அசோகமித்திரன் - ஆவணப்படம் திரையிடல்

5 views
Skip to first unread message

Murugapandian Ramaiah

unread,
Nov 25, 2018, 10:48:10 AM11/25/18
to tamil...@googlegroups.com
நண்பர்களே,

சிங்கப்பூர் தெற்காசிய சர்வதேச திரைப்பட விழாவின் ஒரு பகுதியாக, அசோகமித்திரன் பற்றிய ஒரு ஆவணப் படத்தை அக்டோபர் 13 அன்று திரையிட்டார்கள்.
நான் பெரிய இலக்கிய விஜிரி இல்லை. என்றாலும் யாராவது ஒருத்தர் விசிலடிக்க வேண்டும் அல்லவா. அதுதான் இது.




அசோகமித்திரனின் படைப்புகளை நான் வாசித்ததில்லை!!! இந்தப் பின்புலத்தோடு இந்தக் கடுதாசியை வாசிப்பது நமக்கு நல்லது.

அமி என்றால் என் நினைவிற்கு வருவது
- கணையாழிக் கட்டுரைகள்
- எழுத்திலும், பேச்சிலும் அதே எளிமை

தன் முனைப்போ, இருப்பைக் காட்டிக்கொள்ளும்; தன்மையும் சற்றும் அற்றவர். பாசாங்குக்கு ஏதும் அவர் பொது மேடைகளில் சொன்னது மாதிரி தோன்றுவதில்லை. அவரைப் பற்றி அவர் காலமாவதற்கு முந்தியே இந்த ஆவணப்படம் எடுக்கப்பட்டு இருக்கிறது என்பது மகிழ்வு தரக்கூடியது.

நகர வாழ்க்கை எழுத்தாளரின் வாழ்க்கை, ஐதராபாத், சென்னை என்கிற நகரங்களின் அவருடைய சுற்றம், பள்ளி/கல்லூரி என்று காட்சிகள் போகின்றன. அவரைப் பற்றியான பிற சமகால இலக்கிய பிரமுகர்களின் (நடிகர் நாசர், நடிகை ரோகினி தவிர்த்து) அனுபவங்கள் (விமரிசனங்கள் உட்பட) அனைத்தையும் தர முயற்சித்திருக்கிறார்கள். நாசரின் இலக்கிய வாசிப்பு பிரம்மிப்பூட்டுகிறது. சாரு, மாமல்லன் உட்பட்ட பிற எழுத்தாளர்கள் ஏற்பாடு செய்த அசோகமித்திரன் உடனான ஒரு உரையாடல் வருகிறது. அந்தக் கதை அப்படி வந்திருக்கே என்கிற கேள்வியின் உரையாடலின் போது, 'அது அப்படி வந்துவிட்டது. இப்ப என்ன செய்வது.' என்று சிரிக்கிற நபர்தான் அசோகமித்திரன். காட்சி ஊடகமாகவோ, கட்டுரைகளாகவோ நமக்குக் காட்சிப் படும் அமி அப்படித்தான் இருக்கிறார்.

இன்றைய இந்துப் பத்திரிகையிலும் அத்தகு ஒரு நிகழ்வை ஆவணப் படுத்தி இருக்கிறார் சி. மோகன்.

“அசோகமித்திரனுக்கு உங்களுடைய ஓவியம் ஒன்றைப் பரிசளியுங்களேன்” என்றேன். அழகாகச் சட்டமிடப்பட்ட ஓர் அருமையான ஓவியத்தை டக்ளஸ் பரிசளித்தார். அதைப் பெற்றுக்கொண்டு ஓவியத்தைப் பார்த்த அசோகமித்திரன், “நான் சரியாகப் பார்க்கிறேனா?” என்று டக்ளஸிடம் கேட்டார். “அப்படியில்லை, இப்படி” என்று அவர் பிடித்திருந்த பக்கத்தை டக்ளஸ் மாற்றிக் காண்பித்தார்.

ஏற்புரையில் இதைக் குறிப்பிட்டுப் பேசிய அசோகமித்திரன், “ஒரு முக்கியமான ஓவியர் இந்த விழாவில் கலந்துகொண்டு ஒரு ஓவியத்தைப் பரிசளிக்கிறார். ஆனால், அதை எப்படிப் பார்ப்பதென்றுகூட நமக்குத் தெரியவில்லை. நம்மைப் பற்றி அவர்கள் என்ன நினைப்பார்கள்” என்று சங்கடப்பட்டார். இந்த எளிமையும் சத்தியமும்தான் அசோகமித்திரன்.

அதுதான் அவருடைய ஈர்ப்பும் கூட. திரையிடலுக்கு வந்திருந்த வாசகர்களில் சிலர் உணர்ச்சி மேலிட கண்ணீர் கூட விட்டுவிட்டனர் பாவம்.

திரையிடலுக்குப் பின்பு ஆவணப்பட இயக்குநர் பிரசன்னா ராமசாமியின் நேர்முகம் மற்றும் கலந்தாய்வு நடந்தது. அமீ உடனான அவரது பரிச்சயம், அவரது படைப்புகள் மீது அவரது பார்வை என்றும், வழக்கமான இடதுசாரிப் பார்வை கொண்ட, பாஜக எதிர்ப்பான உரையாடலாகக் கொண்டு செல்லவும் சிலருக்கு ஆர்வம் இருந்தது. இந்தியாவே இறந்துவிட்டது என்கிற கணக்கில் கண்ணீர் சிந்தப்பட்டது. எனக்கு புளியமரத்தின் கதையின் சிட்டுக்குருவி  நியாபகத்துக்கு வந்துவிட்டது. சமயத்தில் அப்படித்தான் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் ஏதாவது நினைவிற்கு வரும். அனைவரும் அதை எதிர்த்து எழுதுவது என்று உறுதி எடுத்துக்கொண்டார்கள். அடுத்த மக்களவைத் தேர்தலில் இந்தியா ஒரு இடதுசாரி பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

வணக்கம்.

Murugapandian Ramaiah

unread,
Nov 29, 2018, 9:57:31 AM11/29/18
to tamil...@googlegroups.com
நடிகர் சூரியாவை சாரு இன்று பேஸ்புக்கில் வருத்தெடுத்தார். அதில் அவர் எழுதியுள்ள அசோகமித்திரன் பற்றிய குறிப்பு.

ஆனால் நீங்கள் அடுத்த தலைமுறை. என் மகன் தலைமுறை. அவனுக்கும் இலக்கியம் தெரியாது. அவனுக்கும் அசோகமித்திரனைத் தெரியாது. இதையெல்லாம் நான் அவன் வாயில் புட்டிப்பாலைப் போல் ஊற்ற முடியாது. நீங்களாகவேதான் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன். சரி, அந்த அசோகமித்திரன் நம் தமிழ் மொழியின் ஆகச் சிறந்த எழுத்தாளர். நோபல் பரிசு பெற்ற பல எழுத்தாளர்களையும் விட சிறப்பான எழுத்தை நம் தமிழுக்குக் கொடுத்திருப்பவர். வீட்டில் எழுதுவதற்கான வசதி இல்லாமல் தி. நகர் நடேசன் பூங்காவில்தான் தன் நாவல்கள் பெரும்பாலானவற்றை எழுதினார். அவர் 18 ஆண்டுகள் வாசன் ஸ்டுடியோவில் பி.ஆர்.ஓ.வாக இருந்தார். அசோகமித்திரனின் தந்தையும் வாசனும் அடாபொடா நண்பர்கள். அதனால் தந்தையில்லாத அசோகமித்திரனை ஹைதராபாதிலிருந்து அழைத்துத் தன் சினிமா கம்பெனியில் வேலை கொடுத்தார் வாசன். 18 ஆண்டுகள் கழித்து ஒருநாள் இப்படி ஒரு சம்பவம் நடந்தது. அன்று வாசன் அசோகமித்திரனை அழைத்துத் தன் காரைத் துடைக்கச் சொன்னார். இதெல்லாம் சினிமா கம்பெனியில் சகஜம்தானே? ஷூவைத் துடைக்கச் சொன்னாலும் துடைக்கணும் இல்லையா? ஆனால் அசோகமித்திரன் அப்படிப்பட்டவர் இல்லை. எழுத்தாளர் ஆயிற்றே?

”சார், நான் ஒரு எழுத்தாளன். என்னைப் போய் இந்த வேலையையெல்லாம் செய்யச் சொல்கிறீர்களே?” என்றார் வாசனிடம் அசோகமித்திரன். அதற்கு வாசன் சொன்ன ஒரு பதிலால் அசோகமித்திரனின் ஒட்டு மொத்த வாழ்க்கையே திசை மாறியது. அப்போது அசோகமித்திரனுக்கு 35 வயது என்று நினைக்கிறேன். “ஏம்ப்பா, நீ எழுத்தாளனா இருந்தா இந்த வேலைக்கு வந்திருக்க மாட்டியேப்பா?”
அவ்வளவுதான். அந்தக் கணமே வேலையை ராஜினாமா செய்து விட்டு அடுத்த 20 ஆண்டுகள் ஏழ்மையில் உழன்றார் அசோகமித்திரன். இதெல்லாம் அசோகமித்திரனே எழுதினது. சாப்பிட வேண்டிய வயதில் சாப்பிடவில்லை என்று சொல்லியிருக்கிறார். எனக்கே தெரியும். அவருக்கு ஆஸ்துமா. மூச்சு விட சிரமப்படுவார். மாத்திரை மருந்து வாங்கக் காசு இருக்காது. தமிழைப் போலவே ஆங்கிலத்திலும் எழுத வல்லவர். ஆங்கிலத்தில் அவர் எழுதியிருந்தால் இந்நேரம் நோபல் பரிசு பெற்றிருப்பார். ஆனால் தமிழில்தான் எழுதுவேன் என்று உங்களுக்கும் எனக்கும் தாய்மொழியான தமிழைத் தேர்ந்தெடுத்தார். பட்டினி கிடந்தார். அவர் பிள்ளைகள் தலையெடுத்த பிறகுதான் அவரால் சாப்பிட முடிந்தது. ஆனால் வயிறு சுருங்கி விட்டது. ஒரே ஒரு மொளகா பஜ்ஜி போதும்ப்பா என்பார்.

அவர் தன் மகன் வீட்டில் இருந்தார். அவருடைய அறையில் புத்தகங்களே இல்லை. எங்கே உங்கள் லைப்ரரி என்று ஒருநாள் அவரிடம் கேட்டேன். என்னை ஏற இறங்கப் பார்த்து விட்டு இந்த அறையில் எங்கே புத்தகங்களை வைப்பது? எல்லாவற்றையும் நண்பர்களிடம் கொடுத்து விட்டேன் என்றார்.
அவர் வீட்டுக்கு எதிரே ஒரு அரண்மனை இருக்கிறது.

https://www.facebook.com/charu.nivedita.9/posts/1946356472067662
Reply all
Reply to author
Forward
0 new messages