நேற்று பதிவில் ...
ஹைதராபாத்தில் மின்தடை இல்லாததால் எனக்கு ஜெனரேட்டர் வியாபாரம் பாதிப்பதாக வேறொரு கோணத்தில் நகையாக எழுதியிருந்தேன்.
உண்மையில் ஒரு மாநிலத்தில் மின்சாரத் தட்டுப்பாடு இல்லை எனில் , இருபத்து நான்கு மணி நேரமும் மின்தடையே இல்லையெனில் , ஒரு படி மேலே போய் உபரி மின்சாரம் இருக்குமெனில் ...
அந்த மாநிலத்தின் உற்பத்தி திறன் , விவசாயத் திறன் அதிகமாக இருக்கும் . அது மக்களின் பொருளாதரத்தை மேம்படுத்தும்.
மேலும் அதிக முதலீட்டாளர்கள் அம்மாநிலத்துக்கு வருவார்கள்.
ஏனெனில் எந்த நிறுவனமும் தடையின்றி இயங்க இன்றைய முதல் தேவை தடையில்லா மின்சாரம் .
இப்போது சொல்லுங்கள் . கடந்த ஏறக்குறைய பத்து ஆண்டுகளாக ஏன் ஒரு பெரிய project ம் தமிழ் நாட்டுக்கு வரவில்லை .?
இங்கு ரசக்கற்பூரத்திலுருந்து மின்சாரம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். சாண எரிவாயுவில் இருந்து மின்சாரம் , நகரங்களில் தினம் சேகரிக்கும் குப்பைகளில் , கழிவுகளில் இருந்து மின்சாரம் ...எவ்வளவோ வழிகள் இருக்கின்றன.
நம்மூர் அரசியல்வாதிகளுக்கு coal , hydro , nuclear power plant அன்றி வேறெதுவும் தெரியாது.
இன்னொரு பக்கம் மத்திய அரசு மக்களை , நிலத்தை அழிக்கும் ஆபத்தான உற்பத்திகளை மட்டுமே தமிழகத்தில் தோண்டிக் கொண்டிருக்கிறது.
தண்ணீரில்லாத தேசத்தில் இரண்டாவதாக சொன்ன hydro இனி சாத்தியமில்லை . சர் செல்லூர் ராஜூ வேண்டுமெனில் முயற்சிக்கலாம்.
Solar power projects -ஏறக்குறைய 3000 மெகா வாட் உற்பத்தி திறனில் நாட்டிலேயே முதல் மாநிலமாய் இருக்கிறது தெலங்கனா.
நீங்கள் அவனை கொலுட்டி என்கிறீர்கள்.
கடைசியாக மின்தடையே இல்லை எனில் மேலே சொன்னது போல் நிறைய நிறுவனங்கள் , ஆலைகள் , ஆய்வுகள் , வளாகங்கள் வரும்.அவை ஒவ்வொன்றுக்கும் ஜெனரேட்டர் கட்டாய தேவை .
Baecause Generator is an emergency power .
அது இல்லாமல் ஆலைகளோ, வளாகங்களோ அனுமதி பெற இயலாது .
கதையின் நீதி - மின்சாரம் நல்லா இருந்தா ஜெனரேட்டர் நிறைய விற்கும்.
இவண்
ராம் வசந்தலு.
எந்தரோ தேன்மொழிகளு
அந்தரிகி உகாதி வந்தனமுலு.