பிரம்மகுமாரிகள்

1 view
Skip to first unread message

செல்வன்

unread,
Mar 2, 2018, 10:39:50 AM3/2/18
to செல்வன்

எனக்கு தெரிந்து பிரம்மகுமாரிகள் எனும் அமைப்பை சேர்ந்த சிலர் உண்டு. அதில் சேர்ந்தால் கல்யாணம் செய்துகொள்ளகூடாது, பிரமசாரியாக வாழவேன்டும். அப்படி வாழும் பலரும் இறுதிகாலத்தில் தம் சொத்துக்களை அந்த அமைப்புக்கே கொடுத்துவிடுவதாக கேள்விப்பட்டேன். திருமணம் செய்துகொண்ட தம்பதிகள் அதில் சேர்ந்த பின் தாம்பத்திய உறவு இல்லாமல் வாழ்வதாக கேள்வி.

இவர்களில் சிலரை சந்தித்து பேசியதுண்டு. பர்சனலாக மிக நல்லவர்களாக, வெள்ளைச்சோளமாக இருக்கிறார்கள். இந்த வெள்ளந்தி மனிதர்களுக்கு ஏன் இந்த நிலை என யோசித்தால் வருத்தமாக இருக்கிறது. நம்மை வாழ வைப்பதுதான் ஆன்மிகம். அழிப்பது அல்ல.

எனக்கு தெரிந்த இளம் பையன் ..இதில் சேர்ந்து அவன் தாய் அழும் அழுகை கண்கொண்டு பார்க்கமுடியவில்லை. பெற்ற தாயை அழவைத்துவிட்டு கிடைக்கும் சுவர்க்கத்தில் என்ன மகிழ்ச்சி இருக்கும்? அத்தகைய ஆன்மிகத்தின் பலன் என்ன? :-(


--

செல்வன்
Reply all
Reply to author
Forward
0 new messages