நூலகர் படிக்க விடாது தடுத்த அந்த உணர்ச்சிகர விசயத்தினுள் செல்ல நான் விரும்பவில்லை.
ஆனால் நூலகம் என்ற ஒன்றே அறிவியல் அளித்த ஒரு இடைக்கால ஏற்பாடு தான். அச்சு புத்தகம் வந்தடையும் வரையிலும் பெரும்பாலான நாகரீகங்களில்
நூல்கள் தொகுத்து வைப்பது என்பது கல்வி கற்கும் இடங்களில், அரசவை போன்ற இடங்களில் மட்டுமே இருந்திருக்க கூடிய ஒரு ஏற்பாடு. வால்வு ரேடியோ
என்ற வஸ்து போல அச்சு புத்தகம் என்பதும் பொது மக்கள் பயன்பாட்டிற்கு என யாவரும் பயன்படுத்தும் நூலகம் என்பதை சாத்திய படுத்தியது.
தற்போது அச்சு புத்தகம் என்ற ஊடகத்தை தாண்டி பிடிஎப், கிண்டில் என பல்வேறு வகையிலும் போய் கொண்டிருக்கிறது.
இந்திய பண்பாட்டில் ஓலைச்சுவடி காலத்திலும் சரி.. ஊருக்கு ஊர் நூலகம் துவங்க பட்ட சுதந்திர இந்தியா காலத்திலும் சரி.. திருட்டு பீடிஎப் தாரளமாக கிடைக்க கூடிய
இன்றும் சரி இரட்டை இலக்கில் கூட 10% மக்கள் படிப்பதாக காணோம்.. நிறைய நூலகங்கள் துவஙக பட்டால் சான்றோர்களும், அறிவாளிகளும் நிறைய உருவாகி சமூகம் பயனடையும் என்றும் நிரூபணம் அற்ற நம்பிக்கை ஒன்றும் பொதுவாக உள்ளது.