Taiwan Elections 2016 – Let democracy be the winner – தாய்வான் தேர்தல் சிறப்புப் பதிவு 1
பாப் பாடகியும் அழகு ராணியும் – தாய்வான் தேர்தல் சிறப்புப் பதிவு 2
என்னது சுதந்திரமா. தெரிச்சிப் போயிரும் – தாய்வான் தேர்தல் சிறப்புப் பதிவு 3
மியான்மர் மற்றும் தாய்வான் தேர்தல் – சில சுவாரசியமான ஒற்றுமைகள்
இப்போது அதற்கு என்ன என்று நீங்கள் கேட்பது புரிகிறது. இந்த
தாய்வானின் முதல் பெண் ஜனாதிபதி ஸாய் இங்-வென் உள்ளுர் தேர்தல்களில்
தோல்வியைத் தழுவியிருக்கிறார்.
தேர்தல் வெற்றிக்குப் பிறகு இவரது சவால் என்று இதைக் குறிப்பிட்டேன். மிரட்டும் சீனா, வேலையில்லாத் திண்டாட்டம், தன் பொருளாதாரத்தில் சீனாவின் பங்கு, அதைப் பாதிக்காத மக்களாட்சி சீர்திருத்தம் என்று ஸாய்-க்கு தாய்வானில் நிறைய வேலைகள் காத்துள்ளன. இதில் அவர் வீழ்ந்திருக்கிறார் என்று செய்திகள் வருகின்றன. தேர்தல் வெற்றிக்குப் பிறகு, சீனாவுடனான மோதல் போக்கைக் கடைபிடிக்காமல், இருக்கும் நிலையை அப்படியே தொடர வைத்தார் ஸாய். தேர்தலுக்கு முந்தைய அவரது பிம்பத்தை அது சரித்துள்ளது. அவர் அப்படிச் செய்வது நமக்குப் புரியாமல் இல்லை. தாய்வானின் நிறுவனங்கள் மனித வளத்திற்கும், கனிம வளத்திற்கும் சீனாவைச் சார்ந்துள்ளன. எனவே அவர்களைப் பகைத்துக் கொள்ளுதல் என்பது உள்ளுர் கம்பெனிகளைக் கொலை செய்வதற்குச் சமம். இத்தனைக்கும், அடாவடி ட்ரம்ப் ஸாய்க்கு பெரிய முட்டுக் கொடுத்தார். ஆனாலும், இரும்புக் கரம் கொண்டு ஒருக்கியது சர்வதிகாரம். பார்ப்போம் அடுத்து என்ன என்று.
வணக்கம்