மார்கழி கோ.....................................................................(ஆண்கள் தவிர்க்கவும்)

131 views
Skip to first unread message

Mohan Babu

unread,
Jan 10, 2012, 4:51:36 AM1/10/12
to

மார்கழி கோலங்கள் 

(சில எளிய  கோலங்களின் தொகுப்பு )
images?q=tbn:ANd9GcR0cQ1FkcHyI5yT1z8s88Rw-sb5guKjWXYp7jpWDpkvLUhX9jh9 images?q=tbn:ANd9GcRFtJk1Q9xD3IZysh1hwxDi-21MyZajEOHjVYb9hczIfUS2UU4Qimages?q=tbn:ANd9GcTwzrDXNhvAYtSna2T6YuuiYRRPQYACoIDq3yxU91wVZJ6nFCJU
ஒரு இல்லத்தில் சுபநிகழ்ச்சி நடப்பதற்கு 
அடையாளமாக வீட்டின் முன் மாவிலைத் தோரணம் கட்டுவார்கள். மாவிலையில் 
ஸ்ரீமகாலஷ்மி வாசம் செய்கிறாள். அதனால் சுபநிகழ்ச்சி நடக்கும் இல்லத்துக்கு
ஸ்ரீமகாலஷ்மியும் முக்கிய விருந்தினராக வர வேண்டும் என்பதற்கு அழைப்புதான்
மாவிலைத் தோரணம். அதுபோலவே கோலங்களும். ஒரு வீட்டில் தினமும் கோலம் 
போடுவதால் இந்த இல்லத்தில் சுபநிகழ்ச்சிகள் நடப்பதற்கு தடையிருக்காது. 
நன்மைகளும் வந்தடையும். மார்கழி மாதத்தில் வாசலில் அழகழகான கோலம் 
போடவேண்டும் என்று ஒரு முக்கிய கடமையாகவே நம் முன்னோர்கள் 
வலியுறுத்தினார்கள்.
images?q=tbn:ANd9GcTZGwQJMvJhti8_t3cyR_TAUz3HB_u_AQv7LmE22ALejaq0fhEMRQ images?q=tbn:ANd9GcTrVIEVi8iohq5jN5itM8VKdVGtelYD7RnzTf2tf8H8gg6ACROQHQimages?q=tbn:ANd9GcRzjjQPuKU_Ab6g4jwOv86DNkebwXSqnWVWwFlH-kJjPe5k4hgQ
மார்கழி மாத பனிக்காற்று மருத்துவகுணம் 
கொண்டது. ஓசோனின் காற்று உடலில்பட்டால், அதிகாலைவேளை, பிரம்ம முகூர்த்தம் 
காற்று நன்மை என்பதாலும் கோலம் வரையும் மாதமாக இந்த மார்கழி மாதம் 
இருக்கிறது. அத்துடன் மார்கழி மாதத்தில் அநேகமாக சுபநிகழ்ச்சிகள் செய்யாமல்
இருப்பார்கள். அதனால் சுபசின்னமான கோலங்களை வீட்டின் வாசலுக்கு முன் 
பதிக்க வேண்டும். அப்படி செய்வதால் அடுத்து வருகிற தை மாதத்தில் அந்த 
குடும்பத்தில் மங்களகரமான நிகழ்ச்சிகள் நடைப்பெறும் என்றும் அப்படி 
சுபநிகழ்ச்சிகள் செய்யும்போது தடையேதும் ஏற்படாமல் இருக்க ஸ்ரீமகாலஷ்மி 
அருள்புரிவாள் என்பது ஐதீகம்.
images?q=tbn:ANd9GcQyno27KiAden9Le49WxN6o8bgdNkECrlRmyxBJEcvYGIVGLbh5 images?q=tbn:ANd9GcSpkLA2vdCUMp_sWCmifDWycSl2XndWnKCmxT6q3vaJeU4Rq6vHkQimages?q=tbn:ANd9GcRSo_Ti5dNYIZ7O17mKq4I7GC94l6EB2IPq1ZNHq1t_o_67WkqShQ
மார்கழி மாதம் என்று மட்டுமல்லாமல் எல்லா 
நாட்களிலும் கோலம் போடும் போதும், கோலங்களுக்கு மும்மூர்த்திகளின் அருளாசி 
கிடைக்கச் செய்யும் மகிமையும் இருக்கிறது. அது எப்படியென்றால், கோலமாவின் 
நிறம் வெண்மை. இது பிரம்மாவை அழைக்கிறது. கோலம் போட்டபிறகு அந்த கோலத்தை 
சுற்றி காவி நிறமான செம்மை நிறத்தை வரையும்போது அது சிவபெருமானை 
அழைக்கிறது. கோலம் போட்டு முடித்தபிறகு அந்த கோலத்திற்கு அழகு 
சேர்ப்பதற்காக பசு சாணத்தை வைத்து அதில் மஞ்சள் நிறத்தில் பூசணிபூவை 
வைப்பார்கள்.
images?q=tbn:ANd9GcS5RAdTQfFuH9wHsmWRL0TIFrSFRGk0Ip8qcQk5OStt2LF-E3lX6wimages?q=tbn:ANd9GcQ2PRrfI2ZAExwmVrBjUjIpz3eM_34gYIZHB2ncMjnnsrCOgg49images?q=tbn:ANd9GcRfwqcZPeXLHOa72RE9R5UdAfhxvmMqJWn8OF5IXpvE-xbLt5B8mA
பசுவின் சாணம் ஸ்ரீமகாலஷ்மியை 
குறிப்பிடுவதால், ஸ்ரீமகாவிஷ்ணுவையும் அந்த இல்லத்தினுள் அழைக்கிறது. 
இதனால் இப்படி மும்மூர்த்திகளின் அருளாசியும் நமக்கு கிடைக்கிறது. பசு 
சாணமும் பூசணிப்பூவும் தினமும் கிடைக்காதபோது, சாதாரண கோலமாவுக்கு பதிலாக 
பச்சரிசிமாவில் கோலம் போட்டால் மும்மூர்த்திகளின் ஆசி இன்னும் சிறப்பாக 
கிடைக்கும்.
images?q=tbn:ANd9GcRrivGw4kkFHa5XxHq1Uej-D68Fmgge7C1OQHHkT-YvXBk_aTcYTW0TWiAzimages?q=tbn:ANd9GcQeeK_TUlQm_PQCmqHIDJsQQlZqGWHFap4UWE-ansBuVz94jBMT3Aimages?q=tbn:ANd9GcSs6udhAL_tUr2dgEhpnS5f_s5RcS8WQ-b1k3p2GzImfTL2yk8QaQ
நம் இல்லத்தில் சுபநிகழ்ச்சிகள் தடையில்லாமல் நடக்க, நம் முன்னோர்கள் நமக்கு வழிகாட்டியதுதான் கோலங்கள்.

கோலம் போடும் போது இரட்டை கோடுகளாக கோலம்
போடவேண்டும். ஒரு கோடுமட்டும் வரைந்து கோலம் போடுவது அசுபகாரியங்களுக்கு 
தான் என்கிறது சாஸ்திரம்.
images?q=tbn:ANd9GcQF9quI84UwcK2ptFdUayAfUFGUeoSQFv3Zk8gP-6y4M0P62MJTimages?q=tbn:ANd9GcTUQzV6F8GXNdNk1CvihjA4hxCYrEg9oVcf5la1RsGO9rXS0P-2bAimages?q=tbn:ANd9GcT4h4RLGoGK0VpRGwUCroYhIPA2dKPqOEGFAsc3MYHIGWZRXvoZCg
தெற்குதிசை பார்த்தபடி கோலத்தை ஆரம்பிக்கவும் கூடாது – முடிக்கவும் கூடாது.

பொதுவாக தெய்வங்களின் சின்னங்களை 
வீட்டின் வாசலில் கோலமாக போடக்கூடாது. காரணம் அந்த கோலங்களை யாராவது 
தெரியாமல் மிதித்துவிட்டாலும் பாவம் சேரும். அந்த இல்லத்தில் 
இருப்பவர்களுக்கும் தோஷம் ஏற்படும். இறைவனின் சக்கர சின்னங்களை பூஜைஅறையில்
மட்டும்தான் கோலமாக போட வேண்டும். வாசலில் போடக்கூடாது.
images?q=tbn:ANd9GcTQI0A5PTquGPbRzgDjxt5hLiebZQTHca3Z-UV7wB6j84Sf2yW6 images?q=tbn:ANd9GcQr5xesi1fWHVj8ElO2kLs6isq12OxTYI7GbLEgA5HiXNwCPuvv-Qimages?q=tbn:ANd9GcSqyJnOkdX3tl7sGU69MP3b3mB1E9ebvgseGSgPCKOw2jtyW8GHFA
வெள்ளிகிழமையிலும் பவுர்ணமி தினங்களிலும் தாமரைபூகோலம் போட்டால் இந்த இல்லத்திற்கு ஸ்ரீலஷ்மிவாசம் கிடைக்கும்.

images?q=tbn:ANd9GcRpAW2zYAaDQXsY5c1udAHhYgjZrRrrLZnQ4Xs9MBvfgi4xyo1Zimages?q=tbn:ANd9GcReeWyQ4eGlpCT_pHAhfS8SGcS9agy8IYRIJC8o5qkQxPRv1Kcdimages?q=tbn:ANd9GcSAog4mH8QeGlesvRZoB5kCVrdz0J-T8RNOKseuTZRr_BJPYipngw
தினமும் கோலம் போடும்போது, காவி நிறத்தை 
அதாவது செம்மை நிறத்தை அந்த கோலத்தை சுற்றி பார்ட்டராக (Border) 
போடமுடியாவிட்டாலும், செவ்வாய்கிழமைகளில் கோலம் போட்ட பிறகு அந்த கோலத்தை 
சுற்றி காவிபார்ட்டர் கட்டினால் திருமண தடை நீங்கும்.
images?q=tbn:ANd9GcTQI0A5PTquGPbRzgDjxt5hLiebZQTHca3Z-UV7wB6j84Sf2yW6images?q=tbn:ANd9GcQfUrjTkMcyj54URO8RNE4ukDh8dmddGErrD9Z84OBIUOOodMa6 images?q=tbn:ANd9GcS9J8G7oEae3oxAbo3wneE2OT5GPYi8WOa7ExKKcLkP4WYp7Z5t
குழந்தை பாக்கியம் இல்லாதவர்களின் 
வீட்டில் தினமும் அழகழகான கோலம் போடுங்கள், அந்த கோலத்தை கலைத்து விளையாட 
ஒரு மழலை பிறக்கும் என்பது நம் முன்னோர் வாக்கு.
images?q=tbn:ANd9GcQIX2x6cIou7oEOT2wuxnOYqbPuMOgkTuV7gHQ0lyb2Dto4P28cdAimages?q=tbn:ANd9GcQpNC1dlyWdim3KqNUonmDQOWFiZALr37pIJkHo-yvPzQ-ZGT_8Igimages?q=tbn:ANd9GcRg56dxRAjpplTQsPc5aikKTrGgK_rZYL4qMZLtp8r2q81yhNat
அமாவாசை மற்றும் இறந்தவர்களுக்கு திதி 
தரும் நாட்களில் வாசலில் கோலம் போடக் கூடாது. காரணம் அந்த ஆத்மாக்களை 
வீட்டினுள் அனுமதிக்காமல் கோலங்கள் தடுக்கும். அதனால் நம் முன்னோர்கள் 
நம்மை தேடி வருகிற திதி தரும் நாளில் வாசலில் கோலங்கள் போடாமல் இருந்து, 
அவர்களை வீட்டினுள் அனுமதித்து ஆசி பெறுவது நல்லது.
images?q=tbn:ANd9GcQeohk1J-Erp_pcUhsaZEJr40hKtGoKUGboA9SFrBeiHWO2LANuimages?q=tbn:ANd9GcT-Fxuu3V3-2bcJU13AagMv04lS4ux4ixGQZ1aqEzeZaVUz1Js9WQ images?q=tbn:ANd9GcQHjbnNGOAfXY10hjoFY3TIqfV4I1UmfdnKnabF5KG3tPVtBJg9
தினமும் முடிந்தளவு அந்த வீட்டின் 
இல்லதரசியே தலைவாசலில் கோலம் போடுவது நன்மை. அத்துடன் பூஜையறையிலும் அல்லது
சுவாமி படத்தின் முன்பாகவும் கண்டிப்பாக கோலம் போடவேண்டும். தினமும் 
அரிசிமாவில் கோலம் போட்டால், நம்மை அறியாமலே பல புண்ணியங்கள் தேடிவரும். 
இப்படி தினமும் கோலங்கள் போட்டு பல நன்மைகளை பெறுவோம்.

images?q=tbn:ANd9GcQoEpkxu9NRAoCBQ-ynO4SGtxSsVzfmMlrPuZsJS-Z6bMvRoxjUimages?q=tbn:ANd9GcTmlNqcuMLq8Nka_6Z-RCwQfNXEQZIFatCMisdee727pc0TyhyZimages?q=tbn:ANd9GcQxdngCkBTxCijwhDKSmOlSoMqs2BDlQ2UjA8jnM6XSzocbsodL







சில கூடுதல் கோலங்கள்  :
images?q=tbn:ANd9GcRBJZRelHrviJt3-WNsxTH98YY0df6sz4xDb0nKg90j8YMkmsWtAA
images?q=tbn:ANd9GcQ7HwQ8eJIYpDjtoTZPv2Qdq1ayDyRxrquOZ2QkXML5fpc_J8Dvrw
images?q=tbn:ANd9GcTR6Rifm795IoYo5JryR3SAEQnGk73uOvkawrk2794-NzYhcmfEeA



-- 
எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன. ஒன்று காலம், இன்னொன்று மெளனம்.
Thanks & regards

td.mohan
மரம் வளர்ப்போம்!!! தேவையில்லாதவற்றை பிரதி எடுத்து .
காகிதங்களை வீணாக்க வேண்டாம்!!!.........


Reply all
Reply to author
Forward
0 new messages