பெண்கள் மணிக்கணக்கில் புடவை எடுப்பது ஏன்?
பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் மனிதனுக்கும் குரங்கு, நாய்க்கும் பொதுவான ஆதிமூதாதை தரையில் தான் வசித்து வந்தது.
அப்போது அதற்கு மோப்ப சக்தி மிக அதிகமாக இருந்தது. ஆனால் கலர் விஷன் இல்லை. பிளாக் அன்ட் ஒயிட் மற்றும் பழுப்பு நிறந்தில் தான் பார்க்க முடியும்.
ஏதோ ஒரு காலகட்டத்தில் குரங்கு+மனிதனின் முன்னோர் மரம் ஏறியது. நாய்கள்+ஓநாய்+நரிகளின் முன்னோர் தரையில் தங்கிவிட்டது.
மரம் ஏறியதும் அங்கே பலவண்ண பழங்கள், இலைகளில் உண்ணதக்கது எது, உண்ணதகாதது என்பதை அறிய நிறம் அவசியபட்டது. அதனால் கலர்விஷன் கிடைத்தது. அதே சமயம் மோப்பசக்தி மிக குறைந்துவிட்டது. நாய்களுக்கு மோப்ப சக்தி மிக அதிகம்., ஆனால் அவை நிறக்குருடு.
இன்றும் நம்மில் சிலருக்கு நிறக்குருடு இருக்க காரணம் இந்த பரிணாமவியல் மாற்றம் தான் என்கிறார்கள்.
அதிலும் ஒரு சின்ன மாற்றம் நாம் தரைக்கு மீண்டும் இறங்குகையில் ஏற்பட்டது.
ஆண்கள் வேட்டையாடினர் (Hunter). பெண்கள் சேகரித்தனர் (Gatherer). அதனால் பெண்கள் மலர்கள், பழங்கள் ஆகியவற்றை பறிப்பதில் முனைந்ததால் அவர்களுக்கு நிறங்களை பேதம் பிரித்து பார்க்கும் திறன் இன்னும் அதிகரித்தது. ஆண்கள் பார்ப்பதை விட பல spectrum of கலர்களை பெண்கள் பார்க்க முடியும்.
புடவை கடையில் ஆண்களுக்கு சிகப்பு, மஞ்சல், என்பது மாதிரி தான் நிறங்கள் தெரியும்.
பெண்கள் லைட் யெல்லோ, பேரட் க்ரீன், லெமென் யெல்லோ என இன்னும் கூடுதலான நிறங்களை பார்ப்பார்கள்.
ஆக புடவைகடையில் ஆண்கள் மணிக்கணக்கில் காத்திருக்கவேண்டிய காரணத்தின் பின்னால் இப்படி ஒரு பரிணாமரீதியான காரணம் உள்ளது :-)