வாழ்க கொழுப்புடன் - பொன்விழா மலர்

7 views
Skip to first unread message

செல்வன்

unread,
Mar 28, 2018, 2:01:31 AM3/28/18
to செல்வன்


குமுதத்தில் பேலியோ தொடர் எழுத வாய்ப்பு வந்தபோது வெற்றிகரமாக எழுத முடியுமா என பயமாக தான் இருந்தது.

குமுதத்தின் ரீச் மிக பெரியது. தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும், பட்டி தொட்டியெங்கும் சென்று சேரும் பத்திரிக்கை. கைவண்டி இழுப்பவர் முதல் தமிழக முதல்வர் வரை படிக்கும் பத்திரிக்கை. ஜனரஞ்சகமாக இவர்கள் அனைவருக்கும் புரியும் வண்ணம் ஒரு மருத்துவ தொடரை எழுதுவது மிக சவாலாக தான் இருந்தது. சுவாரசியம் குன்றாமல் எழுத வேண்டும், மருத்துவ தகவல்களும் சரியானதாக இருக்கவேண்டும். மக்களுக்கு உதவவும் வேண்டும்.

இப்படித்தான் வாழ்க கொழுப்புடன் தொடரை எழுததுவங்கினேன். முதல் சில வாரங்களிலேயே வாசகர் மடல்களில் நிறைய பாராட்டுகள் வந்தன. அதன்பின்னர் தான் நாம் சரியான திசையில் செல்கிறோம் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.

பல ஊர்களில் வாசகர்கள் குமுதம் படித்து டயட்டை தொடர்வதாக தெரியவந்தது. "வாழ்க கொழுப்புடன்" என கடைகளில் போர்டு மாட்டி பேலியோ பொருட்களை விற்க ஆரம்பித்தார்கள்.

இதோ...குமுதம் பத்திரிக்கையின் வரலாற்றில் முதல்முறையாக அதில் ஒரு மருத்துவத்தொடர் ஐம்பதாவது வாரத்தை தொட்டு பொன்விழா கொன்டாடுகிறது.

குமுதம் ஆசிரியர் ப்ரியா கல்யாணராமன் அவர்கள் அளித்த ஊக்கம், ஆலோசனைகளுக்கு என்னாளும் நன்றியுடையேன்

ஆரோக்கியம் நல்வாழ்வு சொந்தங்கள், முகநூல் நட்புகள் அனைவருக்கும் நன்றி. நீங்கள் அளித்த லைக்குகள், வாழ்த்துகளே இதை வெற்றிகரமாக எழுதமுடியும் என எனக்கு நம்பிக்கை வரவழைத்து எழுத தூண்டின.

நம் பயணம் தொடரும்...நன்றி நட்புகளே

அன்புடன்
செல்வன்






--

செல்வன்

செல்வன்

unread,
Apr 24, 2018, 10:44:41 AM4/24/18
to செல்வன்

அனைவருக்கும் வணக்கம்

53 வாரமாக தொடராக வெளிவந்து குமுதத்தில் பொன்விழா காணும் முதல் மருத்துவ தொடர் எனும் சிறப்பை (உங்கள் ஆதரவால்) அடைந்த வாழ்க கொழுப்புடன் தொடர் இவ்வாரத்துடன் நிறைவு பெறுகிறது.

குமுதத்தில் தொடர் எழுத முனைகையில் ஆசான்கள் சுஜாதா,சாண்டில்யன் போன்றோர் தொடர் எழுதிய பத்திரிக்கை, அத்தகைய மேடையில் மேடையில் சொதப்பிவிடகூடாது எனும் எச்சரிக்கை உணர்வுடன் எழுத ஆரம்பித்தேன். ஆசிரியர் ப்ரியா கல்யாணராமன் மிக சிறப்பாக தொடர் முழுக்க வழிகாட்டி தொடரை வெற்றிகரமாக முடிக்க வழிவகுத்தார். தொடரை எழுதுவது மிக இனிய அனுபவமாக இருந்தது. வாரா, வாரம் தொடரை ஷேர் செய்தும், விமர்சனம் எழுதியும் ஊக்குவித்த நண்பர்கள் உதவியின்றி இது சாத்தியமில்லை, குறிப்பாக நண்பர் கண்ணன் அழகிரிசாமி அவர்கள் தொடர்ந்து தொடர் விமர்சனம் எழுதினார்.

தொடருக்கு நல்ல வாசகர் வரவேற்பு இருந்ததாக ஆசிரியர் குறிப்பிட்டது மிகுந்த மனமகிழ்ச்சியை அளித்தது. மெகா சீரியல் போல நீளக்கூடாது எனும் நோக்கிலேயே ஒரு வருடத்துடன் முடித்தோம். சில காலம் கழித்து தொடரின் இரண்டாம் பகுதி குமுதத்தில் வெளிவரும். தொடர் வெற்றி என்பதை விட மக்களுக்கு பட்டிதொட்டியெங்கும் தொடர் மூலம் பேலியோ சென்று சேர்ந்ததே மனநிறைவை அளிக்கிறது

குமுதம், ஆசிரியர் ப்ரியா கல்யாணராமன், நண்பர்கள், நம் குழு சொந்தங்கள் அனைவரின் அன்பிற்கும் இந்த தொடரை காணிக்கை ஆக்குகிறேன்

இவ்வாரம் சாமியார் யார் எனும் புதிர் தொடரில் விடுபடுகிறது. படித்து மகிழவும்.





Murugapandian Ramaiah

unread,
Apr 25, 2018, 12:19:11 AM4/25/18
to tamil...@googlegroups.com, செல்வன்
வாசகர் கேள்வி.

இதை ஒரு நூலாகப் பதிப்பிக்கும் எண்ணம் இருக்கிறதா?

அன்புடன்
பாண்டியன்.

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்பயணி" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilpayani...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/tamilpayani.
For more options, visit https://groups.google.com/d/optout.


Reply all
Reply to author
Forward
0 new messages