சீதை பிறந்த மண்

3 views
Skip to first unread message

செல்வன்

unread,
Mar 27, 2018, 9:43:01 AM3/27/18
to செல்வன்

சீதை பிறந்த மண்

நேபாளத்தில் இருந்து இந்தியா வந்த கடைசி இரயிலின் கதையை ஒரு டாக்குமெண்டரியில் (Indians frontier trains) கண்டேன்

ஜனகபுரி என்பது நேபாளத்தில் உள்ள அந்த ஊரின் பெயர். அங்கே ஒரு ரயில்வே ஸ்டேஷன். அங்கிருந்து பிகாரின் ஜெயநகருக்கு அந்த ரயில் வருகிறது. ஜெயநகர் பிகாரின் வறுமையான பகுதி. ஆனால் இந்தியாவின் அனைத்து பெருநகரங்களுக்கும் அங்கிருந்து ரயில் செல்கிறது. காரணம் என்னவெனில் வேலை தேடி ஜெயநகரின் பிகாரிகள் இந்தியா முழுக்க சென்றிருப்பதுதான்.

இத்தனை வறுமையான ஊர் ஜெயநகர். ஆனால் அந்த ஜெயநகர் தான் ஜனகபுரிக்கு வாழ்வாதாரம். மதுரையை நம்பி சுற்றுபுற ஊர்கள் இருப்பதுபோல ஜெயநகரை நம்பிதான் ஜனகபுரி இருக்கிறது என்றால் பார்த்துகொள்லலாம்.




ஜனகபுரி அத்தனை வறுமையான ஊர். ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டருக்கே சம்பளம் இல்லை. ரயில்வே ஊழியர்கள் யாருக்கும் சம்பளம் இல்லை. ஏனெனில் சம்பளம் தர அரசிடம் காசு இல்லை. ரயிலை ஓட்டி டீசல் போட்டது, ரிபேர் செய்தது போக மீதம் வரும் டிக்கட் காசில் சம்பளம் எடுத்துகொள்ளலாம். டிக்கட் விலை 30 ரூபாய். ஆடு, மாடு, சைக்கிள் கொண்டுபோக 10 ரூபாய். அந்த காசையும் கொடுக்க வழியின்றி ஓசி டிக்கட்டில் போகிறவர்கள் ஏராளம்.

ஜனகபுரி தான் சீதை பிறந்த ஊராம். அங்கே அதனால் நிறைய சுற்றுலா பயணிகள் வருவார்கள். ஆனால் அவர்களும் பெரிய கோடீஸ்வரர்கள் இல்லை. சாமியார்கள், வடநாட்டு பக்தர்கள் தான் பெரும்பாலும். அங்கே உள்ள துர்க்கை கோயிலில் ஆட்டை பலியிடுவது வழக்கம் என்பதால் ஆடுகளை கொண்டுவரும் பக்தர்களும் உண்டு.

40 கிமியை கடக்க ரயிலுக்கு 4 மணிநேரம் ஆகிறது. மீட்டர் கேஜ் ரயில். மெதுவாக தான் செல்லும். நடுவே தண்டவாளத்தில் இருந்து இறங்கினால் பயணிகளே ரயில் பெட்டியை தூக்கி இழுத்து மேலே ஏற்றுகிறார்கள். கள்ளகடத்தல் தான் ஜனகபுரி வாசிகளின் முக்கிய தொழில். கள்ளகடத்தல் என்றால் வைரமோ, வைடூரியமோ அல்ல. சும்மா துணிகளும், வளையல், தட்டுமுட்டு சாமான்களும் தான். ஜெயநகரில் வாங்கி வந்து டியூட்டி கட்டாமல் ஜனகபுரி கடைகளில் விற்பதுதான் கள்ளக்டத்தல்.

13 வயதில் திருமணம் ஆகி 19 வயதில் இரண்டு மகன்களுடன் கணவனால் கைவிடபட்ட ரெஜினா எனும் முஸ்லிம் பெண் தான் கதையின் நாயகி. அவர் இரு பிள்ளைகளை காப்பாற்ற கள்ளகடத்தலில் இறங்குகிறார். ஜெயந்கருக்கு சென்று மூட்டையில் துணி வாங்கிவருவார். ஜனகபுரி ஸ்டேஷன் பிளாட்பார்மில் போலிஸ் நிற்கும். முட்டையுடன் இறங்கினால் டியூட்டி கட்டவேண்டும். அதனால் தன்டவாளத்தின் அருகே அவரது இரு மகன்களும் நிற்பார்கள். ரயில் வந்ததும் மூட்டையை தூக்கிபோடுவார். அதை எடுத்துக்கொண்டு போலிஸ் கையில் சிக்காமல் மின்னல் மாதிரி ஓடிதப்பினால் அன்று அவர்கள் மூவருக்கும் மூன்று வேளை உணவு உண்டு. மாட்டினால் சங்குதான். பொருட்கள் அத்தனையும் பறிமுதல் ஆகிவிடும்.

போலீஸ், ரயில்வே ஊழியர்கள் நிலையும் பாவம். அவர்களுக்கு இந்த டியூட்டி, டிக்கட் காசில் தான் சம்பளம். காட்மண்டுவில் இருந்து சம்ப்ளமே வராது. தினமும் அவர்களை உள்ளூர் மளிகை கடைகாரர்கள், பால்காரர்கள் கடனை கட்ட சொல்லி நெருக்கிகொன்டே இருக்கிரார்கள். அதனால் அவர்கள் போலிஸை தந்திரமாக ரயில்யே பிளாட்பாரத்தில் நிற்கவைத்து ரெஜினாவின் பையன் மூட்டையுடன் ஓடுகையில் மடக்கி பிடிக்கிரார்கள். ரெஜினா அவர்கள் காலில் விழுந்து கதறுகிறார். அவருக்கு ஏழாயிரம் ரூபாய் நஷ்டம். ஆனால் அப்படி மடக்கி பிடித்த பொருட்களை விற்று அம்மாத சம்பளத்தை அவர்கள் எடுத்துகொள்கிரார்கள். எடுத்துகொன்டதும் ஸ்டேஷன் மாஸ்டர் ஆர்மானியை சூழந்த கடன்காரர்கள் சம்பளத்தை பறித்துக்கொன்டு போகிரார்கள். மீதமிருக்கும் சொற்ப காசில் பையனுக்கு கணக்கு புத்தகமும், மிட்டயும் வாங்கி தருகிரார் ஆர்மானி. அத்துடன் சம்பளகாசு தீர்ந்து விடுகிறது.

இந்த ஜனகபுரி ரயில்வே பாதையை பிராட்கேஜாக மாற்ற இந்திய அரசு கடிதம் முடிவெடுக்கிறது, மூன்று வருடம் ஸ்டேஷன் மூடபட்டு, ரயில்வே பாதை அமைக்கப்படுகிறது. அந்த மூன்று வருடங்களுக்கும் அர்மானி என்ன செய்வார் ரெஜினா என்ன செய்வார் என்பது கேள்விக்குறியாக நம் மனதில் நிற்க டாக்குமெண்டரி நிறைவடைகிறது.








--

செல்வன்
Reply all
Reply to author
Forward
0 new messages