சாப்பாட்டு கடை

66 views
Skip to first unread message

செல்வன்

unread,
Jan 22, 2013, 6:02:30 PM1/22/13
to செல்வன் கோவை

உணவு சம்பந்தப்பட்ட எதையும் இந்த இழையில் பகிர்ந்து கொள்ளலாம். வித்தியாசமான ரெசிபி, உணவகங்களுக்கு சென்ற அனுபவம் என எழுதலாம்.

இப்போது மணி மாலை ஐந்து.  வெளியே மைனஸ் பதினைந்து டிகிரி குளிர். குளிருக்கு இதமா சூடான இரவு உணவு சமைத்தாகிவிட்டது.

காரட், செலரி கர்ரி.



--
செல்வன்



--
செல்வன்


photo.jpg

செல்வன்

unread,
Jan 22, 2013, 6:11:12 PM1/22/13
to செல்வன் கோவை
ரெசிபி: 1 பெரிய கார்ட்டை நறுக்கவும், 3 துண்டு செலரியை நறுக்கவும். 1/2 வெங்காயம், 1/2 தக்காளி நறுக்கவும். வெஜிடபிள் பிராத், 2 டேபிள் ஸ்பூன் மெட்ராஸ் கர்ரி சாஸ்
 
வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் வெண்ணெயை உருக்கவும்,.வெங்காயத்தை வணக்கவும், அதன்பின் தக்காளியை வணக்கவும். காரட், செலரியை இடவும். பிராத், சாசை ஊற்றி கலக்கி மூடி குறைந்த வெப்பத்தில் 30 நிமிடம் வைக்கவும். பிராத் எல்லாம் ஆவியானபின் கலக்கி எடுக்கவும்.
 
அவ்ளோதான். ஒரே நபர் சாப்பிடும் வகையில் 30 நிமிட டின்னர் தயார்:-)
 
புகைப்படம் சரியா அட்டாச் ஆகலை. மறுபடி இணைப்பில்
 
Inline image 2
--
செல்வன்

photo.jpg

தமிழ்ப் பயணி

unread,
Jan 22, 2013, 9:40:30 PM1/22/13
to tamil...@googlegroups.com
செலரியை, வெஜிடபிள் பிராத், மெட்ராஸ் கர்ரி சாஸ்  - இ​தெல்லாம் என்ன​வென்​றே எனக்கு ​தெரியா​தே?
எப்படி ச​மைப்பது?


2013/1/23 செல்வன் <hol...@gmail.com>

ரெசிபி: 1 பெரிய கார்ட்டை நறுக்கவும், 3 துண்டு செலரியை நறுக்கவும். 1/2 வெங்காயம், 1/2 தக்காளி நறுக்கவும். வெஜிடபிள் பிராத், 2 டேபிள் ஸ்பூன் மெட்ராஸ் கர்ரி சாஸ்
 
வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் வெண்ணெயை உருக்கவும்,.வெங்காயத்தை வணக்கவும், அதன்பின் தக்காளியை வணக்கவும். காரட், செலரியை இடவும். பிராத், சாசை ஊற்றி கலக்கி மூடி குறைந்த வெப்பத்தில் 30 நிமிடம் வைக்கவும். பிராத் எல்லாம் ஆவியானபின் கலக்கி எடுக்கவும்.
 
அவ்ளோதான். ஒரே நபர் சாப்பிடும் வகையில் 30 நிமிட டின்னர் தயார்:-)
 
புகைப்படம் சரியா அட்டாச் ஆகலை. மறுபடி இணைப்பில்
 
Inline image 2
--
செல்வன்



--
அன்புடன்,
சிவா@தமிழ்பயணி

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
‘ இந்தியாவின் எதிர்காலம் கடவுளின் கையில் இல்லை, சாதாரண மனிதர்களின் கையில் உள்ளது என்றுதான் சொல்லவேண்டும். இந்திய அரசியல்சட்ட்டம் உருத்தெரியாத அளவு திருத்தப்படாவிட்டால், தேர்தல்கள் உரிய காலத்தில் முறையாகவும் நேர்மையாகவும் நடத்தப்பட்டால், மதச்சார்பின்மை பெரும்பாலும் பரவியிருந்தால்,நாட்டுமக்கள் தாங்கள் விரும்பும் மொழியில் எழுதவும் பேசவும் முடிந்தால், ஒருங்கிணைந்த சந்தையும் சுமார்திறமைகொண்ட ஆட்சிப்பணி அமைப்பும் இருந்தால், கூடவே சொல்ல மறந்துவிட்டேனே இந்திப்படங்கள் பார்க்கப்பட்டுப் பாடல்கள் கேட்கப்பட்டால் இந்தியா நிலைத்துவாழும்’
- ராமச்சந்திர குகா
இந்திய வரலாறு, காந்திக்குப் பிறகு - பாகம் 1
இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு- பாகம் 2
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
photo.jpg

செல்வன்

unread,
Jan 22, 2013, 9:58:25 PM1/22/13
to tamil...@googlegroups.com
செலரிக்கு தமிழ் பெயர்  சவரிக்கீரை அல்லது சல்லாரிகீரை என்கிறது விக்கி ஆன்சர்ஸ் தளம். ஆனால் பழமுதிர் நிலையத்தில்//நீலகிரிஸில் செலரி என்று கேட்டால் தான் கிடைக்குமாம்:-)

மெட்ராஸ் கர்ரி இந்த ஊர் ஆச்சி மசாலா மாதிரி ஒரு மசாலா பிரான்டு-)

வெஜிடபிள் பிராத் என்பது காய்கறி வேகவைத்த நீர். அது இல்லையெனில் சாதா நீரையே பயன்படுத்தலாம்

செல்வன்

unread,
Jan 22, 2013, 10:00:03 PM1/22/13
to tamil...@googlegroups.com

2013/1/22 செல்வன் <hol...@gmail.com>

செலரிக்கு தமிழ் பெயர்  சவரிக்கீரை அல்லது சல்லாரிகீரை என்கிறது விக்கி ஆன்சர்ஸ் தளம்.


செலரிக்கீரை என்பதுதான் தமிழ் பெயர். கூகிளில் தட்டினால் ஏராளமா ரெசிபி வருது

செல்வன்

unread,
Jan 26, 2013, 5:01:28 AM1/26/13
to செல்வன் கோவை
இன்று டிரை செய்த சீஸ் தக்காளி ரெசிபி. ஸ்னாக்காக உண்ன சுவையாக இருக்கும்.

Inline image 1

தக்காளி ஒன்றை காயின் சைசில் வெட்டிகொள்ளவும். எனக்கு சரியா வெட்ட வரலை:-). சீஸ் துண்டை வெட்டி எடுத்து வாணலியில் லேசாக உருகும்வரை வணக்கி சூடானவுடன் எடுத்து இரு தக்காளி துன்டுகளுக்கு நடுவே வைத்து மேலே பெப்பரை தூவி உண்ணவும். கால்ஷியம், புரதம், கொழுப்பு சத்து மூன்றும் கலந்த ஸ்னாக்

மாட்சரில்லா சீஸ் தான் இதற்கு சூப்பரா இருக்கும். 

Pandian Ramaiah

unread,
Jan 26, 2013, 1:00:37 PM1/26/13
to tamil...@googlegroups.com
நா ஊறுகிறது
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்பயணி" group.
To unsubscribe from this group, send email to tamilpayani...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilpayani?hl=en-GB.
 
 


--
Murugapandian Ramaiah
Twitter: @pandianr79
L.in: http://in.linkedin.com/pub/murugapandian-ramaiah/17/aa7/224
---------------------------------------------------
*Free* software is a matter of liberty not price. You should think of "free" as in "free speech".
Proud user of Ubuntu 12.04 - X64


செல்வன்

unread,
Jan 26, 2013, 6:13:03 PM1/26/13
to tamil...@googlegroups.com

2013/1/26 Pandian Ramaiah <pan...@grassfield.org>
நா ஊறுகிறது

:-)

செல்வன்

unread,
Jan 26, 2013, 6:28:24 PM1/26/13
to செல்வன் கோவை
வாழைப்பழதோல் சட்னி

ரெசிபிக்கு நன்றி: பென்னி

வாழைப்பழதோல் சட்னியா என டென்சனாக வேண்டாம்:-). வாழைபழ தோல் நல்ல நார்சத்து மிகுந்த உணவு. வீட்டில் விளைந்த வாழைபழ தோலில் இதை செய்வது நல்லது. கடையில் கிடைக்கும் பழத்தில் கண்டபடி பூச்சிகொல்லி மருந்து அடித்திருப்பார்கள். மிக நன்றாக கழுவி பயன்படுத்துவது நல்லது.

தேவைபடும் பொருட்கள்

வாழைப்ழ தோல் 7 - 8
வாழைபழம் 1
மஞ்சள் 2 ஸ்பூன்
பெரிய வெங்காயம் 1
பூண்டு- 1
உப்பு
ரெட் பெப்பெர்

ஏழெட்டு வாழைபழ தோலை கழுவி வெந்நீரில் 20 நிமிடம் கொதிக்க வையுங்கள். அப்புறம் அதை எடுத்து நீரை வடிகட்டிவிட்டு சிறு துண்டுகளாக தோலை நறுக்கவும்.

வெங்காயத்தை நறுக்கி வாணலியில் வணக்குங்கள்.மஞ்சளை போட்டு கலக்கவும்.பூண்டை இடவும். வாழைபழ தோலை இட்டு சிறிதுநேரம் வணக்கவும். பழ துண்டுகளை இடவும். உப்பு, பெப்பரை மேலே தூவி ஓரிரு நிமிடம் கலக்கவும்

அப்படியே அனைத்தையும் மிக்சியில் போட்டு அடிக்கவும். சட்னி ரெடி. மேலே உங்களுக்கு பிடித்த ஆலிவ் ஆயில் அல்லது வேறு வாசனை பொருட்ட்களை தூவவும், (தேவைபட்டால்)

இந்த சட்னி அரிசிக்கு நன்றாக இருக்கும். 

குறிப்பு: இன்று மதியம் சமைத்தேன். செல்போன் புகைப்படம் மெமரி அதிகமானதால் இட முடியவில்லை. பென்னியின் வலைதளத்தில் உள்ள புகைபடங்கலை இடுகிறேன்


Inline image 1

Inline image 2

செல்வன்

unread,
Feb 2, 2013, 8:22:21 PM2/2/13
to செல்வன் கோவை, mintamil, tamil...@googlegroups.com, vallamai, தமிழமுதம், தமிழ் சிறகுகள்
இரவு உணவு. முளைவைக்கபட்ட 7 தானியங்களில் செய்த இசக்கியேல் ரொட்டி (கோதுமை, செஸ்மி விதை, சோயா, பார்லி, ராகி, பருப்பு, ஸ்பெல்ட்) மற்றும் காளான் கர்ரி

Inline image 1

--
செல்வன்
www.holyox.blogspot.com

பொறந்த ஊருக்கு புகழை தேடு
வளர்ந்து நாட்டுக்கு பெருமை சேரு
நாலு பேருக்கு நன்மை செய்தால்
கொண்டாடுவார் பண்பாடுவார்



Pandian

unread,
Feb 2, 2013, 9:39:28 PM2/2/13
to tamil...@googlegroups.com
பார்க்கவே அருமையாக உள்ளது

-pandian
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்பயணி" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilpayani...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

செல்வன்

unread,
Feb 2, 2013, 9:58:50 PM2/2/13
to tamil...@googlegroups.com

2013/2/2 Pandian <pan...@grassfield.org>

பார்க்கவே அருமையாக உள்ளது

Thanks Pandian

செல்வன்

unread,
Feb 11, 2013, 9:45:20 PM2/11/13
to செல்வன் கோவை, mintamil, tamil...@googlegroups.com, vallamai, தமிழமுதம், தமிழ் சிறகுகள்
காலை உணவு:
1 ஆப்பிள்,1 செலரி, 1 கோப்பை கொழுப்பு எடுக்காத பால், 1 டேபிள்ச்பூன் நிலகடலை பேஸ்ட், 1 ச்கூப் ப்ரோட்டின் ப்வுடர் போட்டு அடித்த ஸ்மூதி
Inline image 1


மதிய உணவு: பழுப்பு அரிசி 30 கிராம். கோவைக்காய் பொறியல், பீர்க்கங்காய் பொறியல், முருங்கைகீரை சாம்பார்

Inline image 2

--
செல்வன்
www.holyox.blogspot.com

செல்வன்

unread,
Feb 12, 2013, 11:17:49 PM2/12/13
to செல்வன் கோவை

காலை உணவு: 8 ஸ்ட்ராபெர்ரி பழம், 1 டேபிள்ஸ்பூன் நிலக்டலை பேஸ்ட், ஒரு தண்டு செலரி, 1 ஸ்கூப் புரத பவுடர், ஒரு கோப்பை பால் கலந்த ஸ்மூதி
 
11 மணி ஸ்னாக்: 1 துண்டு கொழுப்பு எடுக்காத சீஸ், கைபிடி முந்திரி, கசப்பு சாக்லட் 1 துண்டு, ஒரு காபி
 
மதிய உணவு: ஆப்பிள் ஸ்மூதி

மாலை ஸ்னாக்: அவகாடோ டிப், மற்ரும் காய்கறிகள் ( புகைப்படம் காண்க)

இரவு உனவு: ஒரு முழுகோதுமை+ சோயா மாவு சப்பாத்தி, பீன்ஸ் கறி
 
Inline image 1 
 
Inline image 1

snack2.jpg
snack1.jpg
dinner3.jpg

செல்வன்

unread,
Mar 2, 2013, 11:29:59 AM3/2/13
to செல்வன் கோவை
நாற்பது வருடங்களில் முதல் முறையாக மீன் உண்டு அசைவத்துக்குள் நுழைந்தேன். Bye, Bye vegetarianism for next 40 years

தமிழ்ப் பயணி

unread,
Mar 2, 2013, 10:30:42 PM3/2/13
to tamil...@googlegroups.com
சுத்தமான ​சைவவாதி ​கொள்​கை​யை ​கை விட்டது கண்டு மிக்க வருத்த​மே. ஓய்வு இருக்கும் ​போது ஏனிந்த ​கொள்​கை மாற்றம் என்று விளக்குங்கள் ​செல்வன். நிச்சயம் இந்த KFC, McDonald ​போன்ற கவர்ச்சிகள் காரணமா இருக்காது என்​றே எண்ணுகி​றேன்.

2013/3/2 செல்வன் <hol...@gmail.com>

நாற்பது வருடங்களில் முதல் முறையாக மீன் உண்டு அசைவத்துக்குள் நுழைந்தேன். Bye, Bye vegetarianism for next 40 years

--
அன்புடன்,
சிவா@தமிழ்பயணி

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"மனிதர்களின் குறைபட்ட புரிதல்களை உள்ளபடியே எடுத்துக் கொண்டு அவற்றை மகத்தான மதங்களின் உண்மையான போதனைகளாக நினைக்க வேண்டாம். abcxyz உலகம் இப்போது சகோதரத்துவத்துடன் வாழ்கிறது என்று நீங்கள் என்னிடம் சொல்வீர்களா என்ன? அதன் போர்களையும் வெறுப்புகளையும் ஏழ்மையையும் அதன் குற்றங்களையும் நினைத்துப் பாருங்கள்."
- மகாத்மா காந்தி - காந்தி எனும் மனிதர்
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

தமிழ்ப் பயணி

unread,
Mar 2, 2013, 10:43:21 PM3/2/13
to தமிழ் சிறகுகள், tamil...@googlegroups.com
2013/3/2 செல்வன் <hol...@gmail.com>
லெமென், பெப்பர், உப்பு இது மட்டும் போட்டு வேக வைத்து உண்டேன். பெரிதாக சுவை இல்லை.

நல்ல ​வே​ளை மீன் ஏற்கன​வே இறந்து விட்டது. இல்​லைன்னா துள்ளி ​வெளி​யே குதித்து தற்​கொ​லை ​​செய்து ​கொண்டு இருக்கும்... :) :)
 
பிளான்ட் ஆக இருந்தது. குழம்பு, அரிசியுடன் செய்து உண்டால் சுவை தெரியுமோ என்னவோ?:-)

​செல்வன் மசாலா, மசாலா என்று ஒன்று உண்டு. எந்த ச​மையல் குறிப்புகளிலும் ​சொல்ல படவில்​லையா..?
 
கமர்ஷியலாக பாக்டரி பார்ம்களில் உற்பத்தி ஆகும் மாமிசத்தை முடிந்தவரை தவிர்க்க இருப்பதால் வேட்டையாடப்பட்ட மான் கறியை தான் இனி வாங்க இருக்கிறேன். மான் கறி ரெசிபி தேடிகிட்டு இருக்கேன்:-)

நான் ​வேட்​டையாட படும் எத​னையும் உண்பதில்​லை என்ற ​கொள்​கையில் இருக்​கேன். சுற்றுசூழலில் இருக்கும் ​கொஞ்சநஞ்ச உயிரினங்க​ளையும்
மனித ​வேட்​​டையால் அழிந்து விடாமல் காக்க இந்த ​யோச​னை. ​நே​ரெதிர் ​கொள்​கை.. :) :)
 
--

செல்வன்

unread,
Mar 3, 2013, 12:46:57 AM3/3/13
to tamil...@googlegroups.com, தமிழ் சிறகுகள்

2013/3/2 தமிழ்ப் பயணி <tamil...@gmail.com>

நான் ​வேட்​டையாட படும் எத​னையும் உண்பதில்​லை என்ற ​கொள்​கையில் இருக்​கேன். சுற்றுசூழலில் இருக்கும் ​கொஞ்சநஞ்ச உயிரினங்க​ளையும்
மனித ​வேட்​​டையால் அழிந்து விடாமல் காக்க இந்த ​யோச​னை. ​நே​ரெதிர் ​கொள்​கை.. :) :)


நல்ல கொள்கை. நான் டிஸ்கரேஜ் செய்ய விரும்பலை.

நான் மாற காரணம் முக்கியமா தானியத்தை விட்டது. தானியம் உண்ணாமல் மூன்று வாரம் சீஸ், முட்டை, பால், காய்கறி இதில் மட்டுமே காலம் தள்ளி வந்தேன். ஆனால் எத்தனை நாள் தான் காலையில் சீஸும், மாலை முட்டையும் மட்டும் உண்ன முடியும்? தானியம் உண்ண கூடாது எனும் கொள்கையால் 40 ஆண்டுகளால கடைபிடித்து வந்த மாமிசம் உண்ண கூடாது எனும் கொள்கையை முறிக்கும்படி ஆகிவிட்டது

தமிழ்ப் பயணி

unread,
Mar 3, 2013, 1:50:08 AM3/3/13
to tamil...@googlegroups.com, தமிழ் சிறகுகள்
​செல்வன்,

 நல்ல கொள்கை. நான் டிஸ்கரேஜ் செய்ய விரும்பலை.

இப்ப ​யோசிச்சு பார்த்தால் இந்த ​கொள்​கை​யை நான் அல்ல ​வேறுயார் ​​இந்தியாவில் கைவிட்டாலும் அரசாங்கம் தன் விருந்தாளியாக்கி
சி​றையில் தள்ளிவிடும். அதனால் ​வேறு வழி​யே கி​டையாது. அ​சைவம் என்றால் வளர்ப்பு உயிரினங்கள் தான் கதி.

அ​மெரிக்காவில் ​வேட்​டையாடுதல் சட்டபூர்வ அனுமதியு​டையதா?
 
2013/3/3 செல்வன் <hol...@gmail.com>

2013/3/2 தமிழ்ப் பயணி <tamil...@gmail.com>
நான் ​வேட்​டையாட படும் எத​னையும் உண்பதில்​லை என்ற ​கொள்​கையில் இருக்​கேன். சுற்றுசூழலில் இருக்கும் ​கொஞ்சநஞ்ச உயிரினங்க​ளையும் மனித ​வேட்​​டையால் அழிந்து விடாமல் காக்க இந்த ​யோச​னை. ​நே​ரெதிர் ​கொள்​கை.. :) :)
நல்ல கொள்கை. நான் டிஸ்கரேஜ் செய்ய விரும்பலை.

நான் மாற காரணம் முக்கியமா தானியத்தை விட்டது. தானியம் உண்ணாமல் மூன்று வாரம் சீஸ், முட்டை, பால், காய்கறி இதில் மட்டுமே காலம் தள்ளி வந்தேன். ஆனால் எத்தனை நாள் தான் காலையில் சீஸும், மாலை முட்டையும் மட்டும் உண்ன முடியும்? தானியம் உண்ண கூடாது எனும் கொள்கையால் 40 ஆண்டுகளால கடைபிடித்து வந்த மாமிசம் உண்ண கூடாது எனும் கொள்கையை முறிக்கும்படி ஆகிவிட்டது

--

செல்வன்

unread,
Mar 3, 2013, 11:43:36 AM3/3/13
to tamil...@googlegroups.com, தமிழ் சிறகுகள்

2013/3/3 தமிழ்ப் பயணி <tamil...@gmail.com>

இப்ப ​யோசிச்சு பார்த்தால் இந்த ​கொள்​கை​யை நான் அல்ல ​வேறுயார் ​​இந்தியாவில் கைவிட்டாலும் அரசாங்கம் தன் விருந்தாளியாக்கி
சி​றையில் தள்ளிவிடும். அதனால் ​வேறு வழி​யே கி​டையாது. அ​சைவம் என்றால் வளர்ப்பு உயிரினங்கள் தான் கதி.

அ​மெரிக்காவில் ​வேட்​டையாடுதல் சட்டபூர்வ அனுமதியு​டையதா?


ஆம் பயணியாரே. அமெரிக்காவில் அரசு நிலங்கள் அல்லது தனியார் நிலங்கள் என இருவகை நிலங்களில் வேட்டையாட அனுமதி உண்டு. வருடம் நூறு டாலர் கட்டினால் அரசு நிலங்களில் வேட்டைக்கு லைசென்சு கொடுப்பார்கள். தனியார் நிலங்களில் வேட்டையாட லைசென்சு வேண்டியதில்லை. கோடையில் விஸ்கான்ஸின் மாநிலம் முழுவதும் மான் வேட்டைக்கு கிளம்பிவிடும். ஒன்று, இரன்டு மானை கொன்றால் வருடம் முழுக்க தேவையான மாமிசம் கிடைத்துவிடும். அதை மிக பெரிய ப்ரீசர்களில் வைத்துகொள்வார்கள். கடைகளில் கிடைக்கும் மாமிசம் பவுண்டு எட்டு, 10 டாலர். வேட்டையில் கிடைப்பது மிக ஆர்கானிக் ஆன மாமிசம். 

செல்வன்

unread,
Mar 3, 2013, 11:56:42 AM3/3/13
to செல்வன் கோவை, mintamil, tamil...@googlegroups.com, vallamai, தமிழமுதம், தமிழ் சிறகுகள்
மூன்று நாள் சிகாகோ சுற்றுபயணம் முடிந்து நேற்று நள்ளிரவு திரும்பினேன். நேற்று இரவு டின்னர் சிகாகோவில் உள்ள பெனாங்கு எனும் மலேசிய உணவகத்தில்.

கோவையில் கஷ்டபட்டு தேடினால் மாத்திரம் கிடைக்கும் வீச்சு பரோட்டா பெனாங்கு உணவகத்தில் கிடைத்தது அதிசயமாக இருந்தது. ரொட்டி கனாய் எனும் பெயரில் கிடைக்கிறது. 

Inline image 1

மேங்கோ ஃடோபு எனும் உணவு இது. மாம்பழத்தை அறுத்து மாம்பழ சதையை டோஃபுவுடன் கலந்து மாம்பழ தோலில் டோஃபுவை வைத்து கொடுக்கிறார்கள். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவு இது

Inline image 2


நான் சாப்பிட்டது ரோஸ்ட் டக் எனும் அவனில் வைத்து எடுத்த வாத்து. வாத்தை அவனில் வைத்து மேலே மசாலா தடவி கொடுத்தார்கள். பாதி சாப்பிட்டதுமே வயிறு நிரம்பி விட்டது

Inline image 3


Pandian

unread,
Mar 3, 2013, 12:18:19 PM3/3/13
to tamil...@googlegroups.com
டோஃபு?
அப்படி என்றால்?

-pandian
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்பயணி" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilpayani...@googlegroups.com.

செல்வன்

unread,
Mar 3, 2013, 1:01:03 PM3/3/13
to tamil...@googlegroups.com

2013/3/3 Pandian <pan...@grassfield.org>

டோஃபு?
அப்படி என்றால்?


சோயா பால் சீஸ்

Pandian R

unread,
Mar 4, 2013, 11:01:47 AM3/4/13
to tamil...@googlegroups.com
நன்றி

Murugapandian Ramaiah
Twitter: @pandianr79
L.in: http://in.linkedin.com/pub/murugapandian-ramaiah/17/aa7/224
---------------------------------------------------
*Free* software is a matter of liberty not price. You should think of "free" as in "free speech".
Proud user of Ubuntu 12.04 - X64



2013/3/3 செல்வன் <hol...@gmail.com>

Pandian R

unread,
Mar 4, 2013, 11:02:35 AM3/4/13
to tamil...@googlegroups.com
ஏன் இந்த ஐபேடில் அடித்தால் எழுத்து பெரிதாகத் தெரிகிறது. ஏதாவது மருந்து இருக்கிறதா?

Murugapandian Ramaiah
Twitter: @pandianr79
L.in: http://in.linkedin.com/pub/murugapandian-ramaiah/17/aa7/224
---------------------------------------------------
*Free* software is a matter of liberty not price. You should think of "free" as in "free speech".
Proud user of Ubuntu 12.04 - X64



2013/3/4 Pandian R <bara...@gmail.com>

செல்வன்

unread,
Mar 4, 2013, 11:10:58 AM3/4/13
to tamil...@googlegroups.com

2013/3/4 Pandian R <bara...@gmail.com>

ஏன் இந்த ஐபேடில் அடித்தால் எழுத்து பெரிதாகத் தெரிகிறது. ஏதாவது மருந்து இருக்கிறதா?


அதான் எனக்கும் புரியலை. அது செல்லினம் ஆப்பின் பிரச்சனையாக இருக்கலாம்

செல்வன்

unread,
Mar 4, 2013, 3:23:56 PM3/4/13
to செல்வன் கோவை
வாத்துகறி சாப்பிட்டுவிட்டு சிக்கன் சாப்பிட்டால் சிக்கன் சுத்தமா பிடிக்காமல் போகும். பாக்டரி பண்ணைகளில் சிக்கனை வளர்ப்பதும் அதற்கு இயற்கை உணவை கொடுக்காமல் மக்காசோளத்தை கொடுப்பதும் காரணமா இருக்கலாம். 

கடைகளில் சிக்கன், மாடு, பன்றி, டர்க்கி இது தான் கிடைக்கிறது. இவை எதுவுமே ஃப்ரி ரேஞ்சில் வளர்க்கபட்டவை அல்ல. அவற்றின் இய்றகை உணவான புல்லை கொடுத்து வளர்க்கபட்டவையும் அல்ல. மக்காசோளத்தை கொடுத்து செயற்கையாக உப்ப வைக்கபட்டவை. 15 மைல் தாண்டி ஒரு பண்ணை இருக்கிறது. அங்கே புல் கொடுத்து வளர்க்கபட்ட செம்மறி ஆட்டுகறி கிடைக்கிறது. ஆட்டை மனிதாபிமான முறையில் வளர்த்து சுட்டு கொன்று மாமிசம் எடுக்கிறார்கள். ஆனால் முழு ஆட்டின் கறியையும் விலை கொடுத்து வாங்கணும். வாங்கினால் நாலைந்து மாதம் தாங்கும். பாக்டரி முறையில் வளர்க்கபட்ட கோழிக்கறியை விட இது ஆயிரம் மடங்கு மேல். ப்ரீசரில் அதற்கு இடம் ஒதுக்கணும். 

இம்மாதிரி வேடையாடப்பட்டு இயற்கை முறையில் கிடைக்கும் மாமிசம் தான் நமக்கும் நல்லது, அந்த மிருகங்களுக்கும் நல்லது.இந்த வலைதளத்தில் அமெரிக்காவில் வேட்டையாடப்பட்டு கிடைக்கும் மாமிசம் பற்றிய தகவல் உள்ளது

தமிழ்ப் பயணி

unread,
Mar 4, 2013, 9:18:31 PM3/4/13
to தமிழ் சிறகுகள், tamil...@googlegroups.com, செல்வன் கோவை
​செல்வன்,

ஆட்டை மனிதாபிமான முறையில் வளர்த்து சுட்டு கொன்று மாமிசம் எடுக்கிறார்கள்.

            ஹலால் மு​றைதான் ஆகா, ஓ​கோ ன்று ​சொல்லறாங்க. நீங்க என்னடான்னா ​கெளபாய் ​போல சுட்டு ​கொல்ல பார்க்கறீங்க..
இந்த ஹலால் பிரச்சி​னை பற்றியும் ​கொஞ்சம் விளக்க இயலுமா? இதுவும் அ​சைவ உணவில் ​தே​வையற்ற ஒரு  பழக்கத்தி​னை (ஸ்​டைலி​​னை)
​கொண்டு வந்துள்ளதா ​தோணுது. எந்த மு​றை சிறந்தது?

          நீங்க என்னதான் தப்பிச்சு ஓடினாலும் நாங்க விடுவதாயில்​லை.. :) :)


2013/3/5 செல்வன் <hol...@gmail.com>
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்ச்சிறகுகள்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamizhsiragug...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

செல்வன்

unread,
Mar 4, 2013, 9:37:29 PM3/4/13
to தமிழ்ப் பயணி, தமிழ் சிறகுகள், tamil...@googlegroups.com

2013/3/4 தமிழ்ப் பயணி <tamil...@gmail.com>

ஹலால் மு​றைதான் ஆகா, ஓ​கோ ன்று ​சொல்லறாங்க. நீங்க என்னடான்னா ​கெளபாய் ​போல சுட்டு ​கொல்ல பார்க்கறீங்க..
இந்த ஹலால் பிரச்சி​னை பற்றியும் ​கொஞ்சம் விளக்க இயலுமா? இதுவும் அ​சைவ உணவில் ​தே​வையற்ற ஒரு  பழக்கத்தி​னை (ஸ்​டைலி​​னை)
​கொண்டு வந்துள்ளதா ​தோணுது. எந்த மு​றை சிறந்தது?



தற்கொலை செய்துகொள்ள பலரும் தேர்ந்தெடுக்கும் வழி என்ன? துப்பாக்கியால் சுட்டுகொள்வது. வலி குறைவு என்பதால் அதை தேர்ந்தெடுக்கிரார்கள். அதனால் அதுதான் என்னை பொறுத்தவரை சிறந்த முறை. ஹலால் என்பது நான் கேள்விப்பட்டவரை கழுத்தை அறுப்பது. முஸ்லிம்களுக்கு அனுமதிக்கபட்ட முறை அது. அவர்களை பொறுத்தவரை அதுவே சிறந்தது. அதைப்பற்றி நான் சொல்ல என்ன இருக்கு?:-)

செல்வன்

unread,
Mar 6, 2013, 12:25:48 AM3/6/13
to செல்வன் கோவை, mintamil, tamil...@googlegroups.com, vallamai, தமிழமுதம், தமிழ் சிறகுகள்
மதியம் பெர்கின்ஸ் உணவகத்தில் உண்ட க்ரில் செய்யப்பட்ட சால்மன் மீன்.

Inline image 1

கடைகளில் விற்கும் கோழிகறி மிக ஏமாற்றத்தை அளித்தது. பாவப்பட்ட அந்த ஜீவன்களை பண்னைகளில் அடைத்து வைத்து அவற்றின் இயற்கைக்கு மாற்றான மக்காசோளத்தை கொடுத்து உப்ப வைத்து எடுக்கும் மாமிசம் மிக சத்து குறைவானது. அதிலும் "வெஜிட்டேரியன் உணவு கொடுக்கப்பட சிக்கன்" என விளம்பரம் செய்கிறார்கள். கோழிகள் இயல்பில் வெஜிட்டேரியன்கள் அல்ல. மக்காசோளத்தையும், சோயாவையும் கொடுப்பதால் இயற்கையான உணவு உண்டு வளரும் கோழிக்கறியில் இருக்கும் ஒமேகா 3 பண்ணைகோழிகளில் இருப்பது இல்லை. ஒமேகா 3 இல்லாத மாமிசம் நல்லது அல்ல. 

ஆதிமனித உன்ட மாமிசம் முழுக்க இயற்கையான சூழலில் கிடைத்த மாமிசம். புல்லை உண்டு வாழ்ந்த மிருகங்களை வேட்டையாடி உண்டதில் மனிதனுக்கு ஏராளமான ஒமேகா 3 கிடைத்தது.  ஆனால் தானிய உணவு கொடுத்து வளர்க்கபடும் மிருகங்களின் பாலில், முட்டைகளில், மாமிசத்தில் ஒமேகா 3 இல்லை. உடலுக்கு கெடுதல் அளிக்கும் ஒமேகா 6 தான் உள்ளது.

இயற்கை சூழலில் வளர்ந்த மிருகங்களின் உணவுகளை தான் உண்பது என்பதால் சால்மன் மீனை தேர்ந்தெடுத்தேன். சால்மன் ஒமேகா 3 அதிகம் உள்ள மீன். அதன் காலரிகளில் பாதி கொழுப்பு. பாதி புரதம்.

சால்மன் மீன் அலாஸ்காவில் பிடிக்கபடுகிறது. அதன் எண்ணிகைகளில் பிரச்சனை இல்லை. சால்மன் மீனை பண்ணைமுறையில் விவசாயம் செய்வதும் உண்டு. உணவகத்தில் இன்று உண்ட மீன் பண்ணைமுறையில் உற்பத்தி செய்யபட்டதாகவும் இருக்கலாம். சுவைக்காக உண்டுவீட்டு சுவை பிடித்தவுடன் வால்மார்ட் சென்று " " என முத்திரையிடப்ப்ட்ட அலாஸ்கா சால்மன் மீனை வாங்கி வந்தேன்.

இயற்கையான மாமிசம் உண்னவேண்டுமெனில் பண்ணை கோழிகளை வாங்கவேண்டாம். வீட்டுக்கு அருகே உள்ள தோட்டங்களில் இயற்கையாக வளரும் கோழி, ஆடுகளை வாங்கி உண்ணுவதும் மீனை உண்ணுவதும் சிறந்தது.

செல்வன்

unread,
Mar 6, 2013, 12:26:57 AM3/6/13
to செல்வன் கோவை, mintamil, tamil...@googlegroups.com, vallamai, தமிழமுதம், தமிழ் சிறகுகள்
2013/3/5 செல்வன் <hol...@gmail.com>
வால்மார்ட் சென்று "Wild caught salmon " என முத்திரையிடப்ப்ட்ட அலாஸ்கா சால்மன் மீனை வாங்கி வந்தேன்.

செல்வன்

unread,
Mar 6, 2013, 2:29:12 PM3/6/13
to செல்வன் கோவை, mintamil, tamil...@googlegroups.com, vallamai, தமிழமுதம், தமிழ் சிறகுகள்
இன்று மதிய உணவு அலாஸ்காவில் பிடிக்கப்பட்ட சால்மன் மீன். (புகைப்படங்களை தவிர்க்க இருக்கிறேன்)

ஒமேகா 3 இல்லாத மாமிச உணவை உண்னவேண்டாம் என எழுதி இருந்தேன். ஒமேகா 6, ஒமேகா 3 என இருவகை கொழுப்புகள் நாம் உண்ணும் கொழுப்பு உணவுகள் அனைத்திலும் உள்ளன. கடலை எண்ணெய், சோயா எண்னெய் முதலிய அனைத்துவகை வெஜிட்டபிள் ஆயில்களிலும் ஒமேகா 6 உள்ளது. ஒமேகா 3ம், ஒமேகா 6ம் குறைந்தது 6:1 என்ற விகிதத்தில் உடலில் சேரவேண்டும். இல்லையெனில் கான்சர் முதல் இன்ஃப்ளமேஷன் வரை பல சிக்கல்கள் வரும்.

ஆதி மனிதன் புற்களை மேயும் மிருகங்களை அதிக அளவில் உண்டதால் அவனுக்கு 1:1 என்ற விகிதத்தில் ஒமேகா6ம் ஒமேகா 3ம் கிடைத்தன. ஆனால் தற்போதைய மேற்கத்திய உணவுகளில் வெஜிட்டபிள் ஆயில்கள் அதிகம் சேர்க்கபடுவதாலும், மாடுகள், முட்டைகள் ஆகியவை மக்காசோளத்தை உண்ணும் விலங்குகளில் இருந்தும் பெறப்படுவதாலும் 15:1 என்ற விகிதத்தில் தான் ஒமேகா 3 கிடைக்கிறது

ஆக நீங்கள் செய்யவேண்டியது:

முடிந்தவரை வெஜிட்டபிள் ஆயில்களை தவிருங்கள்.

சைவர்களுக்கு வால்நட் கொட்டைகளில் ஏராளமாக  ஒமேகா 3 உள்ளது. 

பண்னைகளில் இருந்து நேரடியாக பாலை வாங்குங்கள். புல் கொடுத்து வளர்க்கபட்ட மாடுகளின் பாலை குடியுங்கள். அசைவர்கள்- புல் கொடுத்து வளர்க்கபட்ட மிருகங்களின் மாமிசத்தை உண்ணுங்கள்.

செல்வன்

unread,
Mar 14, 2013, 2:29:00 AM3/14/13
to செல்வன் கோவை
அமெரிக்காவில் இந்திய அசைவமா இருப்பது ரொம்ப கஷ்டமான விசயம். இங்கே அசைவம்னா பீஃப் அல்லது போர்க் தான். இந்தியர்களுக்கு இது இரண்டும் ஆகாது. சிக்கனையும், மீனையும் வைத்து காலத்தை ஓட்டுபவர்கள் தான் நிறைய. அதுவும் மக்காசோளம் கொடுத்து உப்பவைக்கபட்ட பாக்டரி சிக்கன்.

வெல்நஸ் மீட்ஸ் எனும் இந்த தளத்தில் இயற்கை உணவு கொடுத்து மனிதாபிமான முறையில் வளர்க்கப்பட்ட சிக்கன், டர்க்கி, பன்றி, முயல்கறி, பைசன் கறி எல்லாம் கிடைக்கிறது. பாக்டரி பண்னைகளில் மக்கசோளம் கொடுக்கிறார்கள். ஆனால் சிக்கன் சைவம் அல்லவே? அது புழுவையும், புல்லையும் தான் தின்னும். அதுதான் அதன் இயற்கை உணவு. அப்படி அந்தந்த மிருகத்துக்கு அததன் இயற்கை உணவை கொடுத்து இங்கே வளர்க்கிறார்கள். மாமிசம் உண்ணும் பலரும் செய்யும் இன்னொரு தவறு தசையை மட்டும் உண்டுவிட்டு ஆர்கன் மாமிசத்தை வீசிவிடுவது. அவர்களை சொல்லி குற்றம் இல்லை. ஆர்கன் மாமிசம் கடைகளில் கிடைக்காது. ஆனால் மாமிசத்திலேயே சத்தான மாமிசம் லிவர், கிட்னி, இதயம், மூளை, நாக்கு முதலிய பகுதிகள் கொண்ட ஆர்கன் மாமிசம் தான். அதுவும் இந்த தளத்தில் கிடைக்கிறது.


செல்வன்

unread,
Mar 14, 2013, 2:34:23 AM3/14/13
to செல்வன் கோவை
ஆட்டுப்பால் கிடைத்தது. வாங்கி வந்தேன். பட்டு போல் நாக்கில் கரைந்த உணர்வு. மாட்டுப்பாலை விட கொழுப்பு சற்று அதிகம்

Inline image 1



--
செல்வன்
www.holyox.blogspot.com

Capitalism has fed, clothed and housed more people than any charity, government, or communist regime ever could. 

செல்வன்

unread,
Mar 18, 2013, 1:35:45 AM3/18/13
to செல்வன் கோவை
வறுத்த மான்கறி.
 
நானே சமைத்து உண்டேன். சமைப்பது அவ்ளவா கடினம் இல்லை. ஆலிவ் ஆயிலை பேனில் ஊற்றி, கறியை கொட்டி, உப்பு, லெமென், பெப்பெர், மிளகு போட்டு வறுத்தால் போதும். மான்கறியில் புரதம் மிக அதிகம். கொழுப்பு குறைவு.காடுகளில் மேய்ந்து இயற்கையாக புல் தின்று வளர்ந்தவற்றை உண்பது நமக்கு நல்லது. பண்ணைகளில் வளரும் மிருகங்களின் மாமிசத்தை உண்பது நல்லது அல்ல
 
Inline image 1


--
செல்வன்
www.holyox.blogspot.com

deer meat.jpg

செல்வன்

unread,
Mar 25, 2013, 12:13:56 AM3/25/13
to செல்வன் கோவை


கற்கால உணவு என்பது கற்காலத்தில் எது உண்ணபட்டதோ அதை மட்டும் உண்ணும் முறை. கற்காலத்தில் விவசாயம் இல்லை, சர்க்கரை இல்லை, உப்பு இல்லை, மசாலா இல்லை. மிக அடிப்படையான சமையல்.

கற்கால சமையல் செய்யலாம் என தான் ஒவ்வொருமுறையும் சமைக்க ஆரம்பிப்பேன். ஆனால் உப்பு எப்படியோ உள்ளே புகுந்துவிடும். அப்புறம் மிளகு, பெப்பெர், லெமென். இவ்ளோதான் பெரும்பாலும் சீசனிங். கிட்டத்தட்ட அனைத்து வகை சமையலுக்கும் இப்படி அடிப்படையான சீசனிங் போதும்.

அதனால் டெக்னிக்கலா இது கற்கால சமையல் இல்லையெனினும் அப்படி அழைத்துகொள்கிறேன்:-)

இந்த உணவுகளில் சர்க்கரை சத்து சுத்தமா இல்லை. ஆலிவ் ஆயிலில் பொறித்த வெண்டைய்காய்,. நூறுகிராமில் 4 கிராம் சர்க்கரை. அதில் இரண்டு கிராம் நார்சத்து. 200 கிராம் பிராக்களியில் 8 கிராம் சர்க்கரை. அதில் ஆறு கிராம் நார்சத்து. அவகாடோ முழுக்க கொழுப்பு. அதுவும் நல்ல கொலச்டிராலை அதிகரிக்கும் மோனொசாச்சுரேட்டட் வகை கொழுப்பு. 10 கிராம் சர்க்கரை. ஆனால் அதில் 8 கிராம் நார்சத்து.

ஆக இன்று டின்னர் முழுக்க கொழுப்பு சத்தும், நார்சத்தும் நிரம்பிய உணவு. புரதம் சுத்தமா இல்லை. ஏழெட்டு கிராம் சர்க்கரை சத்து சேர்ந்திருக்கும். இன்சுலின் சுரப்பை அதிகரிக்காத அற்புதமான டின்னர்.

சுவை? எனக்கு மிக பிடித்திருக்கிறது.

வாணலியில் வணக்கிய வெண்டைய்க்காய்
 
Inline image 1
 
வேக வைத்த பிராக்களி மற்றும் அவகாடோ டிப்
Inline image 2

--
செல்வன்
www.holyox.blogspot.com

2.jpg
1.jpg

தமிழ்ப் பயணி

unread,
Mar 25, 2013, 12:20:13 AM3/25/13
to தமிழ் சிறகுகள், tamil...@googlegroups.com, செல்வன் கோவை
​செல்வன்,
 
வாணலியில் வணக்கிய வெண்டைய்க்காய்

இதன் ​செய்மு​​றை​யை விரிவாக கூறவும். ஆலிவ் ஆயில் எங்க ஊரு​லே கி​டையாது. தமிழகத்தில் எப்படி ச​மைப்பது?
எப்படியும் வீட்டி​லே பு​கை​யை கிளப்பிறதுன்னு முடிவு பண்ணிட்​டேன்.. :) :)


2013/3/25 செல்வன் <hol...@gmail.com>


கற்கால உணவு என்பது கற்காலத்தில் எது உண்ணபட்டதோ அதை மட்டும் உண்ணும் முறை. கற்காலத்தில் விவசாயம் இல்லை, சர்க்கரை இல்லை, உப்பு இல்லை, மசாலா இல்லை. மிக அடிப்படையான சமையல்.


செல்வன்

unread,
Mar 25, 2013, 12:32:36 AM3/25/13
to தமிழ்ப் பயணி, தமிழ் சிறகுகள், tamil...@googlegroups.com

வெண்டைய்க்காயை நடுவே கீறல் போட்டு வைக்கவும்.

சிறுதட்டில் உப்பு, மிளகாய்தூள், மல்லிதூள் கலந்து அதை கீறலினுள் தூவி வைக்கவும்

பிறகு நான் ஸ்டிக் தவாவில் ஆயில் விட்டு மிதமான சூட்டில் ஆயில் சூடானபின் வெண்டைகாயை அதில் நிரப்பி வதங்கவிடவும்

ஐந்து நிமிடம் கழித்து ஒரு கலக்கு கலக்கி பின் மூடி வைக்கவும் (தண்ணீர் கன்டிப்பா விடகூடாது)

வெண்டைகாய் வெந்தபின் மூடியை திறந்து நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும்.

மிதமான சூட்டில் ஐந்து நிமிடம் வதக்கி இறக்கவும்

ஆலிவ் ஆயில் தான் பயன்படுத்தணும் என இல்லை. என்ன எண்னெய் வேன்டுமானாலும் பயன்படுத்தலாம். ஆனால் நான் உடல் நலனுக்காக செக்கில் ஆட்டி எடுத்த ஆலிவ் ஆயிலை பயன்படுத்துகிறேன். செக்கில் ஆட்டி எடுத்த ஆலிவ் ஆயிலில் " எக்ஸ்ட்ரா வர்ஜின் ஆலிவ் ஆயில்" என எழுதபடிருக்கும். அப்படி எழுதாமல் சும்மா ஆலிவ் ஆயில் என எழுதி இருந்தால் அதில் பெருசா எந்த நன்மையும் இல்லை.

எக்ஸ்ட்ரா வர்ஜின் ஆலிவ் ஆயில் என்பது ஆலிவை கீழே போட்டு வெறும் காலால் நடந்து மிதித்தால் முதலில் கிடைக்கும் தூய்மையான எண்ணெய்

2013/3/24 தமிழ்ப் பயணி <tamil...@gmail.com>

தமிழ்ப் பயணி

unread,
Mar 25, 2013, 1:18:39 AM3/25/13
to தமிழ் சிறகுகள், tamil...@googlegroups.com
கிருஷ்ணசாமி ஜி,

          ​வெறு​மே நான் அ​லைந்து திரிந்து செக்கில் ஆட்டி எடுத்த ஆலிவ் ஆயிலை வாங்கி பயன்படுத்தினாலும்
வீட்டில் அம்மா அ​தை ச​மையலுக்கு நிராகரிக்க இல்லாத காரணம் ​சொல்லுவார்கள். அதற்க்கு பதிலா ​செக்கில் ஆட்டிய
நல்​லெண்​​ணை​யை ​தேடி பிடிச்சு வாங்கினால் வீட்டு ச​மையலில் எளிதில் பயன்பாட்டிற்க்கு ​சென்று விடு​மே.

           வி​ரைவில் ஒளிபடங்களுடன் எனது ச​மையல் அனுபவத்துடன் வரமுயலுகி​றேன்... :) :)


2013/3/25 கிருஷ்ணசாமி பொன்னுசுந்தரம் <pon...@gmail.com>

இது கிடைக்காதுங்க சிவா ஜி!
செக்கில் ஆட்டிய நல்லெண்ணை கிடைக்கும்.


செல்வன்

unread,
Apr 5, 2013, 12:23:26 AM4/5/13
to செல்வன் கோவை
அமேசானில் ஆர்டர் செய்த கூடுதல் கன்னிதன்மை உடைய தேங்காய் எண்ணெய் இன்று வீடு வந்து சேர்ந்தது. திறந்தால் இன்ப அதிர்ச்சி. கேரள தேங்காய் எண்ணெய். விஸ்கான்ஸின் குளிரில் பனிக்கட்டி மாதிரி உறைந்து இருந்தது. வாயில் வைத்தால் தேன் மாதிரி சுவை. இந்த அமுதையா உடலுக்கு கெடுதி என்றார்கள் என திட்டிகொண்டே தேங்காய் எண்ணெயில் அலாஸ்காவில் பிடிக்கபட்ட காட்டு சால்மன் மீனை வேக வைத்து உண்டேன். சும்மா சொல்லகூடாது. இத்தனை நாள் நெய், ஆலிவ் ஆயில் என எதில் எதிலோ சால்மனை சமைத்து வந்தேன். ஆனால் தேங்காய் எண்ணெய் சுவை எதிலும் இல்லை.

உடல்நலனுக்கும் இரண்டும் மிக உகந்தவை. தாய்ப்பாலில் மட்டுமே கிடைக்கும் லாரில் அமிலம் என்ற வகை கொழுப்பு தேங்காய் எண்னெயில் மட்டுமே அதற்கு அடுத்து உள்ளது. சால்மனில் உடலுக்கு நலனளிக்கும் ஒமேகா 3 வகை கொழுப்புக்கள் ஏராளமாக உள்ளன. துளீ சர்க்கரை இல்லாத உணவு. வாழ்க கேரளம்.

தேங்காய் எண்ணெய்

Inline image 1

Inline image 2

Inline image 3
2.jpg
1.jpg
3.jpg

செல்வன்

unread,
Apr 22, 2013, 12:26:49 AM4/22/13
to செல்வன் கோவை
ஹார்ட் அட்டாக் மீல்

Scrambled eggs with Aspharagus

30 கிராம் எக்ஸ்ட்ரா வர்ஜின் தேங்காய் எண்ணெய்

100 கிராம் ஆஸ்பாரகஸ்

நாலு Omega 3 முட்டை

மஞ்சள்: அரை டிஸ்பூன்

உப்பு, பெப்பெர் :தேவைக்கு ஏற்ப.

Inline image 1


இதில் உள்ள உறைகொழுப்பு சுமார் 36 கிராம்
இதில் உள்ள கொலஸ்டிரால் சுமார் 846 மிகி (மருத்துவர்கள் பரிந்துரைப்பதை விட 300% அதிகம்)
இதில் உள்ள காலரிகள் சுமார் 550
முதல் தர புரதம் சுமார் 26 கிராம்
வைட்டமின் ஏ ஒரு நாளுக்கு தேவையானதில் சுமார் 60%
கால்ஷியம் 15% (அரை கோப்பை பாலுக்கு சமம்)
இரும்பு ஒரு நாளுக்கு தேவையானதில் 25%
மற்றும் பி வைட்டமின்களில் சுமார் 50 - 75%

உணவின் கிளைசெமிக் லோடு சுமார் பூஜ்ஜியம். ஒரு கவளம் அரிசிசோறு நம் பிளட் சுகர் லெவெலில் எவ்வளவு அதிகரிக்குமோ அதில் கால் பங்கு இதில் அதிகரித்தால் அதிகம்.

இதை உண்டபின்

சுகர் க்ராஷ் வராது
மதியம் உண்டபின் வரும் உறக்கம் வராது
உடலில் இன்சுலின் லெவெல் ஏறாது
பிளட்சுகர் லெவெல் அதிகரிக்காது
ஒரு நாளுக்கு தேவையான புரதத்தில் சரிபாதியும், வைட்டமின்கள், மினரல்களில் சரிபாதியும் கிடைக்கும்.

மிக விலைமலிவு. சுமார் 2 அல்லது 2.5 டாலரில் பிரேக்பாஸ்ட் ரெடி.

உண்மையான பாஸ்ட் புட் சமைக்க 10,15 நிமிடம் ஆகும்.

செல்வன்

unread,
Apr 23, 2013, 1:20:39 AM4/23/13
to செல்வன் கோவை
மங்கோலிய பால் டீ
 
அரை கோப்பை நீரை பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைக்கவும். அடுத்த வினாடியே அதே அளவு பாலை பாத்திரத்தில் ஊற்றவும். மங்கோலியர்கள் கலக்குவதற்கு பதில் ஒரு கரண்டியில் சிறிது திரவத்தை எடுத்து மேலே இருந்து கீழே ஊற்றியபடி இருப்பார்கள். நன்கு கொதித்ததும் உப்பு கலந்து இறக்கவும். சர்க்கரை சேர்க்க கூடாது.
 
மங்கோலியாவில் காலை எழுந்தது முதல் இரவு உறங்கும்வரை இந்த டீயை குடித்தபடி இருப்பார்கள்.


சுவை எப்படி இருக்கும் என கேட்காதீர்கள். நான் இன்னும் குடித்து பார்க்கலை:-).

செல்வன்

unread,
Apr 23, 2013, 7:41:35 PM4/23/13
to செல்வன் கோவை
மதிய உணவு பனீர் டிக்கா மசாலா

பனீர் கொழுப்பும், புரதமும், கால்ஷியமும், ஒமேகா 3 கொழுப்புகளும் நிரம்பிய சீஸ் வகை உணவு,. சர்க்கரை இல்லாத உணவு. இத்துடன் பட்டர், மஞ்சள், தக்காளி, வெங்காயம் மற்றும் மசாலா பொருட்கள் நிரம்பிய சாஸை சேர்த்து தயாரித்த பனீர் டிக்கா மசாலா. கூட ரொட்டியும், அரிசியும் சேர்க்க கூடாது என்பதால் ட்ரை ஆக செய்ய சொல்லி தங்கமணியிடம் கேட்டு உண்டேன். 


Inline image 1



செல்வன்

unread,
Apr 27, 2013, 12:05:22 AM4/27/13
to செல்வன் கோவை, mintamil, vallamai, தமிழ் சிறகுகள், tamil...@googlegroups.com, தமிழமுதம்
இன்றைய -ஹார்ட் அட்டாக் உணவு. நெய்யில் வறுத்த முழு தேங்காய். சல்சாவில் டிப் செய்து உண்ண சுவர்க்கம் சித்திக்கும்.
photo.jpg

தமிழ்ப் பயணி

unread,
Apr 27, 2013, 12:45:47 AM4/27/13
to tamil...@googlegroups.com
இ​தை நாங்களும் ​செய்து, தின்ற பார்க்க முடிவு ​செய்துள்​ளேன்.
திரு.​செல்வன் அவர்க​ளே ஒரு சிறு ​கேள்வி...

இந்த ​தேய்காய்​நெய் வறுவ​லை உணவு உண்பதற்க்கு முன்பு உண்ண ​வேண்டுமா அல்லது உணவு உண்ட பின் உண்ண ​வேண்டுமா.. :) :)


On Sat, Apr 27, 2013 at 9:35 AM, செல்வன் <hol...@gmail.com> wrote:
இன்றைய -ஹார்ட் அட்டாக் உணவு. நெய்யில் வறுத்த முழு தேங்காய். சல்சாவில் டிப் செய்து உண்ண சுவர்க்கம் சித்திக்கும்.



--

செல்வன்

unread,
Apr 28, 2013, 3:16:45 PM4/28/13
to செல்வன் கோவை, mintamil, tamil...@googlegroups.com, vallamai, தமிழமுதம், தமிழ் சிறகுகள்
From facebook share:

நம்ம தமிழ்நாட்டு ஹோட்டல்களில் எப்படி எல்லாம் டுபாக்கூர் வேலை நடக்குது என்று அந்தக் கடைக்காரர்களிடமே போட்டு வாங்கிய தகவல்கள்... +

புரோட்டா: பல ரோட்டுக் கடை ஹோட்டல்கள்ல மைதா மாவோட சோடா உப்பு கலந்து, அதுல கழிவு டால்டாவை ஒரு பங்கு மாவுக்குக் கால் பங்கு டால்டா கணக்குல (ஹோட்டலுக்குன்னே விக்கிற மலிவு விலை டால்டா!) கலந்து அடிச்சு அரை மணி நேரத்துல புரோட்டா சுடுவாங்க. புரோட்டா சும்மா பூ கணக்கா பொலபொலன்னு உதிரும். ஆனா, அத்தனையும் போங்கு புரோட்டா!

சால்னா : சிக்கன் கடையில் பொதுவா நாம கொழுப்பு, ஈரல், குடல், தலை, தோல், இதெல்லாம் வாங்க மாட்டோம். அதேபோல மட்டன் கடையில குடலோட சேர்ந்து இருக்கிற ஒட்டுக்கொழுப்பு, ஒட்டுக்குடல் வாங்க மாட்டோம். இதை எல்லாம் தூக்கிப்போடாம ஓரமாக் குவிச்சுவெச்சிருப்பாங்க. பழக்கமான கடைக்காரரா இருந்தா விசாரிச்சுப் பாருங்க. 'ஹோட்டல்காரங்க மொத்தமா வாங்கிட்டுப் போயிடுவாங்க’னு அவரும் யதார்த்தமா சொல்லிடுவார். அரைக் கிலோ கறியோட இதை எல்லாத்தையும் ஒட்டு மொத்தமாப் போட்டு தூக்கலா கறி மசாலா, மிளகாய்த் தூள், கொத்தமல்லித்தூள், கொஞ்சம் மரத்தூள் அல்லது குதிரை சாணத்தூள் கலந்து, அஞ்சு ஸ்பூன் அஜினாமோட்டா கலந்து கொதிக்கவெச்சா அரை அண்டா நிறைய திக்கான சால்னா ரெடி!

ஒரு முக்கியமான எச்சரிக்கைங்க... தலையே போனாலும் சரி, (ரோட்டுக்)கடைகள்ல தலைக்கறி மட்டும் சாப்பிடாதீங்க. பொதுவாகவே செம்மறி ஆட்டோட தலையில புழுக்கள் இருக்கும். இது இயற்கையான விஷயம்தான். வீடுகளுக்கு வாங்குறப்ப பெரும்பாலும் வெள்ளாட்டுத் தலை தான் வாங்குவோம். செம்மறி ஆட்டுத் தலை வாங்கினாலும் கடைக்காரரு நம்ம கண்ணுல படாம தலையைக் கொதிக்கிற தண்ணில போட்டுட்டு, அப்புறம் அதை எடுத்து தரையில தட்டோ தட்டுன்னு தட்டி புழுவை எல்லாத்தையும் கொட்டிட்டுதான் மேலேயே எடுத்து வைப்பாங்க. அதை வீட்டுக்கு வாங்கிட்டுப்போய் நல்லா சுத்தம் பண்ணி சாப்பிடுவோம். ஆனா, மொத்தமா ஹோட்டலுக்கு விக்கிறப்ப எல்லாம் செம்மறி ஆட்டுத் தலையை இப்படி சுத்தம் பண்ண மாட்டாங்க. அப்படியே கைமாதான்.

இட்லி: பொதுவா இட்லி மெத்துனு இருக்கணும்னா, ஒரு டம்ளர் இட்லி அரிசிக்கு கால் டம்ளர் உளுந்து தேவை. இரண்டையும் தனித்தனியா ஊறவெச்சு, தனித்தனியாதான் அரைக்கணும். அஞ்சு மணி நேரம் புளிக்கவெச்சு, சுட்டீங்கன்னா பஞ்சு மாதிரி இட்லி தயார். ஆனா, என்ன நடக்குது இங்க? கடை இட்லி அரிசி கால் பங்கு, ரேசன் அரிசி முக்கால் பங்கு, உளுந்து கால் பங்கு, ஜவ்வரிசி முக்கால் பங்கு, நைட்டு ஊறவெச்ச பழைய சாதம் கொஞ்சம், சோடா உப்பு எக்கச்சக்கமா... எல்லாத்தையும் அரைச்சு, மூணு மணி நேரம் வெயில்ல வெச்சுட்டு எடுத்து சுட்டால், கும்முன்னு குஷ்பு இட்லி தயார். அந்த இட்லியும் மீந்துருச்சின்னா, அப்பவும் பிரச்னை இல்லை. அடுத்த நாள் அரைக்கிற மாவுல மீந்துபோன இட்லியைப் போட்டு அரைச்சிடுவாங்க!

சோறு: தரமான சோறுன்னா, சோத்துப் பருக்கையை விரலில் வெச்சு மசிச்சா மை மாதிரி மசியணும். அப்பதான் அது வயித்துக்கு ஒண்ணும் செய்யாது. அப்படி இருந்தா கஸ்டமர்ஸ் நிறைய சாப்பிடுவாங்களே... அதுக்காகத்தான் பெரும்பாலான ஹோட்டல்ல முக்காப் பதத்துல சாதத்தை எடுத்துடுவாங்க. சாதம் பளிச்சுனு வெண்மையா இருக்கவும், லேட் ஆனாலும் காய்ஞ்சு போகாமல் இருக்கவும் சாதம் வேகும்போதே சுண்ணாம்புக் கல்லைத் துணியில் கட்டி சாதத்தில் போட்டுடுவாங்க. அன்லிமிட்டட்னு அகலமா போர்டுல எழுதி இருந்தாலும், இந்தச் சோற்றைக் குறிப்பிட்ட அளவுக்கு மேல நீங்க சாப்பிடவே முடியாது!

எல்லாத்தையும்விட முக்கியம், ஹோட்டல்களுக்கு சப்ளை செய்யறதுக்குனே பஜாரில் மளிகைப் பொருட்கள் குறைஞ்ச விலைக்கு கிடைக்குது. எல்லாமே கலப் படம். பாலீஷ் செய்யப்பட்ட இலவச ரேசன் அரிசியோட பொன்னி அரிசி கலந்து விக்கிறாங்க. உடைஞ்ச கழிவுப் பருப்பு, கேசரிப் பருப்பைத் துவரம் பருப்புடன் கலக்கிறாங்க. மிளகாய்த் தூள், கொத்தமல்லித் தூள், டீத்தூளோட மரத் தூள், குதிரை சாணத்தையும் கலக் கிறது எல்லாம் சகஜமப்பா. நெய், எண்ணெய் வகைகளோட பன்றி, மாட்டுக் கொழுப்பு, வனஸ்பதி மற்றும் நாள்பட்ட கழிவு எண்ணெயையும் கலப்பாங்க.

சாதாரண ஹோட்டல் களிலும் கையேந்தி பவன் களிலேயுமே இப்படின்னா டாஸ்மாக் பார் பத்திச் சொல்லவே வேணாம். அதிலும் குறிப்பா, சென்னை பேச்சுலர் பாய்ஸ் ரொம்பக் கவனமா இருக்கணும்!

செல்வன்

unread,
Apr 28, 2013, 3:19:02 PM4/28/13
to tamil...@googlegroups.com

2013/4/26 தமிழ்ப் பயணி <tamil...@gmail.com>

இ​தை நாங்களும் ​செய்து, தின்ற பார்க்க முடிவு ​செய்துள்​ளேன்.
திரு.​செல்வன் அவர்க​ளே ஒரு சிறு ​கேள்வி...

இந்த ​தேய்காய்​நெய் வறுவ​லை உணவு உண்பதற்க்கு முன்பு உண்ண ​வேண்டுமா அல்லது உணவு உண்ட பின் உண்ண ​வேண்டுமா.. :) :)


அட கொடுமையே:-) உணவே இதுதான்:-)

செல்வன்

unread,
Apr 28, 2013, 3:21:54 PM4/28/13
to Innamburan S.Soundararajan, vallamai, mintamil, தமிழ் சிறகுகள், tamil...@googlegroups.com, தமிழமுதம்

2013/4/27 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>
டிப்! டிப்! ராசா! செல்வ ராசா. சில பேர் ஜல்ஸா. நீயோ சல்ஸா! ஆஹா!

:-)

சல்சா என்றால் என்ன என உங்களுக்கு தெரியும். மற்றவர்களுக்கு சல்சா ரெசிபி இதோ:

Inline image 1

http://www.foodnetwork.com/recipes/homemade-salsa-recipe/index.html

Ingredients

3 large ripe tomatoes, diced or 1 (14-ounce) can diced tomatoes with their juice
1 small onion, finely chopped
1 small green bell pepper, seeds and veins removed, and minced
1 (4-ounce) can chopped green chiles with juice
1 clove garlic, minced
2 tablespoons red wine vinegar
1 tablespoon olive oil
Fried Tortilla Chips, recipe follows

Other ingredients you may want to add:

1 small red onion, finely diced
2 (15-ounce) cans black beans, drained and rinsed
1 large avocado, peeled and diced
Salt and freshly ground black pepper
1 mango, peeled and diced
1/2 cup pineapple chunks
2 limes, juiced

Directions

Combine all ingredients, and any extra ingredients you may want to add, in a large glass bowl. Stir well with a spoon. Cover with plastic wrap and chill until serving time.

Read more at: http://www.foodnetwork.com/recipes/homemade-salsa-recipe/index.html?oc=linkback

sk natarajan

unread,
Apr 28, 2013, 10:38:49 PM4/28/13
to tamil...@googlegroups.com, செல்வன் கோவை, mintamil, vallamai, தமிழமுதம், தமிழ் சிறகுகள்
பயம் தரும் பதிவு
வெளியில் சாப்பிடாமல் இருப்பதே மேல்


என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்




2013/4/29 செல்வன் <hol...@gmail.com>

Murugapandian

unread,
Apr 29, 2013, 1:37:09 AM4/29/13
to tamil...@googlegroups.com
படிக்கவே படு பயங்கரமாக இருக்கிறது.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்பயணி" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilpayani...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilpayani?hl=en-GB.

செல்வன்

unread,
Apr 30, 2013, 4:02:43 AM4/30/13
to செல்வன் கோவை
பல மாதம் கழித்து இன்று டயட்டுக்கு லீவு விட்டேன். இன்று டின்னர் மசால் தோசை. நாளை இந்திய உணவகம் போய் நான், சென்னா தால், மதியம் பஃபே மீல்ஸ், ரசகுல்லா, பாசந்தி என என ஒரு கட்டு கட்ட உள்ளேன்:-). அசைவத்தை நாளை கண்ணாலும் பார்க்க போவது இல்லை. 

நாளைமறுநாள் முதல் ரெகுலரான டயட்டுக்கு திரும்பிடுவேன். இனிமேல் மாதம் ஒரு நாள் இப்படி சீட்டிங் நாளை எதிர்பார்க்கலாம். மாதம் ஒரு நாளாவது விருப்பபடி உண்ணமுடியாமல் வாழ்நாள் முழுக்க டயட்டில் இருந்து அடையபோகும் பலன் என்ன?:-)


Inline image 1

Innamburan S.Soundararajan

unread,
Apr 30, 2013, 5:03:32 AM4/30/13
to vall...@googlegroups.com, mintamil, tamil...@googlegroups.com, தமிழ் சிறகுகள், செல்வன் கோவை
மாதம் ஒரு நாளாவது விருப்பபடி உண்ணமுடியாமல் வாழ்நாள் முழுக்க டயட்டில் இருந்து அடையபோகும் பலன் என்ன?:-)

~ அதானே. திருந்துக. செல்வமே.


2013/4/30 செல்வன் <hol...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

செல்வன்

unread,
Apr 30, 2013, 10:38:23 AM4/30/13
to துரை.ந.உ, வல்லமை, mintamil, tamil...@googlegroups.com, தமிழ் சிறகுகள்

2013/4/30 துரை.ந.உ <vce.pr...@gmail.com>
அப்டி வாங்க செல்வன் ஜீ நம்ம கட்சிக்கு :))

கிளம்பிக்கிடே இருக்கேன் துரை ஜி.. பிரேக்பாஸ்டுக்கு எனக்கு பிடித்த பேகல்,க்ரீம் சீஸ்  மற்றும் நல்ல சர்க்கரை போட்ட பாரம்பரிய காப்பி குடிக்க:-)இன்று முழுக்க ஸ்வீட், ஐஸ்க்ரீம், மெக்சிகன் உணவு, பிரெஞ்சு ப்ரை என ஒரு கட்டு கட்டணும்:-)

Innamburan S.Soundararajan

unread,
Apr 30, 2013, 10:50:06 AM4/30/13
to tamil...@googlegroups.com
செல்வன் சூடிகை சீட்டர். கதவு அகலமாகத்தான் வீடு வாங்கியிருக்கார்.


2013/4/30 செல்வன் <hol...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்பயணி" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilpayani...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilpayani?hl=en-GB.

சாப்பாட்டு ராமன்

unread,
May 1, 2013, 1:43:26 AM5/1/13
to செல்வன் கோவை

இன்று  மெக்சிகன் உணவகத்தில் ஒரு கட்டு கட்டினேன்.

Inline image 1



இதன் பெயர் த்ரி சீஸ் எஞ்சிலாடா. (பீன்ஸ், ஸ்பானிஷ் அரிசி, மற்றும் மக்கா சோள சப்பாத்திக்கு நடுவே பீன்ஸை வைத்த எஞ்சிலாடா)


மக்கா சோள சிப்ஸ். தொட்டுக்க கார சல்சா. இது இல்லாமல் மெக்சிகன் உணவு துவங்கவே துவங்காதுInline image 2

நாளை முதல் ஒன்று, இரண்டு மாதங்களுக்கு மறுபடி பழைய குருடி கதவை திறடின்னு ஹார்ட் அட்டாக் மீல்சுக்கு போகணும்.

Round 2 begins

செல்வன்

unread,
May 20, 2013, 3:03:49 AM5/20/13
to செல்வன் கோவை
இன்று எண்பது டிகிரி பாரன் ஹீட் வெப்பம். நண்பர்களுடன் பீச்சுக்கு சென்றோம். மிச்சிகன் ஏரி பீச். வெப்பம் அதிகம் எனினும் ஜூலை, ஜூன் வரை நீரில் இறங்க முடியாது. குளிராக இருக்கும். மணலில் பேஸ்கட் பால், ஃப்ரிஸ்பி, சாக்கர் விளையாடினோம். ட்ரெக்கிங் சென்றோம். க்ரில் செய்த கோழியை உண்டோம்.

நாள் இனிதே கழிந்தது. வெல்கம் கோடை


Inline image 2

Inline image 3

Inline image 4

செல்வன்

unread,
May 21, 2013, 12:14:12 AM5/21/13
to செல்வன் கோவை
டின்னர்: Oven roasted காளிபிளவர்,.


காளிபிளவர் மேல் பெப்பெர், சால்ட் தூவி அவனில் மெதுவாக ஸ்லோ ரோஸ்ட் செய்து எடுத்தது.

காளிபிளவர் மேல் பெப்பெர், சால்ட் தூவி அவனில் மெதுவாக ஸ்லோ ரோஸ்ட் செய்து எடுத்தது.
Inline image 1
கூட வேகவைத்த முட்டை, சல்சா

Inline image 2

காளிபிளவர் விலை 1 டாலர். முட்டை ஒன்று 25 சென்டு. மொத்தம் 3 டாலரில் வீட்டில் செய்த டின்னர் தயார்.

சமைக்க எளிது, ஆரோக்கியம், மலிவு. என்ன நான்கு முட்டை உண்பதால் விரைவில் மாரடைப்பு வரலாம் என மருத்துவர்கள் மிரட்டுவார்கள். அதுதான் ரிஸ்க்:-)
980911_526805844044305_1179776648_o.jpg
2.jpg

செல்வன்

unread,
May 21, 2013, 12:47:21 PM5/21/13
to செல்வன் கோவை
இந்த மாதிரி நியூசை படிச்சால் பக் என மனசு அடிச்சுக்குது:-)
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டத்திற்கு உட்பட்டதான மேல்செங்கம் வனப்பகுதியில் மான் வேட்டையாடிய முன்னாள் துணை கமிஷனர் உள்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

Inline image 3


Inline image 2

Innamburan S.Soundararajan

unread,
May 21, 2013, 12:58:37 PM5/21/13
to tamil...@googlegroups.com, செல்வன் கோவை
ஆமாம் சாமி.


2013/5/21 செல்வன் <hol...@gmail.com>

செல்வன்

unread,
May 24, 2013, 11:01:04 PM5/24/13
to செல்வன் கோவை
முன்பு வெஜிட்டபிள் ஆயில்கள் கண்டுபிடிக்கபடும் முன் அமெரிக்காவில் சமையல் எண்ணெயாக வெண்ணெய், பீஃப் டாலோ (பசுவின் கொழுப்பு) மற்றும் லார்ட் (பன்றி கொழுப்பு) தான் பயன்பட்டு வந்தது. இவை இரண்டும் தான் அங்கே பெருமளவில் உண்ணபடும் இறைச்சி வகைகள். 20ம் நூற்றாண்டு துவக்கத்தில் மின்சாரம் பயன்பாட்டுக்கு வந்தவுடன் அதுவரை விளக்குகளை எரிக்க பயன்பட்டு வந்த காட்டன்சீட் ஆயில் (பஞ்சு விதை எண்ணெய்) பெருமளவு தேங்கிவிட்டது. அதை என்ன செய்வது என கம்பனிகளுக்கு தெரியவில்லை. அதுபோக பெருமளவில் தரமற்ற பஞ்சுவிதைகளும் உற்பத்தி ஆகின. அதை உரமாக பயன்படுத்தி வந்தார்கள். எண்ணெய் எடுத்து மிருகங்களுக்கு கொடுத்து வந்தார்கள். மீதியை ஆற்றில் கொட்டினார்கள். இந்த நிலையில் பிராக்டர் மற்றும் காம்பிள் என இரு சகோதரர்கள் காட்டன் சீட் ஆயிலில் ஹைட்ரஜன் அணுவை செலுத்துவதன் மூலம் அதன் ஆயுளை அதிகரிக்க முடியும் என கண்டுபிடித்தார்கள். அதுபோக இப்படி ஹைட்ரஜனேட் செய்வதன்மூலம் காட்டன் சீட் ஆயில் அன்று அமெரிக்கர்களின் விருப்பமான சமையல் எண்ணெயான பன்றிகொழுப்புக்கு சமமான சுவை, ப்ளேவருக்கு மாறியது. அதன்பின் கடுமையான விளம்பரம் மூலம் காட்டன்சீட் ஆயிலை மக்கள் மத்தியில் பரப்பினார்கள். கிட்டத்தட்ட தூக்கி எறியப்படும் பண்டம் என்பதால் அதன் விலையும் மலிவு. பிராக்டர் காம்பிள் கம்பனியில் விளம்பரங்களுக்கு அன்றைய வெண்ணெய் மற்றும் பன்றிகொழுப்பு உற்பத்தியாளர்களான சிறு விவசாயிகளால் தாக்குபிடிக்க முடியவில்லை. அதன்பின் தூக்கி எறியப்படும் இன்னொரு பண்டத்தில் இருந்தும் எண்ணெய் எடுக்க முடியும் என கண்டுபிடித்தார்கள். அது சோயா. பிறகு மக்காசோளத்தில் இருந்தும் கெமிக்கல் முறையில் எண்ணெய் எடுத்தார்கள். இவை அனைத்தும் ஒரு சில ஆண்டுகளில் பன்றிகொழுப்பையும், வெண்ணெயையும் சமையல் அறையில் இருந்து விரட்டிவிட்டன. வெண்ணெய்க்கு விழுந்த கடைசி அடி "உறைகொழுப்பு கெட்டது" என்ற பிரச்சாரம். அதன்பின் மிக தாமதமாக இப்படி இயற்கை கொழுப்புகளை ரிபைன்டு கெமிக்கல் கொழுப்புகளால் ரிப்ளேஸ் செய்வதால் டிரான்ஸ்ஃபேட் எனும் வகை கொழுப்பு உருவாகி மாரடைப்பு வரும் என்பதை அறிந்தார்கள். 

கம்பனிகள் உடனே லேபில் டிரான்ஸ்பேட்டை மேலும் சிதைத்து அது டிரான்ஸ்பேட்டே அல்ல என வாதாடி இன்றும் அந்த கெமிக்கல் குப்பை ஆயில்களை "டிரன்ஸ்ஃபேட் ப்ரி:" என விளம்பரம் செய்து விற்று வருகிறார்கள். உடல்நலனை கூட விடுங்கள், இந்த கம்பனிகள் விற்ற கெமிக்கல் குப்பைகளை உண்டு பழகிய இன்றைய அமெரிக்கர்களுக்கு பன்றிகொழுப்பில் பொறித்த சிக்கனின் சுவை என்ன என்பதே தெரியாமல் போய்விட்டது.

செல்வன்

unread,
May 29, 2013, 2:49:16 PM5/29/13
to செல்வன் கோவை
காலை உணவு சுத்தமான பசுநெய்யில் வறுத்த தேங்காய். டிப் செய்ய அவகாடோ டிப் மற்றும் சல்சா (தக்காளி, ஆனியன்). உணவு சாப்பிட்டுவிட்டு டிசர்ட் சாப்பிடலைன்னா எப்படி?:-) அதனால் 2 துண்டு 100% dark chocolate

Inline image 2

செல்வன்

unread,
May 30, 2013, 11:21:01 PM5/30/13
to செல்வன் கோவை
உண்ணும் விரதம்

உண்ணாவிரதம் இருந்து போர் அடித்ததால் ஒரு மாசம் உண்ணும் விரதம் இருக்கலாம்னு முடிவு செய்துவிட்டேன். வகைதொகை இன்றி ஒரு மாசம் உண்பது. ஒரே நிபந்தனை நாம் சாப்பிடும் உணவுகளை பார்த்தால் டயட்டிசியன்களுக்கு மாரடைப்பு வந்துடணும். அந்த மாதிரி சாப்பிடணும்:-)
உண்ணும் விரதம் நாள் 3. எழுந்தவுடன் எடையை கவனித்தேன். 184.2 பவுண்டு (83.72 கிலோ) என காட்டியது. உடலில் கொழுப்பின் சதவிகிதம் 25.2 எனவும் காட்டியது. ஆனால் இந்த 25.2% என்பது நம்பகமானது அல்ல. டிஹைட்ரேட் ஆகி இருந்தால் உடலில் கொழுப்பு அதிகமாக இருப்பதாக காட்டும். தொடர்ந்து பலநாட்கள் கவனித்து வந்தால் தான் டிரென்டு தெரியும். எனக்கு சராசரியாக 25% முதல் 27% என்ற விகிதத்தில் கொழுப்பின் சதவிகிதத்தை தராசு காட்டுகிறது.
Inline image 1

ஆக இரண்டுநாட்களாக கண்டபடி உண்டும் உடல் எடை ஏறவில்லை. கிட்டத்தட்ட கால் கிலோ குறைந்துள்ளது. ஆனால் இது நீர் எடையாக இருக்கும் வாய்ப்பே அதிகம் என்பதால் இதை கணக்கில் வைத்து கொள்ளபோவது இல்லை. எடை ஏறவில்லை என்பது தான் கணக்கு:-). லேட்டாக எழுந்ததால் காலை உணவை மதியம் 12 மணிக்கு துவக்கினேன்:-). சமைக்க சோம்பல். உணவகம் சென்று ஒரு தட்டு நிறைய சிக்கன், போக் சாய், மஷ்ரூம், வெங்காயம், பெல் பெப்பெர் மற்றும் லெமென், கார்லிக், ஸ்வீட் சிலி (இனிப்பு மிளகாய்) சாஸ் ஆகியவற்றை எடுத்து கொடுத்தேன். அவர்கள் என் கண்முன் வறுத்து கொடுத்தார்கள். அதன்மேல் பொடி தேங்காயை தூவி உண்டேன்.

Inline image 2

மதிய உணவு தேங்காய் எண்ணெயில் செய்தஓக்ரா (வெண்டைக்காய்), 100 கிராம் நெய்யில் வறுத்த முந்திரி மற்றும் 1 துன்டு சீஸ். முந்திரி டயட்பிளானில் இல்லை. அதை அதிகம் சாப்பிட கூட்டது. ஆனால் சுவை காரண்மாக சபபிட நினைத்த 30 கிராமுக்கு பதில் 100 கிராம் ஆகிவிட்டது. இரவு உணவுக்கு தேங்காய் பால், பாலகீரை, 6 ஸ்ட்ராபெர்ரி, 1 ஸ்பூன் நிலக்டலை பேஸ்ட் மற்றும் 1 ஸ்கூப் புரோட்டீன் பவுடர் கலந்து அடித்த ஸ்மூதி தயார் செய்து ப்ரிட்ஜில் வைத்துள்ளேன். ஜிம் சென்று உடல்பயிற்சி செய்துமுடித்தபின்னர் அருந்தவேண்டும்.
Inline image 3

இப்படி ஏராளமாக சாப்பிட்டு உண்ணும் விரதம் இருப்பதால் உடல் இளைக்கும் என்பது நியாயம் இல்லைதான்:-). ஆனால் தியரடிக்கலாக பார்த்தால் சில வாரம் முன்பு இருந்த உண்ணாவிரதமும், இப்போது இருக்கும் உண்ணும் விரதமும் ஒன்றுதான். இரண்டாலும் உடலுக்கு சர்க்கரை கிடைக்கவில்லை. அதனால் இன்சுலின் உற்பத்தி ஆகவில்லை. 1 வேளை பட்டினி கிடப்பதும், 1 வேளை நெய்யில் வறுத்த தேங்காயை உண்பதும் இரண்டாலும் உடலுக்கு சர்க்கரை சேருவது இல்லை. அதனால் உடலில் கொழுப்பை சேருக்கும் இன்சுலின் உற்பத்தி ஆவதும் இல்லை.ஆக இரண்டாலும் உடல் இளைக்கும். பட்டினி கிடந்து இளைப்பதா, நன்றாக சாப்பிட்டு இளைப்பதா என்பது மட்டும் நம் தேர்வு:-)
3.jpg
4.jpg
2.jpg

Selvan Kovai

unread,
Jun 11, 2013, 12:56:26 AM6/11/13
to செல்வன் கோவை

இன்று இரவு உணவாக மான்கறி உண்டேன். மான்கறியில் மஞ்சள், சிகப்பு பெப்பெர், கருப்பு பெப்பெர், உப்பு, கார்லிக் பவுடர், லெமென் தடவி சீசனிங் செய்து தேங்காய் எண்ணெயை வானலியில் கொட்டி அதில் வறுத்து மேலே வெங்காயம், தக்காளி, சீஸ் இட்டு உண்டேன்.

புல் தின்று வளர்ந்த எந்த மாமிசமும் ஒமேகா 3 கொழுப்பு நிரம்பியதாக, லீனாக, ஜூஸியாக இருக்கும். இதுவும் அதுபோல் மிகுந்த சுவை. சிக்கன் எல்லாம் இதற்கு பக்கத்தில் கூட வராது.
Inline image 1

Inline image 2

Inline image 3
--
செல்வன்

https://www.facebook.com/holyape

https://www.facebook.com/groups/tamilhealth/

http://holyox.blogspot.com

http://holyox.tumblr.com/

"உணவை பார்த்து பயப்பட கூடாது. நம்மை பார்த்து தான் நம் உணவு பயப்படணும்". ரான் ஸ்வான்சன்


1.jpg
3.jpg
2.jpg

செல்வன்

unread,
Aug 31, 2015, 10:11:58 PM8/31/15
to K Selvan
ஆதித்த கரிகாலனும், நானும்

அமெரிக்காவை கலக்கி அராஜகம் செய்து வரும் காட்டுப்பன்றிகளை வேட்டையாட அரசு உத்தரவு கொடுத்திருப்பதால் காட்டுப்பன்றிக்கறி இங்கே விஸ்கான்ஸின், இல்லினாய் பக்கம் கிடைக்கிறது

அப்படி ஒரு காட்டுப்பன்னி வயிறு எனக்கு கிடைத்தது...அதை சமைக்கலாம் என வாங்கி வந்தேன்.

காட்டுப்பன்றி சாதா பன்றி மாதிரி கிடையாது. பொன்னியின் செல்வனில் கல்கி ஒரு அத்தியாயம் முழுக்க காட்டுபன்றியின் அராஜகத்தை எழுதியிருப்பார். ஒப்பற்ற மாவீரனும், வீரபாண்டியன் தலைகொண்டவனுமான ஆதித்த கரிகாலனையே அது ஒரு கை பார்த்தது என்றால் அதன் அராஜகத்தையும், ஆக்ரோசத்தையும் சாதா மனிதனான என்னால் விவரிக்க முடியுமா? கல்கி மாதிரி எழுத்தாளர்களால் தான் விவரிக்க முடியும்..இப்பேர்ப்பட்ட பன்றியை ஏ.ஆர்.15 துப்பாக்கியை வைத்து சுட்டுகொன்று அமெரிக்க வேட்டையாளர்கள் சுவையான காட்டுப்பன்றி இறைச்சியை பண்ணைகளில் விற்கிறார்கள்

ஆனால் செத்த பன்றியாக இருந்தாலும் அதன் அராஜகம் எப்படிப்பட்டது என்பதை உணர அதன் இறைச்சியே நல்ல வாய்ப்பாக அமைந்தது. முதற்கண் காட்டுப்பன்றி வயிற்றுக்கான ரெசிபியை நெட்டில் தேடினேன். கிடைக்கவில்லை. அதனால் போர்க் பெல்லி என்பதற்கான ரெசிபியை நெட்டில் தேடி அதை வைத்து சமைத்தேன்..மிகப்பெரும் தவறு என்பது சமைக்க ஆரம்பித்த பின்னரே தெரிந்தது. பண்ணையில் விற்கும் வெள்ளைபன்றியும், நானும் ஒன்றா என காட்டுப்பன்றி கறி என்னை பார்த்து நகைத்தது.




அதை அறுக்க இறைச்சியை வெட்டும் சாதா கத்தியால் முடியவில்லை..சின்ன கீறல் கூட விழவில்லை..ஸ்டேக் கத்தி எனப்படும் மாட்டை வெட்டும் கத்தியால் தான் அறுக்கவேண்டும் என முடிவு செய்து அவனில் வைத்தேன். அவனில் நேரம், டெம்பரேச்சர் சரியாக தெரியாததால் (ரெசிபியே இணையத்தில் இல்லையே) அது முழுக்க உருகி பேகன் க்ரீஸ் ஆகிவிட்டது. அதை பார்த்து வீட்டில் ஒரே சண்டை. பேன் முழுக்க நாசமாகிவிட்டது என சொல்லி சிங்கில் எடுத்து ஊற்ற மீதமிருந்த தசையை உண்டேன். தெய்வீக சுவை

இது சென்ற வருடம் நடந்தது..இந்த வருடம் மறுபடி தைரியத்தை வரவழைத்துக்கொண்டு காட்டுப்பன்றி வயிற்றை மறுபடி வாங்கி வந்தேன். ஸ்டேக் கத்தி எனப்படும் மாட்டை வெட்டும் கத்தியை வாங்கி வந்தேன். காட்டுப்பன்றி வயிறு அதுக்கும் அசைந்து கொடுப்பேனா என்றது. நெய் மாதிரி கத்தி வழுக்கிகொண்டே போக கஸ்டபட்டு வெட்டி எடுத்து பீஸ் ஆக்கி வாணலியில் போட்டு, பெரிய வெங்காயம் ஒன்றை விட்டு, மசாலா தூளை போட்டு சுமார் முக்கால் மணிநேரம் மூடி போட்டு மூடி பிரஷர் குக் செய்தேன்

இத்தனை பெரிய போராட்டத்துக்கு பின்னரே முழு வெற்றி கிட்டியது. வாயில் வைக்க, வைக்க கரைந்து, பேரின்பம்....இத்தனை சுவையான, கொழுப்பு மிகுந்த இறைச்சியை ஆயுளில் உண்டதில்லை என மான், காட்டெருமை, ஆடு, வான்கோழி முதலான சகல மிருகங்களையும் உண்ட நான் துண்டை போட்டு தாண்டி சத்தியம் செய்கிறேன்.



வால்மிகியில் ராவண சன்னியாசி சீதையை கடத்த பிராமண வேடம் தரித்து வருகிறான். உலகம் முழுவதற்கும் உணவளிக்கும் அன்னபூரணி, செல்வத்தின் அதிதேவதை அன்னை ஜானகி அவனுக்கு பிஷையாக காட்டுப்பன்றி இறைச்சியையும், உடும்புக்கறியையும், மான்கறியையுமே அளிக்கிறாள். உயர்ந்த வகை இறைச்சியை அதீதிகளுக்கு அளிக்கவேண்டும் எனும் மரபிலேயே அதை செய்தாள்

சங்க மரபிலும் தமிழர்களால் விரும்பி உண்ணபட்ட இறைச்சியாக காட்டுப்பன்றி இறைச்சியே குறிப்பிடபடுகிறது

இப்படி சீதை, இராவணன், வந்தியத்தேவன், இராமன், சங்கத்தமிழர் ஆகியோரால் விரும்பி உண்ணபட்ட இவ்விறைச்சி என்னை துவக்கத்தில் சோதித்தாலும் அதன்பின் அதன் சுவையால் என்னைக்கட்டிப் போட்டுவிட்டது. இனி இதை தேடி அலைவதே என் வேலை.

ஆன்டவன் நல்லவர்களை சோதிப்பான், ஆனல் கைவிடமாட்டான் - சூப்பர் ஸ்டார் ரஜினி

காட்டுப்பன்னியின் கதையும் அஃதே


தமிழ்ப் பயணி

unread,
Sep 1, 2015, 9:57:39 AM9/1/15
to tamil...@googlegroups.com
ராம பக்தர்கள் இ​தை​யெல்லாம் -மாமிச உண​வை - கண்டுக்க மாட்​​டேன் என்கிறார்க​ளே..
 
வால்மிகியில் ராவண சன்னியாசி சீதையை கடத்த பிராமண வேடம் தரித்து வருகிறான். உலகம் முழுவதற்கும் உணவளிக்கும் அன்னபூரணி, செல்வத்தின் அதிதேவதை அன்னை ஜானகி அவனுக்கு பிஷையாக காட்டுப்பன்றி இறைச்சியையும், உடும்புக்கறியையும், மான்கறியையுமே அளிக்கிறாள். உயர்ந்த வகை இறைச்சியை அதீதிகளுக்கு அளிக்கவேண்டும் எனும் மரபிலேயே அதை செய்தாள்

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்பயணி" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilpayani...@googlegroups.com.

செல்வன்

unread,
Sep 1, 2015, 10:01:39 AM9/1/15
to tamil...@googlegroups.com

2015-09-01 8:57 GMT-05:00 தமிழ்ப் பயணி <tamil...@gmail.com>:
ராம பக்தர்கள் இ​தை​யெல்லாம் -மாமிச உண​வை - கண்டுக்க மாட்​​டேன் என்கிறார்க​ளே..

விவேகானந்தர் தெற்கே வருகிறார்..வந்துவிட்டு "தெற்கே பிராமணர்கள் இறைச்சி உண்பதில்லை. இது பிராந்திய கலாசாரம் மட்டுமே. கிணற்று தவளை தன் கிணறே உலகம் என நினைப்பதுபோல தெற்கத்திய கலாசாரத்தை நாடு முழுவதற்கும் பொதுவான கலாசாரம் என அவர்கள் நினைக்கிறார்கள்" என்கிறார்


--

செல்வன்

unread,
Sep 7, 2015, 4:02:36 AM9/7/15
to K Selvan

சில நாள் முன்பு ஃபிஷ் க்ரீக் எனும் மீன் பிடி கிராமம் சென்றோம்

மீனவர்களின் பாரம்பரிய உணவான ஃபிஷ் பாயில் அங்கே இன்னமும் பாரம்பரியமான முறையில் உணவகம் ஒன்றில் சமைக்கபட்டு வருகிறது

விஸ்கான்ஸினை "டெய்ரி லாண்ட்" (பால்பொருள் நிலம்" என அழைப்பார்கள். அதனால் இங்கே பால், வெண்ணெய் எல்லாம் ஏராளமாக கிடைக்கும்

அதனால் மிச்சிகன் ஏரியில் கிடைக்கும் வெள்ளை மீனை ஒரு பானையில் நீர் விட்டு விறகு அடுப்பில் வேகவிடுவார்கள். இன்னொன்ரு பானையில் வெங்காயம், உருளைகிழங்கை வேகவிடுவார்கள். அதன்பின் மீன், வெங்காயம், கிழங்கு மூன்றின் மேலும் ஏராளமான உருக்கிய நெய்யை ஊற்றி கொடுப்பார்கள். அதான் ஃபிஷ் பாயில்





விறகு அடுப்பை தவிர வேறு எந்த அடுப்பிலும் இந்த சுவை வராது என்பதால் இதை வீட்டில் சமைக்க முடியாது. ஒரு துண்டு மீனை வெட்டி எடுத்து வெங்காயம் கிழங்குடன் உண்டால் இருநூறு ஆண்டுகள் முன்னோக்கி போய் அன்றைய மீனவர்கள் உண்ட அதே உணவை உண்ணும் திருப்தி கிடைக்கிறது.

ஃபிஷ் பாயில் விடியோ பதிவை இங்கே காணலாம்

https://www.youtube.com/watch?v=1CVscWldl0k


செல்வன்

unread,
Sep 7, 2015, 3:25:57 PM9/7/15
to K Selvan

கோவைக்காய் பொறியல்

டின்டூரா என தான் இங்கே கடைகளில் பெயர் போட்டு விற்கிறார்கள்.

கோவைக்காய் டயபடிஸ், ஆஸ்துமா போன்ரவற்றுக்கு உகந்தது. வைட்டமின் சி நிரம்பியது.

அதை உப்பு, மிளகாய் பொடி போட்டு வணக்கி தட்டு நிறைய நிரப்பி நாலு ஆர்கானிக் முட்டைகளுடன் உண்டேன்.

அன்ன தாதா சுகி பவ (இந்த உணவை எனக்கு அளித்தவர்கள் மகிழ்ச்சியாக இருக்கட்டும்..) என வேண்டிக்கொண்டே உண்டேன்

சமைத்தது நான் எனினும் உலகத்து உயிர்க்கெல்லாம் உணவை அளித்து காத்து இரட்சிப்பவன் பரம்பொருளான மாயவனே அல்லவா?

அன்ன தாதாவான எம்பெருமான் நாராயணனும் அன்னபூர்ணியான அன்னை மகாலக்ஷ்மியும் உலகின் பசிப்பிணி அனைத்தையும் போக்கி அருள் புரிக





செல்வன்

unread,
Sep 10, 2015, 1:05:56 PM9/10/15
to K Selvan

இரு வருடம் முன்பு வீட்டருகே உள்ள கோழிப்பண்ணை ஒன்றுக்கு முட்டை வாங்கபோனேன்.

முட்டை டஜன் இரண்டு டாலருக்கு கொடுத்தார். அப்புறம் கோழிகளுக்கு என்ன கொடுக்கிறீர்கள் என கேட்டதும் "சோயா, சோளம், கால்சியம் மாத்திரை" என்றார். கோழிகளுக்கு ஓவராக தீனிபோட்டு கொழுக்க வைப்பதாகவும் பல கோழிகளால் நடக்கவே முடியாமல் ஹார்ட் அட்டாக் வந்து இறப்பதாகவும் கூறினார்

ஆர்கானின், ப்ரிரேஞாக கோழியை வளர்க்க சொல்லி ரொம்ப நேரம் பேசிவிட்டு வந்தேன். அதன்பின் அங்கே முட்டை வாங்குவதை நிறுத்திவிட்டேன். அதன்பின் எங்க ஊருக்கு காஸ்ட்கோ வந்தது. ஆர்கானிக் முட்டை இரண்டு டஜன் ஏழரை டாலர்.

இன்று காலை முட்டை தீர்ந்ததால் ஏதோ நினைவு வந்து அதே பண்ணைக்கு போனேன். போனால் வெளியே கோழிகள் ப்ரி ரேஞ்சாக மேய்ந்துகொண்டிருந்தன. "ப்ரி ரேஞ்ச் ஆர்கானிக் முட்டை" என சொல்லி டஜன் மூன்று டாலருக்கு விற்றார்.

"ஏன் திடீர்னு ஆர்கானிக், ப்ரி ரேஞ்" என கேட்டேன்

"இப்பல்லாம் அதான் எல்லாரும் கேக்கறாங்க" என்றார். சாதா முட்டைகளை பலரும் வாங்குவதே இல்லையாம். கடைகாரர்களும் ஆர்கானிக், ப்ரிரேஞ் முட்டைகளை தான் கேட்கிறார்களாம்.

மாடுகளையும் ப்ரி ரேஞ்சாக வளர்த்து பிஃப் விற்றால் நல்ல காசு கிடைக்கும் என சொல்லிவிட்டு வந்தேன். சாதா ரிப் ஐ ஸ்டேக் பவுண்டு 12 டாலர் என்றால் புல்லுணவு ஸ்டேக் பவுண்டு 25 டாலர்.

ஆக நாம் கேட்க, கேட்க மாற்றம் வரும்..

ஹார்மோன் போடாத கோழியை கேட்டேன்
புல்லை தின்ற ஆட்டை கேட்டேன்
பாசியைத்தின்ற மீனைக்கேட்டேன்
சோளம் தின்னா மாட்டுப்பால் கேட்டேன்

காடுகளில் மேயும் எருமையைகேட்டேன்
வயல்களில் ஓடும் பன்றியைகேட்டேன்
பண்ணையில் வளரா கோழியை கேட்டேன்
தாவிச்செல்லும் முயலைகேட்டேன்

காட்டில் பறக்கும் காடையை கேட்டேன்
ப்ளோரைட் இல்லா நீரைக்கேட்டேன்
வயலில் நீந்தும் வாத்தைக்கேட்டேன்
நதியில் நீந்தும் நாரையைக்கேட்டேன்


பேலியோவுடன் வாரியர் கேட்டேன்

நாலுமணிநேர விரதம் கேட்டேன்

சொந்த உழைப்பில் கறியைக்கேட்டேன்

தோட்டத்து கீரையைகேட்டேன்


வீட்டுக்கொல்லையியில் தென்னையை கேட்டேன்

தென்னையிள நீரைக்கேட்டேன்

இனிப்பே வேண்டாம் பழத்தை கேட்டேன்

பழமே வேண்டாம் காயைக்கேட்டேன்



இத்தனை கேட்டும் கிடைக்கவில்லை
எதுவும் எனக்கு பிடிக்கவில்லை
பண்ணையே வேண்டாம், வேண்டாம் என காஸ்ட்கோ ,காஸ்ட்கோ ,காஸ்ட்கோ  கேட்டேன்..



Reply all
Reply to author
Forward
0 new messages