--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்பயணி" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilpayani...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/tamilpayani.
For more options, visit https://groups.google.com/d/optout.

`ஜாதி, மதம் பேதமின்றி பழகும் எங்கள் மண்ணில் நடக்கும் ஜல்லிக்கட்டைக் காண குடும்பத்துடன் வருகைதரும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடே அவர்களை வரவேற்கிறோம்'என்று வாசகங்களுடன் மெகா சைஸ் போர்டு வைத்து பரபரப்பை எகிடுதகிடாகக் கிளப்பி விட்டிருக்கிறார்கள் அன்னவாசலைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர்.
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் கடைவீதியில் மிகப்பெரிய ஃப்ளெக்ஸ் ஒன்று நேற்று இரவு அந்த ஊரைச் சேர்ந்த இளைஞர்கள் சிலரால் வைக்கப்பட்டது. இன்று காலை அதைப் பார்த்தவர்கள் திகைத்துப்போனார்கள். காரணம், இந்தியாவில் ஒருவார கால சுற்றுலாப் பயணமாகத் தன்குடும்பத்துடன் வந்திருக்கும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடே அன்னவாசலில் எதிர்வரும் 28-ம் தேதி நடக்க இருக்கும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியைக் காண்பதற்காக வருவதாகவும் அவர்களை ஊர் மக்கள் சார்பில் வரவேற்பதாகவும் அந்த ஃப்ளெக்ஸ் போர்டில் குறிப்பிடப்பட்டிருந்தது. போதாக்குறைக்கு பட்டுசட்டை, வேட்டி, அங்கவஸ்திரம் போட்டுக்கொண்டு, ஜஸ்டின் ட்ரூடே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக உரை நிகழ்த்துவது போலவும் மெகா சைஸ் படமும் அதில் இடம்பெற்றிருந்தது.
