மூடர் கூடம்

1 view
Skip to first unread message

செல்வன்

unread,
Feb 14, 2018, 10:24:08 AM2/14/18
to செல்வன்


சீனாவில் ஒரு குழந்தை திட்டம் கடுமையாக அமுலாக்கபட்டது. இரண்டாவது பிள்ளை பிறந்தால் பெற்றோருக்கு தண்டனை என்பதால் "பிறக்கும் ஒரு பிள்ளை ஆணாக இருக்கவேண்டும்" என சொல்லி பெண்குழந்தைகளை அபார்ஷன் செய்து அழித்துவிட்டு ஆண்குழந்தை பிறக்கும்வரை முயற்சி செய்து பிள்ளை பெற்றுக்கொள்வார்கள்.

இதனால் பெண்கள் விகிதம் மிக குறைந்து சீனாவில் ஏகப்பட்ட பெண் தட்டுப்பாடு. முழுக்க, முழுக்க கல்யாணம் ஆகாத ஆண்கள் மட்டுமே இருக்கும் கிராமங்கள் சீனாவில் ஏராளம்.

இதற்கு ஒப்பான நிலைதான் தமிழ்நாட்டிலும், ஹரியானாவிலும்....இந்திராகாந்தி கொண்டுவந்த முட்டாள்தனமான ஜனத்தொகை கட்டுபாட்டு திட்டத்துக்கு தமிழ்க அரசு 1970, 1980களில் முழு ஒத்துழைப்பு கொடுத்தது. அப்போதைய படங்களில் "அஞ்சு கிலோ அரிசிக்கு ஆசைப்பட்டு அறுத்துகட்டிகொண்ட" காமடிகள் நிறைய இடம்பெற்றிருக்கும்.

இன்று தமிழ்சாதிகள் பலவற்றில் பெண்கள் மிக குறைவு. திருமணத்துக்கு ஆள் இன்றி பல சாதிகளில் மாப்பிள்ளைகள் வாலிபமா, நடுத்தரவர்க்கமா என தெரியாத வயதில் காத்திருக்கிறார்கள். ஹரியானாவிலும் இதே நிலைதான். அவர்கள் கேரளாவுக்கு வந்து பெண் எடுத்து போகிறார்களாம்.

ஆனால் இன்னமும் பெண்குழந்தை என்றால் முகத்தை சுளிக்கும் பலரை காணத்தான் முடிகிறது.

இந்த காலத்தில் ஆண் என்ன, பெண் என்ன? எல்லாம் ஒன்றுதான். சொல்லபோனால் பையன்களை விட பெண்கள் தான் பெற்றோர் மேல் பாசமாக இருப்பார்கள்.


--

செல்வன்
Reply all
Reply to author
Forward
0 new messages