ஒலிம்பிக்ஸ் என்பது கார்ப்பரேட் கோமாளிகளின் குத்தாட்டம்

1 view
Skip to first unread message

செல்வன்

unread,
Feb 10, 2018, 3:48:44 PM2/10/18
to செல்வன்

ஒலிம்பிக்ஸ்: கார்ப்பரேட் மாபியா கும்பலின் போதைமருந்து விளையாட்டு

ஒலிம்பிக்ஸ் வந்தவுடன் ஒவ்வொரு வருடமும் "சின்ன நாடெல்லாம் பதக்கம் வாங்குது. நாம வாங்கலை" என்ற புலம்பல்கள் துவங்கிவிடும். இவை அர்த்தமற்றவை.

சீனா, வடகொரியா மாதிரி நாடுகளில் சின்ன வயதில் இருந்தே பிள்ளைகளை பிடித்துபோய் ஒலிம்பிக்ஸில் பதக்கம் வெல்ல கொத்தடிமை மாதிரி டிரெய்னிங் கொடுப்பார்கள். அதனால் தான் சர்வாதிகார நாடுகள் ஒலிம்பிக்ஸில் இத்தனை பதக்கங்கள் வெல்ல முடிகிறது.

அடுத்தபடி ஒலிம்பிக் பந்தயங்கள் பலவும் இந்திய சூழலை மையமாக கொண்டு தீர்மானிக்கபட்டவை அல்ல. உதாரணமாக பீச் வாலிபால், குதிரையேற்றம், ஜிம்னாஸ்டிக்ஸ்..இவை வெளிநாட்டு விளையாட்டுக்கள். இந்திய சூழலில் இவற்றை ஆடுவது சாத்தியமில்லை. ஆடினாலும் பார்க்க யாரும் வரமாட்டார்கள். பீச் வாலிபால் என சொல்லி பெண்களை ஜட்டியுடன் ஆடவிட்டால் பார்க்க கூட்டம் கூடும் என்பது உண்மைதான் எனினும் இம்மாதிரி நிகழ்ச்சிகளால் யாருக்கு என்ன லாபம் என்பது சிந்திக்கதக்கது.

மேலும் ஒலிம்பிக் போட்டிகளில் ஜெயிக்க ஊக்கமருந்து இல்லாமல் முடியாது. விளையாட்டு உடல் நன்மைக்கு என்ர சித்தாந்தம் மாறி அவை கிளாடியேட்ட்ர் போல விளையாட்டு வீரர்கள் உடல்நலனுக்கு பாதிப்பை உன்டாக்கி வணிக்ர்களுக்கு கொழுத்த நன்மையை கொடுக்கவே என்ர நிலை உருவாகிவிட்டது. நேர்மையாக ஊக்கமருந்து இன்றி ஆடினால் எந்த போட்டியிலும் ஜெயிக்கவே முடியாது என்பதுதான் நிலை.

ஒலிம்பிக்சை நடத்தும் நாடுகள் அனைத்தும் பொருலாதார நெருக்கடியில் சிக்கி தவிப்பதே வாடிக்கை. உல்நாட்டு மக்களுக்கு இதனால் பெருத்த சிரமம். பிரெசில் இப்போது ஒலிம்பிக்சால் பெரும் பொருலாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. பெருமைக்கு இலையில் நெய்யை தேய்த்து குப்பையில் எறிந்த கதைதான் ஒலிம்பிக்ஸ்.

இதன் ஒரே பயனாளிகள் கார்ப்பரேட்டுகளும், ஸ்பான்சர்களும், இலவச சுற்றுலா சென்று வரும் அதிகாரிகளும் தான். இதில் ஜெயிக்காததை எண்ணி நாம் வருந்தவேண்டியதில்லை.


--

செல்வன்
Reply all
Reply to author
Forward
0 new messages