called papers of Elite and enlightened group. The possible reason for The Hindu to take such a line is the paper is toeing the line of CPIM and almost become a mouth piece of the party. As for the Times of India, It is a Delhi based newspaper group and certainly cannot go against the wishes of Congress party as they watched silently how the Ministry of I&B twisted the arm of DNA paper in the recent past for true reporting. Also, I would like to draw your attention to the fact that It is not Mullaiperiyar, It is Mullaiperiyaru.Thank youji


From: Srinivasan.G <ng.s...@gmail.com>
To: muthami...@googlegroups.com; prakriti-a-call-to-...@googlegroups.com; tamil...@googlegroups.com; tamilco...@googlegroups.com; tn...@googlegroups.com; tamil_wordpre...@googlegroups.com; tamilt...@googlegroups.com
Sent: Wednesday, 4 January 2012 9:17 PM
Subject: TAMILTEMPLES Fwd: [Tamilamutham] முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில் இந்து, டைம்ஸ் ஆப் இந்தியா போன்ற ஆங்கிலப் பத்திரிகைகளின் அப்பட்டமான தமிழர் விரோதப் போக்கும் வெளிப்படையான மலையாளச் சார்பும்

--
You received this message because you are subscribed to the Google Groups "TAMILTEMPLES " group.
To post to this group, send email to tamilt...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamiltemples...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamiltemples?hl=ta.


murugan anand

unread,
Jan 10, 2012, 12:39:18 AM1/10/12
to tamilt...@googlegroups.com, muthami...@googlegroups.com, prakriti-a-call-to-...@googlegroups.com, tamil...@googlegroups.com, tamilco...@googlegroups.com, tn...@googlegroups.com, tamil_wordpre...@googlegroups.com
Thanks a lot sir
Hope now people will understand the true face of English media particularly HINDU

HINDU is based at Tamilnadu and always works against Tamilians....Be it Srilankan Issue/ Mullaiperiar issue....

We should enlighten the public more about this

Keep up the good work

Regards
Murugan Anand
Bangalore

2012/1/4 Srinivasan.G <ng.s...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages