சிகாகோ: முத்தமிழ் விழா

1 view
Skip to first unread message

செல்வன்

unread,
Apr 30, 2018, 9:47:03 AM4/30/18
to செல்வன்
நேற்று நடைபெற்ற சிகாகோ முத்தமிழ் விழாவில் எனக்கு சிறப்பு விருது வழங்கி சிறப்பித்தனர். அத்துடன் பேலியோ குறித்து உரையாற்றவும் முடிந்தது. நாள் முடிவில் டயபடிஸ், இரத்த அழுத்தம் முதலான பல பிரச்சனைகள் உள்ள சிகாகோ தமிழர்கள் ஆரோக்கியம் & நல்வாழ்வு குழுவில் இணைந்து டயட் சார்ட் பெறவிருப்பதாக தெரிவித்தனர். அவர்களை ஒருங்கிணைத்து சிகாகோ பேலியோ குழுமம் வெற்றிகரமாக செயல்பட துவங்கியது மிகுந்த மனநிறைவை அளித்தது.

அமெரிக்காவின் முதல் தமிழ் சங்கமான சிகாகோ தமிழ் சங்கத்தின் இச்சிறப்பான சேவைக்கும், அவர்களின் விருதுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

அங்கே என் உரையின் விடியோ பதிவை கீழ்காணும் இணைப்பில் கண்டு மகிழலாம்







--

செல்வன்

செல்வன்

unread,
Apr 30, 2018, 10:51:26 AM4/30/18
to செல்வன்

சிகாகோ தமிழ் சங்கத்தின் சார்பில் நேற்று பேலியோ பற்றி உரையாற்ற ஒரு வாய்ப்பு வழங்கபட்டது.

இது ஒரு டீசர் மாதிரியான நிகழ்வுதான். இதன் நோக்கம் சிகாகோவில் பேலியோவின் வேர்களை நிறுவுவது. தன்னார்வ்லர்களை திரட்டி புதியவர்களுக்கு குழுவில் டயட் சார்ட் பெற உதவுவது. தொடர்புகளை ஏற்படுத்திகொள்வது, அதன்மூலம் பிற அமெரிக்க நகரங்களுக்கும் இம்மாதிரி பேலியோ குழுக்களை அந்தந்த நகரம் சார்ந்து ஏற்படுத்துவது என தான் திட்டமிட்டிருந்தேன்.

அரங்கில் நல்ல கூட்டம். 150 பேர் இருந்தார்கள். அவர்களில் ஒரு 10 பேர் ஏற்கனவே பேலியோ டயட்டை பின்பற்றி வருபவர்கள். மற்றவர்களில் சுமார் 50 பேருக்கு பேலியோ என ஒரு விசயம் இருக்கிறது என தெரிந்திருக்கிறது. பேலியோ என ஒன்று இருப்பதே தெரியாமலும் நிறைய பேர் இருந்தார்கள்.

உரை முடிந்தபின் அவர்களில் நிறைய பேர் வந்து பேசி நம் குழுவின் முகவரியை வாங்கிக்கொண்டு போனார்கள். வேறு சில ஊர்களின் தமிழ் சங்க நிர்வாகிகள் அந்த ஊரில் பெலியோ விழிப்புணர்வு கூட்டம் நடத்த இருப்பதாக சொல்லி மின்னஞ்சல், தொலைபேசி எண்களை பகிர்ந்து கொன்டனர். சிகாகோவில் திட்டமிட்டது போல பேலியோ தன்னார்வலர்களை ஒருங்கிணைத்து செயல்படவைக்கவும் முடிந்தது. சிகாகோ தமிழர்கள் அனைவருக்கும் நம் குழுவின் முகவரி மின்னஞ்சல் மூலம் செல்ல இருக்கிறது.

ஜூன் மாதம் அட்லாண்டா நகரில் சிறப்பு பேலியோ விழ்ழிப்புணர்வு கூட்டம் நடைபெற உள்ளது. விரைவில் அமெரிக்க பெருநகரங்கள் அனைத்திலும் பேலியோ இயக்கம் செயல்பட்டு அமெரிக்க தமிழ்மக்களை பெரிதும் வாட்டிவரும் உபாதைகளில் இருந்து விடுவிக்கும் முயற்சி முழுமூச்சுடன் செயல்பட துவங்கும்.

அமெரிக்காவின் முதல் தமிழ்சங்கமான சிகாகோ தமிழ்சங்கத்திற்கு என் மனமார்ந்த நன்றியும், நல்வாழ்த்துகளும்.




--

செல்வன்

Murugapandian Ramaiah

unread,
May 12, 2018, 12:42:31 AM5/12/18
to tamil...@googlegroups.com, செல்வன்
மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்பயணி" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilpayani...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/tamilpayani.
For more options, visit https://groups.google.com/d/optout.

Reply all
Reply to author
Forward
0 new messages